நம்ம காட்டில் மழை !
http://www.clickypix.com/wp-content/uploads/2014/01/Martin-Luther-King-Jr-Quotes-1008.jpg
பனையூர் கிராமிய வாழ்க்கையை தொடங்கிய பிறகு, தருமமிகு சென்னைக்கு மூன்றாவது விசிட் அடித்தேன். ‘வான்நின்று உலகம் வழங்கி...’ என்பதற்கிணங்க நம்ம காட்டில் மழை, ‘சோ’என்று.
On behalf of President and Executive Committee Members of
Indo American Association-Chennai,
cordially invite you for the
Martin Luther King Jr Oration Programme
to be held on Monday the 21st April, 2014 at 4 pm at
The Auditorium, No.101, Ground Floor
Department of Management Studies, I I T Madras, Chennai-600036
என்ற அழைப்பிதழ் தான் அந்த ‘அமிழ்தத்தை. எனக்கு அளித்தது. அந்த சொற்பொழிவை ஆற்றியவர், அமெரிக்க காந்தியான சாக்ஷாத் மார்ட்டி லூதர் கிங் ஜூனியர் அவர்களே. ஒரு பிரபல அமெரிக்க கார்ட்டூனிஸ்ட், அண்ணல் காந்தி அவரிடம், ‘உன்னை கொன்றதாக அவர்கள் நினைத்துக்கொள்வது ஒரு மாயை.‘ என்று சொல்வதாக வடித்த கேலிச்சித்திரம் விளக்கிய
உண்மை,ரெவரண்ட் மார்ட்டி லூதர் கிங் ஜூனியர் இறவாவரம் பெற்று அமரத்துவம் அடைந்து விட்டார் என்பதே. அவர் என்னமோ வேறு ஒருவர் மூலமாகத்தான் பேசினார். அந்த நபரின் பெயர்: திரு. நரசய்யா. நான் மிகைப்படுத்தி பேசுபவன் அல்ல. ஒரு மேலோர் சபையில், அமெரிக்கன் கான்சல்-ஜெனெரல் தலைமை வகிக்க, பழைய நண்பர் டாக்டர்.ஜி.சுந்தரம் ஐ ஏ எஸ் (ஓய்வு) வரவேற்புரை அளிக்க, ஒரு மணி நேரத்துக்கு, தனக்கே உரிய பாணியில், நவீன சாதனங்களை அலாக்காக பயன்படுத்தி, திரு.நரசய்யா அவர்கள் கடந்த/நிகழ்/வருங்காலம் எல்லாவற்றையும் ஒரு காலச்சக்கிரமாக சுழற்றி, ரோஸா பார்க் பிடிவாதமாக அமர்ந்திருந்த பஸ்ஸிலிருந்து, ரெவரண்ட் மார்ட்டி லூதர் கிங் ஜூனியர் அவர்களின் கல்லறை வரை பார்க்கும் சித்திரங்களையும், ரெவரண்ட் மார்ட்டி லூதர் கிங் ஜூனியரின் ‘கனாக்கண்டேன், நேசமானவர்களே!’ வரை கேட்கும் சித்திரங்களாகவும் நம் முன் வைத்தார், திரு.நரசய்யா. குரல் அவரது; ஆளுமை ரெவரண்ட் மார்ட்டி லூதர் கிங் ஜூனியர் அவர்களது. மஹாத்மா காந்தியும், நேருவும், கிருபளானியும், பாரதமாதாவும் வந்தனர். ரெவரண்ட் மார்ட்டி லூதர் கிங் ஜூனியர் அவர்களது விசிறியான எனக்கு, ஞானோபதேச வருகை, ஒரு கொடுப்பினை. திரு.நரசய்யாவின் அணுகுமுறை ஒரு படிப்பினை. அவர் மார்ட்டின் லூதர் கிங் ஜூனியரை பற்றி பேசவில்லை. அமரத்துவம் பெற்ற அவரது ‘கனாக்கண்டேன், நேசமானவர்களே!’ சொற்பொழிவின் பின்னணியையும், வரலாற்றையும் ஆராய்ந்து கூறியது, புதுமை தான்.
தூறல் உபயங்கள்:
- தூக்கிய காலர் ! : அறிமுகம் இல்லாத இடத்துக்கு செல்கிறோம் என்ற தயங்கிய என்னை, ‘You may not know me; I know you very well.’ என்று முகமன் கூறிய பழைய நண்பர்கள் பலர்.
- என்னை வீட்டுக்கு அழைத்து சென்ற பழைய நண்பர் ஆர். நடராஜன் ஐ.ஏ. எஸ் (ஓய்வு) உடன் கதா காலக்ஷேபம்.
- சென்னை-மும்பாய் விமான வண்டிச்சத்தத்தை விட பனையூர்-அடையார் மோட்டார் வண்டிச்சத்தம் அதிகம், விகிதாச்சாரப்படி. தேர்தலில் நிற்கும் எல்லா கட்சிகளிடமும் பனையூர் விமானத்தளம் அர்ஜெண்டு என்று சொல்லி விட்டேன்.
சித்திரத்துக்கு நன்றி: http://www.clickypix.com/wp-content/uploads/2014/01/Martin-Luther-King-Jr-Quotes-1008.jpg
இன்னம்பூரான்
21 04 2014
No comments:
Post a Comment