Thursday, April 18, 2013

மடலாடி....................




மடலாடி....................

Innamburan Innamburan Sun, Nov 20, 2011 at 9:25 PM

மடலாடி மகிழ்விப்பதொரு கலை, செல்லக்கண்ணு.
தடாலடி பதிலடியில் லாபமில்லை, சின்னப்பொண்ணு.
குடலுருவி கொலை செய்யலாமோ?, சின்னாத்தா!
ஊடலுக்கு வழியா இல்லை? வேணிப்பொண்ணு.

திசை மாற்றாதே. திசை மாற்றாதே. செல்லக்கண்ணு.
கசையடி ‘சுரீர்’னு வலிக்குமடி,சின்னப்பொண்ணு,
பசை தடவி பாடம் சொல்லணுமாம், சின்னாத்தா!
ஆசையா படிப்பாஹ. ஆனா‘கம்’னு!, வேணிப்பொண்ணு.

பாடாதே, பாடம் சொல்லு என்றார் பேசாமடந்தை வாசகி(வாசகர் உள்ளடக்கம்). அந்தக்காலத்து பாடம். நூறு வருஷமாச்சு. நம்ம கைச்சரக்கும் கையோட:

ட்யூடோரியல் :1
வந்த மடலை இரண்டாம் தடவை படிச்சுக்கோ. அப்றம் விலாசம் சரியா இருக்கா பாத்துக்கோ. இல்லேனா காதலிக்கு எழுதின லட்டரு அப்பாவுக்கும், அப்பாவுக்கு எழுதினது அவளுக்கும் போக, அவர் ஆசி சொல்ல, அவ நழுவிய கதை ஆகிவிடும் :-) அஞ்சல் என்றால் தபால் தலை ஒட்டு. ஈமெயில்னா தட்டின பிழைகளை திருத்து. விலாசம் சரியான்னு பாத்து பின் கோடு போடு. ஈமெயில்னா விலாசம் சரி பாத்தப்றம் செண்ட். நம்ம விலாசம் சரி பாத்துக்கோ, அஞ்சல் என்றால். ஈமெயில்னா அந்த பிரச்னை இல்லை.

மறக்காதே! மறக்காதே! கும்பிடு போட்டு விடு. கையொப்பமில்லா மடலெல்லாம் மாடல் இல்லை. மருவாதையா, அதையும் போட்டு விடு. தேதி போடணும் தம்பி. அது 2011 வருட நவீன உத்தி. வருஷம் போட மறக்காதே. இல்லெனா பிற்காலம் தேடுவது மெத்த கடினம்.
இன்னம்பூரான்
20 11 2011
பஸ் டிக்கெட்டில் காமத்துப்பால்
love_letter_ticket.jpg
உசாத்துணை:
Lewis Carroll (1890) Eight or Nine Wise Words about Letter-Writing

rajam Sun, Nov 20, 2011 at 9:45 PM

wonderful!! அமோகம் என்பார்கள் சிலர், அதிசயம் என்பார்கள் சிலர், அவலட்சணம் என்பாரும் உளர். உண்மை உண்டு! 
:-) :-) :-)


ranganathan venkatachariar >Mon, Nov 21, 2011 at 2:23 AM

வெரி பைன் 
அரங்கநாதன்/ உத்திரமேரூர் 


Subashini Tremmel Mon, Nov 21, 2011 at 7:10 PM

ரசித்தேன் :-)

2011/11/20 Innamburan Innamburan <innamburan@gmail.com>
..
வந்த மடலை இரண்டாம் தடவை படிச்சுக்கோ. அப்றம் விலாசம் சரியா இருக்கா பாத்துக்கோ. இல்லேனா காதலிக்கு எழுதின லட்டரு அப்பாவுக்கும், அப்பாவுக்கு எழுதினது அவளுக்கும் போக, அவர் ஆசி சொல்ல, அவ நழுவிய கதை ஆகிவிடும் :-)

இதை படித்த போது ஒன்று ஞாபகத்துக்கு வந்தது. மலேசியாவில் இருந்த சமயம்.. எனது தோழி மாலதிக்கு 4 வருஷமாக ஒரு இளைஞன் தீவிரமாக காதலித்து வந்தான். முதலில் எதிர்ப்பு இருந்தாலும் பின்னர் பெண் வீட்டில் சம்மதம் சொல்லிவிட்டனர். அடுத்த சில மாதத்தில் அவனுக்கு சபா மானிலத்தில் ஆசிரியர் பயிற்சிக்கு வாய்ப்பு அமைந்து பினாங்கிலிருந்து சென்று விட்டான். ஒரு நாள் ஒரு கடிதம் என் தோழிக்கு வந்திருந்தது.. அவனிடமிருந்து!  மாலதிக்கு பதில் யாரோ வாசுகிக்கு எழுதிய கடிதத்தை மாலதிக்கு வைத்து அனுப்பிவிட்டான் இந்தக் காதலன்.  பிறகு என்ன.. அப்புறம் தான் தெரிந்தது அவனுக்கு வாசுகி என்ற இன்னொரு காதலி புதிதாக கிடைத்திருக்கிறாள் என்று.. இரண்டு பெண்களுக்கும் கடிதத்தை மாற்றி வைத்து ரெண்டு பெண்களின் கோபத்தையும் பெற்றுக் கொண்டான். ரெண்டு பேருமே அவனை ஒதுக்கி விட்டனர்.  2 வருஷங்களுக்குப் பிறகு அவன் பயிற்சி முடிந்து திரும்பி வந்து வேறொரு பெண்ணை கல்யாணம் செய்து இப்போது குழந்தை குட்டிகளோடு வாழ்கிறான் என்பது வேறொரு கதை. 

சுபா

 
அஞ்சல் என்றால் தபால் தலை ஒட்டு. ஈமெயில்னா தட்டின பிழைகளை திருத்து. விலாசம் சரியான்னு பாத்து பின் கோடு போடு. ஈமெயில்னா விலாசம் சரி பாத்தப்றம் செண்ட். நம்ம விலாசம் சரி பாத்துக்கோ, அஞ்சல் என்றால். ஈமெயில்னா அந்த பிரச்னை இல்லை.

மறக்காதே! மறக்காதே! கும்பிடு போட்டு விடு. கையொப்பமில்லா மடலெல்லாம் மாடல் இல்லை. மருவாதையா, அதையும் போட்டு விடு. தேதி போடணும் தம்பி. அது 2011 வருட நவீன உத்தி. வருஷம் போட மறக்காதே. இல்லெனா பிற்காலம் தேடுவது மெத்த கடினம்.
இன்னம்பூரான்
20 11 2011
பஸ் டிக்கெட்டில் காமத்துப்பால்
love_letter_ticket.jpg
உசாத்துணை:
Lewis Carroll (1890) Eight or Nine Wise Words about Letter-Writing
 

rajam Mon, Nov 21, 2011 at 7:25 PM

சுபா, இந்த மாதிரி உலக இயலுக்குப் பலரும் பலவகைப் பெயர் கொடுக்கலாம் -- "ராஸ லீலா" "பக்தி" "காதல்" அது இது ... என்று. எல்லாமே ... அற்ப மனிதப் பிறவிகளாகிய நாம் நின்றிருக்கும் நிலவுலகத்துக்கு (== down-to-earth) வரும்போது ... ஏதோ ஒரு மாதிரியில் கன்னா பின்னாவென்று முடிந்துவிடலாம்! :-) :-) :-) 


Geetha Sambasivam Wed, Nov 23, 2011 at 8:15 PM

நல்லதொரு துவக்கம். நல்லாவே இருக்கு ஆலோசனைகள் எல்லாம்.  அது சரி, எங்கே பெரியவங்க யாருமே இதைக் கவனிக்காமல் என்னைப் போன்ற சின்னப் பசங்களே பதில் சொல்லிட்டு இருந்தா எப்படி?? 

2011/11/20 Innamburan Innamburan innamburan@gmail.com

Geetha Sambasivam Wed, Nov 23, 2011 at 8:16 PM

நல்லவேளையாக இரண்டு பெண்களும் பிழைத்துக்கொண்டனர்;  தப்பித்தனர்.  இம்மாதிரி சஞ்சல புத்திக்காரங்க கிட்டே மாட்டிண்டால்! :(((((((

2011/11/21 Subashini Tremmel <ksubashini@gmail.com>
ரசித்தேன் :-)
2011/11/20 Innamburan Innamburan <innamburan@gmail.com>

Geetha Sambasivam Wed, Nov 23, 2011 at 8:18 PM
Reply-To: mintamil@googlegroups.com
To: mintamil@googlegroups.com
இதுக்கும் ராஸலீலாவுக்கும், பக்திக்கும் கொஞ்சம் கூட சம்பந்தமே இல்லை அம்மா; அதன் பொருளே வேறு;  இது பச்சோந்திக்காதல்; அல்லது பிள்ளைப்பருவக் காதல்! 

rajam Wed, Nov 23, 2011 at 8:47 PM

"இதுக்கு"-னு சொல்லலெ, கீதா! "இந்த மாதிரி உலக இயலுக்கு"-னு சொன்னேன்.  பச்சோந்திக் காதலோ, பிள்ளைப் பருவக் காதலோ ... எதிலெயுமே ஒரு தப்பும் இல்லெ; அதுவே பின்னாலே வேற மாதிரி வெளிப்படுகிறது என்று நினைக்கிறேன். அதெயே வேற மாதிரி மத்தவங்க சொல்றாங்க. இதில் எல்லாம் ஒரு தப்பும் இல்லை. பார்வையும் விளக்கமும் அவரவர்க்குத் தக்கபடி வேறுபடலாம்.



கி.காளைராசன் Wed, Nov 30, 2011 at 10:54 AM
வணக்கம்.

‘இ‘னா, ‘இ‘ளசுகளுக்கு காட்டும் படம் 
ஒரு பாடமோ?

பஸ் டிக்கெட்டில் காமத்துப்பால்
love_letter_ticket.jpg
உசாத்துணை:
Lewis Carroll (1890) Eight or Nine Wise Words about Letter-Writing
அன்பன்
கி.காளைராசன்

Innamburan Innamburan Wed, Nov 30, 2011 at 11:01 AM

அன்பனே!
கீதா சாம்பசிவம் சொல்வது யாதெனில்:
~'நல்லதொரு துவக்கம். நல்லாவே இருக்கு ஆலோசனைகள் எல்லாம்.  அது சரி, எங்கே பெரியவங்க யாருமே இதைக் கவனிக்காமல் என்னைப் போன்ற சின்னப் பசங்களே பதில் சொல்லிட்டு இருந்தா எப்படி?? '

அடுத்த பாடம் வேணுமா? வேண்டாமா? ஜோரா கை தட்டிச் சொல்லுங்கோ.
இன்னம்பூரான்
2011/11/30 கி.காளைராசன் <kalairajan26@gmail.com>
[Quoted text hidden]

No comments:

Post a Comment