Showing posts with label இந்தியா. Show all posts
Showing posts with label இந்தியா. Show all posts

Friday, January 1, 2016

இனி ஒரு விதி செய்வோம்: 1

இனி ஒரு விதி செய்வோம்: 1

  • Friday, January 1, 2016, 5:30

இன்னம்பூரான்
ஜனவரி 1, 2016
பிரசுரம் வல்லமை: http://www.vallamai.com/?p=65295

innam
தற்காலம் பொற்காலமில்லை என்று நாம் யாவரும் அறிவோம். பொற்காலம் என்ற சொல்லே ஒரு மயக்கம். மிடாஸ் என்ற ஐதிக அரசன் தொட்டதெல்லாம் பொன் ஆனதால், பட்டினியில் வாடினானாம். நமக்கு வேண்டியதெல்லாம் நல்ல காலம். உழைப்புக்கேற்ற ஊதியம். மகவுகளுக்கு தரமான கல்வி. பொறுப்பும், காருண்யமும், திறனும் கூடிய மருத்துவம். ஒளிமயமான வருங்காலத்தை அளிக்கக்கூடிய தனிமனிதனின் ஆற்றலும், சமூகத்தின் பரந்த மனப்பான்மையும், சமுதாயத்தின் முற்போக்கு சிந்தனைகளும், தடம் மாறாத அரசும்.
நாம் நிதர்சனமாக அன்றாடம் கண்டும் காணாது விடுபவை: சுண்ணாம்பு காளவாயிலும், செங்கள் சூளையிலும் கொத்தடிமைகள். முறுக்கு பிழிவது சிறார்கள். தேநீர் ஆற்றுவது சிறார்கள். ஆரம்பக்கல்வி அரசின் பொறுப்பு. இலவசம். அதைத் தட்டிப்பறித்தது அரசியல் சாஸனத்தின் உள்ளுறை குறைபாடு. தற்குறியாக ( எழுதப்படிக்கத்தெரியாதவர்களாக) இறந்தது பல ஏழை தலைமுறைகள். அறுபது, எழுபது வருடங்களுக்கு முன்னால் அரசு பள்ளிகளிலும் தனியார் பள்ளிகளிலும் தரமான கல்வி அளிக்கப்பட்டது. அதை பிற்காலம் கல்வி தந்தைகள் சூறையாடியதற்கு யார் காரணம்? அக்காலம் பிரபலங்கள் கூட அரசு ஆஸ்பத்திரிகளுக்குத்தான் செல்வார்கள். தற்காலம், வீடு, மனை, வயற்காடு எல்லாவற்றையும் விற்றால் தான் ஏழைகள், காசை தட்டிப்பறித்து, அதன் பின்னர் பிரமாதமான சிகிச்சை அளிக்கும் ஆஸ்பத்திரிகளில், நிவாரணம் நாட இயலும். இது எல்லாமே நமது சமுதாயம் அழுகிப்போகும் சின்னங்களே.
பொது வாழ்வு என்றொரு துறை இருக்கிறது. பொது நலம் நாடுவோர்களின் தோணி, அது. மக்கள் யாவரும் அந்தத் துறையில் அனுபவம் பெறவேண்டும். தனது நேரம், செல்வம், உழைப்பு எல்லாவற்றிலிருந்தும் கடுகளவாவது பொது நலத்துக்கு உழைக்க வேண்டும். சாதாரணமாக, சராசரி மக்களுக்கும் பொதுநலசேவைக்கும் காத தூரம் என்பதை, சில நாட்களுக்கு முன்னால் தமிழ் நாட்டை அலக்கழித்த மழையும், வெள்ளமும், சகதியும் தகர்த்து விட்டது. சம்பந்தா சம்பந்தம் இல்லாதவர்கள் ஓடோடி முன்பின் அறியாதவர்களுக்கு உதவினார்கள். சாதிமதபேதம் முதலில் தகர்ந்தது. இளைய சமுதாயத்தின் முதிர்ந்த மனப்பான்மையை கண்கூடாகப்பார்த்தோம். தலை வணங்கினோம். யாவரும் சேவகனானோம். ‘என் கடன் பணி செய்து கிடப்பதே’ என்ற சொற்றொடர் தாரகமந்திரமானது.
இனி ஒரு விதி செய்வோம்.
பிறந்த குழந்தைக்கு, நாமே முன்னோடியாகத் திகழ்ந்து, பொதுநல சேவை பாடங்கள் நடத்தத் தொடங்குவோம். வளரும் சிறார்களுக்கு சிறிய சிறிய பொறுப்புகள் கொடுத்துப் பழக்குவோம்.
-#-
சித்திரத்துக்கு நன்றி: http://www.quickmeme.com/img/30/3000818e21952986f174bf51237dd650fa11b000adf99846bc2699b9a0113dbb.jpg

இன்னம்பூரான்

http://innamburan.blogspot.co.uk

http://innamburan.blogspot.de/view/magazine

www.olitamizh.com

Tuesday, April 15, 2014

ஓவர்சீஸ் பார்வை: வந்துடுச்சு! எலெக்க்ஷன் நெருங்கிடிச்சு ! : 9

ஓவர்சீஸ் பார்வை: வந்துடுச்சு! எலெக்க்ஷன் நெருங்கிடிச்சு ! : 9


இன்னம்பூரான்
15 04 2014

மூன்று நாட்களாக அரைக்காத மாவு சமாச்சாரம் ஒன்றும் கிடைக்கவில்லை. மேடைப்பேச்சுக்கள் எல்லாம் தமாஷு; பொருள் இல்லை; மருள் உளது. எல்லாம் ‘அவன் மீசையிலும் மண்ணு. என் மீசையில் சகதி இருந்தால் என்ன?’ என்ற ரகம். ஆக்கமும், ஊக்கமும் அற்ற இந்த சக்கையை கசக்குவதில் ஆதாயம் இல்லை என்று அவற்றை உதறிவிட்டேன்.

இன்று ஒரு நவீன ஓவர்சீஸ் பார்வையின் சாராம்சம்:
  • 16வது இந்திய தேசீய தேர்தல் 2014, உலகிலேயே பெரிய ஷோ; இந்தியாவின் பன்முக குடியாட்சி கலாச்சாரத்துக்கு, இது ஒரு புகழாரம்; இந்தியாவின் தொன்மை கலாச்சாரத்தின் வருங்காலத்தை நிர்ணயிக்க, இது ஒரு மக்கள் சாதனம். 
  • நல்லதொரு ஜனநாயக அடிப்பாரம் இல்லாத வலிமை மிகுந்த பாகிஸ்தான், சைனா, பர்மா ஆகிய நாடுகளின் நடுவில் சிக்கிய போதும், இந்தியாவுக்கு உறுதுணை, இந்த மக்கள் ஆயுதம்.
  • பயங்கரவாதம் போன்ற வலிமையான வினைகள் பல; அண்டை நாடுகளை விட, பல சமயங்களும், கலாச்சாரங்களும், மொழிகளும் வளைய வரும் இந்தியாவின் சாதனைகள் அபாரம்.  அவை பிழைத்திருப்பதைக்கு மேல், அவை வளம் பெற்று வளைய வருவதை நாம் மெச்சவேண்டும்.
  • இந்தியா தான் ஹிந்து சனாதனம், பெளத்தம், சமணம், சீக்கியம் ஆகிய சமயங்களின் ஜன்மஸ்தலம்.
  • உலகிலேயே பெரிய இஸ்லாமிய சமுதாயம், இங்கு தான்.
  • இரண்டாயிரம் வருடங்களாக, இங்கு கிருத்துவம் தழைத்தோங்குகிறது.
  • ரோமானியர் யூதர்களின் இரண்டாவது தேவாலயத்தை தீயிட்ட காலகட்டத்தில், யூதர்களுக்கு அடைக்கலம் கொடுத்த நாடு, இந்தியாவே.
  • சைனாவின் அச்சுறுத்துலை பொருட்படுத்தாது, வணக்கத்துக்குரிய தலை லாமா அவர்களுக்கு அடைக்கலம் கொடுத்தது, இந்தியாவே.
  • சொந்த மண்ணிலிருந்துத் துரத்தப்பட்ட பார்சி மதத்தினருக்கு அடைக்கலம் கொடுத்ததும் இந்தியாவே.
  • அண்டி வந்த ஆர்மினியர்களையும், சிரிய நாட்டு மக்களையும் வாழவைத்த நாடு, இது.
  • OECD என்ற சர்வதேச ஸ்தாபனம், கடந்த 1500 வருடங்களாக, இந்தியா தான் உலகில் பெரிய பொருளியலில் சிறந்த நாடாகத் திகழ்ந்தது என்கிறது.
  • இந்திய ஜனாபதிகளில் மூவர் இஸ்லாமியர்.
  • சீக்கியரை பிரதமராகக் கொண்ட இந்தியாவின் ஆளும் கட்சித்தலைவர், இத்தாலிய கத்தோலிக்க பெண்மணி.
  • விஞ்ஞானியாகிய மாஜி ஜனாதிபதி, மக்களுக்கு தெய்வம் போல. அடுத்து வந்தவர் பெண்ணினம்.
  • வருடந்தோறும் 4 கோடி மக்கள் அடித்தட்டு வறுமையிலிருந்து விமோசனம் பெறுகிறார்கள்.
  • அமெரிக்க ஜனத்தொகை ஒத்த இந்திய மத்தியத்தர வர்க்கம் 2025ம் வருடம் பெரும்பான்மையாகி விடும்.
  • சினிமா, கலை, செல்வ நிலை ஆகியவற்றில், எதிர்கால நம்பிக்கை கொண்ட அமைப்புக்களின் வளர்ச்சி நோக்கப்பாலது.
  • இன்னல்களும், இடர்ப்பாடுகளும், இன்னா நாற்பதுகளும் இந்தியாவை பாடாய்படுத்தினாலும், மக்களின் வாக்கு வாகை சூடும். சூட வேண்டும்.
  • மேல்நாடுகள், இந்தியாவில் கால் வைக்க, துடிக்கிறார்கள்.
  • மேற்படி சூழ்நிலையில், உலகின் மக்கள் தொகையின் பத்து விழுக்காடு மக்கள் வாக்களிக்க முஸ்தீபு செய்வது, உலகுக்கே ஒரு முன்னுதாரணம்.
~ இது ந்யூயார்க் டைம்ஸ்: மிகவும் கவனம் சிதறாமல் சிந்தித்து எழுதும் நாளிதழ்.
என் தம்பிடி:
நம் நாட்டையும், நம் இனத்தையும் குறை கூறி பிலாக்கணம் பாடும் இந்தியர்களின்/ தமிழர்களின் தொகை கணக்கில் அடங்கா (யான் உள்பட).  மாஜி குறைபாடுகளையும், தற்கால தகராறுகளையும், வருங்கால பிரச்னைகளையும் கைக்கா உருளியாக கலந்துருட்டி, இந்தியாவை குட்டிச்சுவராக்க பாடு படும்  வாய்ப்பேச்சு வீரர்களே! லஞ்சம் ஒழிந்தால், இந்தியாவுக்கு மறுமலர்ச்சி உத்தரவாதம். எல்லா துறைகளிலும் அமோக முன்னேற்றம் தென்படும். லஞ்சம் கொடுப்பதை நிறுத்தி விட்டால், லஞ்சாதிபதிகள் ‘ஐயோ! ஐயோ!’ என்று மாய்ந்து போய்விடுவார்கள். வாக்கு அளிப்பது தெய்வவழிபாடு போல் புனிதம் ஆனது. அதை தார்மீக முறையில் செய்திடுக. தர்மம் தலை காக்கும்.
- * -


Wednesday, March 5, 2014

ELECTION UPDATE:நெத்தில் வந்த பிட்டு. புலி வருது! புலி வருது! புலி வந்துடுத்து டோய் !


Update

25 03 2014


கழுதை யாரு? குருதை யாரு?

டார்ஜிலிங்க் நகரத்து டார்லிங்க் ஆக வலம் வந்த காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் சுஜய் கடக் என்பவருக்கு அதிசயமும், வியப்பும் அடங்கவில்லை. எதிர்க்கட்சியான திரினாமூலர்கள், நாமினேஷன் பதிவு செய்யவந்த அவரை திக்குமுக்காட வைத்துவிட்டனர். அத்தனை உபசாரம்! தடபுடலான கரகோஷம். தங்கள் கட்சி வேட்பாளர் பூடியா அவர் தான் என்று நினைத்து, மாலையிட்டு வரவேற்று எல்லாம் முடியும் போது தான் ஆள் மாறாட்டமானது (கடக் தவறு ஒன்றும் இல்லை) ஆனாது தெரிந்தவுடன் திரினாமூலர்கள் அசடு வழிந்தார்கள். 


பலே! பலே!
இன்னம்பூரான்
25 03 2014
சித்திரத்துக்கு நன்றி: http://awardakodukkaranga.files.wordpress.com/2009/04/sabash_meena.jpg?w=191
பி.கு. சும்மா போட்டேன். சண்டைக்கு வராதீர்கள்

Update
14 03 2014

Politics/Nation

Advani struggles to hold on to his bastion in Gandhinagar

For LK Advani, remarkable ascent of his one-time protégé hasn’t made things any smoother in Gandhinagar. State BJP is not keen on Advani, although no one would say so publicly.


Update
14 03 2014
ELECTION UPDATE:நெத்தில் வந்த பிட்டு.
விஜயகாந்த் கோயம்பேடு மண்டபத்தில் அமர்ந்திருக்கிறார். அவரை சந்திக்க ராஜ்நாத்சிங் வருகிறார்.

விஜயகாந்த்: வாங்க.....வாங்க மோடிஜீ நீங்க வருவீங்கன்னு எனக்கு தெரியும்.

ராஜ்நாத்சிங்: நான் மோடியில்லே ஜீ.

விஜயகாந்த்: ஓ அப்படியா சரி சரி மன்மோகன் சிங் தானே....

ராஜ்நாத் சிங்: நாசமா போச்சு.....நான் ராஜ்நாத் சிங்.

விஜயகாந்த்: அதானே பார்த்தேன்.....மன்மோகன் சிங், மோடில்லாம் தாடி வச்சிருப்பாங்களே....உங்களுக்கு தாடி இல்லையேன்னு நினைச்சேன். சரி.... நீங்க எந்த கட்சி?

ராஜ்நாத்சிங்: உருப்பட்ட மாதிரிதான். நான் பிஜேபி தலைவருங்க

விஜயகாந்த்: ஓ அப்படியா.... நீங்கதான் தலைவரா? பொன்.ராதாகிருஷ்ணன்னு சொன்னாங்க.

ராஜ்நாத் சிங்: அவரு தமிழ்நாடு தலைவரு. நான் இந்திய தலைவரு.

விஜயகாந்த்: இப்ப ஏன் என்னை பார்க்க வந்ததிருக்கீங்க?

ராஜ்நாத் சிங்: அதுவும் மறந்து போச்சா......சரி நானே சொல்றேன்.....கூட்டணி பேச கூப்பிட்டதா சொன்னாங்க..

விஜயகாந்த்: நான் சொன்னேனா? எப்ப சொன்னேன்? நான் சொன்னதா ஞாபகம் இல்லையே...

ராஜ்நாத் சிங்: ராத்திரிதானே சொன்னீங்க...

விஜயகாந்த்: ராத்திரியா? அதை சீரியசா எடுத்துக்கா இவ்வளவு தூரம் ரெண்டு பேரு வந்தீங்க?

ராஜ்நாத் சிங்: நான் ஒருத்தன் தானே வந்திருக்கேன்...

விஜயகாந்த்: ஒரு ஆள் தானா? என் கண்ணுக்கு ரெண்டு ரெண்டா தெரியுது. அது கிடக்கட்டும் விடுங்க....

அப்போது எம்.எல்.ஏ.,சந்திரக்குமார் வருகிறார்...

சந்திரக்குமார்: தலைவரே..... அறிவாலயத்திற்கு போன் போட சொன்னீங்கள்ல போட்டாச்சு...இப்ப அவங்க வெயிட்டிங்

விஜயகாந்த்: அவஙகளுக்கு எப்ப போன் போட சொன்னேன்?

சந்திரகுமார்: நேத்து சொன்னீங்களே..

விஜயகாந்த்: அப்படியா.... இன்னும் யார் யார் கிட்ட போன் போட சொல்லிருக்கேன்?

சந்திரக்குமார்: வாசனுக்கும், ஞானதேசிகனுக்கும் போன் போட சொல்லிருக்கீங்க தலைவரே?

விஜயகாந்த்: ஆமா....இவங்கள்லாம் யாரு?

சந்திரக்குமார்: அய்யோ தலைவரே மறந்துபோச்சா...இவங்கதான் காங்கிரஸ்ல முக்கியமான ஆளுங்க....

விஜயகாந்த்: ஓகே ஓகே...... (ராஜ்நாத் சிங் பக்கம் திரும்பி)
மிஸ்டர் ராஜ்நாத் சிங் ஜீ..... நான் ஒரு முடிவுக்கு வந்துட்டேன். இவ்வளவு தூரம் நீங்க வந்து கேட்டதால என்னால் தட்ட முடியல.... அதோடு திமுக., காங்கிரஸ்னு எல்லோருமே எனக்கு வேண்டப்பட்ட தலைவர்கள்தான். அதனால.....
பிஜேபியோடு பத்து தொகுதியிலும், காங்கிரசோடு பத்து தொகுதியிலும், தி.மு.க.,வோடு பத்து தொகுதியிலும் கூட்டணி வச்சு போட்டியிடலாம்ன்னு நினைக்கிறேன்.....இன்னும் பத்து தொகுதில தனிச்சு நிற்கலாம்ன்னு முடிவு செஞ்சிட்டேன்....
நீங்க என்ன சொல்றீங்க



Update
13 03 2014
எங்கு பார்த்தாலும் காந்தி! மஹாத்மா காந்தி!

இன்னம்பூரான்


ரூவா நோட்லெ காந்தி படம் போட்டாலும் போட்டங்க. அவர் கிட்டக்கிடுகிடுவென்று பினாமியாகவே, கறுப்பு மேனியாகவே, பறந்த வண்ணம் ஸ்விஸ் வங்கிக்கெல்லாம் ஓடினாலும், தேர்தல் வரதுனாலே, உள்ளூரிலேயே எஸ்.யூ.வி., லாரி, எல்லாத்திலேயும் திரு அமங்கல பிரானாக வளைய வராரே என்று அஞ்சி, தேர்தல் கமிஷன், ‘தேர்தலுக்காக வாரியிறைக்கும் துட்டை’ இனமறிந்து பிடுங்கி/ அட் லீஸ்ட் குரல் கொடுத்து கள்ளப்பணத்துக்குக் கணக்கு பார்க்க 700 வருமான வரி/சுங்க வரி இலாக்கா ஊழியர்களை களத்தில் இறக்கப்போறதாம். இன்னும் ஒரு மாதம் கூட இல்லை. தங்கத்திலே மோதிரம் கொடுத்தாஹ. தாலி கொடுத்தாஹ. காசுக்கு பதிலா, இந்த அரசியல் வாதிகள் தங்கத்திலே அரச இலை கூட குடுப்பாகளாமே !


*



From Hindustan Times today:

"Several British universities have started research projects and online initiatives to focus on the forthcoming general elections in India, the largest such exercise in the world.
For a host of reasons, the study of India at various levels has been one of the most prominent themes in UK university research, particularly at centres of Indian expertise at the universities of Oxford, Cambridge, Edinburgh and the School of Oriental and African Studies.
The focus on Indian elections has increased with the recent opening of some ‘India centres’, such as the one at King’s College London, where experts including Sunil Khilnani, Christophe Jeffrelot and James Manor last week discussed the challenges and post-poll scenarios.
Bournemouth University is in the process of launching ‘Project India’ for producing news coverage and research on the elections. It has tied up with journalism departments of some Indian universities.
“The idea is to cover the event via a website and on social media channels. The project will run from March to end of May. We are also working with two media partners — rediff.com and wonobo.com — to provide an alternative take on the Indian elections,” Bournemouth lecturer Chindu Sreedharan said. 
The London School of Economics would be running a series of articles and blogs on the Indian polls in coordination with academic partners Columbia University.
London School of Economics experts on India include authors Mukulika Banerjee and Sumantra Bose.
Katherine Adeney, professor at the University of Nottingham, said the School of Politics and International Relations has started a blog titled ‘Ballots and Bullets’ with academic contributions from the UK, India, Europe, Pakistan and America."

Do you wish to have updates?
இன்னம்பூரான்
12 03 2014
சித்திரத்துக்கு நன்றி
http://www.scopevision.net/images/Periscope.gif

********

தேர்தல் ஆரூடங்களை/கணிப்புகளை தடை செய்யவேண்டுமென்றால் அல்லது கட்டுப்படுத்த வேண்டுமானால், மக்கள் பிரிதிநித்துவம் சார்ந்த சட்டத்தை திருத்தவேண்டும். தற்காலம் தேர்தல் கமிஷன் தேர்தல் நடக்க 48 மணி நேரம் முன்னால் தான் தடை செய்ய முடியும். அது வரை மஜா தான்!  கட்டுப்படுத்துவதை பற்றிய ஒரு நிலைப்பாட்டை அரசு எடுக்க வேண்டும் என்று தேர்தல் கமிஷன் 2004 அரசுக்கு அளித்த பரிந்துரை, கிட்டத்தட்ட ஒரு மாமாங்கமாக, கிடப்பில். மறுபடியும் இப்போது அதை மீண்டும் வலியுயிறுத்தி இருக்கிறது. இத்தனைக்கும் அந்த வேண்டுகோளை வைத்தது, அரசாளும் காங்கிரஸ் கட்சி ! அரசு என்னமோ மெத்தனமாக, பிரச்னையை சட்டம் திருத்தும் பரிந்துரை கமிஷனிடம் தாக்கீது அனுப்பிருக்கிறது. அடுத்த பொது தேர்தல் வரை குப்பையும் கொட்டுவார்கள்; குளவி போல் கொட்டவும் செய்வார்கள்.
இன்னம்பூரான்
07 03 2014
Image Credit: 
http://sr.photos3.fotosearch.com/bthumb/CSP/CSP562/k5620537.jpg

தாவித்தாவி தாண்டும் அரசியலர்கள், தடம் மாற்றியும், புரண்டும் பயணிக்கும் கட்சிகள்,  வாக்காளரின் தருமசஙடம் நிறைந்த தற்காலத்தில்,புள்ளியியலை திறனோடு கையாளும் தேர்தல் ஆரூடங்கள் பலிக்ககூடும் என்று ஒரு கருத்து:
இன்னம்பூரான்
06 03 2014
‘...Opinion polls offered mathematicians a platform to demonstrate the power of statistics, Rajeeva L. Karandikar, Director, Chennai Mathematical Institute said on Thursday...he said, ‘...while the opinion poll was neither “the truth, the whole truth and nothing but the truth” nor wholly about “lies, damned lies and statistics”, sampling, if properly done, had the power of determining the winner... the point is that it is only the percentages and not the absolute numbers that determine the accuracy...the “problem was not with the statistics but its usage... however, opinion polls, “which are as much about the power of statistics as their limitations”, can be off the mark too.”. He felt that law permitting, it was better to “do a honest and effective job” with engaging in opinion polls. ‘.
Excerpted from the Hindu today. Copyright: The Hindu
Image Credit:http://www.unsv.com/member/images/package.png

புலி வருது! புலி வருது! புலி வந்துடுத்து டோய் !

http://www.vikatan.com/av/2011/04/mtknjg/images/p64a.jpg

சூடான மதிய செய்தி: 16வது மக்கள் சபைக்கான தேசீய தேர்தல் ஏப்ரல் 7 அன்று தொடங்கி மே 12 அன்று முடியும்; ஏழு குறிப்பிட்ட தேதிகளும் நடக்கும். இந்த தேர்தலின் வாக்கு எண்ணுவது மே 16 அன்று.  மத்திய தேர்தல் கமிஷனின் இந்த அறிக்கை சற்று முன் வெளியானது. 81.4 கோடி வாக்காளர்கள். அது 2009ம் வருட தொகையை (1.76 கோடி) விட பத்து கோடி அதிகம். முதல் முதலாக நான் வாக்களித்த 1952ம் வருட வாக்காளர் எண்ணிக்கை, தோராயமாக, இதில் ஐம்பதில் ஒரு பங்கு. அன்று காமதேனு வந்தாள் என்று அர்ச்சனை செய்தார்கள். இன்று ?  96% வாக்காளர்களுக்கு ஐடிண்டி கார்ட் கொடுக்கப்பட்டதாக செய்தி. 9.13 லக்ஷம் தேர்தல் சாவடிகள். 
டில்லி தேர்தலில் புரட்சி படைத்த ‘ எல்லா வேட்பாளர்களுக்கும் பெப்பே!’ சொல்லும் ‘none of the above’ (NOTA) பட்டன் 9.13 லக்ஷம் சாவடிகளிலும் தலை நிமிர்ந்து நிற்கும்.
ஆனை வரும் பின்னே! மணியோசை வரும் முன்னே! என்ற பழமொழிக்கு உகந்தவாறு ஆருட சர்வேக்கள்; கடந்த மூன்று மாதங்களாக ஒரு மக்களாலோசனை நடத்தி, கூகிளாண்டவர் (Google)கூவியது போல, அரசியல் வாதிகளை பின்னியெடுக்கும் சர்வேக்களுக்கு தடாலடி தடை விதிக்கமுடியாது என்று தெளிவு பட கூறிவிட்டது, தேர்தல் கமிஷன். அது நாடாளுமன்றம் எடுக்க வேண்டிய முடிவு என்றார்கள். கட்சிகளின் கொள்கை, ஆராய்ந்த நட்பும், கூடா நட்பும், ராகுலர்/மோடி இழுபறி பற்றியெல்லாம் மக்கள் அறிய விரும்புகிறார்கள் என்றும், லஞ்ச லாவண்யம் பற்றிய கவலையும், லோக்பால் எதிர்ப்பார்ப்பும் மக்களை எதிர்பார்ப்பில் ஆழ்த்தும் என்று கூறும் கூகிளாண்டவரின் கோயிலிலே உபாசனை: 2ஜீ மாயாமாலம், நிலக்கரி பதுக்கல், ஆதர்ஷம் இழந்த ஆதர்ஷ் கூத்து வகையறா:எண்ணுக்கடங்கா, கண்ணில் தென்படா கூற்றுக்கள் எல்லாம். ஆன்லைன் போர்க்களம் அமர்க்களம்; ஆவண யுத்தத்தில் சத்தம் மிகை; தெருக்கோடி சண்டைகள் மண்டையை பிளப்பது எல்லாம் மிகும்.
கோலோச்சும் ( செங்கோல் என்று நான் சொல்லவில்லையே !) அரசியல் வாதிகளை கட்டிப்போடும்  இலட்சிய பாதை அமலுக்கு இன்றே வந்தாகி விட்டது.
  1. அரசியல் கட்சிகள் சாதிக்கக் கூடிய சத்தியம் தான் பேசவேண்டும். அதற்கான வழியை உரைக்க வேண்டும்.
  2. இலட்சிய பாதையின் இலக்கு: பாரபக்ஷம் அற்ற நடைமுறைகள்.
  3. அரசு செலவில் ஓட்டுக்கேட்க போகக்கூடாது. இது பற்றி இரண்டு வரலாற்று செய்திகள். 1952ல் முதல் தேர்தல் ஆனதால், இது பற்றி பிரச்னை எழுந்தது. பிரதமர் நேரு இங்கிலாந்து பிரதமர் ஆட்லியிடம் ஆலோசனை கேட்டார். ‘என் மனைவி காரோட்டுவாள்; நான் பிரசாரம் செய்வேன். என்ன பிரச்னை?’ என்றார், அவர். 1966ல் குஜராத் முதல்வர் ஹிது பாயி, தேர்தலுக்கு முண்டியடித்துக்கொண்டு, ஒரு ஃபியட் காரில் செல்வார்.
  4. மக்கள் பணத்தை பிரசார பீரங்கிக்காக, விரயம் செய்யக்கூடாது.
  5. இலவசங்கள்/மான்யங்களை: இவற்றிற்கு தட்தட் தடா.
பார்க்கலாம். சித்து வித்தைகள், தடலடி தம்புரான் தாண்டவம், வழிந்தோடும் காசாறு எல்லாவற்றையும் பார்க்கத்தான் போகிறோம்.
இறைவா! பாரதமாதாவை ரக்ஷி.
இன்னம்பூரான்
05 03 2014
சித்திரம்: காப்புரிமை & நன்றி: http://www.vikatan.com/av/2011/04/mtknjg/images/p64a.jpg




Saturday, November 16, 2013

இந்தியாவுக்கு நுழைவாயில்:



அன்றொரு நாள்: நவம்பர் 17 இந்தியாவுக்கு நுழைவாயில்

Innamburan Innamburan 17 November 2011 17:26

அன்றொரு நாள்: நவம்பர் 17
இந்தியாவுக்கு நுழைவாயில்

பாமர கீர்த்தியில் அஃறிணைக்கும் இடம் உண்டு. ஏன்? உயிர்மையுமுண்டு. வாழ்வாதார உரிமையும் உண்டு. சொந்தம் கொண்டாடும் பந்து ஜனங்களுமுண்டு. நவம்பர் 17,1869 தான் சூயஸ் கால்வாய் என்ற  ‘இந்தியாவுக்கு நுழைவாயில்’ திறக்கப்பட்டதாகச் சொல்லப்பட்டாலும், இதனுடைய உயிர்மையை விவிலியத்திலேயே ‘எக்ஸோடஸ்’ பகுதியில் காண்கிறோம். கி.மு.1470லியே கடற்படைகள் இம்மாதிரியான குறுக்கு வழியில் வந்ததாக, சரித்திர ஆதாரங்கள் கூறுகின்றன. பின்னர்,ராமுஸெஸ், நேச்சோ 2 ஆகிய மன்னர்களும், கி.மு. 522லிருந்து 486 வரை அரசாண்ட பாரசீக மன்னர் டேரியஸ்ஸும், நைல் மஹாநதியையும் சிவந்த கடலையையும் இணைக்கும் இந்த அமைப்பை புனருத்தாரணம் செய்ததாக, வரலாறு கூறுகிறது. கடல் வணிகம் பெருக, அது அக்காலமே உதவியது. கி.பி.எட்டாம் நூற்றாண்டில் இப்படியொரு கால்வாய் இருந்ததற்கு ஆதாரங்கள் உளன. நெப்போலியன் காலத்து அகழாய்வு ஆராய்ச்சிகளும் பழங்கால சூயஸ் கால்வாய் ஒன்றை இனம் காண்பித்தன. ேநச்சோ 2  மன்னர் காலத்தில் எல்லாம் ஆரூடம் கேட்பது வாடிக்கை. ஒரு ஆரூடம் சொல்லியதாம்: ’ விட்டு விடு. உனக்கு ஆதாயமில்லை. மற்றவர்களுக்குத்தான் இது உதவும்’, என்று. பொருத்தமானது தான், சில ஆயிர வருடங்களுக்கு பிறகு. சூயஸ் கால்வாய்  கலோனிய ஆங்கில அரசுக்கு உதவியது. எகிப்து இரண்டாம் பக்ஷம். அந்த கால்வாயை 26 ஜூலை 1956 அன்று, எகிப்து தேசீயமயமாக்கிய பிறகும், பற்பல சர்வதேச இழுபறிகள் ஆனபிறகும் ‘ சூயஸ் கால்வாயை, யுத்தம் நடந்தாலும், சாந்தி நிலவினாலும், எந்த நாட்டுக்கப்பலும் பயன்படுத்தலாம் என்ற விதி அனுஷ்டிக்கப்படுகிறது.
இந்த கால்வாயை கட்டி முடிப்பதற்குள் ஆயிரம் தாவாக்கள். தற்காலம், பெட் ரோலியத்துக்காக, மேற்கத்திய நாடுகள், மனசாட்சியிலிருந்து ஜனநாயகம் வரை பணயம் வைப்பது போல, சூயஸ் கால்வாயும், அவர்களின், குறிப்பாக, ஆங்கிலேய கலோனிய பேராசைக்கு இலக்காக இருந்தது. இது வரை, ஐந்து தடவை இது அடைக்கப்பட்டது. ஒரு தடவை எட்டு வருடங்களுக்கு. 

தற்கால சூயஸ் கால்வாயின் தலபுராணம்: 1854ல் ஃபெரென்ச் ராஜதந்திரியும் பொறியாளரும் ஆன விகோம்டெ ஃபெர்டினாண்ட் மேரி டெ லெஸ்ஸப்ஸ் என்பவரின் தூண்டுகோலால் எகிப்து உடன்பட, 1858ல் ஒரு கம்பெனி துவக்கப்பட்டது. 200 மிலியன் ஃப்ரென்ச் காசுகள் மதிப்பு. 99 வருடங்களுக்குப் பிறகு எகிப்துக்கு சொந்தம் என்று உடன்பாடு. முதல் போட்டது எகிப்தும், ஃபிரான்ஸும்.  சில தெனாலி ராமன் கதை சம்பவங்களுக்குப் பிறகு, நவம்பர் 17, 1869 அன்று, இந்த கால்வாய் சர்வ தேச கடல் பிரயாணத்துக்குத் திறக்கப்பட்டது. பலத்த கொண்டாட்டம், சில வாரங்களுக்கு. உலகின் பல பெருந்தலைகள் கலந்து கொண்டன. 1875ல் லாகவமாக, பிரிட்டீஷ் அரசு எகிப்தின் பங்கை, 400 ஆயிரம் பவுண்டுகளுக்கு வாங்கிக்கொண்டது. பிரிட்டீஷ் கலோனியத்துவமா, சும்மாவா! சர்வதேச கால்வாயான சூயஸ் கால்வாய் பிராந்தியத்தில் ராணுவம் வைக்க முடிவு செய்தது. 1936ல் அதற்கான ஒப்பந்தம் ஒன்றை எகிப்துடன் போட்டுக்கொண்டது. அந்த ஒருதலைப்பக்ஷ ஒப்பந்தத்தின் வலுவை படிப்படியாகக் குறைப்பதாக, ஒரு அரைகுறை மனது ஒப்பந்தம், 1954ல். 1956ல் தேசீயமயமாக்கும்வரை அந்த ‘இரண்டு பெண்டாட்டிக்காரன்’ நிலை நீடித்தது. அதன் பிறகு பிரிட்டீஷ்-ஃப்ரென்ச்-இஸ்ரேல் படையெடுப்பு. கால்வாய் அடைக்கப்பட்டது, அக்டோபர் 1956லிருந்து மார்ச் 1957 வரை. எகிப்து-இஸ்ரேல் போரின் காரணமாக ஜூன் 1967லிருந்து 1975 வரை அடைப்பு. இது எல்லாமே நினைவில் உளன.
சொத்து எகிப்தின் நீர், நீச்சு, நிலம். பத்து வரவு ஆங்கிலேய கலோனிய மோகம். போருக்குப் பிரமேயம், இஸ்ரேலின் இனப்பற்று. விளைவு: கடல் வாணிகம் பாதிப்பு. இப்போது ஒரு உபகதை கேளும். (யாராவது கேக்கறவா இருந்தால்!) உப விளைவு: நோபல் பரிசு, கனடா நாட்டின் வெளியுறவு அமைச்சர் லெஸ்டர் பியர்சன் அவர்களுக்கு. பிரிட்டன் நாசத்தை நாட செல்வதாகக் கருதிய பியர்சன் முதல் தடவையாக ஐ.நா.வின் அமைதிப்படையை அங்கு நிறுத்தி, எகிப்தும், இஸ்ரேலும் அடங்கி நடக்க வழி வகுத்தார். அமெரிக்காவுக்கும் தன் பங்குக்கு,  தன்னிடம் இருந்த பவுண்டு செல்வத்தை விற்று, அதன் மதிப்பை குறைக்கப்போவதாக பயமுறுத்தியது. இங்கிலாந்தில் ஏகப்பட்ட எதிர்ப்பு. 
எது எப்படியோ, சில நல்வரவுகள். ஐ.நா. அமைதி காக்க உருப்படியாக செயல்பட்டது. இது முதல் தடவை; கலோனிய ஆர்பாட்டங்களுக்கு மவுசு குறைய தொடங்கியது; அகில உலக அளவில், தேசாபிமானம் தலையெடுத்தது. ‘வர வர மாமியார் கழுதை போல் ஆன மாதிரி’, பிற்காலம் எகிப்தில் யதேச்சாதிகாரம் கொடி கட்டி பறக்க, வல்லரசுகளும் அதற்கு துணை போக, இந்தியாவும் ஒத்தூத, 2011 ல் மறுபடியும் ஒரு புரட்சி!
இன்னம்பூரான்
17 11 2011
3236425614_e331f20c0f.jpg

உசாத்துணை:

Geetha Sambasivam 17 November 2011 18:54

புதுச் சரித்திரம்.  தெரிந்து கொள்ள முடிந்தது.  பகிர்வுக்கு நன்றி.


Saturday, September 7, 2013

அண்ணன் தம்பி அன்றொரு நாள்: ஸெப்டம்பர் 6




அன்றொரு நாள்: ஸெப்டம்பர் 6

Innamburan Innamburan Mon, Sep 5, 2011 at 11:57 PM

அன்றொரு நாள்: ஸெப்டம்பர் 6
அண்ணன் தம்பி அடித்துக்கொண்டால், ஊர் கூடி விடும். சண்டை என்னமோ வலுக்கும். இருவரும் யானே கெலித்தேன் என்று மார் தட்டிக்கொள்வார்கள். வலியை சொல்லி அழுவது, மனைவிடம் மட்டும், அந்தரங்கமாக. 1965 ம் வருடம், ஸெப்டம்பர் 6ம் தேதி தொடங்கிய இந்திய-பாகிஸ்தான் போர், கிட்டத்தட்ட இந்த ரகம் தான். அறிஞர்களின் கருத்துக்களும், அபிப்ராயங்களும் பல இருந்த போதிலும். ராணுவ நோக்கில் ஒரு இந்திய பார்வையையும், ஒரு பாகிஸ்தானிய பார்வையையும், பல வருடங்கள் அடை காக்கப்பட்ட இந்திய அரசின் ஒரு அதிகாரபூர்வமான ஆய்வையும், போர்முனை அதிகாரி ஒருவரின் பரிச்சயத்தையும் மனதில் வைத்து எழுதப்படும் சிறிய அறிமுகமிது.
இந்திய பார்வை: 
ஏர் சீஃப் மார்ஷல் பி.சி.லால் அவர்களை நான் நன்கு அறிவேன். அவரிடம் இரு குணங்கள்: மென்மையான விடாக்கொண்டன்; உள்ளது உள்ளபடி. அவருடைய பார்வை: கட்ச் பிராந்தியத்தில் பாகிஸ்தானின் தாக்குதல் இந்திய ராணுவத்திற்கு அதிர்ச்சி. விமானப்படையும் தூசிப்படையும் இணைந்து போரிடவில்லை, முதலில். விமானதளங்கள் இந்த பிராந்தியத்தில் போரிடும் வகையில் இல்லாதது இன்னல் விளைவித்தது. பாகிஸ்தானின் விமானப்படைக்கு எல்லாமே கூப்பிடு தூரம். இந்த படையெடுப்பு, காஷ்மீர் பிரச்னைக்கு தீர்வு காண ராணுவ நடவடிக்கை தேவை என்று பாகிஸ்தான் கருதுவதின், முள்ளுப்பொறுக்கி சாமி. அதே வகையில் காஷ்மீரில் உரசல்கள், மோதல், போர். செப்டம்பர் 1 அன்று ஜெனெரல் செளதரி விமானப்படையின் உதவி நாடினார். உடனுதவி, ஏர்மார்ஷல் அர்ஜுன் சிங்கிடமிருந்து. சில நிமிடங்களிலேயே குண்டு போடும் விமானங்கள் போரில். பாகிஸ்தான் உற்ற நேரத்தில் வழி மறிக்கப்பட்டது.
தூசிப்படை விமானப்படையை தூசியாக மதித்தது என்பது உண்மை. விமானப்படைகளும் கலந்து கொண்டால், போர் மும்முரமாகும் என்பதும் உண்மை.
இந்திய அரசாங்கம் காஷ்மீரை பாகிஸ்தான் தாக்கினால், அது இந்தியா மீது போர் என்று திட்டவட்டமாக கூறியிருந்ததால், முப்படையும் இணைந்து செயல்படத்தான் வேண்டும். அந்த ஒருமைப்பாடான முஸ்தீபு இருக்கவில்லை. இந்த அவசர நிலையில் கூட திட்டங்களில் பாகப்பிரிவினை! தூசிப்படை பாகிஸ்தானை ஊடுருவிய பின்னரும், இந்த இன்னல்கள் இருந்தன. இத்தனைக்கும் எல்லா பிரச்னைகளையும் தீர்க்கும் அதிகாரம் கொண்ட அமைப்புகளும், அதற்கேற்ற அனுபவங்களும் இருந்தன.  அந்த பின்னணியும், அரசும், ராணுவமும் உடனடி தீர்வுகள் எடுத்ததாலும், பாகிஸ்தானை வியப்பில் ஆழ்த்தினோம். எமக்கும் வியப்பு. நமது முப்படைகளுக்கும் தலைமை டில்லியில். பாகிஸ்தானில், கடற்படை கராச்சியில், விமானப்படை பெஷாவரில், தூசிப்படை இஸ்லாமாபாத் நகரில். இருந்தும், அவை வேகமாக இணைந்து மின்னல் வேகத்தில் செயலாற்றின. செப்டம்பர் 22 அன்று போர் நிறுத்தப்பட்டது. பின்னர் டாஷ்கெண்ட் உடன்பாடு. எல்லை பாதுகாப்பு என்று மட்டும்  பார்த்தால், இந்தியாவுக்கு வெற்றி. மற்றபடி சுமார் தான். எல்லா பிரச்னைகளையும் தீர்க்கும் அதிகாரம் கொண்ட அமைப்புகளும், அதற்கேற்ற அனுபவங்களும் இருந்தும், அவை மந்த கதியில் இருந்தது கசக்கும் உண்மை. எத்தனை படிப்பினைகள்!
பாகிஸ்தான் பார்வை: திறனற்ற அரசாங்க அணுகுமுறை, புட்டோ தலைமையில்; அவருக்கு ராணுவ அதிகாரிகள் கூஜா. இவர்கள் இந்தியாவை நொடியில் தகர்க்க முடியும் என்று நினைத்தார்கள். ராணுவத்தலைவர் மூசா அரசுக்கு கையாள். நுணுக்கம் அறியாதவர். அதனால், சம்ப்=ஜெளரியன் பகுதியிலும், கேம்கரணிலும் படு தோல்வி. நட்டாற்றில் புரவியை மாற்றினார், மூஸா. கிடைத்த 48 மணி நேர அவகாசத்தில் இந்தியாவின் தலைப்பாகையும் தப்பியது! (ராணுவ இதழாளர் திரு. ஏ.ஹெச். அமீன் அளித்த அன்றாட போர் செய்தி அலசல்களை தழுவி அமைகிறது, இந்த சுருக்கம்.)
இந்திய அரசாங்க வரலாற்றிலிருந்து ஒரு துளி: சுருக்கி அளிப்பதில் குறையிருந்தால், பொறுப்பு எனது.
ஸெப்டம்பர் 22, 1965: ஐநாவிடமிருந்து போரை நிறுத்தச்சொல்லி ப்ரெஷர். 
இந்திய பிரதமர்: நான் இழுத்துப்பறிக்கிறேன், அதை. நாம் கெலிக்க இயலுமா?
ஜெனரல் செளதரி: தோட்டாக்கள் போதாது; டாங்கிகள் அழிவு அபரிமிதம். 
(பிற்கால ராணுவ ‘ஆடிட்’: இந்தியா 14% தோட்டாக்களை மட்டுமே இழந்திருந்தது. பாகிஸ்தான் 80% இழந்திருந்தது. பாகிஸ்தானை விட இரு மடங்கு டாங்கிகள், இந்தியாவிடம்.)
உலகம் பலவிதமாக விமரிசித்தது. டாஷ்கெண்டில் நம் பிரதமர் சாஸ்திரி காலமானார். இந்த யுத்தத்தில் தெளிவும், துணிவும் இவரிடம் மட்டும் தான் ஒரு சேர இருந்தது என்பர், சிலர். 
அது சரி. உமது போர் முனை நண்பர் என்ன சொன்னார் என்று கேட்பீர்கள். அவர் கேம் கரண் பகுதியில் போரிட்டவர். இந்திய ஜவானின் வீர தீரத்தைப் பற்றி மெய் சிலிர்க்க, பல அனுபவங்களை பகிர்ந்து கொண்டார். மிலிட்டரிக்காரன் அளந்து தான் பேசுவான். அதை மதிக்கிறேன். இதற்கு மேல் சொல்வதற்கில்லை.
ஜெய் ஜவான்!
இன்னம்பூரான்
06 09 2011g_kQLV.jpg


உசாத்துணை:

coral shree Tue, Sep 6, 2011 at 12:07 PM

அன்பின் ஐயா,

இந்திய - பாகிஸ்தான் பங்காளிச் சண்டையைப் பற்றிய விமர்சனப் பார்வை சுவாரசியம்.........

//அவர் கேம் கரண் பகுதியில் போரிட்டவர். இந்திய ஜவானின் வீர தீரத்தைப் பற்றி மெய் சிலிர்க்க, பல அனுபவங்களை பகிர்ந்து கொண்டார். மிலிட்டரிக்காரன் அளந்து தான் பேசுவான். அதை மதிக்கிறேன். இதற்கு மேல் சொல்வதற்கில்லை.//  ..........நல்ல அனுபவம். உண்மை!

Geetha Sambasivam Tue, Sep 6, 2011 at 8:38 PM

இந்திய ஜவானின் வீர தீரத்தைப் பற்றி மெய் சிலிர்க்க, பல அனுபவங்களை பகிர்ந்து கொண்டார். மிலிட்டரிக்காரன் அளந்து தான் பேசுவான். அதை மதிக்கிறேன். இதற்கு மேல் சொல்வதற்கில்லை.
ஜெய் ஜவான்!//

முற்றிலும் உண்மையே, பல விஷயங்களை அறிந்திருந்தாலும் சொல்ல முடியாது. நல்லதொரு இடுகை.  பள்ளி மாணவியாக இருந்தேன் அந்தச் சமயம்.  தமிழ்நாட்டில் இந்திக் கலவரம் முடிந்த புதிது என நினைக்கிறேன். அது முடிந்து இது ஆரம்பிக்கவும் தேச பக்தி கொழுந்து விட்டு எரிந்ததும், சாஸ்திரி மறைந்தார் என்ற செய்தியை ஹிந்துவில் வேலை செய்யும் உறவினர் அதிகாலையில் சொன்னதும் மறக்காது. 


2011/9/5 Innamburan Innamburan <innamburan@gmail.com>
இந்திய ஜவானின் வீர தீரத்தைப் பற்றி மெய் சிலிர்க்க, பல அனுபவங்களை பகிர்ந்து கொண்டார். மிலிட்டரிக்காரன் அளந்து தான் பேசுவான். அதை மதிக்கிறேன். இதற்கு மேல் சொல்வதற்கில்லை.
ஜெய் ஜவான்!
இன்னம்பூரான்
06 09 2011g_kQLV.jpg
கிருஷ்ணமூர்த்தி 
9/6/11

1965 இந்திய-பாக் யுத்தம் உண்மையிலேயே டாங்குகளின் யுத்தம் தான்! சம்ப்
பகுதியில் இந்த டாங்குகளின் அணிவரிசை அட்டகாசம் இணையத்தில் படங்களாகக்
கிடைக்கிறது,

ஆயுதங்களை விட, யுக்தியினாலேயே பாகிஸ்தானிடமிருந்த அதிநவீன அமெரிக்க
பேட்டன் டாங்குகளை முள்ளுமுனை நொறுங்காமல் கைப்பற்றிய கதையும்
அந்தப்போர்க்களத்தில் நடந்தது. அமெரிக்க ஜெனெரல் பேட்டன், அரேபியப்
பகுதிகளில் யுத்த முனைகளில் இருந்தவர். டாங்குகளை வடிவமைத்தபோது,
பாலைவனம், குன்று அது இது எல்லவற்றையும் கணக்கில் எடுத்துக் கொண்டவர்,
சேறு, சக்திப் பகுதியைக் கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை.

இந்திய கிராமங்களுக்குள் பாகிஷானை முன்னேறவிட்டு, அங்கே இருந்த ஏறி
கால்வாய்களை உடைத்து, சகதியில் பேட்டன் டாங்குகளை சிக்க வைத்தது இந்திய
ராணுவம்.அந்த நாகளில் விமானப்படையின் முக்கியத்துவம், செலவை உத்தேசித்து
உணரப்படவில்லை.ஆனாலும் சின்னஞ்சிறு விட்டில் பூச்சி மாதிரி இருந்த நாட்
விமானங்கள் அமெரிக்க சாபர் ஜெட் போர்விமானங்களை வீழ்த்தியது.

1948, 1962, 1965, 1971  என்று வரிசையாக நடந்த அறிவிக்கப்பட்ட
போர்களாகட்டும், அதற்கு முன்னும், இன்றைய தேதி வரையில் நடந்து
கொண்டிருக்கிற ஊடுருவல், எல்லைத்  தகராறுகள், தீவீரவாதத் தாக்குதல்கள்
என்று எதை எடுத்துக் கொண்டாலும்,இந்திய அரசை நடத்திச் சென்றவர்களுடைய
அரசியல் உறுதி மட்டும் தான் பிரதான காரணமாக இருந்தது.

அப்படிப் பார்க்கையில், நேரு, இந்திராவை விட, சாஸ்திரி ஒருவரிடம் தான்
அந்த அரசியல் உறுதி இருந்தது.

1965 போரில்  தன்னுடைய பிரதமரிடமே வெடிபொருட்கள் இன்னும் மூன்று
நாட்களுக்குத்தான் வரும் என்று பொய் சொன்ன இந்திய ராணுவத் தலைமையைப்
பற்றி,இணையத்தில் தகவல்கள் கிடைக்கின்றன.

அரசியல் உறுதியோடு கூடிய தலைவர்கள் வாராதுபோல வந்த மாமணிபோலக்
கிடைத்தாலும்,சீனப்போரில் சுருண்டுபோன ராணுவத்தலைமை, வீறு கொண்டு எழத்
தயாராக இல்லை என்பதையே அது எடுத்துக் காட்டியதாகச் சொல்லலாம்.இப்போதும்
கூட, முப்பது சதவீத இராணுவத்தினருக்குத்  தொப்பை இருப்பதாக ஒரு
புள்ளிவிவரம் வெளியாகியிருப்பது, இன்னும் நாம் பாடம் கற்றுக் கொள்ளவில்லை
என்பதையே காட்டுகிறது.

-------------------
அன்புடன்
கிருஷ்ணமூர்த்தி 

Friday, May 10, 2013

தண்டோரா ~ 4




தண்டோரா ~ 4

Innamburan S.Soundararajan Fri, May 10, 2013 at 8:01 PM

தண்டோரா ~ 4


Inline image 1

தண்டோரா போடுவது ஒரு நுண்கலை; பகிரங்கத்தை நுட்பமாக பொதுமன்றத்தின் முன்னால் வைக்க வேண்டும். கொசு ஒழிப்பானாலும், கருத்தடையானாலும், ஜப்தி செய்வதானாலும், பஞ்சாயத்து மீட்டிங்க் ஆனாலும், அரசாணை பிரகடனமானாலும், ஒலி எழுப்பி சேதி சொல்வதும், அதை கூட்டிக்குறைக்காமல் விளம்புவதும் எளிதல்ல. மாமாண்டூர் மாடசாமிக்கு இது கை வந்த கலை; குடும்பச்சொத்து; கொள்ளுத்தாத்தா அடித்தத் தண்டோராவைத்தான், இவனும் அடிக்கறான்.

டைம் லைன்: 10 05 2013; இடம்: மாமாண்டூர்; நேரம்: ஆதவன் மறைய வில்லை. மணியடிச்சாச்சு, ஆரம்பப்பள்ளியில். கன்னா பின்னான்னு ஓடி வந்த பசங்க புடை சூழ மாடசாமி அரசமரத்தடிக்கு விரைந்து சென்றான். சென்றானா? ஊர்ப்பஞ்சாயத்துக் கூடிய வண்ணம். வெள்ளி வெற்றிலை செல்லத்தை ‘கூஜா’ குப்புசாமி கொண்டு வந்து வைத்தான். அதில் பண்டாரவாடை துளிர் வெற்றிலை, கும்போணம் நெய்ச்சீவல், சிவபுரி பிரமபத்திரம் அழகாக அடுக்கி வைக்கப்பட்டிருந்தது. ஊருக்கே செவிலியாகவும், வீட்டுக்கு வீடு பிள்ளைப்பேறுப் பார்ப்பவளும், கோயில் பிரகாரங்களை பெருக்கித் துடைக்கும் ‘மதினி’ லச்சுமி ஒரு கெத்துடன் ஒய்யாரமாக வந்து, சொம்பையும் வைத்து, விரல்களை நெறித்து திருஷ்டிக் கழித்தாள். எல்லாரும் அவளை ஒருமாதிரி பார்த்து விட்டு, உருத்திராக்ஷப்பூனை போல் கண் மூடி தவமிருந்தனர், அது கபட வேஷமாயினும்.

சின்ன மைனர் சிவசாமி ஐயர் தலைமை என்று சிலர் சொல்வதால், ஜாதிபத்திரியும், ஒரு குட்டி புட்டியில் மூக்குப்பொடியும் இருந்ததைப் பாத்தேன் என்று நம்ம கிட்டா சத்தியம் பண்றான். நாட்டாமை ஆறுமுகம் சேர்வை, இந்த சேதியெல்லாம் வந்தப்றம் தான், வீட்டை விட்டு கிளம்பினார். இன்று அவர் தான் அக்ராசனம் என்ற எண்ணம் அவருடைய மனதில் அசையா இடம் பெற்றதால், ஆரவாரத்துடன், அந்த பத்தடி தூரத்துக்கு ஜல் ஜல் என்று இரட்டை மாட்டு வண்டியில் வந்து கோஷத்துடன் இறங்கி, ஐயரை அரியாசனத்திலிருந்து இறக்கி விட்டு, தாம்பூலம் தரித்துக்கொண்டு, உறையூர் சுருட்டு ஒன்றை பற்ற வைத்துக்கொண்டார். சிவசாமி அய்யர் முகத்திலும் புகை. மனதிலும் புகை & பகை. 

அது வரை, கட்சி மாறும் நம் அரசியல் குறுமன்னர்களைப்போல, காட்சி மாறுவதை கண நேரத்தில் உள்வாங்கிக்கொண்ட மாடசாமி நெடுஞ்சாங்கிடையாக சேர்வை ஐயா காலில் விழுந்து, ‘தண்டம், சாமியோவ். உத்தரவு’ என்று வினவும்போது, ‘மதினி’ லச்சுமிக்கு சாமி வந்து விட்டது. ‘ஓய்ய்ய்ய்’ என்று கூவி விட்டு, சுயநினைவை இழந்த மாதிரி பாவ்லா செய்து, ஐயரை உருட்டி விட்டாள். அவர் பாவம் நோஞ்சான். இது சேர்வையின் செட் அப் என்று மனதிலுள்ள புகையும், பகையும் ‘உள்-தண்டோரா’ போட்டாலும், சுதாரித்துக்கொண்டு, அவர் நாசி-உத்வேகத்தை வரவழைத்துக்கொண்டார். அடுத்த கட்டபஞ்சாயத்துக்குள்ளே, சேர்வை சாகமாட்டானா என்ற நப்பாசை!

இன்று ஒரு சிறிய உரையாடலுடன் பீடிகை மட்டும். 

சேர்வை: யாருடா அங்கே? மாடசாமிக்கு நாலு காசு கொடு. அவன் டாஸ்மாக்கிலே போய் குடிச்சுட்டுக் கிடக்கட்டும். நாம சாமியை கும்பிடுவோம். என்ன சரி தானே, மைனர்வாள்?
(மாடசாமி கிளம்பியாச்சு. இனி அவன் தண்டோரா அடிக்க நாலு நாள் இருக்கு.)

‘மதினி’ லச்சுமி மேல் வந்து ஆரோகணித்த அம்மன்: 
‘கேட்டுக்கங்கடா! 25 வருஷமா நேரு-காந்திக்குல்லாக்காரங்க செண்டர்லெ ஆட்சியில் இல்லை. அவனையும், இவனையும் கூட்டுச்சேர்த்துக்கிணு லூட்டி அடிக்கிறாக.

சிவசாமி அய்யர்: (தனிமொழி) லூட்டி இல்லையம்மா. லூட். பரிசுத்த லூட். 2014லெ அவங்கள் தேர்தலை சந்திக்கணும். 
தெய்வமாச்சே( பாம்புச் செவி) அது சொல்லுது:

‘அய்யரே! ஆம்பிளை அடிச்சா லூட்! பொம்பளை அடிச்சா லூட்டி! உம்ம மாப்பிள்ளை வந்திருக்காப்லெ, அவரு தான் ஜோஸ்யர் ஆச்சே. கேட்றுவோம். எதற்கும் நான் சொல்றதைக் கேட்டுக்கோ. 2014ம் வருடம் 2013லேயே வந்திரும். கர்நாடகா தேர்தலில் ஆளும் கட்சி மண்ணை கவ்வின மாதிரி, இவுகளுக்கும் சோதனைடா! இந்த மோடி பேச்சு வேறே அடி படறதா. காங்கிரஸ் மைனராகி விட்டால் ( அவள் சொல்வது மைனாரிட்டி. சாமியெல்லாம் இப்படித்தான் பேசும்.). தென்னாட்டு கட்சிகளை பாம்பென்று அடிக்கவும் முடியாது. பழுதென்று மிதிக்கவும் முடியாது. காரியம் ஆகணும்னா காலை பிடிப்பானுக. காரியம் ஆகிவிட்டால், கழுத்தைப் பிடிப்பானுக. கிழக்கே வேறே மாம்தாவின் மமதையும், மாயாவின் மாயாஜாலமும் காங்கிரஸை பின்னி பெடல் எடுக்குது.  போதாக்குறைக்கு, இன்னும் இருபது நாட்களில் மாஜியாகப்போற ஆடிட்டர் ஜெனெரல் படுத்தறான். ஆராசா போட்ற சத்தத்திலெ சாக்கோ ஷாக் ஆயிட்டார். ஒரு பேப்பர்க்காரன் சொல்றான்:‘பிஜேபிக்கு 150-160 ஸீட்: காங்கிரஸுக்கு 100.’ அப்டினு.
சொல்லி முடிக்கலை. சேர்வை பல்லை நற நறவென்று கடித்தார். சுருட்டை வீசி எறிந்தார். 

சேர்வை: அம்மா! தாயே! பரதேவதையே! அரசியல் எதுக்கம்மா, நமக்கு. இன்று பஞ்சாயத்து பெங்களுரு பற்றி தானே, அம்மா. நமக்கு ஏன் இண்டெரெஸ்டு? ஏதோ நாலு காண்டிராக்ட் எடுக்கலாம்லெ.

‘என்னடா சொன்னாய்? (அவளை அந்தப்புரத்தில் பாடாய் படுத்தும் அவரை விரட்ட இது தானே சாக்கு!) அங்கே, காங்கிரஸ் தலையெல்லாம் உருளுது. சித்தராமையா, மல்லிக்கார்ஜுன கார்கே,பரமேஷ்வரா, தேஷ்பாண்டே, சிவகுமார், சிவஷங்கரப்பா, ஜயச்சந்திரா, முனியப்பா, எண்ணிக்கிட்டையா, இப்டி எட்டுப்பேர் முதல்வர் போஸ்டுக்குப் போட்டாபோட்டி. நீ எதுக்கு ராசா காண்டிராக்ட் கெஞ்சணும். நீயும் போட்டிப்போடு’ என்றாளே பார்க்கலாம்!

மூலையில் நின்று கொண்டு வேடிக்கைப்பார்த்த வாத்தியார் அனந்து சார் ‘கொல்’ என்று சிரித்து விட, ‘ ஹோய்ய்ய்ய்’ என்று கூவிக்கொண்டு. சாமி மலையேறிவிட்டது. ‘மதினி’ லச்சுமி மூர்ச்சையாகி விழுந்து விட்டாள். அவளுக்கு சூடம் ஏற்றி ஆராதனை நடக்கும்போது, நம்ம அனந்து சார் சொன்னார்.
‘கர்நாடகா எம்.எல்.ஏ களில் 90% கோடீஸ்வரர்கள், எந்த கட்சியானாலும். ஒவ்வொத்தனுக்கும் சொத்து ஜன்னி கண்ட ஜுரம் மாதிரி எக்கச்சக்கமா ஏறிடுத்து, நாலு வருஷத்துக்குள்ளே. மூன்றில் ஒரு பங்கு எம்.எல்.ஏ மேலே கிரிமனல் கேசு இருக்கு அவங்களே எழுதிக்கொடுத்திருக்கிறார்கள். பெங்களுரிலே கிட்டத்தட்ட 60% ஓட்டு. பிஜேபி யை துரத்தி அடிச்சுட்டாங்க என்றாலும் சிலர் சொந்த மதிப்பினால் கெலித்திருக்கிறார்கள்.’
அவர் பேசி முடிக்கலை. நம்ம ஆண்டாளு பிள்ளை ‘அரும்பு மீசை’ சேஷாத்திரி, காலேஜ்லெ பெரிய கிளாஸ் படிக்கிறான் இல்லை. அவன் மடிக்கணினியை வைத்துக்கொண்டு, ‘அப்டேட்’ என்றான். அதற்குள் சந்தியாவந்தனம் பண்ணனும் என்று சிவசாமி அய்யர் எழுந்து போய்விட்டார். நாட்டாமை ஆறுமுகம் சேர்வையும் வண்டியேறினார். வண்டி பின்னாலேயே, தகரியமா, ‘மதினி’ லச்சுமி நடந்து சென்றாள். கூட்டமும் கலைந்தது. நாளை தண்டோரோ அடிக்கப்படும் என்று மக்களிடையே பேச்சு அடிபட்டது.
நன்றி, வணக்கம்.


இன்னம்பூரான்



____________________________________________________________________________-_
அப்டேட்: வாலு போச்சு: பன்ஸலும், அஷ்வினி குமாரும் ராஜிநாமா. 
                கத்தி வந்தது. முப்பது வருஷத்துக்கு பிறகு மைசூருக்கு யோகம். சித்தராமையா முதலமைச்சர். ஆனால், அது எளிதில் வரவில்லை. அதற்கும் சீக்ரெட் ஓட்டெடுப்பு.
இன்னம்பூரான்
10 05 2013

Tuesday, April 9, 2013

‘பாரத தேசமென்று பெயர்சொல்லுவார்...’ {1}




‘பாரத தேசமென்று பெயர்சொல்லுவார்...’ {1}
3 messages

Innamburan S.Soundararajan Thu, Mar 21, 2013 at 10:20 PM
To: mintamil , Manram , thamizhvaasal , தமிழ் சிறகுகள் , vallamai@googlegroups.com

பாரத தேசமென்று பெயர்சொல்லுவார்...’ {1} 
http://www.sangatham.com/wp-content/uploads/bharatma_t.png



தேசாபிமானமும், சமுதாயம் ஓங்கி வளர்வதும், சுய முன்னேற்றமும்  ஒன்றுக்கொன்று முரண் இல்லை என்பது உறுதி. அவை ஒட்டு -மாங்கனிகள். தற்கால இந்தியாவில் தேசாபிமானத்துக்குப் போட்டியாக பிரிவினை வாதங்கள் வலுத்து வருகின்றன, மொழி வாரியாகவும், மற்றபடியும் நாட்டை கூறு போட்ட பின்னும். சமுதாயம் மங்கி தேய்ந்து வருகிறது. துண்டாட்டம் கொண்டாட்டமாக நிகழ்ந்து வருகிறது. மாநிலங்கள் தோறும் ‘அன்னியர்கள்’ சிதற்தேங்காய். பொறுக்கி தின்பவர்கள் நிழல் மனிதர்கள். பினாமி-பேமானி, ரவுடி-கேடி ஆகியோர் பரிபாலனத்தின் மீது கை வைத்து விட்டனர். ஏழை-பாழை, தலித் போன்ற நசுக்கப்பட்டோர் சுயமுன்னேற்றம் நாடுவதிலிருந்து வழி மறிக்கப்படுகிறார்கள். இந்த சூழலும் நாட்டுப்பற்றை அடகு வைப்பதும், சமுதாய இழப்புகளும், சுயநலமும் ஒன்றுக்கொன்று முரண் இல்லை என்பதை உறுதிப்படுத்துகின்றன. எனவே, பாரத தேசமென்று பெயர்சொல்லப்படும் நம் நாட்டை போற்றி, மனித நேயம் என்ற உரமிட்டு, மக்கள் நலனை காப்பாற்றி, அந்த அடித்தளங்களின் நல்வரவாக அவரவர் தனக்கு மேன்மை நாடமுடியும், அதற்கு மக்கள் தொகை முழுதும் மெனக்கடவேண்டும் என்று உரைக்கவே, இந்தத்தொடர்.

இப்போதெல்லாம் இந்தியா வெளிநாடு ஊடகங்களில் தினந்தோறும் இருவகையில் பேசப்படுகிறது. 1. பல துறைகளில் இந்திய தனிமனிதர்களின் அபார சாதனை. 2. போகிறப்போக்கைப்பார்த்தால் இந்தியா உருப்படுமா? என்ற ஐயம். அந்த அலசல்களை, குறிப்பாக நடுவுநிலையுடன் அக்கரையுடன் எழுதப்பட்டவை நாம் உன்னிப்பாக படிப்பது நலம் பயக்கும். மார்ச் 23, 2013 இதழில் லண்டன் எகானமிஸ்ட் இந்தியாவை பற்றி மூன்று கட்டுரைகள் உளன. அவற்றில் ஒன்றை பற்றி, இன்று பேச்சு.

ஆங்கிலேய கலோனிய ஆட்சி நம்மை சுரண்டுவதற்கு முன் பாரத வர்ஷத்தில் சுபிக்ஷம் நிலவியது என்பார்கள், ஒரு சாரார். தாதாபாய் நெளரோஜி அவர்கள் இந்திய ஏழ்மை பற்றி எழுதிய வியாசம் இன்றைக்கு அப்பட்டமாக பொருந்தும். அதிகப்படியாகவே. ஏனெனில், இங்கு தற்காலம் இரு ஆளுமைகள். அரசு பட்ஜெட்டுக்களும்,  நிழல் மனிதர்களின் கறுப்புப்பணமும். 2010 வருடம் உலக வங்கி செய்த 151 நாடுகளில் செய்த ஆய்வுப்படி, இந்தியாவின் கறுப்பு பட்ஜெட், வெள்ளை பட்ஜெட்டின் ஐந்தில் ஒரு பாகம். அரசின் வெள்ளை பட்ஜெட்டுக்கு எந்த அளவு கறுப்பின் பரிமாணம் தெரியும் என்பது மர்மமாக இருப்பதால், கறுப்பின் வியாபகம் மிக அதிகம் என்று தான் தோன்றுகிறது. செல்வம் கொழிக்கும் நாடுகளிலும் கறுப்பு விளையாடுகிறது. இந்த அளவு இல்லை. மற்ற பேத்துமாத்துகளை கணக்கில் எடுத்துக்கொண்டால், நிலைமை படு மோசம். 1980க்கு பிறகு லஞ்சலாவண்யம் பெருவாரி வியாதியாகிவிட்டது.

ஒரு கோடி ரூபாய்க்கு மேல் 42,800 பேர்கள் தான் வருமானம் காட்டி வரி செலுத்துகிறார்கள் என்கிறார் நிதி அமைச்சர், கேலி செய்தவாறு. நாடு அழுகிறது, இந்தப் பித்தலாட்டத்தைக்கண்டு. வருமான வரி கட்டும் அசடுகள் 2.5%. வரவேண்டியதில் மூன்றில் ஒரு பங்கு கூட வரி வசூல் ஆவதில்லை என்கிறார்கள், ஆய்வாளர்கள். அடுத்தபடியாக, கோடானுகோடி ரூபாய்கள், வீடு, மனை, பொன் ஆகியவற்றில். வரவு/செலவு எல்லாம் காசு. அது முழுங்குவது நாட்டின் செல்வநிலையில் 14%. ‘ஸ்விஸ்’ என்ற சொல் வெளி நாடுகளில் நம் செல்வத்தை பதுக்குவதைப் பற்றி. கறுப்பப்பண ஓடை மாரிஷியஸ் வழியாக, பெருக்கெடுத்து ஓடுகிறது. கிட்டத்தட்ட பூண்டியாகி விட்ட அரசு, கறுப்புப்பணத்தை மீட்ட முஸ்தீபுகளை தொடுங்குகிறது என்று அந்த கட்டுரை சொல்கிறது. அரசியல் வாதிகளுக்குத்தான் கறுப்புப்பண மோகம் என்பதையும் சொல்ல, அது மறக்கவில்லை. இத்தனை எழுதுவதின் பின்னணி: மார்ச் 13 அன்று நாகபூஷணம் என்ற இதழ் ஒரு ஒற்றன் வேலை செய்து மூன்று பிரபல வங்கிகளில் சட்ட விரோதமான பணமாற்றம் நடப்பதை ஊதி விட்ட நிகழ்வு.
என் கருத்து:
“ அரவம் தீண்டியது கறுப்பையோ, அதன் நிழலையோ அல்ல. நிழலின் நிழலை படம் பிடித்தது. இதெல்லாம் பல நாள் கூத்து. தமிழில் ‘வேலியே பயிரை மேய்ந்தது’ என்ற உவமை உண்டு. இங்கு கொட்டை போட்டவர்கள் அதை செய்கிறார்களாம்.”.
இன்னம்பூரான்
21 03 2013.

படித்த கட்டுரை:




sk natarajan Fri, Mar 22, 2013 at 2:12 AM
To: vallamai@googlegroups.com
Cc: mintamil , Manram , thamizhvaasal , தமிழ் சிறகுகள் , Innamburan Innamburan
 உண்மையின்  அலசல்
அருமை ஐயா
 கருப்பு பணத்தை தடுக்கக் கூடிய ஆற்றல் இங்கே யாருக்கும் வரவில்லையே :(

என்றும் அன்புடன்
சா.கி.நடராஜன்.

Granny Visalam Fri, Mar 22, 2013 at 9:35 AM
Reply-To: vallamai@googlegroups.com
To: vallamai@googlegroups.com
பூனைக்கு மணி கட்ட யாராவது ஸ்டராங்காக  வர வேண்டும் இப்படியே அலைய
விட்டால் நம் நாட்டின் கதி என்னவாகும்?

******
சித்திரத்துக்கு நன்றி:: http://www.sangatham.com/wp-content/uploads/bharatma_t.png