Showing posts with label இன்ன்ம்பூரான்.. Show all posts
Showing posts with label இன்ன்ம்பூரான்.. Show all posts

Tuesday, March 17, 2020

சுவரொட்டி 4 ஸேம் ஸைட் கோல்!

சுவரொட்டி 4
ஸேம் ஸைட் கோல்!
இன்னம்பூரான்
மார்ச் 17, 2020

காலம் போகிற போக்கில் பார்த்தால், மனித குலத்தின் வாழ்வியலின் தடம் மாறுதல் கவலை தருகிறது. நமக்குத் தெரிந்ததை தானே எடுத்துக் கூற முடியும். தமிழ்நாட்டில் கள்ளும் சாராயமும் கரை புரண்டு ஓடுகின்றன. குடிமகன்கள் தடியெடுத்து அடிப்பது அன்றாட அவலக்காட்சி, எல்லா பேட்டைகளிலும். தாய்க்குலம் நசுக்கப்படுகிறது. குடும்பச்சிக்கல்கள் அதிகரிப்பதால், சிறார்களின் கல்வியும் தடை பெறுகிறது. அக்காலத்து முதல்வர் கருணாநிதி மதுவிலக்கை ரத்து செய்த போது, கெளரதை பார்க்காமல், பொதுநலன் நாடி, ராஜாஜி கருணாநிதி வீட்டிற்கு அழையா விருந்தினராக சென்று, அவ்வாறு செய்யவேண்டாம் என்று கெஞ்சினார். அது விருதாவாக
ப்போயிற்று. போதாக்குறைக்கு, சாராய விற்பனை அரசின் ஏகபோக வணிகமாகி, தற்காலம் அரசின் கருவூலமாக இயங்கிறது. இந்த அவலம் உலகில் வேறு எங்கும் கிடையாது. ‘நாய் விற்ற காசு குரைக்குமா?’ என்ற அசட்டுக்கேள்வி கேட்கும் நிலைக்கு அரசு தள்ளப்பட்டுள்ளது. இது நிற்க.

மத்திய அரசு நவம்பர் 8, 2016 அன்று பழைய 500, 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்று அறிவித்தது. அன்று  முதல் டிசம்பர் வரை பழைய 500, 1000 ரூபாய் நோட்டுக்களை வங்கிகளில் மாற்றிக் கொள்ள அவகாசம் கொடுக்கப்பட்டது. சில குறிப்பிட்ட இடங்களுக்கு மட்டும் அவசர நிலையைக் கருதி செல்லாத நோட்டுகளை வாங்கிக் கொள்ள அனுமதிக்கப்பட்டது. மற்றபடி வேறு எங்கும் செல்லாததாக அறிவிக்கப்பட்ட நோட்டுகளை வாங்க தடையிருந்தது. 

இது இப்படி இருக்க, டாஸ்மாக் ஒரு வீரதீர செயலில் இறங்கியது என்பது அதனுடைய 2016-17 நிதியாண்டில் டாஸ்மாக் தாக்கல் செய்த வருமான வரித்துறை அறிக்கை மூலம் தெரியவந்துள்ளது. இதில், நவம்பர் 9, 2016 நிலவரப்படி டாஸ்மாக் தொடக்க நிலுவை தொகையாக ரூ.84.23 கோடி இருந்ததாக தெரிவிக்கப்பட்டது. அதில், ரூ. 81.57 கோடி செல்லாத 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் என்பதும் ரூ. 2.66 கோடி மற்ற புழக்கத்தில் உள்ள செல்லும் நோட்டுகள் என்பதும் தெரியவந்தது. நவம்பர் 9 ஆம் தேதி வங்கி விடுமுறை என்ற பின்னணியை மறக்கக்கூடாது.
“..இதையடுத்து, நவம்பர் 10 முதல் டிசம்பர் 30, 2016 வரை ரூ. 3,490.21 கோடியை டாஸ்மாக் மூலம் வசூலிக்கப்பட்டது. அந்த ரொக்க வசூல் தினசரி அடிப்படையில் அதன் வங்கிக் கணக்குகளில் டெபாசிட் செய்யப்பட்டது. பணமதிப்பிழப்பு நடவடிக்கை காலகட்டத்தில், மொத்தம் வசூலிக்கப்பட்ட ரூ3,490.21 கோடியில் சுமார் 140 கோடி ரூபாய் செல்லாத நோட்டுகளை வங்கிக் கணக்குகளில் டாஸ்மாக் டெபாசிட் செய்துள்ளது. அதில், நவம்பர் 9, 2016 நிலவரப்படி வசூலிக்கப்பட்ட பழைய நோட்டுகள் ரூ.81.57 கோடியைக் கழித்தால், மீதமுள்ள தொகை ரூ. 57.29 கோடி இடைப்பட்ட காலத்தில் வசூலிக்கப்பட்டது உறுதியாகிறதுஇது தொடர்பாக டாஸ்மாக் நிர்வாகம் தரப்பில், செல்லாத ரூ500 ரூ1000 நோட்டுகளை வாங்கவில்லை என்றால் வாடிக்கையாளர்கள் தகராறு செய்வார்கள், அதனால் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படும், அதனால்தான் வசூலித்தோம் என்று”.. - நாளிதழ் செய்தி.
சால்ஜாப்பு சொல்லியிருக்கிறார்கள். வருமான வரித்துறை இந்த கந்தரகூளத்தை 
ஏற்கவில்லை.

குடிமகன்கள் தகராறு செய்வார்கள், சட்டத்தை மீறுவார்கள். அதை எங்களால் கட்டுப்படுத்த முடியாது என்பதால் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படும், அதனால்தான் வசூலித்தோம் என்று ஒரு அரசு நிறுவனம் சொல்வது வேடிக்கையாக இருந்தாலும், இந்த அணுகுமுறை குறிப்பால் உணர்த்தும் சமுதாய சீர்கேடு மக்களை எங்கே உதறிவிடுமோ என்ற அச்சம் எழுகிறது அல்லவா?

இந்த அழகில் ஒரு டாஸ்மாக் கடை முகப்பில் 'வாழ்க வளமுடன்' என்ற பொன்வாக்கு மின்னலடித்தது. ஃ போட்டோ எடுக்கப்போனேன். அடிக்க வந்தார்கள்.

கொசுறு:
செல்லா நோட்டுக்களை உண்டியலில் போட்டதை தடுக்காமல், திருப்பதி, பழனி தேவஸ்தானம் போன்றவை அவற்றை காசாக்க முயன்றதும் நடந்த கதையே.


ஒம்மாச்சி காப்பாத்து.
Hi there mates, its impressive paragraph on the topic of educationand completely defined, keep it up all the time.
Reply

  • Nice post. I learn something new and challenging on blogs I stumbleupon on a daily
    basis. It's always interesting to read content
    from other authors and practice a little something from their sites.
    Reply
  • It is truly a nice and useful piece of information. I
    am glad that you shared this helpful information with us.
    Please keep us up to date like this. Thank you for sharing.
    Reply
  • Unquestionably consider that which you stated. Your favourite justification seemed to be
    on the internet the easiest factor to be mindful of.

    I say to you, I certainly get irked while other people think about concerns that they plainly do not
    recognize about. You managed to hit the nail upon the highest as well as
    outlined out the whole thing with no need side effect , folks could take a
    signal. Will likely be again to get more. Thanks
    Reply
    This is in response to the four encouraging feeds back for this blog. I thank you for the kind words spoken and shall try to keep it up.
    Take care.
    Innamburan

  • Monday, May 12, 2014

    தேர்தல் சில்லறை - 3: போட்டா போட்டி!

    தேர்தல் சில்லறை - 3: போட்டா போட்டி!

    நமது மாட்சிமை தங்கிய பிரதமர் மே 17 அன்று மக்களுக்கு ஒலி பரப்புவார். அன்று அவருடைய கடைசி அமைச்சரவை கூடும். பிரிவுபசாரம் அளிப்பார்; அன்னை அளிக்கும் விருந்தில் கலந்து கொள்வார்.
    இது பொருட்டு ஒரு போட்டா போட்டி?
    1. அவர் மக்களிடம் எதை சொல்லமாட்டார்?
    2. அமைச்சரவையின் பயன் என்ன?
    3. பிரிவுபசாரங்களில் கலந்து கொள்ளும், அன்னையார், கேலி செய்த ராகுலர், சம்பத், ப.சி.
     ஆகியோரிடம் என்ன அளவளாவுதல் நடக்கும்?
    1. வீடு மாறும் அய்யா அவர்கள் 18ம்தேதி காலத்தை எப்படி கழிப்பார்.
    கண்டிஷன்ஸ்:
    ஹேஷ்யம் தான் தரவேண்டும். ஆதாரம் தேவையில்லை. ஹாஸ்யமாக இருக்கலாம். ஆனால், யார் மனதையும் ( ஆ.ராசா, கல்மாடி, அம்பானி, பல்வா போன்றோர் உள்பட) புண் படுத்தக்கூடாது. நோ நோட்டா. ஆமாம்.
    கெடு: மாலை 3 மணி: இந்திய நேரம்: 16 05 2014
    இன்னம்பூரான்

    13 05 2014

    சித்திரத்த்துக்கு நன்றி: https://lh3.googleusercontent.com/-KOflYIlRoHI/Tjy_Zb8ZJ3I/AAAAAAAAEQU/QXHStOoqdoA/s800/Potta-Potti.jpg



    Monday, April 21, 2014

    நம்ம காட்டில் மழை !

    நம்ம காட்டில் மழை !
    http://www.clickypix.com/wp-content/uploads/2014/01/Martin-Luther-King-Jr-Quotes-1008.jpg

    பனையூர் கிராமிய வாழ்க்கையை தொடங்கிய பிறகு, தருமமிகு சென்னைக்கு மூன்றாவது விசிட் அடித்தேன். ‘வான்நின்று உலகம் வழங்கி...’ என்பதற்கிணங்க நம்ம காட்டில் மழை, ‘சோ’என்று. 
    On behalf of President and Executive Committee Members of 
    Indo American Association-Chennai, 
    cordially invite you for the
    Martin Luther King Jr Oration Programme
    to be held on Monday the 21st April, 2014 at 4 pm at

    The Auditorium, No.101, Ground Floor
    Department of Management Studies, I I T Madras, Chennai-600036

    என்ற அழைப்பிதழ் தான் அந்த ‘அமிழ்தத்தை. எனக்கு அளித்தது. அந்த சொற்பொழிவை ஆற்றியவர், அமெரிக்க காந்தியான சாக்ஷாத் மார்ட்டி லூதர் கிங் ஜூனியர் அவர்களே.  ஒரு பிரபல அமெரிக்க கார்ட்டூனிஸ்ட், அண்ணல் காந்தி அவரிடம், ‘உன்னை கொன்றதாக அவர்கள் நினைத்துக்கொள்வது ஒரு மாயை.‘ என்று சொல்வதாக வடித்த கேலிச்சித்திரம் விளக்கிய
    உண்மை,ரெவரண்ட் மார்ட்டி லூதர் கிங் ஜூனியர் இறவாவரம் பெற்று அமரத்துவம் அடைந்து விட்டார் என்பதே. அவர் என்னமோ வேறு ஒருவர் மூலமாகத்தான் பேசினார். அந்த நபரின் பெயர்:    திரு. நரசய்யா. நான் மிகைப்படுத்தி பேசுபவன் அல்ல. ஒரு மேலோர் சபையில், அமெரிக்கன் கான்சல்-ஜெனெரல் தலைமை வகிக்க, பழைய நண்பர் டாக்டர்.ஜி.சுந்தரம் ஐ ஏ எஸ் (ஓய்வு) வரவேற்புரை அளிக்க, ஒரு மணி நேரத்துக்கு, தனக்கே உரிய பாணியில், நவீன சாதனங்களை அலாக்காக பயன்படுத்தி, திரு.நரசய்யா அவர்கள் கடந்த/நிகழ்/வருங்காலம் எல்லாவற்றையும் ஒரு காலச்சக்கிரமாக சுழற்றி, ரோஸா பார்க் பிடிவாதமாக அமர்ந்திருந்த பஸ்ஸிலிருந்து, ரெவரண்ட் மார்ட்டி லூதர் கிங் ஜூனியர் அவர்களின் கல்லறை வரை பார்க்கும் சித்திரங்களையும், ரெவரண்ட் மார்ட்டி லூதர் கிங் ஜூனியரின் ‘கனாக்கண்டேன், நேசமானவர்களே!’  வரை கேட்கும் சித்திரங்களாகவும் நம் முன் வைத்தார், திரு.நரசய்யா. குரல் அவரது; ஆளுமை ரெவரண்ட் மார்ட்டி லூதர் கிங் ஜூனியர் அவர்களது. மஹாத்மா காந்தியும், நேருவும், கிருபளானியும், பாரதமாதாவும் வந்தனர். ரெவரண்ட் மார்ட்டி லூதர் கிங் ஜூனியர் அவர்களது விசிறியான எனக்கு, ஞானோபதேச வருகை, ஒரு கொடுப்பினை. திரு.நரசய்யாவின் அணுகுமுறை ஒரு படிப்பினை. அவர் மார்ட்டின் லூதர் கிங் ஜூனியரை பற்றி பேசவில்லை. அமரத்துவம் பெற்ற அவரது ‘கனாக்கண்டேன், நேசமானவர்களே!’ சொற்பொழிவின் பின்னணியையும், வரலாற்றையும் ஆராய்ந்து கூறியது, புதுமை தான்.

    தூறல் உபயங்கள்:

    • தூக்கிய காலர் ! : அறிமுகம் இல்லாத இடத்துக்கு செல்கிறோம் என்ற தயங்கிய என்னை, ‘You may not know me; I know you very well.’ என்று முகமன் கூறிய பழைய நண்பர்கள் பலர்.
    • என்னை வீட்டுக்கு அழைத்து சென்ற பழைய நண்பர் ஆர். நடராஜன் ஐ.ஏ. எஸ் (ஓய்வு) உடன் கதா காலக்ஷேபம். 
    • சென்னை-மும்பாய் விமான வண்டிச்சத்தத்தை விட பனையூர்-அடையார் மோட்டார் வண்டிச்சத்தம் அதிகம், விகிதாச்சாரப்படி. தேர்தலில் நிற்கும் எல்லா கட்சிகளிடமும் பனையூர் விமானத்தளம் அர்ஜெண்டு என்று சொல்லி விட்டேன். 

    சித்திரத்துக்கு நன்றி: http://www.clickypix.com/wp-content/uploads/2014/01/Martin-Luther-King-Jr-Quotes-1008.jpg

    இன்னம்பூரான்

    21 04 2014