Monday, March 18, 2013

அன்றொரு நாள்: அக்டோபர் 6:III விஷ்ணம்பேட்டை முத்துரங்கையர் சுப்ரமணிய ஐயர் (04 06 1905 ~ 06 10 1981):II



அன்றொரு நாள்: அக்டோபர் 6:III விஷ்ணம்பேட்டை முத்துரங்கையர் சுப்ரமணிய ஐயர் (04 06 1905 ~ 06 10 1981):II
1 message

Innamburan Innamburan Wed, Oct 19, 2011 at 4:11 PM
To: thamizhvaasal
Cc: Innamburan Innamburan

அன்றொரு நாள்: அக்டோபர் 6:III
விஷ்ணம்பேட்டை முத்துரங்கையர் சுப்ரமணிய ஐயர் (04 06 1905 ~ 06 10 1981):II
சற்றே தேற்றிக்கொண்டேன். பேராசிரியர் நாகநந்தி அவர்களின் குடும்பமும், திரு.ஹரிகி போன்ற மாணவர்களும் சிரத்தை எடுத்துக்கொண்டதால் தான் அவருக்கு மணிமண்டபம் நிறுவப்பட்டது. அவரது படைப்புகள் பத்திரப்படுத்தப்பட்டன. இனியாவது நாம் யாவரும் இயன்றவரையில் நம் மரபுகளை அழிக்காமல் இருந்தால், நலம். போற்றி பாதுகாத்தால் நன்மை. ஆய்வுகள் பல செய்து நம் இலக்கிய அறிவின் தரத்தை உயர்த்தினால் மேன்மை. இடைச்செருகல்கள்/ இரவலுக்கு சொந்தம் கொண்டாடுவது/ஒருவர் படைப்பை உருவி போர்த்திக்கொள்வது போன்ற குற்றங்களை தவிர்த்தால், பட்டொளி வீசி பறக்கும், தமிழன்னையின் புகழ். தடையேதும் இருந்தால், சொல்லுங்கள். கூடி, விடை காண்போம்.
திரு. வி.எம்.சுப்ரமண்ய ஐயர் (வி.எம்.எஸ்.) அவர்களுக்கு வருவோம். நேற்று தொடர்பு லேசாக பிரிந்தது. குடமுருட்டி ஆறு, துள்ளலும், ஓட்டமுமாக, அசைந்தாடி வரும் திருக்காட்டு பள்ளி என்னும் பாடஸ்தலத்தில் பள்ளிக்கல்வி, அவருக்கு. தமிழ்த்தாத்தா என்று பிற்காலம் புகழப்பட்ட திரு. உ.வே.சா. அவர்களின் அறிமுகம் கிடைத்தது. அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் முன்னோடியான மீனாக்ஷி கல்லூரியில் தமிழில் (வடமொழி வினாத்தாள் ஒன்றும் உண்டு.) வித்வான் பட்டத்துக்குப் படிக்கச்சொல்லி, அவர் ஆலோசனை தந்தார். முதலிடம் பெற்ற வி.எம்.எஸ். அவர்களுக்கு  திருப்பனந்தாள் மடம் 1000 ரூபாய் பரிசு அறிவிக்க, அதை 1929ல் கும்பகோணம் போர்ட்டர் ஹாலில் நடந்த விழாவில், தலைமை தாங்கி உவேசா அவர்களே வழங்கினார். அந்த உயர்ந்த பரிசை பெற்ற முதல் மாணவன், திரு. வி.எம்.எஸ். இரண்டாமவர்: வித்வான். வி.பூவராகம் பிள்ளை ~ 1930 (என்னே அழகிய திருமண் நாமம்.): மூன்றாமவர்: வித்வான்.கே.சுந்தரமூர்த்தி ஐயர் ~ 1931: நான்காவது: வித்வான் டி.பி. பழனியப்பப்பிள்ளை ~ 1932: ஐந்தாவது: கி.வா.ஜகந்நாத ஐயர் ~ 1933. நமக்கு பொதுவாக, கி.வா.ஜ.அவர்களை பற்றியும், அவருடைய சிலேடையை பற்றி திருப்பூர் கிருஷ்ணன் அவர்கள் சொல்வதும் தெரியும். ஏதோ, தமிழன் செய்த பூர்வஜன்ம சாபல்யமாக,வி.எம்.எஸ். அவர்களின் புதல்வி நாகலக்ஷ்மியின் செவிவாய் செய்திகளை அடித்தளமாக வைத்து, ஃபிரான்ஸ் நாட்டு தமிழ் புலவர் ழான் - [Jean-Luc Chevillard]ம், முனைவர்  எஸ்.ஏ.எஸ். சர்மா அவர்களும் தராவிடில் திருவாசகத்தை ஆங்கிலத்தில் அருமையாக மொழி பெயர்த்த வி.எம்.எஸ். அவர்களை முற்றிலும் மறந்து இருப்போம். தமிழன்னை நம்மை மன்னித்திருக்கமாட்டாள். மற்ற மூவரை பற்றியும் செய்திகள் வந்தால் நல்லது. கூகில் தேடுபொறியில் அவர்களை பற்றி ஒரு தகவலும் இல்லை. எண்பது வருடங்களுக்குள், தமிழில் முதல் பரிசு வாங்கிய அறிஞர்களை பொது நினைவாற்றலிலிருந்து தமிழார்வலர்கள் தொலைத்து விட்டார்கள் என்று நேரடியாக குற்றம் சாற்றுகிறேன். இது நிற்க.
1929லிருந்து 1964 வரை சென்னை கிருத்துவக்கல்லூரியில் ஆசிரியராக பணி புரிந்த வி.எம்.எஸ். அவர்கள் 1930 ல் பி.ஓ.எல். பரிக்ஷை எழுதினார், திருவல்லிக்கேணியில், உவேசா அவர்களில் இல்லத்தருகே, வசித்து, அன்றாடம் அவருடைய ஆய்வுப்பணியில் உதவி வந்தார்; விடுமுறை காலங்களில் ஏடுகள் தேடும் பணியில் அவருடன் இணைந்து உழைத்தார். ஐந்து நூல்களின் அறிமுகத்தில், உ.வே.சா. அவர்கள் வி.எம்.எஸ்.பற்றி எழுதியிருக்கிறார். உவேசா நூலகத்துடன் அவருக்கு தொடர்பு இருந்தது. முர்ரே ராஜம் என்ற ஏலமிட்டு வணிகம் செய்த பிரமுகர், பழைய தமிழ் நூல்களை ஆராய்ந்து பதிவு செய்து ரூபாய் 1/- வீதம், கிட்டத்தட்ட இலவசமாக, விற்பனை செய்தார். என்னிடம் சில உளன. அவருக்கு உதவியாக வி.எம்.எஸ் இருந்ததாகத் தெரிகிறது. 1966ல் பாண்டிச்சேரி வந்தடைந்தார். INSTITUT FRANÇAIS DE PONDICHÉRY ஆதரவு அளித்தது.
அவர் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தவை:
  1. அகநானூறு: 1975: மூன்று தொகுப்புகள்;
  2. தேவாரம்: 1976 -1984 15 தொகுப்புகள்
  3. 9வது -10வது திருமுறை - திரு. பி.பி.சேஷாத்ரி சொன்னது;
  4. 11வது திருமுறை - 2 தொகுப்புகள் தயாரான நிலையில் மறைவு; 3வது;
 தொகுப்பு: டி.வி.கங்காதரன்; 4 வது டி.வி.கோபால ஐயர்.
அவருடைய ஞாபகார்த்தக்கூட்டத்தில் பேராசிரியர் க்ராஸ் பேசிய உரையில் ஒலிப்பதிவு, உசாத்துணையில் உளது.
ரகசியமாக ஒற்றர்கள் சந்திக்கும்போது, ஒரே நூறு ரூபாய் நோட்டின் இரு துண்டுகளை பரிமாரிக்கொள்வார்களாம். அது மாதிரி, நேற்று இணைத்த அறிவிப்பின் கீழ் பாதியும், திரு.வி.எம்.எஸ் அவர்களின் விசால முகாரவிந்த சித்திரத்தைத்தையும், டிஜிடல் தேவாரத்தை பற்றிய ஒரு ஆய்வுத்க்ட்டுரையையும் இணைத்துள்ளேன். பொறுத்த்தாள்க.
This CD contains the Tamil text (PIFI text) [HTML format] of 798 patikam-s (=385+312+101) as it appears inside the 2 volumes of the Tēvāram edition (paṇ muṟai / பண்முறை) published by the French Institute of Pondicherry (IFP) under the guidance of T.V.Gopal Iyer and F. Gros:
Mūvar Tēvāram (vol. 1, Ñāṉacampantar), Publications de l'Institut Français d'Indologie (PIFI) 68-1, 1984
Mūvar Tēvāram (vol. 2, Appar and Cuntarar), Publications de l'Institut Français d'Indologie (PIFI) 68-2, 1985.
இன்னம்பூரான்
19 10 2011
உசாத்துணை

3 attachments
THEVAARAM 1.pages
198K
THEVARAM 3.pages
118K
THEVARAM 2.pages
830K

அன்றொரு நாள்: அக்டோபர் 6:II விஷ்ணம்பேட்டை முத்துரங்கையர் சுப்ரமணிய ஐயர் (04 06 1905 ~ 06 10 1981)


அன்றொரு நாள்: அக்டோபர் 6:II விஷ்ணம்பேட்டை முத்துரங்கையர் சுப்ரமணிய ஐயர் (04 06 1905 ~ 06 10 1981)
3 messages

Innamburan Innamburan Tue, Oct 18, 2011 at 7:13 PM

To: mintamil


அன்றொரு நாள்: அக்டோபர் 6:II
விஷ்ணம்பேட்டை முத்துரங்கையர் சுப்ரமணிய ஐயர் (04 06 1905 ~ 06 10 1981)
என் உள்மனதுக்குள் புகுந்து, வளரும் வயதில், என்னை ஆக்ரமித்த சிந்தனையாளர்: மைக்கேல் எய்க்வெம் தெ மாந்தேய்க்னெ (Michel Eyquem de Montaigne: 1533 ~1592).கட்டுரை இலக்கியத்தின் தலைமாந்தர், அவர். அவருடைய கட்டுரை தொகுப்பில் போர்தே பதிப்பு: 1588ம் ஒன்று. அதன் பிரதி ஒன்றில் அவருடைய குறிப்புகள் பல. அவற்றை எல்லாம் ஆய்வு செய்வதில் வந்த பிரச்னை ஒன்று, அவர் காலத்துக்கு சில நூற்றாண்டுகளுக்கு பிறகு மடியும் நிலையில் இருந்த பிரதியை சரி செய்யும் போது, சில குறிப்புக்கள் சிதைந்திருக்கலாமோ என்ற கவலை. சுவையான, நமக்கு பாடம் போதிக்க வேண்டிய தகவல்கள் பல. தருணம் வந்தால் சொல்கிறேன். ~ சிறந்த ஆய்வுக்கு பிறகு ஒரு அருமையான பதிவு வருவதற்குள் அவருடைய 400 வது ஆண்டு விழா வந்து விட்டது 1933ல்!இது நிற்க.
1588 ல் ஃப்ரென்ச் இலக்கிய/இலக்கிய ஆய்வு/ மரபு பராமரிப்பு ஆகிய அணுகுமுறைகள் எங்கே? 2011ல் தமிழகத்தில் நான் காணும் அவமானங்கள் எங்கே? நாற்பதே வருடங்களுக்கு முன்னால், தன்னுடைய இறுதி நாளையும் தமிழுக்கு அர்ப்பணித்த விஷ்ணம்பேட்டை முத்துரங்கையர் சுப்ரமணிய ஐயர் (வி.எம்.எஸ்.) அவர்களையும், அவரை போன்ற புலவர்கள், வித்வான். வி.பூவராகம் பிள்ளை, வித்வான்.கே.சுந்தரமூர்த்தி ஐயர், வித்வான் டி.பி. பழனியப்பப்பிள்ளை ஆகியோரை தமிழ் இலக்கிய ‘அறங்காவலர்கள்’ மறந்து போனதையும், அவர்களின் படைப்புகளை தொலைத்ததையும், அதே கதி புதுமை பித்தனிலிருந்து கணக்கற்ற தமிழ் செல்வர்களுக்கு அதோ கதியாக அமைந்தததையும், எங்கே சொல்லி அழுவேன்? இப்படித்தான், என்றோ ஒரு நாள்,மின் தமிழில் சேர்ந்த புதிதில், ஒரு நாள் ஸுபாஷிணியும், நானும், வித்வான் மு. ராகவையங்காரை பற்றி நாம் அறிந்தது கொண்டது எவ்வளவு குறைவு என்று அங்கலாய்த்துக்கொண்டு இருந்தோம்.  கண்ணுக்கெதிரே, புத்தகங்களும், புலவர்களும், ஓலைச்சுவடிகளும் மடிந்து போகின்றன. இந்த நிலையையும், இடைச்செருகல்களையும், ‘அபேஸ்’ அபகரிப்புகளையும் கைவிட்டு விட்டு, தொல்காப்பியர் காட்டிய வழியில், உண்மையாக, மனசாக்ஷிக்கு ஹிதமாக, என்று தான் தமிழன்னையை வணங்கப்போகிறோம்? உலக புலவர் மன்றங்களில் என்று நல்ல பெயர் எடுக்கப்போகிறோம்?
அப்படி என்ன செய்து விட்டார், வி.எம்.எஸ்? விடை காண ஃபிரான்ஸ் போகவேண்டும். ஆம். 1970 களிலிருந்து தனது மரணம் வரை, வி.எம்.எஸ் அவர்களால் 3500 பக்கங்களில், ஆங்கில மொழி பெயர்ப்புடன், தலைமுறை வழிமுறையில், வடிக்கப்பட்ட வாழ்நாள் சாதனை: தேவாரம். தமிழ்க்கடல் தி.வா. கோபால ஐயர் அவர்களின் வழி காட்டலுக்கு இணங்க,மின் தமிழர் ழான் (Jean-Luc Chevillard) அவர்களும், முனைவர் எஸ். ஏ.எஸ். சர்மா அவர்களும் ஜூலை 1997லிருந்து கிட்டத்தட்ட பத்து வருடங்கள் கடுமையாக உழைத்து டிஜிடல் தேவாரம் என்ற சீ.டி. தயார் செய்தார்கள். அதெற்கெல்லாம் நிதியுதவி, இடம் கொடுத்த அன்னை இல்லங்கள்:INSTITUT FRANÇAIS DE PONDICHÉRY & ÉCOLE FRANÇAISE D'EXTRÊME-ORIENT. உசாத்துணை தளத்தில் நன்றி நவிலல் பகுதியில், எத்தனை வெளி நாட்டு தமிழ் புலவர்கள் என்று நீங்களே பார்த்துக்கொள்ளுங்கள்.
திரு. வி.எம்.சுப்ரமண்ய ஐயர் (வி.எம்.எஸ்.) அவர்களுக்கு அக்டோபர் 6ம் நாளே அஞ்சலி செலுத்தியிருக்கவேண்டும் என அறிந்தேன், தாமதமாக. நல்லது பேச, நாள் பார்ப்பானேன், என்று அவருக்கு இன்று அஞ்சலி செலுத்துகிறேன். அவரை பற்றி மேலும் எழுத வேண்டும். இன்று இருக்கும் மனவலியில் மேலே எழுதமுடியவில்லை. நாளை தொடர அனுமதியுங்கள்.
(தொடரும்)
இன்னம்பூரான்
18 10 2011
உசாத்துணை:



VMS jpg.pages
722K

Geetha Sambasivam Tue, Oct 18, 2011 at 7:39 PM

To: mintamil@googlegroups.com
Cc: Innamburan Innamburan
அறிந்திராத தகவலைக் கொடுத்தமைக்கு நன்றி ஐயா.  இவர்களைப் போன்றவர்களே தமிழுக்கு உண்மையான சேவை செய்கின்றனர்.  அமைதியான ஆர்ப்பரிப்பு இல்லாச் சேவை.

2011/10/18 Innamburan Innamburan <innamburan@gmail.com>

அன்றொரு நாள்: அக்டோபர் 6:II
விஷ்ணம்பேட்டை முத்துரங்கையர் சுப்ரமணிய ஐயர் (04 06 1905 ~ 06 10 1981)

திரு. வி.எம்.சுப்ரமண்ய ஐயர் (வி.எம்.எஸ்.) அவர்களுக்கு அக்டோபர் 6ம் நாளே அஞ்சலி செலுத்தியிருக்கவேண்டும் என அறிந்தேன், தாமதமாக. நல்லது பேச, நாள் பார்ப்பானேன், என்று அவருக்கு இன்று அஞ்சலி செலுத்துகிறேன். அவரை பற்றி மேலும் எழுத வேண்டும். இன்று இருக்கும் மனவலியில் மேலே எழுதமுடியவில்லை. நாளை தொடர அனுமதியுங்கள்.

(தொடரும்)
இன்னம்பூரான்
18 10 2011

Dhivakar Wed, Oct 19, 2011 at 6:12 AM

Reply-To: mintamil@googlegroups.com
To: mintamil@googlegroups.com
>>அப்படி என்ன செய்து விட்டார், வி.எம்.எஸ்? விடை காண ஃபிரான்ஸ் போகவேண்டும். ஆம். 1970 களிலிருந்து தனது மரணம் வரை, வி.எம்.எஸ் அவர்களால் 3500 பக்கங்களில், ஆங்கில மொழி பெயர்ப்புடன், தலைமுறை வழிமுறையில், வடிக்கப்பட்ட வாழ்நாள் சாதனை: தேவாரம். தமிழ்க்கடல் தி.வா. கோபால ஐயர் அவர்களின் வழி காட்டலுக்கு இணங்க,மின் தமிழர் ழான் (Jean-Luc Chevillard) அவர்களும், முனைவர் எஸ். ஏ.எஸ். சர்மா அவர்களும் ஜூலை 1997லிருந்து கிட்டத்தட்ட பத்து வருடங்கள் கடுமையாக உழைத்து<<

இப்படிப்பட்ட செய்திகள் வெளியுலகம் காணாமலே போகிறது என்பது வேதனைக்குரியதான செய்தி. இன்னம்பூரார் இதனைப் போன்று பல செய்திகளை வெளிக்கொணர்வது மிகவும் பாராட்டுதலுக்குரிய செயலாகும். தன்னலம் கருதாத இன்னம்பூராரின் இந்தச் செய்லகள் மூலம் எத்தனையோ தன்னலமற்ற முன்னோர்கள் தெரியவருகிறார்கள்.

இந்தச் சமயத்தில் இன்னொரு தன்னலமற்றவரான திரு மறவன்புலவு சச்சிதானந்தம் அவர்கள் இன்று தேவாரம் தளத்தை பல்லாயிரக்கணக்கான மக்கள் தினமும் பார்க்கும் வகையில் கொண்டு வந்திருப்பதை நினைவு கூறுகிறேன். தேவாரம், திருமுறைப் பாடல்களோடு, ஒவ்வொரு பாட்டுக்கும் பொழிப்புரை, குறிப்புரை, மற்ற மொழிகளில் மொழிமாற்றம் இவை அத்தனையும் ஒரே தளத்தில் கொண்டு வருவது எத்தனை அரிய செயல்!

மற்றவர்களுக்காகவே இந்த அரிய தொண்டு என்பதை அடிக்கடி நினைவு பார்த்துக் கொள்கிறேன்.

திவாகர்
2011/10/18 Innamburan Innamburan <innamburan@gmail.com>
[Quoted text hidden]


--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minTamil@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil



--
Dhivakar
www.vamsadhara.blogspot.com
www.aduththaveedu.blogspot.com
[Quoted text hidden]

அன்றொரு நாள்: அக்டோபர் 6




அன்றொரு நாள்: அக்டோபர் 6
3 messages

Innamburan Innamburan Thu, Oct 6, 2011 at 5:55 AM
To: mintamil

அன்றொரு நாள்: அக்டோபர் 6
ஒரு புரட்சியின் சுயசரிதம்
தற்காலம், இந்தியாவில் பிரிவினை சக்திகள் தேசாபிமானத்தை படுத்தும் பாடு கவலை தருகிறது. இந்திய அரசு முறை ஒரு கூட்டமைப்பு என்றாலும், அடித்தளம் இந்திய தேசாபிமானம் தான். இந்தியர்களாகிய நாம், நுனி மரத்தில் அமர்ந்து, அடி மரத்தை வெட்டி சாய்ந்து வீழ்த்திக்கொள்ளுவோமோ என்ற அச்சம் தான் கவலைக்குக் காரணம்.
டைம்லைன்: முன்னும் பின்னுமாக: அங்குமிங்குமாக: 
* 1954
பொட்டி ஶ்ரீராமுலுவின் உண்ணாவிரதத்தை போய் பார்த்ததையும், ராஜாஜியின் எதிர்ப்பையும், நேருவின் விட்டுக்கொடுத்த மனப்பான்மையும், மொழிவாரி மாநிலங்கள் தேசாபிமானத்தை குலைக்கும் என்று நான் எழுதிவிட்டு, நேர்காணலில் நடந்த துவந்த யுத்தத்தையும் மறக்கவில்லை.
*2011
இன்று ஒரு பாகிஸ்தானியர் கடையில், அவரும், நானும், ஒரு பங்களாதேசியும், ஒரு பிரிட்டீஷ்காரரும் சகஜமாக பேசிக்கொண்டிருந்தோம். இனபேதம் ஒன்றும் தென்படவில்லை.
*1945
செர்பியா,மாண்டெனெக்ரோ,ஸ்லோவெனியா, க்ரோஷியா, பாஸ்னியா-ஹெர்ஸெகொவினியா & மாசிடோனியா ஆகிய மாநிலங்கள் அடங்கிய யூகோஸ்லாவிய சோஷலிச குடியரசின் பிரகடனம். நேருவின் நண்பரான மார்ஷல் டிட்டோ சர்வாதிகாரி. இனவெறியாளர்களை அடக்கி வைத்திருந்தார்.
*1980
மார்ஷல் டிட்டோ மறைவு.
*1990
செர்பிய கொடுங்கோலன் ஸ்லோபடான் மிலோசெவிக் அதிபரான பிறகு, இனவெறி பேயாட்டம் ஆடியது; நாடு குட்டிச்சுவரானது. இனவெறியாளரான இவரது கொடுங்கோலாட்சியில் 20 ஆயிரம் மக்கள் 1991 க்ரோஷியன் போரிலும் மாண்டனர்; 250 ஆயிரம் மக்கள் 1992 -5 பாஸ்னியன் போரிலும் மாண்டனர்.
  • அக்டோபர் 5, 2000
யூகோஸ்லாவிய பார்லிமெண்ட் கட்டிடத்தை மக்கள் இயக்கம் சூழ்ந்து கொண்டு, எதிர்க்கட்சித்தலைவர் கோஸ்டுனிக்காவை அதிபராக பிரகடனம் செய்தது. செர்பிய கொடுங்கோலன் மிலோசெவிக்கின் விலகல் தான் டிமாண்ட். ராணுவம் இதை ஏனோ தானோ என்று தான் பெயரளவில் தடுக்க முயன்றது. ரேடியோ ஸ்டேஷன் கொளுத்தப்பட்டது. புரட்சி ரேடியோ, ராணுவம் தங்களோடு இணைந்து விட்டதாக  அறிவித்தது. சொல்லப்போனால், இது சமாதானமாக நடந்த புரட்சி என்றது பீ.பீ.சி.
* அக்டோபர் 5, 2000: காலை மணி 11:
அரசின் கைப்பாவையான ரேடியோ கடந்த மாத தேர்தலின் முடிவு ரத்து செய்யப்பட்டதாகவும், மறு தேர்தல் நடக்கப்போவதாக, உச்சநீதிமன்றம் முடிவு செய்ததாக அறிவித்தது. உள்ளடங்கிய அனர்த்தம் ~ இன்னும் ஒரு வருடகாலம் மிலோசெவிக் நீடிப்பார்.
  • அக்டோபர் 5, 2000: மாலை மணி 3:
புரட்சியாளர்கள் மிலோசெவிக் பதவிலிருந்து விலகக் கொடுத்த கெடு முடிந்தது. அவர் மீது எலெக்ஷன் ஃப்ராட் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. பார்லிமெண்ட் அருகில் பிரமாண்டமான மக்கள் கூட்டம். போலீஸ் கண்ணீர்புகை வீச்சு முதலில். பின்னர், அவர்களும் புரட்சியாளராயினர். அமெரிக்காவும், பிரட்டனும் புரட்சியை ஆதரித்தன. அரசின் ஊடகதொடர்பு நிறுவனம், மக்கள் பக்கம் சாய்ந்தது. எதிர்க்கட்சி தலைவர் கோஸ்டுனிக்கா உரை ஆற்றப்போவதாக பேச்சு. ரஷ்யாவின் ஆதரவும், ராணுவத்தின் ஆதரவும் கிடைத்தால், புரட்சிக்கு ஜயம் தான்.
  • அக்டோபர் 6, 2000:
மிலோசெவிக் ராஜிநாமா. கோஸ்டுனிக்கா உலகத்துக்கு நேசக்கரம் நீட்டுகிறார். யூகோஸ்லாவியா சகஜ நிலைக்கு திரும்பத் தொடங்குகிறது.
*2001 
கொஸாவா,பாஸ்னியா, க்ரோஷ்யா போர்க்கள குற்றவாளியாகவும் பாஸ்னியாவில் இனவெறி படுகொலையாளியாகவும், மிலோசெவிக், ஐநாவின் குற்றவியல் கோர்ட்டில் ஆஜர்படுத்துவதற்காக, நாடு கடத்தப்பட்டு, ‘த ஹேக்’ என்ற நகருக்கு கொணரப்பட்டார்
*மார்ச் 2006
மிலோசவிக் சிறையில் மாண்டு போனார். செர்பியாவின் பொருள் நிலையையும், அரசியல் ஆளுமையையும் குலைத்த புண்யம் இவரைச்சாரும். இந்த பிராந்தியங்களில், ஐநா சார்பாக பணி புரிந்தவர்களை எனக்கு நன்றாக தெரியும். ஐநா கோர்ட்டு நடவடிக்கைகளை அக்காலம் நான் கவனித்தது உண்டு, தொலைக்காட்சியில். 
*2011: இந்தியா:
இங்கு யூகோஸ்லாவியாவின் வரலாறும் இனவெறிகளும், இந்தியாவின் வரலாறும், பிரிவினை அழுத்தங்களும் ஒப்புமை செய்யப்படவில்லை. இந்திய தேசாபிமானத்தின் சுரத்து இறங்குவதையும், கண்டும் காணாமல் இருக்க முடியவில்லை.
இன்னம்பூரான்
06 10 2011
stamp_6653.jpg

உசாத்துணை:



LK Thu, Oct 6, 2011 at 5:58 AM
Reply-To: mintamil@googlegroups.com
To: mintamil@googlegroups.com
முன்பு எப்போதையும் விட இப்பொழுது இங்கு பிரிவினைவாதம் ஓங்கி ஒலிக்கிறது :(





 



Geetha Sambasivam Thu, Oct 6, 2011 at 9:56 AM
To: mintamil@googlegroups.com
Cc: Innamburan Innamburan
தற்காலம், இந்தியாவில் பிரிவினை சக்திகள் தேசாபிமானத்தை படுத்தும் பாடு கவலை தருகிறது. இந்திய அரசு முறை ஒரு கூட்டமைப்பு என்றாலும், அடித்தளம் இந்திய தேசாபிமானம் தான். இந்தியர்களாகிய நாம், நுனி மரத்தில் அமர்ந்து, அடி மரத்தை வெட்டி சாய்ந்து வீழ்த்திக்கொள்ளுவோமோ என்ற அச்சம் தான் கவலைக்குக் காரணம்.//

கவலை தரும் விஷயமே. முக்கியமாய் இனம், மானம், மொழி எனப் பிரிந்து நின்று பேசுவதே.  இப்படிப் பேசி மக்கள் உணர்வுகளைத் தூண்டுகின்றனர்.  அதிலும் இளைஞர்கள் அதிகம் ஈர்க்கப் படுகின்றனர். சில சமயம் நினைச்சால் கவலையாய் இருந்தாலும் நம்பிக்கையின் கீற்றும் தெரிகிறது.  ஆட்டோவில் போகையில், கால் டாக்சிப் பயணத்தில், நெடுந்தூரப் பயணத்தில், வெளிமாநிலா மக்களிடம் பேசியதில் என்று பார்த்தால் இன்னும் இந்தியர் என்ற உணர்வு அறவே அற்றுப் போகவில்லை என்றும் புரிகிறது.  சுயநலம் தலை தூக்கி இருக்கிறது.   அது மாறவேண்டும்.

2011/10/6 Innamburan Innamburan <innamburan@gmail.com>
அன்றொரு நாள்: அக்டோபர் 6
ஒரு புரட்சியின் சுயசரிதம்
இங்கு யூகோஸ்லாவியாவின் வரலாறும் இனவெறிகளும், இந்தியாவின் வரலாறும், பிரிவினை அழுத்தங்களும் ஒப்புமை செய்யப்படவில்லை. இந்திய தேசாபிமானத்தின் சுரத்து இறங்குவதையும், கண்டும் காணாமல் இருக்க முடியவில்லை.
இன்னம்பூரான்
06 10 2011
stamp_6653.jpg

உசாத்துணை:


-- 

அன்றொருநாள்: மார்ச் 19 உலகமே நாடகமேடை




அன்றொருநாள்: மார்ச் 19 உலகமே நாடகமேடை
5 messages

Innamburan Innamburan Sun, Mar 18, 2012 at 5:56 PM
To: mintamil , thamizhvaasal

அன்றொருநாள்: மார்ச் 19
உலகமே நாடகமேடை
கண்ணினும் செவியினும் திண்ணிதின் உணரும்
உணர்வுடை மாந்தர்க் கல்லது தெரியின் 
நன்னயப் பொருள்கோள் எண்ணருங் குரைத்தே’
(தொல்காப்பியம் : மெய்ப் : 27)
கலைஞராயினும், காண்போராயினும், கண்டும், கேட்டும் சுவைக்க, நடிப்பு இயல்பாக இருக்கவேண்டும் என்பதை உணர வேண்டும். மார்லன் ப்ராண்டோ ஒரு மாஃபியா கும்பலின் தலைவனாக காட்ஃப்ப்தரில் நடிக்கவேயில்லை. அந்த கர கர குரலை ஸ்லோமோஷனில் கேட்கும்போதே, வயிற்றை பிசைந்தது, பீதியில். மிர்ச்சி மசாலாவில் நஸ்ருத்தீன் ஷா கட்டை பஞ்சாயத்து ஜமீந்தாராக நடிக்கவில்லை. மிடுக்காக நடந்து காட்டினார். இங்கிலாந்தில் ஐம்பது லக்ஷம் பேர் பார்த்து மகிழ்ந்த சோப்ராவின் மஹாபாரதத்தில் சகுனியாக நடித்த குஃபி பைண்டால் அசல் வில்லன். பென் கிங்ஸ்லி காந்திஜியாக நடிக்கவில்லையா. கதாநாயகன், கதாநாயகிகளை விட குணசித்திரபாத்திரங்களை வாழ்ந்தே காட்டிய நடிகர்களை நாம் கூடுதலாக புகழவேண்டும். ஏனெனில், அவர்களின் வாழ்க்கையே கூடு விட்டு கூடு பாய்ந்ததாக அமைத்துக்கொண்டதால். அதுவும் வித்தியாசம், வித்தியாசமான பாத்திரங்கள். ரகுவரன் என்ற தமிழ் நடிகரை மறக்கமுடியாது. ‘இது ஒரு மனிதன் கதை’ என்ற திரைப்படத்தில் அவர் குடிகாரனாக மாறிய செல்வந்தராக நடிக்கவேயில்லை. அது அவருடைய சுயசரிதம் போல வாழ்ந்தே காட்டினார். ‘முதல்வன்’ என்ற திரைப்படத்தில் கர கர குரலில் பேசி, ரசிகர்களை அச்சத்தில் ஆழத்திய முதன்மந்திரியாக அவர் நடிக்கவேயில்லை. அத்தனை அமுத்தலாக ராஜாங்கம் செய்தார். கிட்டத்தட்ட 80 படங்களில், தன்னுடைய தனி முத்திரையை பதித்த கலைமாமணி ரகுவரனின் நிஜ வாழ்க்கை  சோகமானது. குடியும், லாகிரி வஸ்துக்களும் அவரது வாழ்க்கையை பாதித்து, இல்லற வாழ்க்கையை குலைத்து, மார்ச் 19, 2008ல் அவரது உயிரையும் பறித்து விட்டன. என்ன தான் குற்றம் குறை கண்டாலும், அவரின் பிரிவு எனக்கு விசனம் அளித்தது.
இன்னம்பூரான்
19 03 2012
Inline image 1

உசாத்துணை:

Subashini Tremmel Sun, Mar 18, 2012 at 6:19 PM
Reply-To: mintamil@googlegroups.com
To: mintamil@googlegroups.com

எனது அபிமான தமிழ் நடிகர்களில் ஒருவர் ரகுவரன். மிகச் சிறந்த நடிகர். வித்தியாசமான குரல். வித்தியாசமான நடிப்பு. இவரோடு அழகிய நடிகை சுமலதாவும் நடித்த ஒரு படித்தில் இடம் பெற்ற ..இன்று வரை என்னைக் கவர்ந்தஒரு பாடல்..

http://www.youtube.com/watch?v=umbBGrGJzrI&feature=related

இவர் போன்ற மற்றொரு தமிழ் நடிகர் கிடைப்பது அபூர்வம்.

சுபா

2012/3/18 Innamburan Innamburan <innamburan@gmail.com>

 

கி.காளைராசன் Sun, Mar 18, 2012 at 9:57 PM
To: mintamil@googlegroups.com
Cc: thamizhvaasal , Innamburan Innamburan
வணக்கம்.
‘முதல்வன்’ என்ற திரைப்படத்தில் கர கர குரலில் பேசி, ரசிகர்களை அச்சத்தில் ஆழத்திய முதன்மந்திரியாக அவர் நடிக்கவேயில்லை. அத்தனை அமுத்தலாக ராஜாங்கம் செய்தார். கிட்டத்தட்ட 80 படங்களில், தன்னுடைய தனி முத்திரையை பதித்த கலைமாமணி ரகுவரனின் நிஜ வாழ்க்கை  சோகமானது.
நல்லதொரு நடிகரை இழந்துவிட்டோம்.
-- 
அன்பன்
கி.காளைராசன்

Tthamizth Tthenee Mon, Mar 19, 2012 at 5:06 AM
Reply-To: thamizhvaasal@googlegroups.com
To: thamizhvaasal@googlegroups.com
கலைஞராயினும், காண்போராயினும், கண்டும், கேட்டும் சுவைக்க, நடிப்பு இயல்பாக இருக்கவேண்டும் என்பதை உணர வேண்டும்
உண்மையான  கருத்து
 
இயல்பாக நடிக்க   இயல்பை மாற்றிக்கொண்டால் போதும்,
 
அதைவிடுத்து அந்தக் கதாபாத்திரத்தோடு  ஒன்றிவிடுதல் தவறாகும்.
 
இறப்பது போல நடிப்பவர்களெல்லாம்  இறந்தே காட்ட முடியுமா?
 
அன்புடன்
தமிழ்த்தேனீ 
[Quoted text hidden]
--

Geetha Sambasivam Wed, Mar 21, 2012 at 10:31 AM
To: thamizhvaasal@googlegroups.com
Cc: mintamil , Innamburan Innamburan
ரகுவரன் என்ற தமிழ் நடிகரை மறக்கமுடியாது. ‘இது ஒரு மனிதன் கதை’ என்ற திரைப்படத்தில் அவர் குடிகாரனாக மாறிய செல்வந்தராக நடிக்கவேயில்லை. அது அவருடைய சுயசரிதம் போல வாழ்ந்தே காட்டினார். ‘//

உண்மை. எனக்கும் அலட்டல் இல்லாத அவர் நடிப்புப் பிடிக்கும்.  ஆனால் முதல்வன் பார்த்தது இல்லை. மற்றச் சில படங்களில் பார்த்திருக்க்கேன். 

On Sun, Mar 18, 2012 at 11:26 PM, Innamburan Innamburan <innamburan@gmail.com> wrote:
அன்றொருநாள்: மார்ச் 19
இன்னம்பூரான்
19 03 2012
Inline image 1

உசாத்துணை:

Sunday, March 17, 2013



அன்றொருநாள்: மார்ச் 18 வாட்டர்லூ! பீட்டர்லூ!
4 messages

Innamburan Innamburan Sat, Mar 17, 2012 at 5:54 PM
To: mintamil , thamizhvaasal

அன்றொருநாள்: மார்ச் 18
வாட்டர்லூ! பீட்டர்லூ!
அன்றொருநாள்: மார்ச் 10 & 18: வாழ்க! நீ எம்மான்!’ இழையின் தொடரே இது. பொன்னூட்டங்கள் அளித்த அன்பர்களுக்கு நன்றி. என் கடன் பணி செய்து கிடப்பதே என்பவர்கள் பின்னூட்டம் எதிர்ப்பார்க்கலாகாது என்று மற்றொரு இழையில் விவாதிக்கப்பட்டது. இழைக்கு ஷோபை தருவதே பின்னூட்டம் தான். எழுதுபவருக்கு டானிக். அவை இழைக்கு மேன்மை தரக்கூடும் என்பதற்கு,அன்றொருநாள்: மார்ச் 10 & 18: வாழ்க! நீ எம்மான்!’ இழை ஒரு சான்று. ஒரு அரிய திரைப்படமே வந்திறங்கியது. அரிய புதிய தகவல்களையும், கருதுகோள்களையும் தேடி வரவழைக்கத் தூண்டும் பின்னூட்ட டானிக் என்பதற்கு சான்று, இன்றைய இந்த இழை. பின்னூட்டங்களே! உங்களை முன் வந்து, ‘வருக, வருக’ என்று வரவேற்கிறோம். 
‘ஒரு மனிததெய்வத்தின் கீர்த்தி பாடப்பட்டது’ என்ற அன்றைய ஈற்றடியின் அடித்தளம், 1819லியே இங்கிலாந்தில் எழுதப்பட்ட ஒரு அரசியல் சார்ந்த கவிதை. அதுவே நவீன ஒத்துழையாமை இயக்கத்திற்கு அடி கோலியது என்பது அநேக வரலாறுகளில் காணப்படாத உண்மை. பி.பி.ஷெல்லி என்ற பிரபல கவிஞரின்  The Mask of Anarchy என்ற அந்த கவிதை தன்னை மிகவும் பாதித்ததாக, அண்ணல் காந்தி கூறியிருக்கிறார். அந்த கவிதையின் பின்னணியை சற்றே நோக்குவோம்.
‘பீட்டர்லூ படுகொலை’ என்று கேள்விபட்டிருக்கிறீர்களோ? 1819 ம் வருடம். அக்காலத்தில் இங்கிலாந்தில் நடைமுறையில் இருந்த உணவு தான்யம் பற்றிய சட்டம் ஏழை மக்களை மிகவும் பாதித்தது. சோத்துக்கு லாட்டரி. மக்களில் 2% செல்வந்தருக்கு மட்டுமே வாக்குரிமை. மான்செஸ்டரில், ஆகஸ்ட் 16 காலை, ஒரு கூட்டம் கூடியது; கட்டுக்கோப்புடன், கெளரதையாக நடந்து கொண்டனர், ஏழை மக்கள். ஒரு ஜட்கா வண்டி தான் மேடை. பேன்னர்களில் ‘சீர்திருத்தம் வேண்டும்’, ‘வாக்குரிமை’, ‘பிரதிநிதித்துவம்’ என்ற கோஷங்கள். மேலும் கேளுங்கள். ‘அன்பு வேண்டும்’ என்ற கனிவான பிரார்த்தனை. அதிகார வர்க்கம் மிரண்டது. ஒரு மினி ஜாலியன்வாலா பாக்! பாய்ந்து, பாய்ந்து வந்த படை நிராயுதபாணிகளாக, கெளரதையாக வந்திருந்த மக்களை தாக்கியது. கத்தியால் குத்தப்பட்டு இறந்தவர்கள் 18; படுகாயமுற்றோர் 700. ஒரே ஒரு ராணுவ அதிகாரி, இந்த படுகொலையை எதிர்த்தார். யாரும் செவி சாய்க்கவில்லை. அதிகப்படி சோகம் யாதெனில், தாக்கிய படையில் இருந்த உதவி பட்டாளத்தில் இருந்து தாக்கியவர்கள் பாமரமக்களே. அரச குடும்பம் முதல், ஆளுமை இந்த தாக்குதலை ஆதரித்தது ஒரு வெட்கக்கேடு. இங்கிலாந்தில், வாழ்க்கையின் எந்த இன்னல்கள் பாடுபடுத்தினாலும், அந்த நாட்டு மக்களிடையே, ஒரு மெல்லிய நகைச்சுவை ரேகை ஓடிய வண்ணம் இருக்கும். நெப்போலியனை வீழ்த்திய வாட்டர்லூ போருக்கு விழா எடுக்கும் ஆங்கிலேயர்கள், ‘பீட்டர்லூ’ என்று ஒரு இழிவுச்சொல்லையும் ஆங்கில அகராதியில் சேர்த்து விட்டனர். 
இந்த துர்ச்சம்பவத்தின் விளைவுகள்: 1.மக்கள் சக்தி பெருகியது. 2. வாக்குரிமை கிடைத்தது. 3. தொழிற்சங்கங்கள் அமைக்க, இது ஹேதுவாயிற்று. 4. மான்செஸ்டர் கார்டியன் என்ற மக்களாதரவு இதழ் தோன்றியது. அதற்கும், நமக்கும் உள்ள சம்பந்தம் பற்றி ஒரு நாள் எழுதலாம். 
  1. இது பற்றி ஷெல்லி எழுதிய The Mask of Anarchy என்றை நீண்ட கவிதை, அஹிம்சை  ஒத்துழையாமை இயக்கத்தின் கோட்பாட்டை தெளிவுறக் கூறிய இலக்கியமாக, கருதப்படுகிறது. பீட்டர்லூ நடந்த வருடமே எழுதப்பட்ட இந்த கவிதையை 13 வருடங்களுக்கு பிறகு ஷெல்லி காலமான பிறகு தான் பிரசுரிக்க முடிந்தது. முதல் சில வரிகளின் தமிழாக்கத்தை, என்னால் இயன்றவரை, உரை நடையில் அளித்து, முழு கவிதையை உசாத்துணையாக, இணைக்கிறேன்.

"Stand ye calm and resolute/Like a forest close and mute,..Rise like Lions after slumber/In unvanquishable number,/Shake your chains to earth like dew/Which in sleep had fallen on you-Ye are many — they are few...".
“காவற்காடு. அடர்த்தியான காடு. வானளாவிய நெடுமரங்கள். அந்த வனாந்திரம் போல சாந்தி நிலவுகிறது. கை கட்டி கட்டுக்கோப்பாக நிற்கும் உங்களிடம் நன்மரங்களைப் போல் அசையா உறுதியை, உங்கள் கண்ணொளியில் காண்கிறேன். தோல்வி காணாத போரின் சின்னங்கள் அவை தான். கொடுங்கோலர்கள் ஊடே பாய்ந்து வெட்டிக் குத்தினாலும், கட்டுக்கோப்பாக நிற்கும் உங்களுடைய கண்ணொளியில் ‘அச்சமில்லை! அச்சமில்லை! அச்சமென்பதில்லையே!’ என்ற ‘பளிச்’ மின்னல்! அவர்களின் ஆத்திரம் தணியும். நாணமிகுந்து, சிவப்பேறிய கன்னங்களுமாக, குனிந்த தலையுடன், வருவார்கள். ‘மாரிமலை முழைஞ்சில் மன்னிக் கிடந்துறங்கும்/ சீரிய சிங்கம் அறிவுற்றுத் தீவிழித்து/வேரிமயிர் பொங்க எப்பாடும் பேர்ந்துதறி/ மூரிநிமிர்ந்து முழங்கிப் புறப்பட்டுப்/ போதருமாப்போலே...’  மக்கள் சக்தியான நீ, தளைகளை உதறி, நீண்ட துயில் கலைந்து  புறப்பட்டு விட்டாய்! வெற்றி நமதே. நீ ஒரு திரள். அவர்கள் ஒரு சுருள்...’
எந்த கடலிலிருந்து மூழ்கி எடுக்கப்பட்டாலும் நன்முத்து, நன்முத்தே. இந்த மான்செஸ்டர் நகருக்கும், மஹாத்மா காந்திக்கும் ‘அன்பு வேண்டும்’ என்ற கனிவான பிணைப்பு ஒன்று உண்டு. உற்ற தருணம் கிடைத்தால், அதை சொல்கிறேன்.
இன்னம்பூரான்
18 03 2012
Inline image 1
உசாத்துணை:

Subashini Tremmel Sun, Mar 18, 2012 at 9:09 AM
Reply-To: mintamil@googlegroups.com
To: mintamil@googlegroups.com



2012/3/17 Innamburan Innamburan <innamburan@gmail.com>
அன்றொருநாள்: மார்ச் 18
வாட்டர்லூ! பீட்டர்லூ!
  1. ..

"Stand ye calm and resolute/Like a forest close and mute,..Rise like Lions after slumber/In unvanquishable number,/Shake your chains to earth like dew/Which in sleep had fallen on you-Ye are many — they are few...".
“காவற்காடு. அடர்த்தியான காடு. வானளாவிய நெடுமரங்கள். அந்த வனாந்திரம் போல சாந்தி நிலவுகிறது. கை கட்டி கட்டுக்கோப்பாக நிற்கும் உங்களிடம் நன்மரங்களைப் போல் அசையா உறுதியை உங்கள் கண்ணொளியில் காண்கிறேன். தோல்வி காணாத போரின் சின்னங்கள் அவை தான்.
அருமையான வரிகள்.

 
..
எந்த கடலிலிருந்து மூழ்கி எடுக்கப்பட்டாலும் நன்முத்து, நன்முத்தே. இந்த மான்செஸ்டர் நகருக்கும், மஹாத்மா காந்திக்கும் ‘அன்பு வேண்டும்’ என்ற கனிவான பிணைப்பு ஒன்று உண்டு. உற்ற தருணம் கிடைத்தால், அதை சொல்கிறேன்.
சரி. காத்திருப்போம்.

சுபா

 
இன்னம்பூரான்
18 03 2012

உசாத்துணை:

செல்வன் Mon, Mar 19, 2012 at 2:56 AM
Reply-To: mintamil@googlegroups.com
To: mintamil@googlegroups.com


2012/3/17 Innamburan Innamburan <innamburan@gmail.com>
பீட்டர்லூ படுகொலை’ என்று கேள்விபட்டிருக்கிறீர்களோ?

உங்களால் இன்று தெரிந்துகொண்டோம். நன்றி
--
செல்வன்



Geetha Sambasivam Wed, Mar 21, 2012 at 10:37 AM
To: thamizhvaasal@googlegroups.com
Cc: mintamil , Innamburan Innamburan
காத்திருக்கோம். நன்றி.

On Sat, Mar 17, 2012 at 11:24 PM, Innamburan Innamburan <innamburan@gmail.com> wrote:
அன்றொருநாள்: மார்ச் 18
இன்னம்பூரான்
18 03 2012

அன்றொருநாள்: மார்ச் 17 பிரதிபலிப்பு




அன்றொருநாள்: மார்ச் 17 பிரதிபலிப்பு
10 messages

Innamburan Innamburan Fri, Mar 16, 2012 at 9:26 PM
To: mintamil , thamizhvaasal

அன்றொருநாள்: மார்ச் 17
பிரதிபலிப்பு
சில தரிசனங்கள் எளிதில் கிடைத்து நம்மை வியப்பில் ஆழ்த்துகின்றன. அப்படியொரு தரிசனம் சென்னை வஸந்த விஹாரில் எங்கள் இருவருக்கும், முற்றிலும் எதிர்பாராமல் கிடைத்தது பாக்கியமே. தலை லாமா தரிசனம். பிரதிபலிப்புக்கும், பிரதிநிதித்துவத்திற்கும் உள்ள வேற்றுமை மலைக்கும், மடுவுக்கும் அமைந்தது போல என்பது தத்க்ஷணமே புரிந்தது.  என்றோரு ஒரு நாள், தமிழ்நாட்டின் தவப்புதல்வனாக ஜனித்த பி.ஆர். ராஜம் ஐயர் ‘வேதாந்தத்தின் புதிர்கள்’ என்ற நூலை எழுதினார். ஆம். ஸ்வாமி விவேகாநந்தரின் ‘பிரபுத்த பாரதா’ என்ற வேதாந்த சஞ்சிகையின் ஆசிரியாக பணிபுரிந்த இளைஞர், அவர் தான். அவரை பற்றி, க்ரிஸ் ஆன்ஸ்டூஸ் என்ற ஒரு அமெரிக்க உளவியல் பேராசிரியருடன் பேசியபோது, இந்த ‘பிரதிபலிப்பு’ நுட்பங்கள் அலசப்பட்டன. இந்த ‘தத்க்ஷண ஞானோதயம்’ பற்றி பேசிக்கொண்டது ஞாபகத்துக்கு வந்தது. தருணம் கிடைத்தால், அது பற்றி பேசலாம். (1956லியே நான் காங்ரா, தரம்சாலா, மக்லாயிட்கஞ்ச் சென்றிருந்த போது பொறி தட்டியதை பற்றியும் பேசிக்கொண்டோம்.) அநேகருக்கு அலுப்பு தட்டலாம். இப்போதைக்கு இத்துடன் விடுவது உசிதம். 
மார்ச் 17, 1959: ஏறி மிதித்தால், வலிக்கத்தானே செய்யும். ஒரு வாரம் முன்னால் தான் பல்லாயிரக்கணக்கான மக்கள் கூடி தலை லாமா சீன விழாவுக்கு செல்லக்கூடாது என்று கெஞ்சுகிறார்கள். நாட்டுக்கே மன உளைச்சல். திபெத் மக்களுக்கு மத போதகரும், லெளகீக விஷயங்களிலும் தலைவருமான (15 வயதிலிருந்து) தலை லாமா ஒரு இளைஞர். ஐந்து வயதில் அந்த பவித்ரமான பதவியேற்ற சிறுவனுக்கு, அந்த பத்து வருடங்களும் கடும்சோதனை. சீனாவின் கம்யூனிஸ்ட் அரசு வலிமை மிகுந்தது. அதனுடைய ஆக்ரமிப்பு கடுமையானது. திபெத் ஈடு கொடுக்க முடியவில்லை. வல்லரசுகள் வாளாவிருந்தனர் என்று தான் தோற்றம். இருந்தாலும், அமெரிக்கா மறைமுகமாக உதவியது என்றும் சொல்லப்படுகிறது. எது எப்படியோ, இரு வருடங்கள் முன்னால்,  தலை லாமா இந்தியாவுக்கு வந்திருந்த போது, அவர் இந்தியாவில் அடைக்கலம் நாடுவதை ஊக்குவிக்காத நேருஜி, 1959ல் அடைக்கலம் கொடுத்து, இந்தியாவுக்கு நற்பெயர் வாங்கிக்கொடுத்தார். இன்று வரை இந்தியாவில் வாழ்ந்து, ஏதோ ஒரு விதத்தில், ஒரு ‘திபெத்திய அரசு’ இந்திய மண்ணில் வாழ்ந்து வருகிறது என்றால், ஆளுமையில் இருந்த எல்லா அரசியல் கட்சிகளுக்கும் நன்றி நவிலவேண்டும்.
லாஸா நகரின் நோர்புலிங்கா அரண்மணைலிருந்து நள்ளிரவில் தப்பியதே பெரிய விஷயம்.  இன்னல்கள் பல அனுபவித்து, இடர்ப்பாடுகள் பலவற்றை கடந்து 14 நாட்கள் பிரயாணம் செய்தபின் தேஜ்பூர் எல்லைக்கு வந்து சேருகிறார். ஒரு கோவேறுகழுதை (யாக்) மீது சவாரி.
இப்போது ஒரு உரையாடல்:
ஒரு இந்திய அதிகாரி: (பணிவுடன்): நான் புத்தர் பிரானுடனா அளவளாவுகிறேன்?
தலை லாமா: இல்லை. அவருடைய பிரதிபலிப்புடன்.
(இதை சினிமா வசனம் என்று சிலர் சொல்லலாம். தலை லாமா அவர்களை கேட்டால், சொல்லுட்டுமே என்பார். குழந்தை மாதிரி சிரிப்பார்.)
இன்னம்பூரான்
17 03 2012
Inline image 1
Inline image 1


உசாத்துணை:

கி.காளைராசன் Fri, Mar 16, 2012 at 11:17 PM
To: mintamil@googlegroups.com
Cc: thamizhvaasal , Innamburan Innamburan
ஐயா ‘இ‘னா அவர்களுக்கு வணக்கம்.

2012/3/17 Innamburan Innamburan <innamburan@gmail.com>
தலை லாமா இந்தியாவுக்கு வந்திருந்த போது, அவர் இந்தியாவில் அடைக்கலம் நாடுவதை ஊக்குவிக்காத நேருஜி, 1959ல் அடைக்கலம் கொடுத்து, இந்தியாவுக்கு நற்பெயர் வாங்கிக்கொடுத்தார். இன்று வரை இந்தியாவில் வாழ்ந்து, ஏதோ ஒரு விதத்தில், ஒரு ‘திபெத்திய அரசு’ இந்திய மண்ணில் வாழ்ந்து வருகிறது
புண்ணியம் பலகோடி.
Inline image 1

புத்தரின் பிரதிபலிப்பைப் பிரதிபலித்ததற்கு நன்றி ஐயா,


Subashini TremmelSat, Mar 17, 2012 at 7:54 AM
Reply-To: mintamil@googlegroups.com
To: mintamil@googlegroups.com

தலை லாமா ஜெர்மனி வந்திருந்த போது தொலைகாட்சிச் செய்திகளின் வாயிலாக, சான்ஸலர் உபசரிப்பு, பேட்டிகள் இவையனைத்தையும் பார்க்கும் வாய்ப்பு அமைந்தது. இவரது பையோகிராபியும் வாசித்திருக்கின்றேன். 

இன்றைய நாளில் இன்னொரு நல்ல விஷயமும் உண்டு தெரியுமா.. என் கணவருக்குப் பிறந்த நாள் :-)

சுபா


Tthamizth Tthenee Sat, Mar 17, 2012 at 8:15 AM
Reply-To: mintamil@googlegroups.com
To: mintamil@googlegroups.com
நண்பர்   ட்ரெம்மல் அவர்களுக்கு  இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்

அன்புடன்
தமிழ்த்தேனீ
[Quoted text hidden]

Innamburan Innamburan Sat, Mar 17, 2012 at 8:38 AM
To: mintamil@googlegroups.com
Lieber Peter, dieser soll Sie grüßen und Sie beide zu wünschen, muss die sehr beste Lebensdauer, auf Ihrem Geburtstag
Innamburan
[Quoted text hidden]

கி.காளைராசன் Sat, Mar 17, 2012 at 1:50 PM
Reply-To: mintamil@googlegroups.com
To: mintamil@googlegroups.com
அம்மையார் சுபாஷினி ட்ரெம்மல் அவர்களுக்கு

 அவர்களுக்கு  இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்
வாழ்க 
வாழ்க தம்பதியினர்
வாழ்க நும் சுற்றம்
வளர்க நும் மின்தமிழ்ப்பணி
-- 
அன்பன்
கி.காளைராசன்


[Quoted text hidden]

rajam Sat, Mar 17, 2012 at 2:35 PM
Reply-To: mintamil@googlegroups.com
To: mintamil@googlegroups.com
Cc: Subashini Kanagasundaram

On Mar 17, 2012, at 12:54 AM, Subashini Tremmel wrote:

தலை லாமா ஜெர்மனி வந்திருந்த போது தொலைகாட்சிச் செய்திகளின் வாயிலாக, சான்ஸலர் உபசரிப்பு, பேட்டிகள் இவையனைத்தையும் பார்க்கும் வாய்ப்பு அமைந்தது. இவரது பையோகிராபியும் வாசித்திருக்கின்றேன். 

இன்றைய நாளில் இன்னொரு நல்ல விஷயமும் உண்டு தெரியுமா.. என் கணவருக்குப் பிறந்த நாள் :-)

சுபா 
அன்பின் சுபா,
காலையில் எழுந்தவுடன் மகிழ்ச்சியான இந்தச் செய்தியைப் படித்து மிகவும்  மகிழ்ந்தேன்! மிகப் பழைய தமிழ் முறைப்படி வாழ்த்த விரும்பினால் அவரை இப்படி வாழ்த்தலாம்: "பஃறுளி ஆற்று மணலினும் பல" ஆண்டுகள் சீருடனும் சிறப்புடனும் நல்ல உடல் நலத்தோடும் மன அமைதியோடும் மகிழ்ச்சியாக வாழவேண்டும்! உங்கள் ஊரில் ஓடும் நதிக்கரைக்குக் கூட்டிப்போய் அந்த மணலை எண்ணச்சொல்லுங்கள். பிறகு வாழ்த்துங்கள்! அன்பு மழையில் திக்குமுக்காடிப்போவார்! :-)
என் அன்பு வாழ்த்துக்கள்!
அன்புடன்,
ராஜம்
[Quoted text hidden]
[Quoted text hidden]

Subashini Tremmel Sun, Mar 18, 2012 at 9:11 AM
Reply-To: mintamil@googlegroups.com
To: மின்தமிழ்

நன்றி.. நன்றி திரு.இன்னம்புரான், டாக்டர் ராஜம், தேனியார், டாக்டர்.காளைராசன்.
உங்கள் அன்பையும் வாழ்த்துக்களையும் தெரிவித்து விட்டேன்..
சுபா
[Quoted text hidden]
[Quoted text hidden]

Geetha Sambasivam Fri, Mar 23, 2012 at 12:04 AM
Reply-To: mintamil@googlegroups.com
To: mintamil@googlegroups.com
Cc: Subashini Kanagasundaram
உங்கள் கணவருக்கு எங்கள் தாமதமான பிறந்தநாள் வாழ்த்துகள் சுபா.



Subashini Tremmel Fri, Mar 23, 2012 at 8:23 PM
Reply-To: mintamil@googlegroups.com
To: Geetha Sambasivam , மின்தமிழ்

நன்றி. அவர் அடுத்த வாரம் வரை கொண்டாடிக் கொண்டிருப்பார், உங்கள் வாழ்த்தையும் சொல்கிறேன். :-)

சுபா

2012/3/23 Geetha Sambasivam <geethasmbsvm6@gmail.com>
உங்கள் கணவருக்கு எங்கள் தாமதமான பிறந்தநாள் வாழ்த்துகள் சுபா.

On Sun, Mar 18, 2012 at 2:41 PM, Subashini Tremmel <ksubashini@gmail.com> wrote:
நன்றி.. நன்றி திரு.இன்னம்புரான், டாக்டர் ராஜம், தேனியார், டாக்டர்.காளைராசன்.
உங்கள் அன்பையும் வாழ்த்துக்களையும் தெரிவித்து விட்டேன்..
சுபா