Sunday, April 14, 2013

தணிக்கை செய்வதில் தணியா வேகம்: போதுமடா சாமி! ~7




தணிக்கை செய்வதில் தணியா வேகம்: போதுமடா சாமி! ~7
Innamburan S.Soundararajan Sun, Apr 14, 2013 at 5:38 PM
To: Innamburan Innamburan

Innamburan Innamburan <innamburan@googlemail.com>
1/7/10
to mintamil
 
 தணிக்கை செய்வதில் தணியா வேகம்:  போதுமடா சாமி! ~7
Inline image 1
எட்டு  வாங்கின பில்லை, அறியாப்பிள்ளையா!, ஏ.ஜீ,கிட்ட காண்பித்து, 'பணம் கொடுக்க' என்ற ஆணையையும் வாங்கிக்கொண்டு காஷியர்ட்டே போனா, அவர் (பட்டை நாமக்காரார்) ஓஹோன்னு சிரிச்சார். மிக்க பணிவன்புடன், 'இதை ஆஃபீஸ் நிர்வாகத்திடம்- அதாவது- 'சிடுமூஞ்சி கு.ரங்காச்சரியார் (சேத்துப்படிச்சா, உங்க குற்றம்)- கிட்ட கொடுத்து, அக்னாலெஜ்மெண்ட் வாங்க்கிகோங்க, ஸார்' என்று சொல்லிட்டு பலமா சிரிச்சார். என் வாழ்க்கையிலேயே முதல் முதலாக தன்னிம்பிக்கை இழந்து விட்டேன். இன்னும் அது திரும்பவில்லை! சிடுமூஞ்சிட்டே போனேன்னா, அவர் டீ.ஏ.ஜீ கையொப்பம் எங்கே என்று கேட்டார். டீ.ஏ.ஜீ ட்டே போனேனா, அவர் கு.ர. கையொப்பம் எங்கே என்று கேட்டார். தடுமாறிப்போய், ஏ.ஜீ,கிட்ட புகாரித்தேன். இதற்கெல்லாம் ஏ.ஜீ,கிட்ட வருவாளோ என்று அவரும் மழுப்பினார். சாயரக்ஷை ஆத்துக்கு போகலாமா! என்று கிலி பிடித்துக்கொண்டது. எதித்தாப்போல இருந்த பெரியவரிடம் (பழம்பெருச்சாளி என்று படித்துக்கொள்ளவும்.) மந்திராலோசனை நடத்தினேன். அவர் சொன்னார், கு.ர.விடம் பர்பர்ட் ரிஜிஸ்டர் வாயிலாக (உங்களுக்கு 'பர்பர்ட் ரிஜிஸ்டர்' தெரியாதா, ரிஷ்யசிருங்கர்களா!) அனுப்பு. இது பற்றி யாரிடமும் பேசாதே என்றார். அரை மணி கழித்து கு.ர. வே வருகை புரிந்தார், கோபம் கொப்புளிக்க. ஒத்த்படையில் பேச்சு. 'என்ன? நீ? 'பர்பர்ட் ரிஜிஸ்டர்' வழியா அக்னாலெஜ்மெண்ட்  கேட்டுண்டு. இது எனக்கு அபகீர்த்தி.' யதேச்சையா வந்த மாதிரி நடித்துக்கொண்டே வந்த 'பெரியவர்': "ஏண்டா பழி! அவன் சின்னப்பையன். அவன் கிட்ட உன்னுடைய பிரதாபங்கள்! மரியாதையா காசை கொடுத்துட்டு போற வழியைப்பாரு" என்றார். தத்க்ஷணமே கொடுத்துட்டு ஸ்டாம்ட் ரசீது (அது பெரிய கதை: கேட்டால் சொல்லப்படும்.) கொடு என்றார்.  முழித்தேன். அவரே ஸ்டாம்ப் ஒட்டி, ஒரு அணா கழித்துக்கொண்டு, கொடுத்தார். இதற்கு ஒரு மாசம் ஆச்சு. அந்த ஒரு அணா வேணுமே என்றேன். சட்டப்படி அது உன் செலவு என்றார்.
மின்குடும்பமே! மிகைப்படுத்திவிட்டேன். மிகவும் மிகைப்படுத்திவிட்டேன். கற்பனைக்கூட்டிவிட்டேன். விட்றுங்கோ! ஆனால் நான் சொன்னது வாஸ்தவமான பேச்சு. அரசாங்கத்திடம் ஏமாற்றி,கு.ர. வெல்லாம் தாக்குப்பிடிக்கமுடியாத படி,  பணம் வாங்குவது எளிது. (அதற்கு அருமையான ரயில்வே கதை ஒன்று உள்ளது) ஆனால் போட்டதை திருப்பவது மெத்த கடினம். 
உண்மை விளம்பி
Innamburan Innamburan <innamburan@googlemail.com>
1/7/10
Tirumurti Vasudevan <agnihot3@gmail.com>
1/7/10
to mintamil
 
2010/1/7 Innamburan Innamburan <innamburan@googlemail.com>
7. தணிக்கை செய்வதில் தணியா வேகம்:  போதுமடா சாமி!தத்க்ஷணமே கொடுத்துட்டு ஸ்டாம்ட் ரசீது (அது பெரிய கதை: கேட்டால் சொல்லப்படும்.) கொடு என்றார். 
ஸ்டாப்ம்ட் ரசீதிலே ஒரு கதையா? சொல்லுங்க சொல்லுங்க...

மின்குடும்பமே! மிகைப்படுத்திவிட்டேன். மிகவும் மிகைப்படுத்திவிட்டேன். கற்பனைக்கூட்டிவிட்டேன். விட்றுங்கோ! ஆனால் நான் சொன்னது வாஸ்தவமான பேச்சு.

எது உண்மை? எது மிகைப்படுத்தல்? குழப்பமா இருக்கு!

திவாஜி 


Innamburan Innamburan <innamburan@googlemail.com>
1/7/10
 

பாக்கி 51 பேர் எங்கே? எங்கே?

2010/1/7 Tirumurti Vasudevan <agnihot3@gmail.com>
Astrologer Vighnesh சென்னை 
1/7/10
 
to mintamil
 
இ ங்கே  ங்கே தான் ருக்கேன்கே.வீ.விக்னேஷ்
Tthamizth Tthenee 



அதிர்ச்சியில்  உறைந்திருக்கிறார்கள்
 
மீதி 51 பேர்
 
அன்புடன்
தமிழ்த்தேனீ

 
Geetha Sambasivam <geethasmbsvm6@gmail.com>
1/7/10
 
to mintamil
 
//தத்க்ஷணமே கொடுத்துட்டு ஸ்டாம்ட் ரசீது (அது பெரிய கதை: கேட்டால் சொல்லப்படும்.) கொடு என்றார்//

இப்படியா சஸ்பென்ஸ் வைக்கிறது?? அதையும் சொல்லிடுங்க, அப்புறமா இதிலே என்ன மிகைனு புரிஞ்சது, புரியாதவங்களைப் பார்த்து விவிசி.

ரயில்வே கதையும் சேர்த்து வேணும்!

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email tominTamil@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
Tthamizth Tthenee <rkc1947@gmail.com>
1/7/10
 
to mintamil
 
மக்களை எதிர்பார்க்கவைத்து எதிர்பார்க்கவைத்து   கதை சொல்லுவதில் மன்னன்  திரு  இன்னம்புரான் அவர்கள்

அடுத்து  வரும் கதையைப் (  உண்மைக் கதையை) படிக்க  எத்தனை பேர் ஆவலாய் இருக்கின்றனர் பார்த்தீர்களா

மீதி உள்ள அனைவரும் மௌனமாயப் படித்துக்கொண்டிருக்கின்றனர்


meena muthu 
1/7/10
 
to mintamil
 
// மீதி உள்ள அனைவரும் மௌனமாயப் படித்துக்கொண்டிருக்கின்றனர் //


ஆமா..மிகச்சரி ... :)))))))


Photo Credit

Innamburan இன்னம்பூரான் : அன்றொரு நாள்: ஏப்ரல் 15: அம்ருத்.

Innamburan இன்னம்பூரான் : அன்றொரு நாள்: ஏப்ரல் 15: அம்ருத்.

அன்றொரு நாள்: ஏப்ரல் 15: அம்ருத்.


அன்றொரு நாள்: ஏப்ரல் 15: அம்ருத்.
3 messages

Innamburan Innamburan Sat, Apr 14, 2012 at 7:58 PM
To: mintamil , thamizhvaasal
அன்றொரு நாள்: ஏப்ரல் 15:
அம்ருத்.
மத ஸ்தாபகர்களைப்போல அதிருப்தியால் பாதிக்கப்பட்டவர்களை காண்பது அரிது. மஹாவீரர் ஹிம்சையின் கொடூரத்தைக் கண்டு வருந்தினார்.சாக்யமுனியோ பிணியையும், இன்னல் நிறைந்த வாழ்வையும், மரணத்தையும் கண்டு மனம் கலங்கினார். ஏசு பிரான் கோயிலில் துட்டு எண்ணுபவர்களை ஏசினார். நபிகள் நாயகம்,‘ரஹம்’ ரஹம்’ என்று உச்சரித்தபடியே, கருணாமூர்த்தியாக விளங்கினார். தெய்வீகமும், ஆன்மிகமும் முதன்மை வகிக்கும் சமய நெறிகளை உற்று நோக்கினால், அவற்றில் அந்தந்த காலகட்டத்து சமுதாய சம்பிரதாயங்களின் தாக்கம் பிடிபடும். 

இன்றைய தினம் பிரகாஷ் திவஸ். சீக்கியர்களின் குருநாதர் குரு நானக் தேவ்ஜி அவர்களின் ஜன்மதினம் ஏப்ரல் 15,1469. அவருடைய ஜன்மதினம், அக்டோபர் 20, 1469 ~ கார்த்திகை மாதத்து பெளர்ணமி ~ என்றும் சொல்லப்படுகிறது. அன்றும் விழா எடுக்கப்படுகிறது. குரு நானக் தேவ்ஜி அவர்களின் குருமாதா, அவருடைய தமக்கை பீபீ நானகிஜி. அவருடைய குடும்பத்துடன் ஒண்டிக்கொண்டு, நவாப் தெளலத்கான் லோடியிடம் பணி செய்த நானக் பாலபருவத்திலிருந்து, தெய்வீகத்தில் ஆழ்ந்தவர். தனது 38 வது வயதில் நதியில் ஸ்னானம் செய்யப்போனவர் திரும்பவில்லை. மிகவும் கவலைப்பட்ட நவாப் தெளலத்கான் லோடி, தேடித்தேடி களைத்து விட்டார். மூன்று நாட்களுக்கு பிறகு வந்து சேர்ந்த நானக் மெளன விரதத்தில் இருந்தார். மறுநாள் அவர் கூறியதை கேட்போம்.

“ நான் இறைவனின் சன்னிதானத்துக்கு அழைத்து செல்லப்பட்டேன். இறைவன் எனக்கு பருக அம்ருதத்தை தந்து, ஆணையிட்டார், ‘இது நாம் தரும் அமர பானகம். பருகு. நாம் என்றும் உன்னுடன் இருப்போம். எமது நல்லாசிகள் உனக்கு. எமது நாமத்தை உனக்கு சூட்டினோம். எமது தேவ வாக்கை பரப்புவதே உனக்கிட்ட பணி.’ “.

நாத்திகர்கள் இதை எல்லாம் கொச்சைப்படுத்தலாம். சமயங்களை ஒப்பியல் செய்பவர்கள், குரு நானக் தேவ்ஜி அவர்களின் பொன்வாக்கு எல்லாம் உபநிஷத், மேரு புராணம், பெளத்த சாத்திரங்கள். விவிலயம், குர்ரானில் இருப்பதை நிரூபிக்கலாம். ஆனால், குரு நானக் தேவ்ஜியின் “ஹிந்து, முஸ்லீம் என்ற தாரதம்யம் கிடையாது. எனவே, யான் எந்த பாட்டையில் செல்லவேண்டும் என்ற வினா எழுகிறது. விடை காண்பது எளிது. நாம் இறைவனின் பாதையில் செல்லவேண்டும். இறைவனுக்கு இந்த ஹிந்து-முஸ்லீம் பாகுபாடு கிடையாது.” என்ற பொன்வாக்கை மனனம் செய்யும்போது, அவர் ஸ்தாபித்த மதம்/ இயக்கம், அந்த காலகட்டத்து சமுதாய பின்னணியை, முதுகெலும்பாகக் கொண்டது என்பது புரியும். அது யாதெனில், 1520ம் ஆண்டு இந்தியா மீது படையெடுத்த மொகலாயர் பாபரின் படைகள் ஆயிரக்கணக்கான மக்களை கொன்றன. அதை கண்டித்த குரு நானக் தேவ்ஜி சிறைப்படுத்தப்பட்டார். தன் தவறை உணர்ந்த பாபர் எல்லாரையும் விடுதலை செய்ததாக சொல்லப்படுகிறது. குரு நானக் தேவ்ஜி ஒரு சமாதானப்புறா. அமைதியின் மறு உரு.

குரு நானக் தேவ்ஜியின் இரட்சண்ய யாத்திரீகம் மிகவும் நீண்டது, நான்கு தவணைகளில் உலகை வலம் வந்தார்: குருக்ஷேத்ரா, ஹரித்வார், ஜோஷிமத், அயோத்யா, பிரயாக், வாரணாசி, கயா, பாட்னா, கெளஹத்தி, டாக்கா, பூரி, கட்டாக், ராமேஸ்வரம், இலங்கை, சோம்நாத், துவாரகா,உஜ்ஜயின், ஆஜ்மீர், மதுரா,லாஹூர், ஸ்பிடி பள்ளத்தாக்கு, திபெத்,லடாக், கார்கில், அமர்நாத்,ஶ்ரீநகர், மெக்கா, மெடினா,பாக்தாத், பெஷாவர்,சிரியா, துருக்கி, டெஹ்ரான்,காபூல், கந்த்ஹார், ஜலாலாபாத். மத போதகர்கள் இவ்வாறு யாத்திரை செல்வது உண்டு. ஆனால், இவரது நீண்ட யாத்திரைகள் வியப்புக்குரியவை.
குரு நானக் தேவ்ஜி பெண்ணியத்தை போற்றியவர். ஏழைகளின், நசுக்கப்பட்டவர்களின் நண்பர்.  ஹிந்து மதத்தின் சாதிமத பேதத்தையும், இஸ்லாமிய சமய ஆளுமையையும் எதிர்த்தார். அவர் ஒரு இசைக்கலைஞரும், கவிஞரும் கூட.1522ல் கர்த்தார்ப்பூர் என்ற நகரத்தை சிருஷ்டித்து, தன் வாழ்நாள் முழுதையும் (ஸெப்டம்பர் 22,1539 வரை) அங்கு வாழ்ந்தார். இன்று அவர் அங்கு வாழ்ந்திருந்தால், அவர் ஒரு பாகிஸ்தானிய பிரஜை!

பிற்காலம், என்னவென்னமோ நடந்து விட்டது. அதை பற்றி எழுதும் தருணம் இதுவல்ல. மதம் ‘மதம்’ பிடித்து அலைகிறது. ‘அம்ருத்’ ஆலகாலம் ஆயிற்று ஒரு நாள். என் செய்வது? 
இன்னம்பூரான்
15 04 2012
Inline image 1
உசாத்துணை:

Mohanarangan V Srirangam <Sat, Apr 14, 2012 at 8:06 PM

உம்மை ஆணையிட்ட வழியிலே நீர் செல்லும் போது உமக்கு நிழலும் பருக நீருமாய்க் கூட இருப்பேன் என்பதை நீர் விச்வசியும்....ஆமென்..... 



கி.காளைராசன் Sun, Apr 15, 2012 at 12:25 PM

ஐயா ‘இ‘னா அவர்களுக்கு வணக்கம்.

2012/4/15 Innamburan Innamburan <innamburan@gmail.com>
குரு நானக் தேவ்ஜியின் இரட்சண்ய யாத்திரீகம் மிகவும் நீண்டது, நான்கு தவணைகளில் உலகை வலம் வந்தார்: குருக்ஷேத்ரா, ஹரித்வார், ஜோஷிமத், அயோத்யா, பிரயாக், வாரணாசி, கயா, பாட்னா, கெளஹத்தி, டாக்கா, பூரி, கட்டாக், ராமேஸ்வரம், இலங்கை, சோம்நாத், துவாரகா,உஜ்ஜயின், ஆஜ்மீர், மதுரா,லாஹூர், ஸ்பிடி பள்ளத்தாக்கு, திபெத்,லடாக், கார்கில், அமர்நாத்,ஶ்ரீநகர், மெக்கா, மெடினா,பாக்தாத், பெஷாவர்,சிரியா, துருக்கி, டெஹ்ரான்,காபூல், கந்த்ஹார், ஜலாலாபாத். மத போதகர்கள் இவ்வாறு யாத்திரை செல்வது உண்டு. ஆனால், இவரது நீண்ட யாத்திரைகள்
இதுபோன்றதொரு யாத்திரை செய்தவர்களே அமைச்சர்களாகத் தகுதியுடையோர் எனச் சட்டம் இயற்றிட வேண்டும்.

--
அன்பன்
கி.காளைராசன்
=

தணிக்கை செய்வதில் தணியா வேகம்: பல்ப் வாங்கின கதை: 6




தணிக்கை செய்வதில் தணியா வேகம்: பல்ப் வாங்கின கதை: 6

Innamburan S.Soundararajan Sun, Apr 14, 2013 at 11:01 AM


Innamburan Innamburan <innamburan@googlemail.com>
1/7/10

தணிக்கை செய்வதில் தணியா வேகம்: பல்ப் வாங்கின கதை: 6

இப்படியாக நாளொரு மேனியாக, பொழுதொருவண்ணமாக, ஏ'ஜீ. ஆஃபீஸ்லே நான் குப்பைக்கொட்ட ஆரம்பித்த வேளையிலே, ஃப்ண்ட்ஸ் 4 என்ற பிரிவையும், என் தலையில் கட்டினார்கள். அந்த்க்காலத்து கணினி போன்ற, கணினி இல்லாத விசித்ர மிஷின் ஒன்றில், கலைமாமணி சான்றிதழ் போன்ற மாபெரும் அட்டை ஒன்றைப்பொருத்தி (லெட்ஜெர் கார்ட்),  'டொக்' டொக்' என்று அடிப்பார்கள். சிக்கல்கள் பல, விட்டகுறை, தொட்டகுறை, புதிர்கள் யாவற்றையும் தாண்டி, அரசு ஊழியர்களின் க்ஷேமநிதி கணக்குப்போடப்படும்.ஃப்ண்ட்ஸ் 4  சங்கக்காலத்து பாலை/சுரம் மாதிரி. வறண்டப்பிரதேசம். கொட்டைப்போட்ட பழம்பெரும் அதிகாரிகள், தாக்கு பிடிக்காமல் ஓடிவிட்டார்கள் என்ற கீர்த்தி வேறு. போதாக்குறைக்கு, ஏ.ஜீ. என்னிடம் சொன்னார், 'இது உனக்கு பரிக்ஷை. தினந்தோறும் எனக்கு ரிப்போர்ட் செய்யவேண்டும்'. என்று.
அதிர்ஷ்டம் பாருங்கோ! அப்பத்தான், நானும் வஸந்தாவும் தனிக்குடித்தனம் போனோம். அவளுக்கு ஹிந்திப்பாட்டுன்னா, அப்டி ஒரு மோஹம். விட்டுக்கொடுப்பாரோ, தோப்பனார்? என்னிடம் ஒரு முன்னூறு ரூபாய் கொடுத்து, ரேடியோ வாங்கிக்கச்சொன்னார். (அந்த வால்வ் ரேடியோ இன்னும் இருக்கு. தமிழ்த்தேனீ சாட்சி.) அலைந்தோம்; அலசினோம், ஆய்வுகள் பல செய்தோம், போன வீடுகளில், ரேடியோ மட்டும் தான் கண்ணில் பட்டது. ஆக மொத்தம், ஜீ.ஈ.ஸி ரேடியோ செட்டாச்சு.
இந்த காலகட்டத்திலே, ஃபண்ட்ஸ் 4 மிஷன்கள் மக்கார் செய்ய, ஓடிப்போய் பார்த்தேன். மிஷனுக்குள் ஒளி விடும் பல்ப் ஃப்யூஸ்! உடனே, மிஷின்கம்பேனிக்காரன், ரெமிங்டன் ரேண்ட் வந்தார்கள். இரண்டு பல்ப் தான் இருந்தது. தேவையோ பத்து. இரண்டு போட்டுவிட்டு, 'பாப்பத்தியம்மா! மாடு வந்தது...' என்ற தோரணையில் போய்விட்டார்கள், ஒரு பல்ப் ரூபாய் 11/- என்று பில்லைக் கொடுத்துவிட்டு. ஷெர்லாக்ஸ் ஹோம்ஸ் ஆகிய அடியேன், ஜீ.ஈ.ஸி என்ற அட்டை டப்பாவை பத்திரபடுத்திக்கொண்டேன். ரேடியோக்கூட, எட்டு பல்ப், இரண்டு ரூபாய் ரேட்டிலே. விஷயத்தைக்கேட்டு ஏ.ஜீ. அகமகிழ்ந்தார். தட்டிக்கொடுத்தார். நானும் தக்க சமயம் பார்த்து டைய்லி ரிப்போர்ட்டை நிறுத்திவிட்டேன். பல்ப் காசு வர ஒரு மாதம் ஆயிற்று.  வஸந்தாகிட்ட டோஸ்.  ஏன் டிலேன்னு கேட்டாதானே சொல்லலாம்?
இன்னம்பூரான்.

எஸ் ஒ எஸ். பத்தாமபசலியின் பிழைத்திருத்தம்: பலப் x   
Geetha Sambasivam 
1/7/10
to mintamil
 
//ரேடியோக்கூட, எட்டு பல்ப், இரண்டு ரூபாய் ரேட்டிலே. விஷயத்தைக்கேட்டு ஏ.ஜீ. அகமகிழ்ந்தார். தட்டிக்கொடுத்தார்.//

அது சரி, மாமனார்????


 //நானும் தக்க சமயம் பார்த்து டைய்லி ரிப்போர்ட்டை நிறுத்திவிட்டேன்.//

ஹிஹிஹி


// பல்ப் காசு வர ஒரு மாதம் ஆயிற்று.  வஸந்தாகிட்ட டோஸ்.  ஏன் டிலேன்னு கேட்டாதானே சொல்லலாம்?////

ஏ.ஜி. தான் அகமகிழ்ந்தார், வீட்டிலே டோஸ் வாங்கிண்டு தான் ஆக்ணும்!  காசு வந்தது இல்லை???


--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email tominTamil@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
*

‘பாரத தேசமென்று பெயர்சொலலுவார்...’ 4




‘பாரத தேசமென்று பெயர்சொலலுவார்...’ 4

Innamburan S.Soundararajan Sun, Apr 14, 2013 at 8:47 AM
To: Innamburan Innamburan
‘பாரத தேசமென்று பெயர்சொலலுவார்...’ 4
Inline image 2
தேசமுன்னேற்றத்துக்கும், சமுதாய மறுமலர்ச்சிக்கும், தனிமனிதர்களின் வாழ்வாதாரத்துக்கும் கல்வி தான் அடித்தளம் என்பது கண்கூடு. மற்றும் பல பண்புகளும் அத்தியாவசியம் என்பதிலும் ஐயமில்லை. அவை யாவற்றையும், ஒன்றன் பின் ஒன்றாக நாம் கலந்தாலோசிப்போம். கல்வியை பற்றி சில சிந்தனைகள்:
  1. கல்வி ஒரு மகரந்தம். அது பரவுவதற்கு எல்லை இல்லை.
  2. ஆரம்பக்கல்வி கட்டாயமாக இருக்கவேண்டும்; இலவசமாக இருக்க வேண்டும். அரிச்சுவடி பாடங்கள் பிறப்புரிமை. அரசு தன் கடமையை செய்ய வேண்டும். சமுதாயம் அதை வற்புறுத்தவேண்டும். தனி மனிதர்கள் அதற்காக போராட வேண்டும்.
  3. சிறார்களுக்கும், வயது வந்தோர்களுக்கும் எண்ணையும், எழுத்தையும் ( இன்றைய கால கட்டத்தில் கணினி பயன்பாடும்) சொல்லிக்கொடுக்க கொழுத்த முதலீடும், மாட மாளிகைகளும், புலவர்களும் அமைவதற்குக் காத்திருக்க வேண்டியதில்லை. நம்மில் பெரும்பாலோர் தன்னார்வ பள்ளிகள் நடத்த முடியும். பள்ளி செல்லும் மாணவர்களுக்குக்கூட திட்டமிட்டு பேருதவி செய்யமுடியும். நாம் ஏன் அவ்வாறு செய்யாமல் தயங்குகிறோம்? வாரத்தில் எட்டு மணி நேரம் தந்தால், அது பேருதவி. கிராமம் தோறும், பேட்டை தோறும் இதை செய்ய முடியும். 
  4. ஆதாரக்கல்வி முதல் நிலை. மாணவர்களிடையே, பள்ளிப்பாடத்துடன் நிற்காமல், ஒரு விகசித்த அணுகுமுறையை பயிற்றுவைக்க வேண்டும். அதற்கு நூலகங்களும், அன்றாட அறிவுரையும் தேவை. படித்து பயன் பெற்றவர்கள், இதை ஏன் செய்யக்கூடாது?
  5. மாணவர்களுக்கு தன்னம்பிக்கையும், சிந்தனா சக்தியும், அறிவு தாகமும் திட்டமிட்டு புகலமுடியும். பள்ளி நிறுவனங்களும், பெற்றோர்களும் ஏன் இணைந்து பணி செய்யக்கூடாது?
திரு. சந்திரமோஹன்:
வாணிபம் செய்பவர்கள் விலை போகும் சரக்கைக் கையாள்வார்கள். கல்வி விலைபோகும் சரக்கு.  அருமையாக சொன்னீர்கள்: ‘...Speak the real value every where. Identify valuable personalities who are still remaining uncorrupt and back them.  Continue sponsoring poor students. Show them gentle and noble  gestures and direct them to a right guru. This is the need of the hour...’. நீங்கள் நாள்தோறும் இவ்வாறு செய்கிறீர்கள் என்று நினைக்கிறேன். இவ்வகையில் உங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொள்ளுங்கள். 
சுபாஷிணி:
உமது கேள்வி நியாயமானது. எனக்கு உடன்பாடு தான். விடுதலை வீரர்களின் வரலாறு பரவ வேண்டும். அது தேசாபிமானம், சமுதாய மறுமலர்ச்சி ஆகியவற்றை உந்தவேண்டும் என்பது என் கருத்து. சிலைகள் தேவையில்லை. ஆனால், சந்ததி வறுமையை பற்றி சில வரிகள்:
  • ‘...இன்பதுன்பங்களை சமமாக பாவிக்க வேண்டும் என்ற கவியின் உபதேசப்படி, நான் வாழ்நாளைக் கழித்து வந்திருப்பதால், வறுமை என்னை வென்று விடாது...’ [செல்லம்மா பாரதி: 30 04 45: கல்கி இதழுக்கு: cited: http://s-pasupathy.blogspot.co.uk/2012/09/3_12.html]
  • செக்கிழுத்த வ.உ.சி. அவர்கள் தியாக செம்மல். அவர் தன் மகன் வேலைக்கு சிபாரிசு தேடினார். நாட்டுக்காகத் தன் செல்வத்தைத் தொலைத்த பக்தனின் வறுமை; அதன் கொடுமை.
  • தமிழுக்கு தான் செய்த பணியை சொல்லி, நோயும், வறுமையும், பசிக்கொடுமையும் வாட்டிய போது, யாசகம் செய்தார், புதுமைப்பித்தன். தமிழன் கண்டு கொள்ளவில்லை.
  • சமீபத்தில் தி.ஜ.ர. அவர்களின் வாரிசு வாடுவதாக செய்தி வந்த போது, பெரிதும் பேசப்பட்டது. அத்துடன் சரி. நான் தனிப்பட்ட முறையில் எடுத்த முயற்சிகள் வீண். இத்தனைக்கும், அவரது படைப்புகளில் சில நாட்டுடமை செய்யப்பட்டன. அந்த நிதி வரவு என்ன ஆச்சு? தெரியவில்லை.
  • தமிழ் படைப்புகள் நாட்டுடமை ஆனதில் அரசியல் விளையாடியது. பிரசுரகர்த்தாக்கள் செல்வம் தீட்டினர்.
சுருங்கச்சொல்லி, சுபாஷிணி, ஒவ்வொருவரின் நிலைமையும் வேறு, வேறு. தாரதம்யம் தேவை. 
தியாக உள்ளம் படைத்தவர்கள் பிற்காலமும் இருந்தனர்: எஸ்.ஆர்.சங்கரன் ஐஏஎஸ் போன்ற சிலர். விரல் விட்டு எண்ணி விடலாம். 1947க்கு முன்னால் கணக்கில் அடங்காத தேசாபிமானிகள். சமுதாய நலன் ‘சிறுதுளி பெருவெள்ளத்திற்கு’ சரியான உதாரணம். நம்மில் யாவரும் கடுகளாவது சமுதாய நலனுக்கு உழைக்க முடியும். அது போதும். ஒரு ராஜாராம் மோஹன் ராய், ஒரு திரு.வி.க., ஒரு மஹாத்மா பூலே; 
பிற பின்னர்.
இன்னம்பூரான்
28 03 2013
சித்திரத்துக்கு நன்றி: http://eluthu.com/images/poemimages/k/106995.gif