Google+ Followers

Friday, April 19, 2013

“சாலமன் வந்தார்!”: தணிக்கை செய்வதில் தணியா வேகம் -14


“சாலமன் வந்தார்!”: தணிக்கை செய்வதில் தணியா வேகம் -14

Innamburan Innamburan <innamburan@googlemail.com>
1/13/10


 14 01 2010

 சாலமன் வந்தார்!: தணிக்கை செய்வதில் தணியா வேகம் -14
Inline image 1

சின்ன வயதிலேயே இந்த ஏ.ஜீ.யை  அப்பாவும்சக  ஊழியர்களும் சபிப்பதை கேட்டு இருக்கிறேன். அவர் யூனிஃபார்ம் போட்டுக்கொண்டு.  ஊரை எல்லாம் அதட்டி வைத்துக்கொண்டிருப்பார் என்றும்எல்லாரையும் தட்டிக்கேட்கும் அவரை கட்டிப்போட ஆளில்லை என்று ஒரு தோற்றம். இதென்ன மிலிட்டேரி மோகம்அதுவும் எடுத்தவுடனே,அஸிஸ்டெண்ட் அகவுண்டட் ஜெனெரலாமே! ஆடிட் கேப்டன்ஆடிட் மேஜர்ஆடிட் கர்னல் என்றல்லவா வரவேண்டும்?  இப்படியெல்லாம் வியந்தது உண்டு. இருந்தாலும்உலகில் எல்லா நாடுகளில்இவர்கள் ஜெனெரல் தான். தவிரஅட்வகேட் ஜெனெரல்ஸொலிசிட்டர் ஜெனெரல்டேரக்டர் ஜெனெரல் என்று எங்கும் ஜெனெரல் மயம்!

1954ல் தான் கண்டு கொண்டேன்இதெல்லாம் ஒரு மாயம் என்று. அகவுன்டென்ட் ஜெனெரல் ஆஃபீஸ் ஒரு கும்பமேளாமாமாங்க நெரிசல்எங்கு பார்த்தாலும் ரெங்கநாதன் தெரு மாதிரி ஜே ஜே கூட்டம்தலை மாந்ததர் வருவதும்போவதும் புலப்படாது என்று. ஆனா வேலையும் நடக்கிறது. அந்த அலுவலகத்தின் தல புராணம் எழுதியாகிவிட்டது. தருணம் கிடைத்தபோது கதை மாந்தர்களின் அதிசய குணாதிசயங்களை பகிர்ந்து கொள்ளலாம்.

ஒரு முறை அப்பாவின் பிராயாணச்செலவைப்பற்றி அதிகப்பிரசங்கியாக ஒரு கேள்வி. "ரோடு இணைக்காத ஊருக்கு போனதாககணக்கு எழுதியிருக்கிறீர்கள். அது தவறு" என்று. இத்தனைக்கும்உள்ளூர் விவகாரம் தெரிந்த அவரது மேலதிகாரி அனுமதித்தது தான். கொதித்தெழுந்தார்முன்கோபியான, அப்பா. "நடந்து சென்றேன். அதற்கும் பயணப்படி உரிமை உண்டு".

பதில் இல்லை. பயணப்படி வாங்குவதில் ஏகப்பட்ட முறைகேடுகள்அவற்றைத் தடுக்க தணிக்கைத்துறையின் இயலாமைஅங்கும் தவறுகள் என  பார்த்திருக்கிறேன். பிறகு வருவோம். சாலமன் காத்திருக்கிறார்.

நான் கல்வித்துறை கணக்கு வழக்குகள் பார்த்துக்கொண்டு இருந்ததால்மான்யங்கள் அளிப்பதற்கு வந்த ஆணைகளின் மேல் ஒரு சிறப்பு முத்திரை, யான் இட்டால் தான்அதை அளிப்பார்கள், கருவூலத்தில். அந்த வகையில் திருச்சிராப்பள்ளி கல்வித்தந்தை திரு. ராமசாமி அய்யர்திரு. டி.எஸ். அவினாசிலிங்கம் செட்டியார்பாதிரிமார்,என்.ஸீ.ஸீ ராணுவ அதிகாரிகள் ஆகியோர் என்னிடம் வருவதுண்டு. உடனடியாக நான் மான்யங்களை எடுத்தளிப்பதால்,அவர்கள் நண்பர்கள் ஆயினர். முதலில், 'காலேஜ் பையன் மாதிரி...என்று ஆரம்பிப்பார்கள்நான் கண்டு கொள்வதில்லை.

 இப்படியாக நிம்மதியாக பணி புரியும் காலத்தேஇடையில் புகுந்தார் சாலமன். ஒரு நாள் வீட்டுக்கு வந்த அவரின் கூற்றுபாகிஸ்தான் இந்தியா மீது படையெடுக்கப்போகிறது என்று நம்பகத்தக்க வட்டாரங்கள் கூறுகின்றன. நாமும் தயாராகி வருகிறோம். இது ராணுவ ரகஸ்யம். என்.ஸீ.ஸீயில் இருப்பதால் எனக்கு வந்த பணியென்னவெனில்உங்களை ராணுவத்தில் சேர்க்கவேண்டும்அல்லது நன்கொடை வாங்கி அனுப்பவேண்டும். ஜெனெரல் கரியப்பா அவர்களின் கையொப்பமிட்ட சான்றிதழ் வரும். அடிக்கடி வந்தாராம். மிலிடெரி என்றாலே கிலியடைபவர்களிடம் நன்கொடை வாங்கிகொண்டாராம். என்னை வளைக்க ஒரு நாள் வந்தார். நான் ராணுவத்தில் சேருகிறேன் என்றேன். அவர் அதை ரசிக்காமல் நன்கொடைக்கு தொந்தரவு செய்ய, (ஏற்கனவே இது பித்த்லாட்டம் என்று ராணுவ அதிகாரிகள் மூலமாக அறிந்திருந்த) நான் அவரின் சைக்கிளை இரவல் வாங்கிக்கொண்டு, ( இல்லாட்ட ஓடிடிவானே.)

 போலீஸாரை இழுத்து வந்தேன். ஃப்.ஐ.ஆர் பதிவு செய்து விட்டு வந்தால்வீடு போர்க்களமாக காட்சி அளித்தது! முதல்முறையாகமாமியாரிடமிருந்து கடுமையான நேரடி தாக்குதல்.


மாமனார் யதார்த்த வாதியானார். மனைவியோவ்யாகூலத்தில். எதுத்தாத்துப்பாட்டியோ"ஏண்டாப்பா! அந்த கட்டலப்போறவன் கத்தியாலே உன்னைக் குத்தினாஇந்த குழந்தை அழுமேடா?" அடுத்தவீட்டு ரிடையர்ட் கமிஷனர் மாமா"இது வரை உங்கள் வீட்டில் தண்டல்க்காரன் வந்ததில்லை. நீ கொண்டு வந்து விட்டாய். இந்த தெரு உருப்பட்டால் போல!"

நள்ளிரவில் வந்தனரேபோலீஸும்சாலமன் ஸாரும்! அவர் பித்தலாட்டத்தை ஒத்துக்கொண்டார். ஏழை குடும்பம்ஆபரேஷன்கஞ்சி, கூழ்  என்று சம்பந்தா சம்பந்தம் இல்லாமல்பலவற்றைக்கூறி,  இரங்கிய ஸ்வபாவம் உடைய போலீஸ், ஃப்.ஐ.ஆர். ஐ வாபஸ் வாங்கிகொள்ள சொல்லி என்னை வற்புறுத்தியது. தெருவே கூடி அதை ஆதரிக்கநானும் பின்வாங்கிவிட்டேன். அப்பா பிறகு சொன்னார்போலீஸ்காரன் பணம் வாங்கியிருப்பான் என்று. அவருக்கு அத்துறையை நன்கு தெரியும். சொல்ல வெட்கமாகத்தான் இருக்கிறது. இருந்தாலும் ஒரு தடவை தான் பின்வாங்கினேன் என்ற ஆறுதல்.

இன்னம்பூரான்

பி,கு (தாமதத்திற்கு மன்னிக்கவும்)
 விக்னேஷ்:
1.அடக்கி வாசிப்பது தணிக்கைத்துறையின் பாரம்பரியம். அக்காலத்திற்கு பொருந்தியது;தற்காலத்திற்கு அல்ல.

2. அரசாங்கத்திற்கு இது சாதகமாயிற்று.

3. மக்களும்இதழியலும்தொலைக்காட்சிகளும் சமீபகாலம் வரை தணிக்கை அ றிக்கைகளை பொருட்படுத்தவில்லை. இப்போதும்அரைகுறை கவரேஜ்.இது எல்லாம் போதாது என்பது தான் நான் எழுதும் நூலின் அடித்தளம்.
4. கீதா சொல்லும் வரலாறு புரிகிறது. இங்கிலாந்திலேயே தற்காலம் அரசாங்கத்தை கடுமையாக குறை சொல்கிறோம்எங்கள் அமைப்புகளில்.

 தற்கால இந்திய அரசு இயந்திரத்தின் குறை: அசட்டைமக்கள் மீது அலக்ஷியம்அரசியல் வாதிகள் அரசு அதிகாரிகளை மடக்கிகைக்குள் போட்டுக்கொண்டது,  1947க்கு பிறகு தொடங்கிய அவலம் இது.  அரசு அதிகாரிகளும்ஊழியர்களும்கணிசமான அளவு வலையில் வீழ்ந்து விட்டார்கள்.
 திவாஜி: “…ஏன் நல்ல வழி முறைகள் காணாமபோச்சு?...”
இது ஆழமானசிக்கலானகேள்வி;புதிர். பழையன கழித்தலில் காட்டிய ஆர்வம் புதியன புகுத்தலில் இல்லாததால் வந்த விளைவு. பொறுப்பான விடை அளிக்க ஒரு நூலே எழுதலாம்.எதற்கும் வேறு இழை தொடங்கிவிட்டீர்கள். அதில் எல்லாருமே தொடருவோம்.,  விரைவில். கருத்துகள் வேறுபடலாம். நல்லது தானே. வெளிச்சம் கிடைக்கலாம்.

Geetha Sambasivam <
1/14/10

.//முதலில், 'காலேஜ் பையன் மாதிரி...என்று ஆரம்பிப்பார்கள்நான் கண்டு கொள்வதில்லை.//5. திவாஜி: “…ஏன் நல்ல வழி முறைகள் காணாமபோச்சு?...”'//

காணாம ஒண்ணும் போகலை. செயல்படுத்தும் நேர்மையான அதிகாரிகள் குறைவு, அவர்களையும் சீந்துவாரில்லை, செயல்படுத்தினாலும் கெட்டபெயர் தான் நம் (மத்திய) தேர்தல் கமிஷனர் மாதிரி எல்லாப்பக்கத்திலிருந்தும் இடி வாங்கிக்கணும்!
இன்னம்பூரான்
சித்திரத்துக்கு நன்றி: