Friday, July 5, 2013

பரம்வீர்சக்ரா:அன்றொரு நாள்: ஜூலை 6/7



அன்றொரு நாள்: ஜூலை 6/7
Update: Image credit: Google gave this very article! http://www.heritagewiki.org/images/3/3b/Batra08.jpg

Innamburan Innamburan Thu, Jul 7, 2011 at 5:36 AM



அன்றொரு நாள்: ஜூலை 6/7

‘மகன் தந்தைக்காற்றும் உதவி இவன் தந்தை
எந்நோற்றான் கொல்லெனும் சொல்.’
என்ன நோன்பும், உதவியும் வேண்டிக்கிடக்கிறது? ஜீ.எல்.பாட்ரா அவர்கள் ஜனாதிபதி முன் நிற்கிறார், கண்களில் நீர் ததும்ப, நெஞ்சடைக்க, மனமுடைந்து, உடல் தளர்ந்து, ஆத்மபலம் கரைந்தது போல். அவற்றை எல்லாம் கட்டிப்போட்டதால், அஃறிணையாக, ‘கானகத்தே நிற்கும் நெடு மரம் போல்’. ஜடம். படத்தைப் பாருங்கள். 15 ஆகஸ்ட் 1999 அன்று, இந்த நிகழ்வு.
கார்கில் யுத்தம். அண்டை அயல் அநாவசியமாகத் தொடுத்த யுத்தம். சிந்திய  இரத்தத்தை நினைத்தால், மனம் கலங்குகிறது. அதான் சிவப்பு மசி.
இலக்கு 5140 என்ற இடத்தை பிடிக்க செல்கிறார், ‘சிம்ம ராஜா’ கேப்டன் விக்ரம் பாட்ரா (24) (13, ஜேஏகே ரைஃபில்ஸ் & டெல்டா கம்பெனி). பகையை எதிர்பாராத விதமாகத் தாக்கவேண்டுமென, அவரும், ஐந்து வீரர்களும் ஒரு செங்குத்தான பாதை மேல் ஏற, பகையின் மிஷின்கன் தாக்குதல் கடுமை. ‘த கன்ஸ் ஆஃப் நவ்ரோன்’ சினிமா பார்த்திருக்கிறீர்களோ? அந்த மாதிரியான இக்கட்டு; நெருக்கடி. கையும் கையுமாகக் கலந்த கடுமையான போரில், இவரது கையால் இறந்தது மூன்று பகையாளிகள். பலத்த காயம் பட்ட பிறகு போராடிய இவரது துணிச்சலால் உந்தப்பட்டு, இவர் படை ஆவேசத்துடன் இயங்க, அந்த இலக்கு பிடிப்பட்டது: அதிகாலை 3:30. 20 ஜூன் 1999. ஒன்றன் பின் ஒன்றாக, இலக்கு 5100, இலக்கு 4700, உச்சி, மூன்று புள்ளிகள் ஆகியவை இவரது வசமாயின. அடுத்து, கேப்டன் அனுஜ் நய்யார், சஞ்சய் குமார் (இவருக்கும் இதே விருது;சரியான கூட்டாளி, விக்ரமுக்கு.) உதவியுடன், இலக்கு 4750 ஐயும், இலக்கு 4875 ஐயும் பிடிக்கும் தறுவாயில், கேப்டன் விக்ரம் பட்ரா வீரமரணம் எய்தினார். அதிகாலை: 6/7 ஜூலை 1999. ( என்ன இலக்கு வேண்டியிருக்கு, போங்கள்?) அவரது மரண வாக்கு, ‘என் தெய்வத்தாய்க்கு (பாரதமாதா) ஜே!’. 
அவருக்கு இந்தியாவின் அதி உன்னதமான ‘பரம் வீர் சக்ரா’ அருளிய திருவிழாவை முதலில் பார்த்தோம். 
இன்றைய இடுகைக்கு நடத்திய ஆய்வில் பரம வீர் சக்ராவை பற்றிய வரலாற்று செய்திகள் என்னை வியப்பில் ஆழ்த்தின. அந்த ஆய்வில் என்னை தோய்த்து எடுத்தன. இரண்டை மட்டும் இப்போதைக்கு பகிர்ந்து கொள்கிறேன். விக்ரமும் சரி, முதல் முதலாக 1948ல் இந்த பதக்கத்தை பெற்ற மேஜர் ஸோம்நாத் சர்மாவும் ஒரே ஊர்: பாலன்பூர். மேலும், இந்த பதக்கத்தின் வடிவமைத்துக்கொடுத்தவர், திருமதி.சாவித்ரி கனோல்கர் என்ற அன்னிய நாட்டு பெண்மணி. அவருடைய வடமொழி ஞானம், இந்திய ஆன்மீக  ஆர்வம், வேதத்தை பற்றிய ஞானம் ஆகியவற்றை வைத்து தான் அவரை அணுகினார்கள். அவரும் ததீசி முனிவர் வஜ்ராயுதத்திற்காக, தன் எலும்பை கொடுத்த  நிகழ்வின் அடிப்படையில், இந்த பதக்கத்தை வடிவமைத்தார்.(தாய்: ரஷ்யன் தந்தை:ஹங்கேரியன்: கணவன்: இந்தியர்:ராணுவ அதிகாரி) மேஜர் ஸோம்நாத் சர்மா, இவரின் மாப்பிள்ளையின் அண்ணன். இந்த பதக்கம் நம் நாட்டுக்கு வேண்டும் என்றவர், நேரு. இதன் முன்னோடி: இங்கிலாந்தின் விக்டோரியா க்ராஸ் என்ற செப்புப் பதக்கம். விக்டோரியா க்ராஸ்ஸின் வரலாறும் அதை பெற்ற தியாகச்செம்மல்களின் வீர தீர பராக்ரமங்களும், ரோமஹர்ஷம் வருமளவுக்கு, துணிச்சலானவை. 
ஒரு வேளை, மற்றதெல்லாம் விட்டு விட்டு, பரம வீர் சக்ராவும், விக்டோரியா க்ராஸ்ஸும் மட்டுமே என் கவனத்தின் மீது ஆளுமை செய்யுமோ?
இன்னம்பூரான்
07 07 2011
உசாத்துணை:
pastedGraphic.pdf
Login
Image Galleries Profiles of Courage Captain Vikram Batra, PVC Param Vir Chakra

Param Vir Chakra
Mr Girdhari Lal Batra with his son's Param Vir Chakra medal. A grateful nation applauds the Batra family.

Full size: 399x791 




pastedGraphic_1.pdf

first previous

pastedGraphic_2.pdf
Login
Image Galleries Profiles of Courage Captain Vikram Batra, PVC Point 5140

Point 5140
Reconnaissance for the capture of Point 5140. Sitting Left to Right: Lieutenant Vikram Batra, Major Vikas Vohra, Captain Chatterji and the CO of 13 JAK Rifles, Lieutenant Colonel Y K Joshi.

Full size: 490x291 



pastedGraphic_3.pdf


Copyright BHARAT RAKSHAK. All rights reserved.Reproduction in whole or in part in any form or medium without express written permission of BHARAT RAKSHAK is prohibited.
Copyright BHARAT RAKSHAK. All rights reserved.Reproduction in whole or in part in any form or medium without express written permission of BHARAT RAKSHAK is prohibited.
pastedGraphic_4.pdf


Geetha Sambasivam Thu, Jul 7, 2011 at 7:42 AM

To: thamizhvaasal@googlegroups.com
Cc: Innamburan Innamburan
மிக மிக அருமையான, கண்ணீர் கொட்ட வைக்கும் இடுகை ஐயா.  பல ராணுவ அதிகாரிகளுடன் நட்பு முறையில் நெருக்கமாகப் பழகியதால் இந்த உணர்வுகளை நன்கு புரிந்து கொள்ள முடிகிறது. அமைதிப்படையின் பரமேச்வரனும், மெட்ராஜ் ரெஜிமெண்டின் விசாகன் என்னும் கர்னலும் எங்கள் நண்பர்கள்.  அதுவும் விசாகனின் பெண்ணும், எங்க பெண்ணும் ஒரே வகுப்பு.  உல்ஃபா தீவிரவாதிகளால் விசாகன் அவர் குடும்பத்தினர் கண்ணெதிரே கொல்லப்பட்டபோது அழுகையை அடக்க முடியவில்லை.  இப்படி எத்தனை எத்தனை நண்பர்கள்!  மனம் கனத்துத் தான் போகிறது. :((((((((((



Geetha Sambasivam Thu, Jul 7, 2011 at 7:44 AM


பரம்வீர்சக்ரா பற்றிய தொலைக்காட்சித் தொடர் ஒன்று தூர்தர்ஷன் மட்டுமே பிரபலமாக இருந்த நாட்களில் வந்திருக்கிறது.  கோர்கா ரெஜிமெண்டின் மேஜர் ஜெனரல் தாபா அவர்கள் அதிலே முன்னுரை கொடுத்திருப்பார்.

No comments:

Post a Comment