Showing posts with label innamburan. Show all posts
Showing posts with label innamburan. Show all posts

Wednesday, March 25, 2020

சுவரொட்டி 6 பழங்கதை 2

சுவரொட்டி 6
பழங்கதை 2
இன்னம்பூரான்
26 03 2020

அவ்வப்பொழுது நாடாளுமன்றத்துஉறுப்பினர்கள்/ சட்டசபை உறுப்பினர்கள் அடித்துக்கொள்வார்கள். நாற்காலிகளையும், ஒலிபெருக்கிகளையும் வீசியடிப்பார்கள். நாக்கும், வாக்கும் நீளும், கடுஞ்சொற்களால், வசை மொழியால். இந்தியாவில் நாம் அடிக்கடி தரிசிக்கும் காட்சி, இது. கனடாவிலும் இது நடந்திருக்கிறது. பிரதமர் ட்ரூடோவும் எம்.சார்ட்ராண்ட் என்ற தொழிற்ச்சங்கத்தலைவரும் ஒருவர் சிண்டை ஒருவர் பிடித்துக்கொண்டு பொதுமன்றத்தில் தடாலடியில் இறங்கினார்கள். எம்.சார்ட்ராண்ட் பிரதமரை அண்டபுளுகன் என்றார். அரசவையை குண்டர்கள், வேசிகளின் கூட்டம் என்றெல்லாம் வசை பாடினார். பிரதமரும் அவரை வெறியன் என்று தாக்கினார். இது நடந்தது எல்லாம் பாராளுமன்றத்தின் நடுக்கூடத்தில். அவர்கள் அடிதடியில் இறங்கும் தருணம் பொதுமக்கள் வந்து போராளிகளை விலக்கினார்களாம். தலையெழுத்து! அரசியல்வாதிகள் இப்படி குழாயடி சண்டை போட்டால், மக்கள் என்ன செய்வார்கள்? ஒரு படி மேலே போய் கத்திச்சண்டை போடுவார்கள். இப்படித்தான், அமெரிக்க முன்னால் ஜனாதிபதி ட்ரூமனின் பெண் பாடுவதை ஒருவர் மோசம் என்று விமரிசித்தார். ட்ரூமனுக்கு வந்ததே கோபம். அவரை அடிக்கக் கிளம்பி விட்டாராம். நாலு பேர் சமாதானம் சொல்லி அவரின் கோபத்தைத் தணித்தார்களாம். ஏன் தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை எதிராளிகள் சட்டசபையில் அவமதிக்க முயன்றனர். அவரும், அவருடைய எதிரி கருணாநிதியும், ஒருவரை ஒருவர் ஜெயிலில் அடைத்து வருத்தினர்.
சரி. சரி. நல்ல விஷயத்துக்கு வருவோம். ஒரு காலகட்டத்தில் காங்கிரஸ் நண்பர்கள் ஜவஹர்லால் நேருவும் ராம் மனோஹர் லோகியாவும் பிரிந்து செயல்பட்டனர். பின்னவர் நேருவின் மீது நம்பிக்கையில்லாத்தீர்மானம் கொண்டு வந்த போது நான் அதை அரசு அதிகாரிகள் இருக்கையிலிருந்து கவனித்தேன். அவர நேருவை கடுமையாக தாக்கினார். அதன் பொருட்டு இல்லாமல், மற்றொரு காரணமாக லோஹியா சிறைப்படுத்தப்பட்டார். அங்கு இருக்கும்போது அவரது பிறந்த நாள் வந்தது. வாழ்த்துடன் ஒரு கூடை அல்ஃபோன்ஸா மாம்பழமும் வந்தது. அனுப்பியவர் பிரதமர் ஜவஹஜவஹர்லால் நேரு.

அடடா! சொல்ல மறந்து விட்டேனே! தற்கால கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ இந்த மாதிரி சண்டை போடவில்லை. பாவம்! அவர் மனைவிக்கு கரோனா பாதிப்பு. நான் சொன்ன சண்டை நடந்து நேற்று ஐமபது வருடங்கள் ஆயின. அந்த ட்ரோடோ இவரது தந்தை. அக்காலத்து பிரதமர்.

-x-

Tuesday, January 14, 2020

பெருங்களத்தூர் நோட்ஸ் 2

பெருங்களத்தூர் நோட்ஸ் 2
இன்னம்பூரான்

கருத்துக்களுக்கு நன்றி. பதிலும் அளித்துள்ளேன்.

கிட்டத்தட்ட ஐம்பது வருடங்களுக்கு முன் இங்கு உள்ளே நுழைய முடியவில்லை, பிரதான ராஸ்தாவிலிருந்து. அத்தனை காடு. அத்வானம். அடிச்சுப்போட்டா கேட்க நாதியில்லை. அந்த காலத்திலேயே, எழும்பூர் பக்கத்து வாராவதியில் அமர்ந்திருந்த சித்தர் ஒருவரின் பெயர் சதானந்த சுவாமிகள். பூர்வாசிரமத்தில் போலீஸ் கான்ஸ்டபளாக இருந்தவர் என்று கேள்வி. அவர் இங்கு வந்து
ஒரு ஆசிரமம் அமைத்தார். அது பிரபலமாயிற்று. சில நாட்கள் முன்னால், ஒரு பிராது. அங்கு சிறார்கள் துன்புறுத்த படுகிறார்கள் என்று.  மகளிர் போலீஸ் விரைந்து வந்து அர்த்த ராத்திரியில் ஆய்வு செய்து, பிராது உண்மை என்று அறிந்து, சிறார்களை அழைத்து சென்று காப்பகத்தில் ஒப்படைத்தார்கள்.  அதற்கு பின் நடந்த கதை தான் வினோதம். பிராது கொடுத்தவரை, ஆசிரமத்து பெண்மணிகள் பிடித்து, முடியை இழுத்து படாது படுத்தி விட்டதாக செய்தி. இந்தியாவில், அத்தகைய அடாவடி ஆசிரமங்கள் இருப்பதாக அறிகிறோம். பூலோக கைலாசபதி நித்யானந்தாவை பற்றி பல சர்ச்சைகள் வந்த வண்ணம் உளன. பீடி சாமியார், சாராயப்ரீதி சாமியார் என்றெல்லாம் பலர் தென்னகத்தே கொடி கட்டி பறக்கின்றனர். 

Sunday, August 18, 2019

Innamburan Page: 18 August 2019



https://innamburanpages.blogspot.com/2019/08/innamburan-pages-18-august1945.html

innamburan-pages-18-august1945.




https://innamburanpages.blogspot.com/2019/08/innamburan-pages-18-august1945.html

Monday, August 12, 2019

My New English/Tamil/Hindi Blog

My New English/Tamil/Hindi Blog

https://innamburanpages.blogspot.com/2019/08/innamburan-pages-launch.html

Wednesday, July 24, 2019

அன்றொரு நாள்: நவம்பர் 21,லாசரேஸ்ஸும் குரேஷியும்

GmailInnamburan S.Soundararajan

மீள்பதிவு
அன்றொரு நாள்: நவம்பர் 21 லாசரேஸ்ஸும் குரேஷியும்
1 message

Innamburan Innamburan 21 November 2011 19:06



அன்றொரு நாள்: நவம்பர் 21
லாசரேஸ்ஸும் குரேஷியும்
அண்ணன் தம்பி சண்டை அண்டை வீட்டுக்காரன் சண்டையானால், காழ்ப்புணர்ச்சிக்குக் கொண்டாட்டம். ராஜாங்கங்கள் போர் புரிந்தாலும், அவர்களுக்கு கீழ்ப்படிந்த ராணுவம் கத்தி வீசி, வேலெறிந்து, தோட்டா பறக்க, அடி தடியில் இறங்கினாலும், மக்களிடையை பகையில்லை. சிப்பாய்களும் மக்களின் உறவினர் தான். என்னை கேட்டால், சாந்தி நிலவவேண்டுமெனில், ராணுவம் தகுதி பெற்ற சமாதான தூதுவர்களை தரக்கூடும். உங்களுக்கு நவம்பர் 21, 1971 அன்று கரீப்பூரில் நடந்த ‘பொய்ரா’ முள்ளுப்பொறுக்கி சண்டையை பற்றி தெரியுமோ? பங்களா தேஷ் பிரசவம் சிஸேரியன்; சிக்கலான சிஸேரியன்; உதிரபோக்கு அதிகம்; எத்தனை தடவை பாசாங்கு இடுப்பு வலி! முக்தி பாஹிணி, பிரசவம் பார்க்க வந்த அத்தைக்காரி மாதிரி. செவிலியவதாரம் இந்தியாவுக்கு. சூத்ரதாரி, இந்திரா காந்தி. முடிஞ்சா, அடுத்த மாதம் அது பற்றி எழுதலாம்!

இந்த முள்ளுப்பொறுக்கி சண்டையின் மகத்துவம், இந்தியா விமானப்படையின் சாகசம்; தக்கதொரு தருணத்தில் தூசிப்படைக்கு கவசமாக இயங்கிய வெள்ளோட்டம். ஸேபர் (sabre) என்றால் பட்டாக்கத்தி. அது பாகிஸ்தான் விமானம். நாட் (gnat) என்றால் சில்வண்டு. அது இந்திய விமானம். கடுமையான டாங்கி போர், தரையில். பாகிஸ்தான் ஆகாயத்துணை கொணர்ந்தது, பட்டொளி வீசி. இந்தியா ‘ஞொய்ங்க்’ என்று தாக்கியது. ‘ஞொய்ங்க்’ வாகை சூடியது.
மணி14 48: சேபர் டைவிங்க். மணி14 53: வண்டுகள் ‘ஞொய்ங்க்’. போர்விமானிகள் பக்ச்சி, மேஸ்ஸே,ஸோரஸ், கணபதி, லாசரேஸ் ஆகியோரின் தாக்குதலை பட்டாக்கத்திகள் தாங்க முடியவில்லை. இரண்டு பாகிஸ்தானிய விமானிகள் சிறைப்படுத்தப்பட்டனர். அவர்களில் ஒருவரான ஃப்ளைட் லெஃப்டினெண்ட் பர்வேஸ் மேஹ்டி குரேஷி பிற்காலம் பாகிஸ்தானின் விமானப்படை தலைவரானார். அவருடைய விமானத்தை வீழ்த்திய லாசரேஸ் க்ரூப் கேப்டன் பதவியிலிருந்து ஓய்வு பெற்று, குன்னூரில் ஒரு கிருத்துவ மையத்தில், தன்னார்வத்தொண்டு செய்து வந்தார். ஏர் மாஷல் குரேஷி 1996ல் தலைமை பதவி பெற்றதுக்கு வாழ்த்து அனுப்ப, அவரும் கனிவுடன், தான் நேரில் பார்த்த, இந்திய விமானப்படையின் சாகசங்களை வானளாவ புகழ்ந்து பதில் அனுப்பினார். அது கண்டு என் நினைவுக்கு வந்தது ‘அன்றொரு நாள்: ஜூலை 11 & டிசம்பர் 15, 1971‘. அதிலிருந்து ஒரு பகுதி:  

‘...பிரிகேடியர் க்வாஜா முகம்மது நாசர்: ஐயா! எப்படி சொல்வேன்? விதி விளையாடுகிறது! நாமோ அன்யோன்யாமாகிவிட்டோம். சொல்லமுடியாமல் என் நெஞ்சு அடைக்கிறது. அருண் மாவீரன். அன்று (டிசம்பர் 15, 1971) தன்னுடைய டாங்கியுடன், அச்சம் தவிர்த்து, ஆவேசம் மூண்டு, இம்மை மறந்து, ஈட்டி போல் பாய்ந்து, எங்கள் படைகளை அதகளமாக்கினான். இருபக்கமும் பயங்கர உயிர்ச்சேதம். தளவாடங்கள் நொறுங்ககிக்கிடந்தன. நாங்கள் இருவர் மட்டும். எதிரும் புதிருமாக. பகையாளி. ஒரே க்ஷணத்தில் இருவரும் சுட்டோம். நான் இருக்கிறேன். அதான் பார்க்கிறீர்களே.

இது உரையாடலோ? உருக்கமான இரங்கலோ? அது பற்றி பேச நான் தயாராக இல்லை. பிரிகேடியர் க்வாஜா முகம்மது நாசரின் வீடு, ஜனங்கள், ஏன் ஜன்னல்கள்!, பிரிகேடியர் எம்.எல். க்ஷேத்ரபாலின் மனோநிலை (‘பரம வீர் சக்ரா’ ஷஹீத் அருண் க்ஷேத்ரபால் (21) அவர்களின் தந்தை என்று சொல்லித்தான் தெரியவேண்டுமா?, இந்தியனே!) எல்லாமே ஒரு  ஒளிவட்டத்தில், ஒரு சூன்யத்தில். இதை விலாவாரியாக விமரிசிக்க மானிட ஜன்மங்களால் இயலாது. அவரவருக்கு, அவரவர் கற்பனாசக்தி, மனோதர்மம்!...’

நான் சொல்ல மேலே என்ன இருக்கிறது?
இன்னம்பூரான்images+%252861%2529.jpg
21 11 2011

... border in the Battle of Garibpur, and hostilities commenced.
உசாத்துணை:

Monday, December 31, 2018

அன்றொரு நாள்: ஜனவரி: 1: 2019:சிசு தரிசனம்:




அன்றொரு நாள்: ஜனவரி: 1 சிசு தரிசனம்





01-Jan-2012 00:26/ 2019




Information is key; Knowledge is the Threshold; Wisdom is 
the Treasure House. 


The caption is : This Day; Those Times.


I wrote everyday in 2012 and the styles vary; this is the Tamil Biblical style early 19th century. There was a huge following as many little-known subjects were covered and lively comments followed

I wish  A HAPPY & PROSPEROUS & STUDIOUS NEW YEAR 2019 TO  ALL OF YOU ALL OVER INDIA AND ALL MY VISITORS AND HOPE FOR FEEDBACKS FROM NOW ON.
Innamburan
January 1, 2019


அன்றொரு நாள்: ஜனவரி: 1
சிசு தரிசனம்


‘ ... கிழக்கிலிருந்து சாஸ்திரிகள் எருசலேமுக்கு வந்து, யூதருக்கு ராஜாவாகப் பிறந்திருக்கிறவர் எங்கே? கிழக்கிலே அவருடைய நட்சத்திரத்தைக் கண்டு, அவரைப் பணிந்து கொள்ள வந்தோம் என்றார்கள்... அவர்கள் கிழக்கிலே கண்ட நட்சத்திரம் பிள்ளை இருந்த ஸ்தலத்திற்குமேல் வந்து நிற்கும்வரைக்கும் அவர்களுக்குமுன் சென்றது... அவர்கள் அந்த நட்சத்திரத்தை கண்ட போது, மிகுந்த ஆனந்த சந்தோஷமடைந்தார்கள்... அவர்கள் அந்த வீட்டுக்குள் பிரவேசித்து, பிள்ளையையும் அதின் தாயாகிய மரியாளையும் கண்டு, சாஷ்டாங்கமாய் விழுந்து அதைப் பணிந்துகொண்டு, தங்கள் பொக்கிஷங்களைத் திறந்து, பொன்னையும் தூபவர்க்கத்தையும் வெள்ளைப்போளத்தையும் அதற்குக் காணிக்கையாக வைத்தார்கள்...’
~ விவிலியம்: மத்தேயு: அதிகாரம் 2: 1,2,9,10,11
மேற்கத்திய கலாச்சாரம் தழுவிய புத்தாண்டு தினத்தில், திருமலை வெங்கடேசனை தரிசிக்க ஏகப்பட்ட கூட்டம். சந்துஷ்டியை தேடி அலையும் மானிடர்களுக்கு, ஏதோ ஒரு பிரமேயம் கிடைத்தால் போதும். குழந்தைகளை இனம் தெரியாத உபத்ரவங்கள் படுத்தினால், ஹிந்து குடும்பங்கள் மசூதியில் சென்று, தொழுகை முடிந்த பின் ‘துவா’ பெறுவது உண்டு. ஹிந்துக்கள் நாகூர் தர்காவுக்கும், வேளாங்கண்ணி மாதாகோயிலுக்கும் பயபக்தியுடன் செல்வதும் உண்டு. ‘சிசு தரிசனமும்’ சமய எல்லைகளையும், சம்பிரதாய லக்ஷ்மணரேகைகளையும்  கடந்ததுவே. பீடிகை முடிந்தது.


கிருஸ்துமஸ் பண்டிகை முடிந்தவுடன், சாங்கோபாங்கமாக, ஒரு கதை சொல்லப்படுவது உண்டு. விவிலயத்திலுள்ள அந்த கதை பற்றிய உன்னத ஓவியங்களை லியோனார்டா வின்ஸி என்ற பன்முகக் கலைஞர் வரைந்தார். டீ.எஸ்.எலியட் என்ற கவிஞர் ஆன்மிகக்கவிதைத்தொடரொன்று படைத்தார். 1931ம் வருடத்தில் எழுதப்பட்ட உசாத்துணையில் இருக்கும் நூல் சொக்கவைக்கும் சொக்கத்தங்கம். இனி கதை சுருக்கம்:

இது ‘பட்டொளி பாதை’யே தான், ஒரு நக்ஷத்திரம் வழித்துணையாக இயங்குவதால். ஸில்க் ரோடு. ஒரு உயர் பிரஞ்ஞை உந்த, உந்த, மூன்று சீன ‘தாவோ’ ஞானிகள் புனித யாத்திரையை தொடங்கினார்கள். இது சீன புத்தாண்டு விழா மட்டுமல்ல, ஒரு புதிய சகாப்தத்தின் நல்வரவு என்று அவர்கள் உணர்ந்தார்கள். 

இலக்கு:பெத்லஹேம்.நாட்க்கணக்காக நடந்த பின், பெத்லஹேம் அடைந்து திருக்குமாரனை தொழுத பின், (கம்சனை போன்ற) ஹீராட் மன்னன் அறியாத வழியில் திரும்பியபோது, ஒரு பாலைவனச்சோலையை அடைந்தார்கள். அங்கு ‘மாகி’ எனப்படும் சமூகம் அவர்களுக்கு விருந்தோம்பினர். கைகட்டி, வாய் புதைத்து அவர்களின் தலைவரான மாகி, வந்திருந்த ஞானிகளின் தலைவரான சிஃபு அவர்களுடன் நடத்திய ஆன்மீக உரையாடல்:

மாகி: வெகு தொலைவில் உள்ள சீனாவில், உங்களுக்கு தேவகுமாரனின் வருகை பற்றி எப்படித் தெரியும்?

ஸிஃபு: எமக்குள் திருக்குமாரன் ~ஒரு ‘புத்தர் பிரான்’ ~ அவதாரம் பற்றிய உள்ளொலி எழுந்தது. தியானமும், நக்ஷத்ரமும் வழி காட்டின. ஓரிரவு சிலுவை உருவில் எழுந்த ஒரு நக்ஷத்திரக்கூட்டம் பட்டொளி பாட்டையில் அழைத்து சென்றது.

மாகி: நீங்கள் சிசு தரிசனம் செய்தது எப்படி?

ஸிஃபு: அந்த விண்மீன் எம்மை பெத்லஹெமுக்கு அழைத்துச் சென்றது; ஒரே கூட்டம்; குழப்பம்; கலவரம்.அவரவர் ஊருக்கு திரும்பவேண்டும் என்ற அரசாணை. எங்களுக்கு தங்க இடம் கிடைக்கவில்லை. ஒரு விடுதியின் பின் உள்ள மாட்டு தொழுவத்தில் தங்கச் சொன்னார்கள். ஒட்டகங்களை கட்டி விட்டு, மூட்டை முடிச்சுகளை அவிழ்த்து விட்டு, அங்கு போனால், பல இடையர்கள் அங்கு. எதையோ கண்டு மகிழ்ந்த வண்ணம் இருந்தனர். ஒரு சுயம்பிரகாசமான ஒளி வீச்சு! நாங்கள் விழுந்து வணங்கினோம்; தொழுதோம். எம்முள் இருந்த உள்ளொலி உள்ளொளியாக பிரகாசித்தது. அது அன்னையில் அரவணைப்புப் போல எனலாம். தலை நிமிர்ந்தால், கண்கொள்ளாக்காட்சி! வைக்கோல் பிரிமணை மீது அன்னை மேரி. தொழுவத்தில், திருக்குமாரன். எங்களுக்கோ, மற்றவர்கள் போல, புனர்ஜன்மம். தொழுதோம், பக்தி பரவசத்துடன். ககன சாரிகை தான், போங்கள்!

ஒரு மாகி சமூகத்தினர்: கன்னி மாதாவின் குழவி! இது இறையின் அவதாரமே!

ஸிஃபி: ஆம். அப்படித்தான் தோன்றியது.

மாகி: நீங்கள் பரிசுகள் பல சமர்ப்பித்ததாக கேள்விப்பட்டோம்.

ஸிஃபி: ஓ! பொன்னும், மணியும், பூஜை புனஸ்காரம் செய்ய சூடம், சாம்பிராணி, ஊதுவத்தி, வாசனைப்பொடிகள், புனுகு, ஜவ்வாது, எல்லாவற்றிற்கும் மேலாக, எங்கள் நாட்டு வைத்திய அறிவுரைகள். பொன் நீரை சுத்திகரிக்கும்; நாங்கள் கொணர்ந்தவையில் கிருமிநாசினிகளும் உண்டு.
மாகி: அப்பறம்?

ஸிஃபி: எல்லாரும் மகிழ்ச்சியில் திளைத்திருந்தாலும், அரசபயம் இருந்தது. மன்னன் ஹீராட் சிசுஹத்திக்குக் காத்திருந்தான்.

மாகி: என்ன ஆச்சு?

ஸிஃபி:கவலையற்க, நண்பரே. தாயும், சேயும் ஒரு மாகி நண்பர் வீட்டில் அடைக்கலம். உரிய நேரத்தில் திருக்குமாரர் மார்க்கபந்துவாக வந்து ‘டாவோ’ அறநெறியை பரப்புவார்.

மாகி: என்னே ஆச்சரியம்! இருள் நீங்கி பிரகாசம் வரும் வேளையில், நாம் ‘மித்ரா’ என்று ஆதவனை தொழும் வேளையில் திருக்குமாரர் அவதாரம்.

ஸிஃபி: ததாஸ்து. புதிய சகாப்தம் விடிந்ததாக, அசரீரி சொல்கிறது.

மாகி: என்னே ஆச்சிரியம்! மோசஸ் ஒரு குப்பியில் அடைபட்டு மிதந்ததாக சொல்கிறார்கள். தொழுவத்தில் தேவகுமாரன்.

ஸிஃபி: புத்தபிரான்கள் பலதடவை வந்தனர். அதற்கான அறிகுறிகளில் மாற்றமேதும் இல்லை.

மாகி: தொழுவம்: இது எதற்கு சின்னம் ஆகிறது?


ஸிஃபி: ஒருகால், அது நாம் விலங்கின இயல்புகளை துறக்கவேண்டும் என்பதற்கான சின்னமாக இருக்கலாம். இரக்க ஸ்வபாவத்தை நமக்கு அளிப்பதற்காக இருக்கலாம். இந்த தெய்வீக சிசுவின் சான்னித்யத்தை உணர்த்த இருக்கலாம்.

மாகி: ஸிஃபி! இந்த சிசுவின் மேன்மையை பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

ஸிஃபி: கெளதமர் சமீபத்தில் அவதரித்த புத்தர் பிரான். அவர் மாதிரியே, இந்த மாமுனியும் கருணாமூர்த்தியாகவும், குருநாதராகவும் விளங்குவார் என்று எனக்கு தோன்றுகிறது. குருமுகங்கள் வந்து போகும். ஆனால், உன்னதமான சிஷ்யர்களுக்கு மட்டும் தானே ஞானம் கிட்டும்.
இன்னம்பூரான்
01 01 2012
Adoration-of-the-Magi-c.-1725.jpg


உசாத்துணை:
Magre,M. (Translation: Merton, R.R.(1931) Return of the Magi.