Google+ Followers

Tuesday, April 16, 2013
தணிக்கை செய்வதில் தணியா வேகம் (சுற்று 2): 11.
"குடிவரியுயர்த்திக் கொள்ளை கொண்டேனோ!"


Innamburan Innamburan Sun, Jan 10, 2010 at 6:50 PM

முன் குறிப்பு: எழுதி இரண்டு வருடங்கள் கடந்தன என்றாலும், இன்றைய அரசு தடுமாறும் நிலையில் பொருந்துகிறது. அதனால் தான் மீள்பார்வை.
இன்னம்பூரான்
16 04 2013
Photo Credit:
http://www.farmvillefreak.com/images/facebook_farmville_freak_co-op_farming_splash.jpg


தணிக்கை செய்வதில் தணியா வேகம் (சுற்று 2): 11.
"குடிவரியுயர்த்திக் கொள்ளை கொண்டேனோ!"


இரண்டாம் பத்து தொடங்க தலைப்பு அருளியது வள்ளலார்திருமதி கீதா சாம்பசிவம் மூலமாக.  அறிமுகம் அளிக்க,  நல்லதொரு வாய்ப்பு.

ராமாயணம்அர்த்தசாஸ்திரம்திருக்குறள் ஆகியவை அரசனுக்கு அளித்த அறிவுரைகளில், "குடிவரியுயர்த்திக் கொள்ளையடிக்காதே!" என்பதும் ஒன்று.  அது ஆங்கிலேய ஆட்சிக்கு பொருந்தியதுஅந்த ஆட்சி ஜமீந்தார்களை வளர்த்ததுபிற்காலம் அதை 'ஒழித்தமக்களாட்சியும் தவறுகள் பல செய்வதை கண்டிப்பதே,தணிக்கைத்துறையின் கடன்.  இந்தியாவில் அத்துறை தொன்மை வாய்ந்தது.  ஆங்கிலேய ஆட்சிக்காலத்தில்அதன் மரபுகள் போற்றப்பட்டன. பல நல்ல/நல்லதற்ற மாற்றங்களைக்கண்ட அந்த துறை,  இன்று உலகளவில் போற்றப்படுகிறது. அத்துறை உத்யோகஸ்தர்கள் ஐ.நாவில்சிறப்பாக பணி ஆற்றுகிறார்கள். ஐ.நா. ஆடிட் தலைவர் இந்தியாவின் ஓய்வு பெற்ற ஆடிட்டர் ஜெனெரல்.  இது நிற்க.

இந்த தொடரை மின் தமிழில் அளிப்பதற்கு நான்கு காரணங்கள் உண்டு.

1. தணிக்கைத்துறை அரசியலுக்கு அப்பாற்பட்டதுநமது அரசியல் சாஸனப்படிசுதந்திரப்பறவை. மத்திய/மானில அரசுகளின் தளை அதற்கு கிடையாது.
2. அத்துறை அரசின் நடவடிக்கையைஎல்லாத்துறைகளிலும் - அணுசக்தியிலிருந்து-அங்கன்வாடி வரை கண்காணிப்பதால்அத்துறையில் பணி புரிபவர்களுக்கு,ஆழ்ந்த/பரந்த அனுபவங்கள் கிடைக்கின்றன. சரிவர தணிக்கை செய்வது ஒரு ஆற்றல் எனலாம்.
3. திவாஜி ஒருமுறை கேட்டமாதிரிஆடிட் செய்து அடைந்த பயன் யாதுஎன்ற வினாவுக்கு விடை: 'அது மக்களின் விழிப்புணர்ச்சியை பொறுத்து தான் அமையும். அரசு ஆள்பவர்களுக்கு அது ஒரு முள். காலம் போகிற போக்கில்அரசு இயந்திரம்தணிக்கைத்துறையை அலக்ஷ்யம் செய்வதை அதிகப்படுத்தும்.  மின் தமிழ் ஆர்வலர்கள்பல துறைகளிலிருந்து வருபவர்கள். அவர்கள் மூலமாகமக்களுக்கு நற்செய்தி சேரலாம். மக்களிடையே விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தும் வழிகளில்,இதுவும் ஒன்று.

4.  எனக்கு தெரிந்ததை நான் பகிர்ந்து கொள்கிறேன். அது சொற்பம். மற்றவர்களின் அனுபவம்கேள்விகருத்துமாற்றுக்கருத்துதனிக்கைத்துரையின் போக்கை கண்டிக்கும் தகவல்கள் எல்லாம் இந்த இழையின் பயனை அதிகரிக்கும். கருத்துக்கூறுங்கள் என்று நான் விளிப்பதின் பின்னணிஇது தான். இது ஒரு interactive forum.

குடிவரியுயர்த்திக் கொள்ளை கொண்டேனோ!" என்ற சொற்றொடர் அரசின் வரவு/செலவு. போக்குவரத்துநடவடிக்கைநிலவரம்நிர்வாகம் எல்லாவற்றையும் ஜீரணம் செய்துள்ள சொற்றொடர். அந்த பார்வையில்ஒரு உதாரணம்.

'ஒன்றுபட்டால் உண்டு வாழ்வுஎன்ற தெளிவினால் தான்ஸர் ஹென்றி லாரென்ஸ் பஞ்சாப்பில் கோவப்பரேட்டிவ் முறை அறிமுகப்படுத்தினார்.  அந்த முறைப்படி சைனாவிலும்இஸ்ரேலிலும் விவசாயம் பலப்படுத்தப்பட்டது என்பர். ஆந்திராவில் அத்தகைய அமைப்புகளைக்காண சென்றபோதுகலெக்டர் சிறப்பாக நடப்பவை என்று பரிந்துரை சொல்லப்பட்ட இரண்டு பண்ணைகளை விஸிட் அடித்தேன். ஒன்றில்குடியானவர்கள் ஒவ்வொருவருக்கும் இரண்டு சிறு சிறு வயல்கள்! தாசில்தார் மழுப்பினார். ஒரு குடியானவர் வெள்ளந்தியாக சொன்னார்,'ஒரு வயற்காடு மேடு. தண்ணீர் வராது. புள்ளி விவரம் என்று சொல்லி குறைந்தவிலையில் எடுத்துக்கொள்ளச்சொல்லிகட்டாயபடுத்தினார்கள்.வேஸ்ட். என்றார்.

அடுத்த பண்ணை கொழித்தது. மகிழ்ந்த நான் கேட்டது, 'அது சரி. நீங்கள் ஏன் அரசுக்கு கொடுக்கவேண்டிய தவணைகளை கொடுக்கவில்லைபதில், 'ஐயா! வந்த ஆதாயம்இவர்களுக்கு (அரசு ஊழியர்கள்) பிரியாணி கொடுத்ததில் போய்விட்டதுஎன்று சொல்லி பளீர் என்று சிரித்தார்.
இது எல்லாம் எந்த தெய்வத்துக்கு ப்ரீதி?
இன்னம்பூரான்

பி.கு.
தமிழ்த்தேனீ சொன்னமாதிரி சில இடங்களில் பென்ஷன் போன்ற ஆவணங்கள் தேக்கத்திலிருந்தால்காரணம் தேடவேண்டும். 'மெய்கண்டார்கள்அங்கு அதிகம் இருக்கலாம். நிர்வாகம் அவர்களை களைய இயலும்.Venkatachalam Subramanian Mon, Jan 11, 2010 at 12:05 AM

ஓம்.
கூட்டுறவுத் துறை ஒரு தனியார் இயக்கமாக நடைபெற்றுவருகின்றது.
ஆலயங்களில் முதல் மரியாதை என்ற பாணி இருப்பது போல் ஊருக்கு ஊர் ஒரு விதமாக நடைமுறைகள் உள்ளன. அரசியல், மேலாண்மையினர், பெருந்தனக்காரர், செல்வாக்குடையோர் கைகளில் அவை நளின நாட்டியம் ஆடுகின்றது.

உடன் பிறந்த அண்ணன் தம்பி இருவரும் உள்ளூர் கூட்டுறவு மையத்தின் உறுப்பினர் ஆகும் தேர்தலின் போது கத்திக் குத்து ஒருவரை ஒருவர் வதைத்துக் கொண்டதை நேரில் கண்டிருக்கிறேன்.

 பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத் தேர்தலின் போது நான் அங்கு பாதுகாப்பின் பொருட்டு வருவாய்த்துறை அங்கமாக ஆங்கு உசிலம்பட்டியருகில் ஒரு கிராமம் சென்றிருந்தேன்.  தேர்தல் நடத்துவது கூட்டுறவுத் துறை பால்வள ரிஜிஸ்ட்ரார் அலுவலக அன்பர்கள். 

முறைப்படி தேர்தல் ஆரம்பமாயிற்று. இரண்டொருவர் வந்து வாக்களிக்க முன் நின்ற்னர். ஒரு திரளானவர்கள் வெளியே பார்வையாளர்கள் போன்று நின்று உன்னிப்பாக தேர்தல் முறைகளை ஊன்றிக் கவனித்துக் கொண்டிருந்தனர். 

ஒருமனிதன் உள்ளுர்வாசி இதற்கு முன்னர் என்னை வேறு அலுவல் காரணமாக தாலுகா அலுவலகத்தில் சந்தித்தும் அறிமுகம் ஆனவரும் கூட, சற்று வெளியே வந்து பேசுமாறு அழைத்தார்.

அங்கிருந்த உள்ளூர் மக்கள் 20 பேர் தங்களுடைய மாட்டுத்தொழுவம், மற்றும் பாலவளத்துறைக்கு தாங்கள் உற்பத்திசெய்து அன்றாடம் ப்பால் அனுப்பும் பதிவேட்டினையும் காண்பித்தனர். எனக்கு தேவையான சில குறிப்புகள் எடுத்துக்கொண்டு தேர்தல் சாவடிக்கு வந்து வைக்கப்பட்டிருந்த வாக்காளர் பட்டியலில் சோதித்த போது நான் பார்த்த மக்களின் பெயர்கள் இல்லை. விளக்கம் கேட்ட போது கூட்டுறவுத் துறை அன்பர்கள் சரியான விளக்கம் தரவில்லை. 

உடன் நான் வட்டாட்சியருக்கும் கோட்டாட்சியருகும்தொலைபேசியில் பேசி வாக்காளர் பட்டியலில் விடுபட்டவர்கள் கொதித்து நிற்கின்றனர். சரியான ஆவணத் தகுதி இல்லை. எனவே தேர்தல் நாளை ஒத்திசெய்துவிடலாம் என்று அனுமதி பெற்று நிறுத்தப்பட்டது.

 கூட்டம் கலைந்தது மறு தேதி பின்னர் முறைப்படி அறிவிக்கப்படும் என்பதை அவர்களுக்குக் காட்டிவிட்டு கையில் கொண்டு சென்றிருந்த உணவுப் பொட்டலத்தைக் காலிசெய்ய முற்படுகையில் ஒரு பெண்மணி வந்து ஒரு பொட்டலத்தை என் முன் வைத்தார்.

அம்மா, நான் சாப்பிடுவதற்கு வீட்டில் இருந்து கொண்டுவந்திருக்கின்றேன்.இது வேண்டாம் என்றேன். அவர் சிரித்தார். அங்குவந்த ஒருவர் அந்த பொட்டலத்தை விரித்துக் காட்டினார். அது அரைத்த வரமிளகாய்த் தூள்.தேர்தல் நடைபெற்று உள்ளூர் விவசாயிகளுக்கு வாக்கு அளிக்கும் உரிமை மறுக்கப்பட்டால் அந்த காரப்பொடி கண்களில் வீசப்பட்டிருக்கும்..
ஓம்Geetha Sambasivam Mon, Jan 11, 2010 at 12:25 PM

இரண்டு பேரின் அனுபவங்களும் ஆச்சரியமாய் இருக்கு. பகிர்ந்து கொள்ளுங்கள். அருமைனு சொல்லிட்டுப் போறது வெறும் வார்த்தையே!
[Quoted text hidden]

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minTamil@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil