Wednesday, February 11, 2015

என்னத்தைச் சொல்ல? -7 ஆலப்பாக்கமும் அக்கம்பக்கமும் II (5)

என்னத்தைச் சொல்ல? -7 ஆலப்பாக்கமும் அக்கம்பக்கமும் II (5)


இன்னம்பூரான்
11 02 2015

மாமாங்கத்துக்கு மாமாங்கம் சால்ஜாப்பு சொல்லுவோம். 
ஜாமத்துக்கு ஜாமம் ஊரை நாசமடிப்போம்.
ஏமாத்து வேலைக்கு ஜால்ரா போடுவோம். விளக்கு
மாத்தாலெ அடிச்சாலும் சுரணை கிடையாது.

‘பீஸ் சால் கே பாத்’ (20 வருடங்களுக்கு பிறகு) என்ற ஒரு சினிமா அந்த காலத்தில் பிரபலம். பேரை மட்டும் வாங்கிக்கிறேன், ஒரு முப்பது வருட கொலைக்களத்து பிலாக்கணம் பாட:

1996ம் வருடம் உச்ச நீதி மன்றத்துக்கு முன்னால், தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் கொடுத்த சபதம் இது:

"It is submitted that there are 584 tanneries in North Arcot Ambedkar District vide annexure 'A' and 'D'. Out of which 443 Tanneries have applied for consent of the Board. The Government were concerned with the treatment and disposal of effluent from tanneries. The Government gave time upto 31.7.1985 to tanneries to put up Effluent Treatment Plant (E.T.P.). So far 33 tanneries in North Arcot Ambedkar District have put up Effluent Treatment Plant. The Board has stipulated standards for the effluent to be disposed by the tanneries."

அந்த சபதத்தை மீறி, கண்ட கழுதைகளுக்கு ஆதரவு அளித்து, அண்ணல் காந்தியின் தரித்ர நாரயணனை அவர் கொலையுண்ட தினத்தில், கொலை செய்தவர்களை என்ன செய்யலாம்? நடந்தது என்ன? முப்பது வருடங்களுக்கு பிறகு:

ராணிபேட்டையில் ஒரு சாக்கடை. அந்த ‘சாக்கடை’ எனப்படுவது சட்டவிரோதமாகக் கட்டப்பட்ட ஒரு சாயகழிப்பறை. நஞ்சு கலந்த சாயக்கழிவுகளால் காந்தி மகான் அஞ்சலி தினமன்று அங்கு ஒரு பிணக்குவியல். அந்த ஹெக்ஸாவெல்ண்ட் க்ரோமியம் அந்த பிராந்தியத்தில் குடிநீர் குடிப்பவர்களையும் கொன்றுவிடுமாம். எத்தனை அப்பாவிகள் செத்தனரோ? அந்த வெள்ளிக்கிழமையில் இறந்த பத்து பேர்களில் ஒன்பது பேர் வறுமையின் காரணமாக மேற்கு வங்காளத்திலிருந்து வந்திருந்த அன்றாடங்காய்ச்சி இளைஞர்கள். அவர்களை கொன்று குவித்த முதலாளிகளுக்கு தேசீய சுற்றுப்புறசூழல் நீதிமன்றம் ரூபாய் 75 லட்சம் தண்டனை அளித்திருக்கிறது. அதில் 50 லட்சம் அரசுக்கு; பாக்கி கொல்லப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு. வரிப்பணத்தில் கைவைக்காமல், மாசுபடுத்தியவர்களிடமிருந்து நஷ்ட ஈடு வாங்கியது சரி தான் என்றாலும், மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் தரங்கெட்ட அதிகாரிகள்  இதற்கெல்லாம் உள்கை.  கொலையில் அவர்களுக்கும் பங்கு உண்டு. அந்த வாரியத்தின் தலைமை குற்றத்தை ஒத்துக்கொண்டு இருக்கிறது. 

உசாத்துணை;








இன்னம்பூரான்

http://innamburan.blogspot.co.uk

http://innamburan.blogspot.de/view/magazine

www.olitamizh.com

No comments:

Post a Comment