Google+ Followers

Monday, April 15, 2013

தணிக்கை செய்வதில் தணியா வேகம்: ஓய்வும், ஓய்வூதியமும் : 9


தணிக்கை செய்வதில் தணியா வேகம்: ஓய்வும், ஓய்வூதியமும் : 9

Innamburan S.Soundararajan Mon, Apr 15, 2013 at 9:29 AM
To: Innamburan Innamburan
Bcc: innamburan88

Innamburan Innamburan <innamburan@googlemail.com>
1/8/10

தணிக்கை செய்வதில் தணியா வேகம்: ஓய்வும்ஓய்வூதியமும் : 9'மெளனம் சர்வார்த்த சாதகம்’ என்ற ஸுபாஷிதத்திற்கேற்பஸ்திதபிரதிஞ்னன் ஆகிய யான்உங்கள் எல்லாரின் அனுமதியுடன்ஆர்வத்துடன்இச்சையுடன்ஈகையுடன்உரிமையுடன், ஊக்கத்துடன்எண்ணம் பிறழாமல்,ஏற்புடைய வகையில்ஒரு ஓட்டமும் நடையுமான நிகழ்வை உள்ளது உள்ளபடி பகிர்ந்த்து கொள்கிறேன்.

டாக்டர் ரத்னவேலு சுப்ரமண்யம் ஒரு சான்றோன். புகழ் வாய்ந்தமனிதநேயம் மிக்க மருத்துவர். என் தந்தைக்காகஅவரிடம் சிகிச்சைக்குப்போனபோது அவர் எனக்கு கொடுத்த பணி, ' ‘ஜெனெரல் ஆஸ்பத்திரியில் ஒரு ஓய்வு பெற்ற எஞ்சினீயர் நினைவிழந்து இருக்கிறார். அவரது ஆயுள் என்றும் முடியலாம். கொஞ்சம் நினைவு வந்தால்பென்ஷன் வந்ததாஎன்று கேட்டுவிட்டுஇல்லையென்றால்யாசத்துடன்மறுபடியும் கோமா நிலை. நீ அவருக்கு பென்ஷன் வாங்கிக்கொடு'.

சரி என்று சொல்லிவிட்டுசம்பந்தப்பட்ட இலாக்காவில் விசாரித்தால்பொதுப்பணித்துறையிலிருந்து ஒரு வருடமாகஅவரது பென்ஷன் ஆவணங்கள் வரவில்லை. அது ஆமையை விட மெதுவாக பயணிக்கும் துறை. ஓட்டமும்நடையுமாகஏ.ஜீ.யிடம் ஓடினேன். இதில் உனக்கு என்ன இன்டெரெஸ்ட் என்று கேட்ட அவர்விவரம் அறிந்தவுடன்மின்னல் வேகத்தில் இயங்கினார்.

பென்ஷன் தாமதம் ஆனால்தோரயமாகஒரு பென்ஷன் தற்காலிகமாகக் கொடுக்க ஏ.ஜீ.க்கு மட்டும் அதிகாரம் உண்டு. அதை 'அரிது அரிதுஎன பயன் படுத்தும்போதுஅதிகப்படி 90% ொடுக்கலாம். நானோ 100%கொடுக்கவேண்டும் என்று தலைகீழாக நின்றேன். ஏனென்றால்அந்த எஞ்சினீயருக்கு எது மறந்தாலும்,பென்ஷன் தொகை மறக்காது. அதற்கும் தயாளன் ஆகிய ஏ.ஜீ. ஒத்துக்கொண்டார். ஆணையும் பிறப்பித்தார். இருந்தும் சிக்கல். பென்ஷனர் கையொப்பம் வேணுமேவங்கிக்கணக்கு திறந்துஅதில் பென்ஷனைப் போட. மத்றாஸ்ஸில் அதை அமல் படுத்த பே அகவுண்ட்ஸ் ஆஃபீஸ் என்ற மாகாண அரசின் ஆஃபீஸை அணுகவேன்டும்.எனது வேண்டுகோளை மதித்துஅங்குள்ள அதிகாரிடி.பார்த்தசாரதி அவர்கள்ஆஸ்பத்திரிக்குப்போய்,பென்ஷனர் கையொப்பம் இடமுடியாது என்று சான்று அளித்துஅவரின் மனைவி பேரில் வரவு வைக்க ஏற்பாடு செய்து விட்டு வந்தார்.
அந்த எஞ்சினீயரருக்கு நினைவு வந்தபோது இந்த நற்செய்தி கூறப்பட்டது. அவரது முகம் மலர்ந்தது. சில நாட்களில்அவர் இறந்து விட்டார்.

படிப்பினைகள்;
1. நாங்கள் பொதுப்பணித்துறையை அணுகவில்லைஅது கல்மனது என்று தெரியும்.
2. கறாராக விதிகளை கடைப்பிடித்திருந்தால்தவறு இல்லைம்கா மட்டம் என்பதை தவிர.
3. எல்லாரும்ஒரு மைல் அதிகப்படி நடந்து உதவினார்கள். மனிதநேயம் அப்படி.
4.எங்களில் ஒருவரும் நல்ல பெயர் தேடவில்லை. இன்று தான் நிகழ்வு வெளி வருகிறது.
Tthamizth Tthenee 
1/9/10

அது  சரி

எப்போது  பென்ஷன்  துறை  கோமாவிலிருந்து  விடுபடும்..?


இப்போதும் பென்ஷன் கைக்கு வராமலேயே உயிர் நீத்த  பல இருக்கிறார்கள்அன்புடன்
தமிழ்த்தேனீ
9-1-10 அன்று, Innamburan Innamburan <innamburan@googlemail.com> எழுதினார்:

Venkatachalam Subramanian 
1/9/10
to mintamil
 
அவரோ அப்டியான்னு கேட்டார். வேலை ஜாஸ்தியா இருக்கு.  ஏ.ஜீ. அஃஃபீஸ் கடிதமெல்லாம் படிக்கறதில்லை என்றார். எனக்கு சுரத்து இறங்கிப்போச்சு. 

ஓம்.
மெய்கண்டார் என்னும் பெயருடன் ஒரு அலுவல்ர் இருந்தார். கோட்டையிலிருந்து வரும் நேர் முகக் கடிதங்கள் அலுவலகத்தில் காணக் கிடைக்கவில்லை. அவை எங்கு போயின வென்ற தேடுதல் அங்கு நிகழ ஆரம்பித்தது.
 தேடிய அனைத்து நேர் முகக் கடிதங்களும் திரு மெய்கண்டார் அவர்களின் கோட் பாக்கெட்டில் இருந்தன.
அவர் சொன்னார்,” மிக்கப் பிரியத்துடன், எனதன்புள்ள மெய்கண்டார் என்று மேலதிகாரிகள் என்னைப் பெயர் சொல்லி அழைத்து அனுப்பியுள்ள கடிதங்களை நான் என்னிடமே வைத்துக் கொண்டு கண் போன்று காத்து வருகிறேன் ” என்றார்.
பின்னர் கடுமையாக அனல் பறந்து அவர் வேறிடத்துக்கு மாற்றப்பட்டது தனி விஷயம்.
அன்புடன் வெ.சுப்பிரமணியன் ஓம்
Innamburan Innamburan <innamburan@googlemail.com>
1/9/10
 
to mintamil
 
௧. தமிழ்த்தேனி அவர்கள் சொல்வது தனியார் துறையிலும், ஒரு அளவு மாநில அரசு பணியிலும் இருக்கலாம். மத்திய அரசு, ஓய்வு பெறும்
 தினமே, ஓய்வூதியம்,க்ஷேமநிதி, இலவச ஆலோசனை, வேலைவாய்ப்பு அறிவுரை, மாலை, புகழுரை எல்லாம். இவற்றுக்கான வழிமுறைகள் வகுத்ததில், எனக்கு ஒரு பங்கு உண்டு என பெருமிதம் கொள்கிறேன். மாநில அரசு பணியில் இருந்தால், பிற்கால காரணங்கள் வேறு. இப்பவும், யாருக்குஆவது இன்னல் இருந்தால் சொல்லுங்கள். தீர்க்கமுயலலாம்.  
௨. ஓம் ஐயா அவர்களுக்க அரசு அனுபவம் இருப்பதால், அவரது கருத்துக்களை ஆவலுடன் எதிர்ப்பார்க்கிறேன். மெய்கண்டார் போல பலர் உண்டு.  பாடங்களும் உண்டு. நிர்வாகம் செய்வது கடினம் அல்ல, புரிந்து கொண்டால்.
நன்றி
இன்னம்பூரான்

Photo Credit