Sunday, August 4, 2013

சென்னை குறிப்புகள் ~1



சென்னை குறிப்புகள் ~1
Inline image 1

நேற்றுப்போல் இருக்கிறது. கிட்டத்தட்ட ஒரு மாதம், கிட்டகிடுகிடுவென்று ஓடி விட்டது. ஜூலை ஆறு அன்று ஹீத்ரோ அடையும் போது சில வயோதிக பிரச்னைகள், நீரழிவு நோயினால். அதனால் தள்ளு வண்டி. தள்ளியது ஒரு குஜராத்திப்பெண். திறனுடன் இயங்கிய அந்த யுவதி டிப்ஸ் பெற்று கொள்ள மறுத்து விட்டாள். கொஞ்சம் வற்புறுத்தி கொடுக்க வேண்டியாகி விட்டது. இது வரை சென்னை அனுபவம், அந்த வசதிகள் பேச்சுடன் சரி. எழுதப்பட்டதை நீரில் எழுதியதாக வைத்துக்கொள்ளலாம். ஆனால், தேவை குறைந்து விட்டபோதிலும், வண்டி ஆஜர். வற்புறுத்தி ஏற வைத்தார்கள், நான் தேவையல்ல என்று செய்தி அனுப்பியிருந்த போதிலும். அந்த வேலையில் இருக்கும் இளைஞர்களின் சீருடை அழுக்கு; வள வள பேச்சு அதிகம். தன்னிச்சைப்படி என்னை பரிமாற்றம் செய்து கொண்டார்கள். வரும்போதே அவர் ஒரு பவுனுக்கு குறைந்து டிப்ஸ் கொடுக்கலாகாது என்று சபதமேயிட்டிருந்தார். ஆனால், டாக்ஸி கம்பேனி டாலரோ/பவுனோ வாங்க மறுத்து அண்ணா நகர் செல்ல ரூபாய் 600/- கேட்டார்கள். நல்ல வேளை, கிளம்பும் போது என் பையர் சில இந்திய ரூபாய் நோட்டுகள் கொடுத்திருந்ததால், பிழைத்தேன். டிரைவர் நாலாவது மாடி வரை ஜாமான்களை கொண்டு வந்து உதவியதால் கொடுத்த டிப்ஸை மகிழ்வுடன் பெற்றுக்கொண்டார். வழியில் கார்கள் பூம் பூம். இருசக்கராதிபதிகள் கன்னா பின்னா பரபரப்பு. நடை பயணிகள், காலை ஆறு ஆகியும் காணக்கிடைக்கவில்லை. எங்கெங்கும் குப்பை தரிசனம். மெட்ரோ போடுவதால் வழி நெடுக வழி இல்லை. ஹிந்து இதழ் கரடியாக கத்தினாலும், நடை பாதைகள் அண்ணா நகரிலேயே தென்படவில்லை. குண்டும் குழியும் பாலை திணையை நினைவுறுத்தியன.  இறங்கியதும் கிடைத்தது...
(தொடரும்)

இன்னம்பூரான்

http://innamburan.blogspot.co.uk


http://innamburan.blogspot.de/view/magazine

www.olitamizh.com

சித்திரத்துக்கு நன்றி: http://puthiyathalaimurai.tv/wp-content/uploads/2013/07/rain-sting.png

No comments:

Post a Comment