Friday, August 9, 2013

விஷ்ணு நாரயண் பட்கண்டே,அன்றொரு நாள்: ஆகஸ்ட் 10




அன்றொரு நாள்: ஆகஸ்ட் 10

Innamburan Innamburan Wed, Aug 10, 2011 at 1:37 AM


அன்றொரு நாள்: ஆகஸ்ட் 10

கலை குலைந்து கலைந்து போவதற்கு காரணம் கலைஞர்களில் சிலர் அதை சொத்துரிமையாக பாத்தியதை கொண்டாடுவதே. முடிச்சுப்போட்டு வைத்துக்கொள்வதே. நான் தான் சாவேரி பாடுவேன் என்று அடம் பிடிக்கலாமோ என்று ஒரு இசைவிழாவுக்கு தலைமை தாங்க வந்திருந்த ஜஸ்டிஸ் எம்.அனந்தநாராயணன் ஐ.சி.எஸ் அவர்களிடம் கேட்டேன். அவர் இசை மேதை. உமக்கு பிடித்த ராகம் என்னவென்றார். கதனகுதூகலம் என்றேன். அதன் அருமையை அரைமணி நேரம் பாராட்டினார். எதற்கு சொல்ல வரேன் என்றால், எந்த துறையில் மனம் வைத்தாலும் அதில் உன்னத பதம் அடைவதில் சட்டமேதைகள் வெற்றி அடைவதை அடிக்கடி காண்கிறோம். 
ஒரு நூறு ஆண்டுகளுக்கு முன்னால் ஏகாதிபத்திய கலைஞர்கள் கையில், வானரத்தின் கையில் சிக்கிய பூமாலையை போல, ஹிந்துஸ்தானி சங்கீதம் கசங்கிக் கிடந்தது. ராஜமரியாதை வேறு கிடைத்ததா! அகந்தை அகற்றாத பாடகர்கள், சிஷ்யகோடிகளைக் கூட வளரவிடவில்லை. இசையே அசைந்து வீழ்ந்தது. அதை புனருத்தாரணம் செய்து உய்விக்க, விஷ்ணுவே அவதாரம் செய்த மாதிரி, 1860 வருடம் கோகுலாஷ்டமி அன்று ஜனித்தார், விஷ்ணு நாரயண் பட்கண்டே. அனவரதமும் அந்த இசைப்பணியில் தன்னை இணைத்துக்கொண்ட இந்த பிரபல வழக்கறிஞர் எதிர்கொண்ட அலைச்சலும், ஆதங்கங்களும் ,இடைஞ்சலும், ஈட்டிநுனி மோதல்களும், உரசலும், ஊரறிஞ்ச நெரிசலும், எத்து வேலைகளும், ஏமாற்றங்களும் கணக்கிலடங்கா. எனினும், அவருடைய அபூர்வமான இசை ஞானமும், புத்திசாலித்தனமும், உழைப்பும், ஆளுமையும், வசீகரமும் அவருக்கு உறுதுணையாயின. 
இவரது தொண்டு இணையற்றது. வரலாற்றுணர்வை கற்றுக்கொடுத்தார். இசையின் இலக்கணத்தையும், கவின் ரசிகத்தன்மையையும் இணைத்தருளினார். இசை கருவூலமொன்றை நிறுவினார். ஒளிக்கப்பட்டவையெல்லாம் வெளியில் கொணர்ந்தார். அவரது பணியின் விவரணை எந்த துறைக்கும் அறிவுரை எனலாம். முதலில் அவர் தன்னை பாடகனாக தயார் செய்து கொண்டார், குருகுலவாசம் செய்து, அன்னை மடியிலிருந்து தொடங்கி. அன்னை இனியகுரலும், தந்தை கூரிய செவியும் அருளினர். அடுத்த படி பிரபல வக்கீலாகி செல்வம் குவித்தார், இசைத்தொண்டுக்காக. அதன் பின்னர் இசை தேடும் யாத்திரை -காஷ்மீரிலிருந்து, ராமேஸ்வரம் வரை, ஸூரத் திலிருந்து பூரி வரை. இசை நூலகங்களே குறி. தானறிந்த இசையை பகிர்ந்துகொள்ள விரும்பாத பாடகர்களை, மாணிக்கவாசகர் நரியை பரியாக்கியது போல, இனிய நண்பர்களாக்கினார். அவர்களும் கூட்டாளிகள் ஆனார்கள். 
அடுத்த கட்டம், பிரசுரக்கட்டம். பண்டித்ஜி (அது தான் அவரை எல்லோரும் விளிக்கும் முறை.) ஒரு மகத்தான சேவை செய்தார். அவர் சேகரித்த கருவூலம் பெரியது. அவற்றிலிருந்து, ‘அபிநவராகமஞ்சரி’ ‘அபிநவதாளமஞ்சரி’, ‘லக்ஷியசங்கீதம்’, ‘ஹிந்துஸ்தானி சங்கீத் பத்ததி’, ‘கிரந்த சங்கீதம்’, ‘பாவிக சங்கீதம்’,  ‘ஸ்வரமாலிகா’, கீத்மாலிகா’, ‘க்ராமிக்’ வரிசைகளில் தொகுப்புக்கள், சங்கீதத்தின் வரலாறு, சங்கீதத்தின் தத்துவங்கள் போன்ற வேறெங்கும் காணக்கிடைக்காத பிரசுரங்கள் வந்த வண்ணம். அதுவும், விளம்பரம் நாடாத வகையில் - விஷ்ணு சர்மா, சதுர்பண்டிட்’ என்ற புனைப்பெயர்களில். எத்தனை ராகங்களை பற்றிய கிரந்தங்கள் -250 என்று ஒரு கணக்கு. அவரே சொல்கிறார், ‘இசையின் மீது காதல் கொண்ட என் சகோதர-சகோதரிகளுக்கு, இசையின் இன்றைய நிலைமையை எடுத்துச்சொல்லும் பணியிது’ என்று.
அடுத்தகட்டம் ‘வெள்ளியெழுந்தாற் போல்’. சிஷ்யகோடிகள் குவிந்தனர் - பரோடா, க்வாலியர், ராம்பூர,தரம்பூர், அக்பர்பூர் போன்றை இசைதிக்கு, திசைகளிலிருந்து. இவரும் சங்கீதயாத்ரை தொடங்கினார். இவருடைய பாற்கடலில் உதித்தவை தான்,
பரோடா, க்வாலியர், லக்னெள, பம்பாய், நாக்பூர் இசைக்கல்லூரிகள். அதன் பின்னர் இசைவிழாக்கள், பரோடாவிலும், லக்னெளவிலும், வாராணசியிலும், டில்லியிலும் கூட.
ஆகஸ்ட் 10,  பண்டித்ஜியின் ஜன்மதினம் ~கோகுலாஷ்டமி. செப்டம்பர் 19, 1936 அவர்  அமரரான தினம் ~ கணேச சதுர்த்தி. கணேச சதுர்த்தி. அன்று, இன்றளவும் இவரை பாராட்டி இசைவிழா எடுக்கப்படுகிறது. மூன்று விஷயங்கள் ~ பண்டித்ஜி தென்னிந்தியாவில் சஞ்சாரம் செய்து இசைப்பணி செய்தார். அவருடைய திட்டமிடும் திறனுக்கு ஒரு சான்று: அஹமதாபாத் கலெக்டர் க்ளெமெண்ட் ஹிந்துஸ்தானி இசைக்கு மேற்கத்திய சங்கேதங்கள் வகுக்கத் தொடங்கினார். பண்டித்ஜிக்கு அதில் சம்மதமில்லை. ஆனால், கலெக்டரின் அதிகாரபலம் கோலோச்சியது. விஷ்ணு திகம்பர் என்ற இசைமேதைக்கும் இவருக்கும் ஒரு விதத்தில் ஏழாம் பொருத்தம். எனினும் அவரை தன் வழி கொணர்ந்து, க்ளெமெண்டை வாபஸ் வாங்கச்செய்தார். மூன்றாவதாக,  9 ஆகஸ்ட் 2011ல் தமிழுலகில் எழுந்த ஒரு வினாவுக்கு அன்றே விடை அளித்தார்! 
“...இசை பொருட்டு எதை கூறினாலும், இயன்றவரை உன்னுடைய தாய்மொழியில் உரைக்கவும்...”
இன்னம்பூரான்
pastedGraphic.pdf


10 08 2011
உசாத்துணை

Geetha Sambasivam Thu, Aug 11, 2011 at 1:33 PM

Reply-To: mintamil@googlegroups.com
To: mintamil@googlegroups.com
தெரியாத செய்தி.  இந்த இசைமேதையின் பெயரை இன்றே அறிந்தேன். பகிர்வுக்கு நன்றி. ஒரு வாரமாய்த் தொடர்ந்த மின் தடை.  சில மடல்களே படிக்க, பார்க்க முடிகிறது. 
2011/8/10 Innamburan Innamburan <innamburan@gmail.com>

அன்றொரு நாள்: ஆகஸ்ட் 10

இன்னம்பூரான்
pastedGraphic.pdf


10 08 2011
உசாத்துணை



Innamburan Innamburan Thu, Aug 11, 2011 at 1:37 PM
To: mintamil@googlegroups.com

நன்றி, உங்கள் கருத்துக்காகக் காத்திருந்தேன். எனக்கும் நிறைவு தந்த இழை, இது.

 வணக்கம்.

இன்னம்பூரான்


Sunday, August 4, 2013

சென்னை குறிப்புகள் ~1



சென்னை குறிப்புகள் ~1
Inline image 1

நேற்றுப்போல் இருக்கிறது. கிட்டத்தட்ட ஒரு மாதம், கிட்டகிடுகிடுவென்று ஓடி விட்டது. ஜூலை ஆறு அன்று ஹீத்ரோ அடையும் போது சில வயோதிக பிரச்னைகள், நீரழிவு நோயினால். அதனால் தள்ளு வண்டி. தள்ளியது ஒரு குஜராத்திப்பெண். திறனுடன் இயங்கிய அந்த யுவதி டிப்ஸ் பெற்று கொள்ள மறுத்து விட்டாள். கொஞ்சம் வற்புறுத்தி கொடுக்க வேண்டியாகி விட்டது. இது வரை சென்னை அனுபவம், அந்த வசதிகள் பேச்சுடன் சரி. எழுதப்பட்டதை நீரில் எழுதியதாக வைத்துக்கொள்ளலாம். ஆனால், தேவை குறைந்து விட்டபோதிலும், வண்டி ஆஜர். வற்புறுத்தி ஏற வைத்தார்கள், நான் தேவையல்ல என்று செய்தி அனுப்பியிருந்த போதிலும். அந்த வேலையில் இருக்கும் இளைஞர்களின் சீருடை அழுக்கு; வள வள பேச்சு அதிகம். தன்னிச்சைப்படி என்னை பரிமாற்றம் செய்து கொண்டார்கள். வரும்போதே அவர் ஒரு பவுனுக்கு குறைந்து டிப்ஸ் கொடுக்கலாகாது என்று சபதமேயிட்டிருந்தார். ஆனால், டாக்ஸி கம்பேனி டாலரோ/பவுனோ வாங்க மறுத்து அண்ணா நகர் செல்ல ரூபாய் 600/- கேட்டார்கள். நல்ல வேளை, கிளம்பும் போது என் பையர் சில இந்திய ரூபாய் நோட்டுகள் கொடுத்திருந்ததால், பிழைத்தேன். டிரைவர் நாலாவது மாடி வரை ஜாமான்களை கொண்டு வந்து உதவியதால் கொடுத்த டிப்ஸை மகிழ்வுடன் பெற்றுக்கொண்டார். வழியில் கார்கள் பூம் பூம். இருசக்கராதிபதிகள் கன்னா பின்னா பரபரப்பு. நடை பயணிகள், காலை ஆறு ஆகியும் காணக்கிடைக்கவில்லை. எங்கெங்கும் குப்பை தரிசனம். மெட்ரோ போடுவதால் வழி நெடுக வழி இல்லை. ஹிந்து இதழ் கரடியாக கத்தினாலும், நடை பாதைகள் அண்ணா நகரிலேயே தென்படவில்லை. குண்டும் குழியும் பாலை திணையை நினைவுறுத்தியன.  இறங்கியதும் கிடைத்தது...
(தொடரும்)

இன்னம்பூரான்

http://innamburan.blogspot.co.uk


http://innamburan.blogspot.de/view/magazine

www.olitamizh.com

சித்திரத்துக்கு நன்றி: http://puthiyathalaimurai.tv/wp-content/uploads/2013/07/rain-sting.png

Monday, July 29, 2013

இன்ஸுலின்! அன்றொரு நாள்: ஜூலை 27:II




அன்றொரு நாள்: ஜூலை 27:II
Innamburan Innamburan Wed, Jul 27, 2011 at 8:55 PM

அன்றொரு நாள்: ஜூலை 27:II
[Image Credit: http://upload.wikimedia.org/wikipedia/commons/5/57/Human-insulin-hexamer-3D-ribbons.png
எடுத்த எடுப்பிலேயே, ஒத்துக்கொள்கிறேன். என்ன தான் கை வலித்தாலும், எழுதுவதை நிறுத்தமுடியவில்லை. படிக்க நேரம் கிடைக்கவில்லை; நாய்குட்டி விளையாடணும் என்று அடம் பிடிக்கிறான்; நடை பயிலுவது குறைந்து போகிறது, தன்னார்வப்பணியில் துண்டு விழுகிறது என்றெல்லாம் குறை பட்டுக்கொண்டிருந்தாலும், கைகள் இரண்டும் தட்டச்சு செய்யும் பலகைக்கு விரைகின்றன.
அது சரி. விஷயம் என்ன? ஒரு நன்றிக்கடன். கடந்த வருடம் அக்டோபர் மாதம் ஒரு நாள் சுகவீனம். அடி சறுக்கின களிறு போல் கவிழ்ந்து கிடந்தேன். போகிற போக்கில், சில நாட்களில் இரங்கற்பா பாடிடுவார்களோ என்ற ஐயமும் எழுந்தது. பிற்காலம் ஒரு இமிடேஷன் இரங்கற்பா பாடப்பட்டது வேறு விஷயம். திசை மாற்றாதே!திசை மாற்றாதே! என்று ஹெச்சரிக்கா கேட்கிறது. அது சரி. விஷயம் என்ன? தருமமிகு சென்னை பெரிய டாக்டருக்கு நேரமின்மையால், கொடுத்த காசுக்குக் கூட அவர் கவனிக்காததால், நிலைமை முற்றிப்போய், ஒரு மாதிரியான துறவறம் பூண்டு, பையனுடைய ரக்ஷணைக்கு வரும்படியாச்சு, சென்னையோ சென்னைக்கு டாட்டா சொல்லி விட்டு! 
இங்கோ டாக்டர்களும், ஆசுபத்திரிகளும் கையாளும் முதல் சிகிச்சை: க்யூ! இருந்தும், நிஜமாகவே ஒரு பெரிய டாக்டர் ( ஃப்ரெண்ட் என்பது வேறு: சிகிச்சைக்கும் அதற்கும் சம்பந்தமில்லை.) நான் எடுத்துக்கொள்ளும் இன்ஸுலின் ஊசி திட்டத்தை புரட்சிகரமாக மாற்றினார். சில நாட்கள் முன்னால் ஒரு ரிவியூ. மிலிட்டரிக்காரன் மெடல் குத்திக்கிறமாதிரி, எனக்கு சுகவீன மெடல்கள் ஐந்து; எல்லாமே பரம வீர் சக்ரா தரம்! அந்த பிரச்னைகள் யாவற்றிலும், நல்ல முன்னேற்றம், சிகிச்சையில். மற்ற மருந்துகளை குறைந்து விட்டார்கள். தேங்க் யூ,, ஸர் ஃப்ரெட்ரிக் பாண்டிங்க். 
இன்றைய தினம் ஜூலை 27, 1921 அன்று நடந்த அதிசயம் (இன்ஸுலின் கண்டு பிடிப்பு) அவருடைய கைங்கர்யம். என் மாதிரி கோடிக்கணக்கான மக்களை காப்பாற்றிய புண்யம் உமது. மஹாவிஷ்ணு உம்மை வைகுண்டத்தில் உச்சஸ்தானத்தில் வைத்திருப்பார், இன்ஸுலீன் சிம்மாசனே!
முக்கியமான பாயிண்ட் இது தான். இந்த டயபெட்டீஸ், புற்றுநோய், சுற்றுபுற சூழல், விண்மீன்கள், ஜலதரங்கம்: எதை எடுத்தாலும், பொறுப்புடன் நம்பகத்தனமான செய்திகளை தரலாம். ஆரோக்கியமாக அளவளாலாம். பலர் அளிக்கும் அறிவுரைகள் உபயோகமாக இருக்கலாம். சில பிரச்னைகள்: தினம் எழுத இயலாது; அரட்டைக்கும், தர்க்கத்துக்கும், திசை திருப்பவும், தனக்குத்தானே விதித்துக்கொள்ளும் தடை வேண்டும். பரீக்ஷார்த்தமாக, உலகத்தையே ஆட்டிப்படைக்கும் நீரழிவு நோயை பற்றி, உண்மைகளும், சீரான சிகிச்சையும் பற்றி அறியலாம். முதற்கண்ணாக, நான் கனவு காணும் இந்த இழைக்கு என்ன பெயர் வைக்கலாம்? மற்ற கருத்துக்கள் யாவை? அவசரமில்லை. நிதானமாக, ஆக்கபூர்வமாக, விருப்பமிருந்தால்........
இப்போதைக்கு ஐயா படம், நன்றியுடன்,
இன்னம்பூரான்
27 07 2011

Geetha Sambasivam Wed, Jul 27, 2011 at 9:03 PM


சீக்கிரம் எழுதுங்க, காத்திருக்கோம், இவ்வளவு பிரச்னைகளுக்கும் உடல் நலக்கேட்டுக்கும் இடையில் நீங்க எழுதுவது எனக்கு இன்னும் அதிகமான ஊக்கத்தைக் கொடுக்கிறது.
2011/7/27 Innamburan Innamburan <innamburan@gmail.com>

அன்றொரு நாள்: ஜூலை 27:II


-

கி.காளைராசன் Fri, Jul 29, 2011 at 5:42 PM

Reply-To: mintamil@googlegroups.com
To: mintamil@googlegroups.com
"நான் கனவு காணும் இந்த இழைக்கு என்ன பெயர் வைக்கலாம்?"நிதர்சனம்?
"இ"தர்சனம்,

அன்பன்

கி.கா​ளைராசன்

Saturday, July 27, 2013

கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை:அன்றொரு நாள்: ஜூலை 27


அன்றொரு நாள்ஜூலை 27

     I. மஹாகவி பாரதியார் மடையின் கதவு. கரை புரண்டு கட்டுக்கடங்காமல் பாய்ந்தோடும் பெரு வெள்ளம், மடை திறந்த வினாடியே. பாவேந்தர் கோட்டைக் கதவு. படை வகுத்து விரைந்தோடி வரும் சொல்லின் அணிகள். நாமக்கல் கவிஞர் நகர் வாயில். நகரா ‘கத்தியின்றி, ரத்தமின்றி...’ என்று ஒலிக்கிறது.  கவிமணி சாளரமாயிறு. ஆசிய ஜோதி ஒளி விசுகிறது. சாக்யமுனியின் துறவு பற்றிய ஆங்கில ஆன்மீக கவிதை (Sir Edwin Arnold”s The Light of Asia:1879) ஒன்றை தமிழ்க்கவிதையாக்கமாக ஒரு சாளரம். ஒப்பில்லா உமர்காயாம் கவிதைகள் கொஞ்சும் தமிழிலொரு சாளரம். ‘மருமக்கள்வழி மான்மியம்’என்ற வரலாற்று சாளரமொண்று. ‘கதர் பிறந்த கதை’ ஒரு காந்தி ஜன்னல். ‘மலரும் மலையும்’ முன்னதாகவே திறக்கப்பட்ட (1938) திட்டி வாயில் ஜன்னல். பக்தியென்றொரு சாளரம், இலக்கியமென்றொரு ஜன்னலும், வரலாற்று கவிதைகள், குழந்தைப் பாடல்கள், இயற்கைப் பாட்டுக்கள், வாழ்வியல் கவிதைகள், சமூகப் பாட்டுக்கள், தேசியப் பாட்டுக்கள், வாழ்த்துப் பாக்கள், கையறு நிலைக் கவிதைகள், பல்சுவைப் பாக்கள். 1922லேயெ தொடங்கி விட்ட ஆய்வுகளின் முதல் ஜன்னல்: 'மனோன்மணியம் மறுபிறப்பு' என்ற திறனாய்வுக் கட்டுரை. ஜன்னல்கள் எத்தனையடி பாப்பா! 
     சிரிக்க வைக்கவும் மறக்கவில்லை, கவிமணி அவர்கள், ஜன்னலின் இரண்டு கம்பிகளை லேசாக வளைத்து, நகர்த்தி விட்டு, அவரும் சிரிக்கிறார். 
‘... ஒரு நீதிமன்றம்... அதில் ஒரு குற்றவாளி... ஒரு வழக்கறிஞர்... நடுவில் நீதிபதி. அவர் குற்றவாளியை நோக்கிக் கேட்பார்... 'ஓடுகிற குதிரையின் உச்சியில் இருந்த கொம்பு ஒன்றா... இரண்டா?’ குற்றவாளி, 'குதிரைக்கு ஏது கொம்பு?’ என்பார். நீதிபதியோ, 'நான் கேட்டது குதிரைக்குக் கொம்பு ஒன்றா, இரண்டா?’ என்றே கேட்பார்...’
     ஆம். இன்று கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை அவர்களின் ஜென்மதினம்: ஜூலை 27, 1876. விருதுகள் பல பெற்று எளிய வாழ்க்கை வாழ்ந்து காட்டிய கவிமணி அவர்களை செப்டம்பர் 26, 1959 அன்று இழந்தோம்.
வெண்ணையை கையில் வைத்துக்கொண்டு, யாராவது நெய்க்கு அலைவார்களா? உசாத்துணை இருப்பது  தமிழ் மரபு அறக்கட்டளையிலும், மின் தமிழிலும். எனவே, தன்னடக்கமாக, இத்துடன் நிறுத்தி, உசாத்துணைகளை சுட்டுகிறேன்.
II. பசங்களை ஆட, பாட, ஆடிப்பாட, பாடி ஆட, சொல்லி, அதை கண்டு, களித்து, வீட்டுக்கு வந்த மஹாஜனங்கள், ஆனந்த சாகரத்தில் முத்துக்குளிக்கவேண்டும் (அலுத்து போய் ஓட முயன்றால், நடக்காது ஓய்!) என்பது பெற்றோர்களின் அநியாய ஆசை. என்னுடைய அத்தான் ஜகதலபிரதாபனுக்கு, மதுரை புஷ்பவனம் போல் இனிய குரல் என்ற மாயையில், கறிகாய்க்காரி பொன்னம்மா வந்தாக்கூட, அவனை பாடச்சொல்லுவாள், அத்தை. ‘அம்பா! நீ இரங்கலாகாதா...’ என்று அவன் ஆலாபனை செய்ய ஆரம்பித்தால், பொன்னம்மா கூட ஒரு கட்டு கொத்தமல்லி கொசுறு கொடுத்துட்டு ஓடப்பார்ப்பாள்! அப்றம், அவரு ஒரு ஸ்லோகவாதி. ரகுவீர கத்யம், ‘கடபுட’ என்று பதினேழாம் வாய்ப்பாடு மாதிரி, தப்புத்தப்பாக, ஒப்பிக்கிறான். நிஜமாவே ஒரு லாங்கூலர் வந்து நிற்கிறார்!எதித்தசாரி கோடியாத்து பட்டு ஸ்வாமிகளே, ஹனுமத் விஜயம் என்று கேலி செய்கிறார்.நம்பளோடதெல்லாம் நாட்டுப்பாடல். தனித்தமிழ்! ‘பனைமரமே! பனைமரமே! ஏன் வளர்ந்தாய்? பனைமரமே!’ என்று ஆரம்பிக்கிறேன், ஒரு அருகம்புல் வளர்கிறது! என்ன தான் ‘மாயம்ம...’ என்று சுதா தரங்கிணியில் பாடினாலும், இந்த மழலையின்ப சுகம் வருமோ? தற்செயலாக, நண்பர் ஒருவரின் தனிமடலுக்கு, நேற்று யான் அளித்த பதில் இது:
[1. மாம்பழம் நல்ல மாம்பழம் அப்பா
     வாங்கித் தந்த மாம்பழம்
மாம்பழம் இது காணக் காண
    வாயி னிக்கிற மாம்பழம்

மாம்பழ மிவை கிடைத்த படியால்
   மகிழ்வி னோடு வருகிறேன்
தீம்பழ மிதைச் சீவி வெட்டிச்
   சிரித்துச் சிரித்துத் தின்னுவோம்

தின்னுவோம் வா தின்னுவோம்
   சீவிச் சீவித் தின்னுவோம்
பொன்னு ருண்டை போல
   புதுமை யான மாம்பழம்.

-  சோமசுந்தரப்புலவர்  (1955)சிறுவர் செந்தமிழ்: ‘கடவுள்‘
--------------------
என் சம்பத்தி பேத்திக்கு சொல்லிக்கொடுத்ததில் ஒரு பகுதி:

இந்த மாம்பழம் இனிய ஜாதியாம்;
எந்தன் தந்தையார் எனக்கு தந்தது;
மேலிருக்கும் தோல் மிக கசக்குமே
மெல்லிய கத்தியால் சீவ வேண்டுமே.

உள்ளே பார் இதோ!
சக்கரை திசை உடனே வாயிலே
போட்டுக்கொள்ளலாம்.
-----------

நன்றி, வணக்கம்.

இன்னம்பூரான்]

குழந்தை இலக்கியத்தின் முன்னோடி எனலாம், ‘தங்கத்தாத்தா’ என்று செல்லமாக அழைக்கப்பட்ட ஈழத்து, நவாலி கிராமத்தில், மே மாதம், 25, 1878  அன்று ஜனித்த சோமசுந்தரப்புலவர் அவர்களை. அவர்களின் நினைவு தினம் இன்று: ஜூலை 27, 1953. அவரின் நினைவார்த்தமாக, சோமசுந்தரப்புலவர்  (1955)சிறுவர் செந்தமிழ் என்ற நூலை இணைக்கிறேன் (கூகிள் மறுத்து விட்டார்.). வயது வந்தவர்களும் படித்து மகிழலாம். பவள சங்கரிக்கு திருப்தி தானே!
இன்னம்பூரான்
27 07 2011

Geetha Sambasivam 
7/27/11
to mintamil
தேசிக விநாயகம் பிள்ளை பற்றிய செய்திக்கும், சோமசுந்தரப்புலவர் குறித்த செய்திக்கும் நன்றி.  சோமசுந்தரப் புலவர் குறித்து அறிந்திலேன்.  நன்றி.
தேசிக விநாயகம் பிள்ளை என்றாலே அவர் எழுதிய சைகிள் குறித்த பாடலே நினைவில் வரும். ஆரம்பப் பள்ளியில் படித்தது.
2011/7/27 Innamburan Innamburan <innamburan@gmail.com>
anantha narayanan nagarajan 
7/28/11
to me
வந்தனம் சொல்லி,
'இந்த மாம்பழம் இனிக்கும் மாம்பழம்
எந்தன் தந்தையார் எனக்குத் தந்தது
மேலிருக்கும் தோல் கசக்குமாதலால்
மெல்லக் கத்தியால் சீவவேண்டுமே'
என்று படித்ததாக நினைவு. கவிஞர் அழ.வள்ளியப்பா என்றும் நினைவு. உறுதிப்படுத்தவேண்டும்
அன்புடன்,
அரவக்கோன்
****
சித்திரத்துக்கு நன்றி: http://mmimages.maalaimalar.com/Articles/2013/Jan/64e582fa-7fa1-4e45-b00a-762a1a9b98cb_S_secvpf.gif

காமராஜர்:அன்றொரு நாள்: ஜூலை 15, 1903




அன்றொரு நாள்: ஜூலை 15
சித்திரத்துக்கு நன்றி: 
https://fbcdn-sphotos-b-a.akamaihd.net/hphotos-ak-ash3/s320x320/533231_375878392480562_1240511761_n.jpg
இன்னம்பூரான்
27 07 2013

Innamburan Innamburan Fri, Jul 15, 2011 at 1:35 AM


அன்றொரு நாள்: ஜூலை 15
தனியே எனக்கோர் இடம் வேண்டும் – தலை
சாயும் வரை நான் அழ வேண்டும்.
வானகம் போய்வர வழி வேண்டும் – எங்கள்
மன்னனை நான் பார்த்து வரவேண்டும்
தாயே எனக்கொரு வரம் வேண்டும்- என்
தலைவனை மீண்டும் தர வேண்டும்.
தமிழே எனக்கொரு மொழி வேண்டும் – அவன்
தன்மையைச் சொல்லிநான் தொழவேண்டும்.
இருப்பேன் பலநாள் என்றானே – எம்மை
ஏய்த்தது போல் இன்று சென்றானே – அவன்
சிரிக்கும் அழகைப் பார்ப்பதற்கே – அந்தத்
தேவன் அருகினில் அழைத்தானோ?
பறக்கும் பறவைக் கூட்டங்களே – எங்கள்
பாரத வீரனைக் காண்பீரோ – இங்கு
துடிக்குங் கோடி உள்ளங்களை – அந்தத்
தூயவனிடம் கொண்டு சேர்ப்பீரோ!
 - கண்ணதாசன்




     இன்று பெரும்தலைவர் காமராஜ் அவர்களின் அவதார தினம்: 1903: அவதாரம் தான். நண்பர்களில் அநேகருக்கு அவரை பற்றி என்னை விட அதிகம் தெரியும் என்பதால், எனக்கு தெரிந்த சில தகவல்களை பகிர்ந்து கொள்கிறேன். அத்துடன் சரி. ஒரு வருத்தம். தமிழ் நாட்டுத் தலைவர்களின் வாழ்க்கை வரலாறுகளில் பெரும்பான்மையானவை புகழுரை தொகுப்புக்களாகவும், ‘அரைத்த மா’ மரபில் ஊறியவையாக இருப்பதால், ஆக்கப்பூர்வமான மூலங்கள் கிடைப்பதில்லை. மற்றொரு பிரச்னை இணையதளம். பெரும்தலைவரை பற்றி பொறுப்புடனும், ஆய்வின் அடிப்படையில் எழுந்ததுமான கட்டுரைகள் கணிசமாகத் தென்படவில்லை. அரட்டைக்களங்களில் பல, அவரை பற்றி அரையும் குறையுமாக எழுதியுள்ளன. ஏன்? பாரதரத்ன குமாரசாமி காமராஜ் (15 07 1903 - அவர்களை பற்றி ஆய்வு தொடங்கும் போது தான், அநேக மடலாடற்குழுக்கள் அரட்டையுடன் நின்று விடுவதைக் கண்டு வருந்தினேன். இது நிற்க.
பாரதரத்ன குமாரசாமி காமராஜ் அவர்கள் விருதுநகரில் (விருதுப்பட்டி என்ற பெயர் பிறகு வந்தது. பழைய நாடோடி பாடல்களில் விருதுநகர் என்று தான் பெயர்: நமது தளத்தில் மின்னாக்கம் செய்யப்பட்ட நூல்.) ஒரு சில்லரை வணிகக்குடும்பத்தில் பிறந்தார். சிறு வயதில் தந்தையை இழந்தார். அம்மை சிவகாமி நகைகளை விற்று தன் ‘ராசா’வை படிக்க வைத்தார். அவருக்கு படிப்பு ஏறவில்லை, நாம் செய்த பாக்யம். சிறு வயதிலேயே, டாக்டர்.வரதராஜுலு நாயுடு, ஜார்ஜ் ஜோஸஃப் ( தமிழ் நாடு அவரை முற்றிலும் மறந்து விட்டது.) ஆகியோரால் ஈர்க்கப்பட்டு 16 வயதில் காங்கிரஸ்ஸில் இணைந்து தொண்டு பல செய்தார். திருமணம் செய்து கொள்ள திட்டவட்டமாக மறுத்து விட்டார். ராஜாஜி தலைமையில் வேதாரண்யம் உப்பு சத்யாக்கிரஹத்தில் கலந்து கொண்டார். நாளாவட்டத்தில் தேசியத்தலைவர் எஸ். சத்யமூர்த்தி அவர்களின் அத்யந்த சீடரானர், இந்த படிக்காத மேதை. சிவாஜி மஹராஜை போல, ஹைதர் அலி போல, படிக்காத மேதைகள் செவ்வனே அரசு நிர்வாகம் செய்ய முடியும் என்று செய்து காண்பித்தார். அவருடைய சாதனைகளை சொல்லி மாளாது. அது ஒரு பொன்மாரி காலம்.
எப்படி என்று கேளுங்கள்:
{1.இரு ஐ.சீ. எஸ். அதிகாரிகள் என்னிடம் சொன்னது: 
ஐயா கிராம மின்சார இணைப்பு கொடுப்பதில் ஆர்வம் மிகுந்தவர். ஒரு ஜில்லா கலக்டரிடமிருந்து சிபாரிசு வர தாமதம், நான்கு கிராமங்களை தேர்வு செய்யவேண்டும். முதல்வர் ஐயாவே அவற்றின் பட்டியலை முன்மொழிந்தார். விந்தை யாதெனில், தேவை அடிப்படை, அவசரம், மக்களின் நிலைமை, காங்கிரஸ் கட்சியின் நோக்கு என்று எப்படி பார்த்தாலும், இதை விட சிறந்த பட்டியல் தர யாராலும் இயலாது. என்னுடைய தாழ்மையான ஆடிட் கணிப்பு இதை உறுதி செய்தது.
  1. ராஜாஜி ஹால்: மூதறிஞர் ராஜாஜியின் உடல் மரியாதைக்கு வைக்கப்பட்டிருந்தது. கூட்டத்துடன் கூட்டமாக ஐயா. திரு. மு.க. முதல்வராக இருந்தார். ஐயா தனக்கு என்று ஒன்றும் கேட்கமாட்டார். பிரபலமாக இருந்த போலீஸ் கமிஷனர் ஷெனாய் அவர்கள், தான் ஒரு நாற்காலி கொண்டு வருவதாக சொன்னார். பதில்: அவர் பெரியவர். நான் உட்காரலாமா? நான் அருகில். அந்தக்காலம் பாதுகாப்பு வளையங்கள் கிடையா. ஷெனாய்: ஸெளந்தரராஜன்! நீ ஐயாவை விட்டு நகராதே.
  2. நான் அக்காலம் திருமலைப்பிள்ளை ரோடில் வசித்து வந்தேன். என் சிறிய மகன் இவர் வீட்டு போலீஸ்காரர் துப்பாக்கியை கண்டு அவரிடம் சொந்தம் கொண்டாடுவான். சில சமயம், ஐயா அவர்கள் ஜன்னலோரம் நிற்பார்கள். இரண்டு வார்த்தை பேசுவார்கள். ஒரே ஒரு நாள் உள்ளே அழைத்து, எனக்கு பணி ஒன்று இட்டார். அவருக்கு திருப்தி அளிக்கும் வகையில் செய்து கொடுத்தது என் பாக்கியம்.}
     அடிக்கடி சிறை வாசம் செய்த தலைவர், சிறைலிருக்கும் போதே நகராட்சி மன்றத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதையும் ராஜிநாமா செய்து கட்சிப்பணியில் ஈடுபட்டார்.1946 -ஆம் ஆண்டு மே மாதம் 16ம் நாள் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் தேர்தலில் வெற்றி பெற்றார், பிறகு நான்கு முறைகள்.1954ஆம் ஆண்டு ஏப்ரல் 13-ம் நாள் சென்னை மாநிலத்தின் முதலமைச்சர் ஆனார். தான் கொண்டுவந்த காமராஜர் திட்டத்தை  (கே பிளான்) செயல் படுத்த 1963ஆம் ஆண்டு அக்டோபர் 2ஆம் தேதி முதலமைச்சர் பதவியிலிருந்து விலகினார். பிற்காலம், காங்கிரஸ் கட்சியின் ‘கிங் மேக்கர்’ என்று கருதப்பட்டார். 1975 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 2ஆம் தேதி காந்தி பிறந்த நன்னாளில் காமராஜர் இந்த உலகை விட்டுப் பிரிந்தார்.
pastedGraphic.pdf
இன்னம்பூரான்
15 07 2011
உசாத்துணை:
P.Kandasamy: The Political Career of K.Kamaraj
(சில நூல்கள் உள்ளன. இது முழுதும் மின்னாக்கம் செய்யப்பட்டு இருப்பதால், விரும்பியவர்கள் படிக்கலாம்).


Geetha Sambasivam Fri, Jul 15, 2011 at 9:43 AM

ஏற்கெனவே படிச்ச நினைப்பு. என்றாலும் காமராஜர் மாதிரித் தலைவர்கள் இன்றைய நாட்களில் இருந்தால்????? பெருமூச்சுத்தான் வருது. :(((((( அதெல்லாம் ஒரு காலம். அறுபத்தி ஏழு தேர்தலில் அவரிடம் ஆட்டோகிராப் வாங்கச் சென்ற போது, போட்டுக் கொடுக்க மாட்டேன் என நிர்தாக்ஷண்யமாகச் சொன்னார்.  படிக்கிற பிள்ளைக்கு இதெல்லாம் எதுக்கு? போம்மா, போய்ப் படிச்சு உத்தியோகம் கிடைச்சால் உடனே ஒத்துக்கோ. அப்புறமா உனக்கெல்லாம் வேலை கிடைக்க்கிறதே கஷ்டமாயிடும்னு சொன்னார். அதுக்கப்புறமா அவரைப் பார்க்கவே இல்லை. :(((((((

அந்தச் சமயம் டிடிகே தான் சிரித்த முகத்துடன் அனைவரையும் அழைத்து, ஆட்டோகிராப் போட்டுக் கொடுத்தவர். ப..நெடுமாறன் அப்போ இளைஞர் காங்கிரஸில் இருந்தார். காமராஜரின் அணுக்கத் தொண்டர். காலம் தான் எப்படி மாற்றிவிட்டது?
2011/7/15 Innamburan Innamburan <innamburan@gmail.com>

Innamburan Innamburan Fri, Jul 15, 2011 at 10:48 AM

உங்களுடைய அனுபவம் சுவையாக இருக்கிறது. அனுபவத்தை பகிர்ந்து கொள்வதும், வரலாறு எழுதுவது தான். இது மின் தமிழில் ஏற்கனவே போட்டது தான். அன்றே, ஒரு ஆரவத்துடன் எழுதியிருந்தாலும், மறதி! இங்கே போட மறந்துட்டேன்.

முகம்மது நபிகள் நாயகம்:அன்றொரு நாள்: ஜூலை 16




அன்றொரு நாள்: ஜூலை 16
2 messages

அன்றொரு நாள்: ஜூலை 16
     ஜூலை 16, 622ம் வருடம் அன்று முகம்மது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மக்காவிலிருந்து மதினாவுக்கு பயணம் தொடங்கினார். தூய இஸ்லாமிய கோட்பாடுகளை உலகுக்கு எடுத்துரைக்கும் நாள் வந்து விட்டது எனலாம். இந்த தினமே இஸ்லாமிய நாட்காட்டியின் தொடக்கம். ஹிஜ்ரா என்று அழைக்கப்படும் இஸ்லாமிய ஆண்டில் சந்திரனின் தொடர்புடைய மாதங்கள் 12. இது சம்பந்தமாக கிடைத்த ஒரு இஸ்லாமிய விளக்கத்தை இணைத்திருக்கிறேன். 
இன்னம்பூரான்
16 07 2011
உசாத்துணை:


Geetha Sambasivam Mon, Jul 18, 2011 at 5:57 AM
முற்றிலும் புதிய தகவலுக்கு நன்றி ஐயா.


2011/7/16 Innamburan Innamburan <innamburan@gmail.com>

Thursday, July 25, 2013

9/11:அன்றொரு நாள்: ஸெப்டம்பர் 11:2




அன்றொரு நாள்: ஸெப்டம்பர் 11:2
சித்திரத்துக்கு நன்றி: http://coolinterestingstuff.com/wp-content/uploads/2012/09/911-ground-zero.jpg


Innamburan Innamburan Sun, Sep 11, 2011 at 6:52 AM



அன்றொரு நாள்: ஸெப்டம்பர் 11:2

இந்த 9/11 பயங்கரத்தை தொலைக்காட்சியில் ‘ லைவ்’ ஆக பார்க்க நேரிட்டது, பத்து வருடங்கள் முன்னால். (2001 இன்றைய தேதி). அதை பற்றி பேச்சு எழுந்தால், முதற்கண்ணாக, ந்யூ யார்க் நகரின் தீயணைப்புப் படைக்கு, சிரம் தாழ்த்தி, வீர வணக்கம் செய்வது என் வழக்கம். கடமையாற்றுவதின் உயர்நிலையில் பணியாற்றி, அவர்களில் பலர் மாண்டனர். ‘ லொட்டு லொசுக்கு மண்ணாங்கட்டி’ என ‘இது உள்குத்து’, ‘இது வேண்டுமென்று செய்த கட்டிட நாசம்’ ‘பெண்டகனை தாக்கியது ஒரு ஏவு கணை’ போன்ற வதந்திகள், இன்னும் அதனுடைய பின்னணி மர்மங்கள் ஒளிக்கப்பட்டு இருக்கின்றன என்ற கசப்பு உண்மையை மறைக்கின்றன. சில மர்மங்கள் ~சுருக்கமாக:
வேவு துறைகளை பற்றிய அமெரிக்க நாடாளும் மன்றங்களின் 800 பக்க கூட்டறிக்கை ஜூலை 2004 ல் வெளியிடப்பட்டது, 28 பக்கங்களை தவிர்த்து. புஷ் மூடி வைத்த அந்த மர்மத்தை ஒபாமாவும் அடை காக்கிறார்! ஹேஷ்யங்கள் பல. அமெரிக்க ஆய்வாளர்கள் எதையும் விட்டு வைப்பதில்லை. உசாத்துணையில் சுட்டிருக்கும் நூல், ந்யூஸ்வீக் இதழின் அலசல், ஆகியவை இந்த வகை. அவற்றிலிருந்து, சில துளிகளின் தொகுப்பு:
  1. அக்காலத்து ராணுவ அமைச்சர் டொனால்ட் ரம்ஸ்ஃபீல்ட்: ‘இத்தகைய பின்பலம் இல்லாமல் அல்-கொய்தா யாதும் செய்திருக்க முடியாது. இவர்களின் உதவி உண்டு. எனக்கு பல விஷயங்கள் தெரியும். அதனால் தான் அழுத்தம் திருத்தமாக, சொல்கிறேன்.’ விவரம் கேட்டபோது, யோசித்தார். சிக்கல் என்றார். வாயை மூடிக்கொண்டார்.
  2. பாப் கிரஹாம்: அந்த கூட்டறிக்கை கமிட்டி அக்ராசனர்களில் ஒருவர்:‘ஸெளதி அரேபிய அரசும், சில அன்னாட்டு பிரமுகர்களும் இந்த பயங்கரவாதிகளுக்கு (அவர்களில் 15 பேர் அன்னாட்டு மக்கள்) பல உதவிகள் செய்தனர். அவையில்லாமல், இது சாத்தியமே அல்ல.”
  3. அமெரிக்கா-வாழ் அரேபியர் (ஒமர் அல் பயொமி) இரு பயங்கரவாதிகள் அமெரிக்கா வர, காசு கொடுத்தார். மூன்று அரேபியர் மீது சந்தேஹம். ஆனால், ஆக்ஷன் ஒன்றுமில்லை.
  4. இதே மாதிரி அன்வர் அல் லகி என்ற அமெரிக்க இஸ்லாமிய போதகரை தப்பிக்க விட்டார்கள். அவர் இப்போது ஏமன் நாட்டில். அமெரிக்கா அவரை கொலை செய்ய விரும்புகிறது.
  5. பயணிகளால் மீட்கப்பட்ட விமானம் பென்ஸில்வேனியாவில் வீழ்ந்தது. அதை சுட்டு வீழ்த்த ஆணையளித்ததாக அதிபர் புஷ்ஷும், துணை அதிபர் செய்னீயும் சொல்கிறார்கள். ஒருவர் விமானத்தில்; ஒருவர் பாசறையில். இந்த ஆணை பதிவே ஆகவில்லை!
  6. புஷ்ஷும், செய்னியும் தங்கள் வாக்குமூலம் பதிவு செய்யக்கூடாது என்றனர். ஏன்? ஏன்?
  7. ஈரான் இந்த சதியில் ஈடுபட்டதற்கான ஆதாரங்கள் கிட்டவில்லை; ஆனால். மேற்படி கமிஷன், விமான பயணங்களுக்கு அவர்கள் செய்த உதவிகள் பற்றிய சாக்ஷியங்கள், வலுவான சந்தேஹங்களை கிளப்பின. சர்க்கார் காஷ்ட மெளனம்.
  8. ஈராக் இந்த சதியில் ஈடுபட்டதற்கான ஆதாரங்கள் கிட்டவில்லை.
  9. ஸெளதி தூதுவர் இளவரசர் பண்டார் பின் சுல்தான், இந்த கமிஷன் தன் நாட்டின் வாய்மையையும், ஈடுபாடாததையும் நிரூபித்து விட்டது என்கிறார், ஒரு துணுக்கு ஆதாரமில்லாமல். 
  10.  எத்தனை டென்ஷன் இந்த ரிப்போர்ட் தயாரிப்பதில்! ராஜேஷ் டேயும் மைக்கேல் ஜாகோப்ஸனும் நோண்டி, நோண்டி எடுப்பதையெல்லாம், ஸ்னெல் குழி பறித்து மூடிக்கொண்டிருந்தார்!
  11.  அந்த கமிஷன் எண்ணெய் உறவு மட்டும் போதாது; வெறி பிடித்த பயங்கரவாதத்தை ஒழிப்பதிலும் நாட்டம் வேண்டும் என்றது. கேட்பார் இல்லையே.
  12.  9/11 க்கு ஏழு வருடங்கள் முன்னால், முகம்மது அல் கிலெவி என்ற ஸெளதி உயர் அதிகாரி. ஆயிரக்கணக்கான ஆவணங்களுடன் (கொடுங்கோல்; மனித உரிமை பறிப்பு; ஊழல்: பயங்கரவாதம்) அமெரிக்காவில் சரணடைந்தார். செளதி அரசரிடம் மக்களுக்கு அரசில் பங்கு நாடி விண்ணப்பித்தார். அமெரிக்கா அவரை கண்டு கொள்ளவில்லை. ஸெளதி அரசோ உயிருக்கு ஆபத்து என்றது.
உசாத்துணையில் சுட்டியிருக்கும் நூல் இன்னும் வெளிவரவில்லை. சில பகுதிகள் எட்டிப்பார்க்கின்றன. இன்னம் பல மர்மங்களை அலசினால், கட்டுரை நீண்டுவிடும். வாசகர்களுக்கு சலித்து விடும். கேட்பவர்களுக்கு, இணைப்பு தருகிறேன்.
இதெல்லாம் சரி. 9/11 வரலாறு ‘திக்’ ‘திக்’ என்று மாற்றி அமைக்கப்படலாம்.
நம் நாட்டிலும், எந்த புற்றில் எந்தப் பாம்போ?
இன்னம்பூரான்
11 09 20113mc3p33la5T05Z25X6b71584fc215a1571c9e.jpg
pastedGraphic.pdf
உசாத்துணை:
Summers.A & Swan.R:The Eleventh Day: The Full Story of 9/11 and Osama bin Laden 

Nagarajan Vadivel Sun, Sep 11, 2011 at 7:29 AM



ட்வின் டவரிலும் பெண்டகனிலும் பெற்ற வெற்றி வெள்ளை மாளிகையில் தோற்றுப்போனது
விமானம் வெள்ளை மாளி்கையைத் தாக்கப்போகிறது என்பதை உணர்ந்து உயிரைத் துச்சமாக மதித்து அமரிக்காவின் இறையாண்மைக் காக்க தங்களைக் காவுகொடுத்த அமெரிக்கக் குடிமக்கள் சிந்திய ரத்தம்
அதிபர் ஃப்ளோரிடாப் பள்ளியில் எலி வங்குக்குள்.  இங்கே நாட்டின் குடிமக்கள் போரிட்டு வெள்ளை மாளிகையைக் காப்பாற்றுகின்றனர்
தொலைக்காட்சியின் வெளிச்சத்தில் இரட்டைக்கோபுரம் கதை நாயகனாயிற்று.  உண்மைத் தியாகிகள் இன்றுவரை வெளிச்சத்துக்கு வரவில்லை
நாகராசன்
2011/9/11 Innamburan Innamburan <innamburan@gmail.com>

coral shree Sun, Sep 11, 2011 at 8:58 AM
To: Innamburan Innamburan

மனம் கனக்கச் செய்யும் சோக நினைவலைகள்..........

//, முதற்கண்ணாக, ந்யூ யார்க் நகரின் தீயணைப்புப் படைக்கு, சிரம் தாழ்த்தி, வீர வணக்கம் செய்வது என் வழக்கம். கடமையாற்றுவதின் உயர்நிலையில் பணியாற்றி, அவர்களில் பலர் மாண்டனர். ‘ // மனிதாபிமானமுள்ள ஒவ்வொருவரும் எண்ணி , எண்ணி வீர வணக்கம் செலுத்த வேண்டிய செயல்........

//அந்த கமிஷன் எண்ணெய் உறவு மட்டும் போதாது; வெறி பிடித்த பயங்கரவாதத்தை ஒழிப்பதிலும் நாட்டம் வேண்டும் என்றது. கேட்பார் இல்லையே.//

ஆம் ஐயா......கேட்பார் இருந்தால் இன்று உலகம் இப்படி தீவிரவாதம் என்ற அழிவை நோக்கி போய்க்கொண்டிருக்காதே.........  நல்ல பகிர்வு . நன்றிகள் பல.

coral shree Sun, Sep 11, 2011 at 9:11 AM



மனம் கனக்கச் செய்யும் சோக நினைவலைகள்..........

//, முதற்கண்ணாக, ந்யூ யார்க் நகரின் தீயணைப்புப் படைக்கு, சிரம் தாழ்த்தி, வீர வணக்கம் செய்வது என் வழக்கம். கடமையாற்றுவதின் உயர்நிலையில் பணியாற்றி, அவர்களில் பலர் மாண்டனர். ‘ // மனிதாபிமானமுள்ள ஒவ்வொருவரும் எண்ணி , எண்ணி வீர வணக்கம் செலுத்த வேண்டிய செயல்........

//அந்த கமிஷன் எண்ணெய் உறவு மட்டும் போதாது; வெறி பிடித்த பயங்கரவாதத்தை ஒழிப்பதிலும் நாட்டம் வேண்டும் என்றது. கேட்பார் இல்லையே.//

ஆம் ஐயா......கேட்பார் இருந்தால் இன்று உலகம் இப்படி தீவிரவாதம் என்ற அழிவை நோக்கி போய்க்கொண்டிருக்காதே.........  நல்ல பகிர்வு . நன்றிகள் பல.


Geetha Sambasivam Sun, Sep 11, 2011 at 5:04 PM


இன்னம் பல மர்மங்களை அலசினால், கட்டுரை நீண்டுவிடும். வாசகர்களுக்கு சலித்து விடும். கேட்பவர்களுக்கு, இணைப்பு தருகிறேன்.
இதெல்லாம் சரி. 9/11 வரலாறு ‘திக்’ ‘திக்’ என்று மாற்றி அமைக்கப்படலாம்.
நம் நாட்டிலும், எந்த புற்றில் எந்தப் பாம்போ?//

சலிக்காது ஐயா. விபரங்கள் கொடுங்கள். நம் நாட்டிலும் எப்போது என்ன நடக்குமோ என்ற பீதி தான்! :((((((((  நீங்கள் கேட்டிருக்கும் கேள்விகள் அனைத்துக்கும் பதில் மட்டும் கிடைத்தால்!!!!!!!!!!!! கனவு தான்! :(


2011/9/11 Innamburan Innamburan <innamburan@gmail.com&gt

செல்வன் Mon, Sep 12, 2011 at 2:55 AM


தமிழ் புத்தாண்டு விஷயத்திலேயே கான்ஸ்பைரசி தியரிகள் ஓயவில்லை.9/11ல் அடங்குமா?

அமெரிக்காவில் ட்ரூத்தர்கள் என்ற இயக்கம் 9/11 பற்றிய உண்மைகளை வெளியே கொண்டுவர போராடுகிறது.பிளாட் எர்த் சொசைட்டிக்கு இருக்கும் வரவேற்பு இவர்களுக்கும் இருக்கதான் செய்கிறது:-)

[Quoted text hidden]
--
செல்வன்


Innamburan Innamburan Mon, Sep 12, 2011 at 3:02 AM

செல்வன்! கம் டு த பாயிண்ட்டு.

செல்வன் Mon, Sep 12, 2011 at 3:08 AM


பாயிண்ட் எளிமை ஐயா

கான்ஸ்பைரசி தியரிகளை நம்பவேண்டாம் என்பதே.


Innamburan Innamburan Mon, Sep 12, 2011 at 3:19 AM


நான் கண்டதையெல்லாம் நம்பச்சொல்லவில்லையே. ஆனால், கேட்டக் கேள்விக்கு பதில் எங்கே?எங்கே?எங்கே?

செல்வன் Mon, Sep 12, 2011 at 4:40 AM

9/11 பற்றி ஆயிரகணக்கில் ரிப்போர்ட்டுகள் இருக்கும்.அதில் எங்காவது இருக்கும்.

மற்றபடி 9/11 இன்சைட் ஜாப் என கருதுகிறீர்களா?இல்லை என்றால் மேட்டர் ஓவர்.
[Quoted text hidden]

Raja sankar Mon, Sep 12, 2011 at 4:47 AM


இரண்டு டவர்களும் இடிந்து விழுந்தது பற்றி பல ஆராய்ச்சி நடந்து பின் அமெரிக்காவின் பெரிய கட்டிடங்கள் கட்டும் விதியை மாற்றி உள்ளார்கள்.

கான்ஸ்பிரசி தியரிக்கள் எல்லாம் அடிப்படை ஆதாரமே இல்லாமல் எழுதப்படுபவை.

ராஜசங்கர்


Innamburan Innamburan Mon, Sep 12, 2011 at 7:40 AM


அக்காலத்து ராணுவ அமைச்சர் டொனால்ட் ரம்ஸ்ஃபீல்ட் சொன்னது/: பாப் கிரஹாம்: அந்த கூட்டறிக்கை கமிட்டி அக்ராசனர்களில் ஒருவர் சொன்னது/ஒமர் அல் பயொமி இரு பயங்கரவாதிகள் அமெரிக்கா வர, காசு கொடுத்தது/. அன்வர் அல் லகி என்ற அமெரிக்க இஸ்லாமிய போதகரை தப்பிக்க விட்டது/. அதிபர் புஷ்ஷும், துணை அதிபர் செய்னீயும் முரண் பேசுவது/புஷ்ஷும், செய்னியும் தங்கள் வாக்குமூலம் பதிவு செய்யக்கூடாது என்றது/.ஈரான் பற்றிய சாக்ஷியங்கள், வலுவான சந்தேஹங்களை கிளப்பின. சர்க்கார் காஷ்ட மெளனம்டென்ஷன் இந்த ரிப்போர்ட் தயாரிப்பதில்!/9/11 க்கு ஏழு வருடங்கள் முன்னால், முகம்மது அல் கிலெவி என்ற ஸெளதி உயர் அதிகாரி. ஆயிரக்கணக்கான ஆவணங்களுடன் (கொடுங்கோல்; மனித உரிமை பறிப்பு; ஊழல்: பயங்கரவாதம்) அமெரிக்காவில் சரணடைந்தார். செளதி அரசரிடம் மக்களுக்கு அரசில் பங்கு நாடி விண்ணப்பித்தார். அமெரிக்கா அவரை கண்டு கொள்ளவில்லை. ஸெளதி அரசோ உயிருக்கு ஆபத்து என்றது/ எல்லாவற்றிற்கும் மேலாக, மட்டுறுத்தப்பட்ட 28 பக்கங்கள்........?!

    ~ உறங்குபவனை எழுப்பலாம். கண்ணை மூடிக்கொண்டு இருப்பவனை எழுப்ப முடியாது.
    இன்னம்பூரான்


    செல்வன் Mon, Sep 12, 2011 at 4:18 PM




    2011/9/12 Innamburan Innamburan <innamburan@gmail.com>
    அக்காலத்து ராணுவ அமைச்சர் டொனால்ட் ரம்ஸ்ஃபீல்ட் சொன்னது/: பாப் கிரஹாம்: அந்த கூட்டறிக்கை கமிட்டி அக்ராசனர்களில் ஒருவர் சொன்னது/ஒமர் அல் பயொமி இரு பயங்கரவாதிகள் அமெரிக்கா வர, காசு கொடுத்தது/. அன்வர் அல் லகி என்ற அமெரிக்க இஸ்லாமிய போதகரை தப்பிக்க விட்டது/. அதிபர் புஷ்ஷும், துணை அதிபர் செய்னீயும் முரண் பேசுவது/புஷ்ஷும், செய்னியும் தங்கள் வாக்குமூலம் பதிவு செய்யக்கூடாது என்றது/.ஈரான் பற்றிய சாக்ஷியங்கள், வலுவான சந்தேஹங்களை கிளப்பின. சர்க்கார் காஷ்ட மெளனம்டென்ஷன் இந்த ரிப்போர்ட் தயாரிப்பதில்!/9/11 க்கு ஏழு வருடங்கள் முன்னால், முகம்மது அல் கிலெவி என்ற ஸெளதி உயர் அதிகாரி. ஆயிரக்கணக்கான ஆவணங்களுடன் (கொடுங்கோல்; மனித உரிமை பறிப்பு; ஊழல்: பயங்கரவாதம்) அமெரிக்காவில் சரணடைந்தார். செளதி அரசரிடம் மக்களுக்கு அரசில் பங்கு நாடி விண்ணப்பித்தார். அமெரிக்கா அவரை கண்டு கொள்ளவில்லை. ஸெளதி அரசோ உயிருக்கு ஆபத்து என்றது/ எல்லாவற்றிற்கும் மேலாக, மட்டுறுத்தப்பட்ட 28 பக்கங்கள்........?!
    இவை எல்லாம் என்ன சொல்கின்றன?வாட் இஸ் தெ பிக் பிக்சர்?ஹூ டிட் 9/11?
    --
    செல்வன்


    Innamburan Innamburan Mon, Sep 12, 2011 at 5:38 PM




    சில மர்மங்கள் ~சுருக்கமாக:
    வேவு துறைகளை பற்றிய அமெரிக்க நாடாளும் மன்றங்களின் 800 பக்க கூட்டறிக்கை ஜூலை 2004 ல் வெளியிடப்பட்டது, 28 பக்கங்களை தவிர்த்து. புஷ் மூடி வைத்த அந்த மர்மத்தை ஒபாமாவும் அடை காக்கிறார்! ஹேஷ்யங்கள் பல. அமெரிக்க ஆய்வாளர்கள் எதையும் விட்டு வைப்பதில்லை. உசாத்துணையில் சுட்டிருக்கும் நூல், ந்யூஸ்வீக் இதழின் அலசல், ஆகியவை இந்த வகை. அவற்றிலிருந்து, சில துளிகளின் தொகுப்பு:

    1. அக்காலத்து ராணுவ அமைச்சர் டொனால்ட் ரம்ஸ்ஃபீல்ட்: ‘இத்தகைய பின்பலம் இல்லாமல் அல்-கொய்தா யாதும் செய்திருக்க முடியாது. இவர்களின் உதவி உண்டு. எனக்கு பல விஷயங்கள் தெரியும். அதனால் தான் அழுத்தம் திருத்தமாக, சொல்கிறேன்.’ விவரம் கேட்டபோது, யோசித்தார். சிக்கல் என்றார். வாயை மூடிக்கொண்டார்.
    2. பாப் கிரஹாம்: அந்த கூட்டறிக்கை கமிட்டி அக்ராசனர்களில் ஒருவர்:‘ஸெளதி அரேபிய அரசும், சில அன்னாட்டு பிரமுகர்களும் இந்த பயங்கரவாதிகளுக்கு (அவர்களில் 15 பேர் அன்னாட்டு மக்கள்) பல உதவிகள் செய்தனர். அவையில்லாமல், இது சாத்தியமே அல்ல.”
    3. அமெரிக்கா-வாழ் அரேபியர் (ஒமர் அல் பயொமி) இரு பயங்கரவாதிகள் அமெரிக்கா வர, காசு கொடுத்தார். மூன்று அரேபியர் மீது சந்தேஹம். ஆனால், ஆக்ஷன் ஒன்றுமில்லை.
    4. இதே மாதிரி அன்வர் அல் லகி என்ற அமெரிக்க இஸ்லாமிய போதகரை தப்பிக்க விட்டார்கள். அவர் இப்போது ஏமன் நாட்டில். அமெரிக்கா அவரை கொலை செய்ய விரும்புகிறது.
    5. பயணிகளால் மீட்கப்பட்ட விமானம் பென்ஸில்வேனியாவில் வீழ்ந்தது. அதை சுட்டு வீழ்த்த ஆணையளித்ததாக அதிபர் புஷ்ஷும், துணை அதிபர் செய்னீயும் சொல்கிறார்கள். ஒருவர் விமானத்தில்; ஒருவர் பாசறையில். இந்த ஆணை பதிவே ஆகவில்லை!
    6. புஷ்ஷும், செய்னியும் தங்கள் வாக்குமூலம் பதிவு செய்யக்கூடாது என்றனர். ஏன்? ஏன்?
    7. ஈரான் இந்த சதியில் ஈடுபட்டதற்கான ஆதாரங்கள் கிட்டவில்லை; ஆனால். மேற்படி கமிஷன், விமான பயணங்களுக்கு அவர்கள் செய்த உதவிகள் பற்றிய சாக்ஷியங்கள், வலுவான சந்தேஹங்களை கிளப்பின. சர்க்கார் காஷ்ட மெளனம்.
    8. ஈராக் இந்த சதியில் ஈடுபட்டதற்கான ஆதாரங்கள் கிட்டவில்லை.
    9. ஸெளதி தூதுவர் இளவரசர் பண்டார் பின் சுல்தான், இந்த கமிஷன் தன் நாட்டின் வாய்மையையும், ஈடுபாடாததையும் நிரூபித்து விட்டது என்கிறார், ஒரு துணுக்கு ஆதாரமில்லாமல். 
    10.  எத்தனை டென்ஷன் இந்த ரிப்போர்ட் தயாரிப்பதில்! ராஜேஷ் டேயும் மைக்கேல் ஜாகோப்ஸனும் நோண்டி, நோண்டி எடுப்பதையெல்லாம், ஸ்னெல் குழி பறித்து மூடிக்கொண்டிருந்தார்!
    11.  அந்த கமிஷன் எண்ணெய் உறவு மட்டும் போதாது; வெறி பிடித்த பயங்கரவாதத்தை ஒழிப்பதிலும் நாட்டம் வேண்டும் என்றது. கேட்பார் இல்லையே.
    12.  9/11 க்கு ஏழு வருடங்கள் முன்னால், முகம்மது அல் கிலெவி என்ற ஸெளதி உயர் அதிகாரி. ஆயிரக்கணக்கான ஆவணங்களுடன் (கொடுங்கோல்; மனித உரிமை பறிப்பு; ஊழல்: பயங்கரவாதம்) அமெரிக்காவில் சரணடைந்தார். செளதி அரசரிடம் மக்களுக்கு அரசில் பங்கு நாடி விண்ணப்பித்தார். அமெரிக்கா அவரை கண்டு கொள்ளவில்லை. ஸெளதி அரசோ உயிருக்கு ஆபத்து என்றது.