Friday, April 26, 2013

இன்னம்பூரானின் ரயில் பயணமும், அதன் பலாபலன்களும்


இன்னம்பூரானின் ரயில் பயணமும், அதன் பலாபலன்களும்

Innamburan S.Soundararajan Fri, Apr 26, 2013 at 9:57 PM

இன்னம்பூரானின் ரயில் பயணமும், அதன் பலாபலன்களும்
Inline image 1

டைம்லைன் 1962:
‘Mr.S.Soundararajan, Deputy Accountant General, AP left for Hyderabad.’ அந்தக்காலத்தில் ஹிந்து இதழில், Social & Personal என்ற தலைப்பில் இத்தகைய  அரிய செய்திகள் வரும். (எங்க ஆஃபீஸ் அனுப்பித்தான்!). தேடினால், தேதி கிடைக்கும். இப்போ Obituary கூட காசு கொடுத்தால் தான் போடுவார்கள். நான் மேற்படி பயணம் மேற்கொள்ளும் போது, லோயர் பெர்த் உத்தரவாதம். எனக்கு எல்லாம் ஒண்ணு தான். இவ்வாறு ஒரு நாலு பெர்த் வண்டியில் மதியம் அமர்ந்து, அறிமுகங்கள், உபயகுசோலபரி எல்லாம் இனிதே நடந்தேறி, எஞ்சின் ஊதும்போது, அடித்துப்பிடித்துக்கொண்டு ஒருவர் ஏறினார். திருக்கோவிலூர் ஆழ்வார்களுடன், நாலாவதாக வந்து நின்றானே, அவனைப்போல. ஆனால் ஐந்தாவது! மூன்று வீ.ஐ.பி.களும் ஒருவரை ஒருவர் பார்த்து உதடுகளை பிதுங்கினர். பொருள்: யார் இந்த காட்டான்? இத்தனைக்கும் விதிப்படி ஆறு நபர்கள் சாயுங்காலை வரை இதில் அமரலாம்.  க்ஷணத்தில் புரிந்து கொண்டேன், அவர் யார் என்று. நால்வர் அறிமுகம் ரிஸர்வேஷன் அட்டையை பார்த்தபிறகு. இவரை அறிமுகப்படுத்தியது, யான் செய்த பாக்கியம். மூவரும் சுயநிலைக்கு திரும்பினர், ராக்காலம் போவது எப்படி என்ற 64 ஆயிரம் டாலர் சிந்தனையோடு!

அப்பெல்லாம், ஹோல்டால் என்ற மெத்தை, தலைக்கணி சுருள். பெட்டி, கூஜா, டிஃபன் கேரியர் இன்றியமையாத உறுதுணைகள். படுக்கைகள் விரிக்கப்பட்டன. அவரிடம், நான் தரையில் படுத்துக்கொள்வேன் என்று அடம் பிடித்து, அவரை என்னுடைய விலை மதிப்பற்ற லொயர் பெர்த்தில் சயனிக்கச்செய்தேன். மற்ற மூவரும் ‘அப்பாடா!’ என்று ஆசுவாசப்படுத்திக்கொண்டு, ‘உஷ்ஷ்ஷ்..’ / ஊதுகுழல்/ கர்ர்ர்./ போன்ற குறட்டையில் ஆழ்ந்தனர். ஹைதராபாத்தும் வந்தது. ஒருவரை ஒருவர் மறப்பதில்லை என்ற போலி பிரமாணம் செய்து கொண்டு பிரியா விடை பெற்றோம். பலாபலன்கள் வரும் பின்னே!

வருடங்கள் கடந்தோடின. டைம்லைன் 1968:
அக்காலம் நான், ஹைதரை கைவிட்டுவிட்டு, அஹ்மதை பரிணயம் செய்து கொண்டிருந்தேன். அதாவது அஹமதாபாத்தில் வேலை. அப்பாவின் மணிவிழாவுக்காக, நெய்வேலி வந்திருந்தேன். நான் படைக்கு அஞ்சமாட்டேன், தம்பி உடையான் என்பதால். (அவன் என் தனிப்படைக்கு அஞ்சுவான், அக்காலம்; இப்போது, ஓய்வு பெற்றும், கியாதியான சம்பளம். மணி விழா நடந்தேறியது; பக்கத்து வீடு. அவனிடம் இதை சொல்லாதீர்கள்; அஞ்சுவது யான்!) இந்த தம்பி மேல்படிப்பை உதறிவிட்டு, சென்னையிலிருந்து,சண்டியராக வருகை புரிய, அப்பா ஒரு கோரிக்கை எடுத்து முன் வைத்தார். அவன் மூன்றாமவன். மூத்த இரு ஆண்பிள்ளைகளும் பட்டப்படிப்பு முடித்தவர்கள். அவனும் பட்டம் பெறவேண்டும். ‘காரியத்தில் இறங்கு’ என்று எனக்கு ஆணை. தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை என்று, யானும், அவனும், அவனுடைய ‘கொடாய்ங்க்’ மார்க் லிஸ்டுடன், விரைந்தோம், அண்ணாமலை பல்கலைக்கழகம் நோக்கி. எடுத்தவுடன், இணை வேந்தரிடம் சென்றோம். அவர் என்னை அடையாளம் புரிந்து, ‘யார் இந்த மஹாபுருஷன்?’ என்று மறந்துவிட்ட நிலையில், வாய் தவறிக் கேட்டுவிட்டார், ‘What can I do for you?’ என்று. விட்டேனா நான். ‘Sir, I gave you a berth that day. I want only a seat now.’ என்றேன். உடனடி ஷாக் தணிந்த பின், இன்முகத்துடன், B.Sc. (Chemistry) seat கொடுத்தாரே, பார்க்கலாம்!  அவர் தான் தத்துவ பேராசிரியர் சந்திரன் தேவநேசன், சென்னை கிருத்துவக்கல்லூரியில், 1962ல். ஒரு கேள்வி எழலாம். வேறு கல்லூரியில் பொருளியல் படித்த உனக்கு, இவரை எப்படி தெரியும்? இவரின் அருமையான இண்டெர்காலேஜியட் லெக்ச்சர் கேட்க மகளிர் கூட்டமிருக்கும். அதான்.

இது பலாபலன் நம்பர் 1. மேற்படி சொல்ல அச்சம்.

இப்படிக்கு,
இன்னம்பூரான் (‘பூ’ நெடில்)
10 10 2010

2010/10/10 N. Kannan 

இது சரித்திர இழையென்று நம் இன்னம்புரான் சார் ‘சர்டிபிகேட்’
கொடுத்துவிட்டதால் சொல்கிறேன்..
அன்புடையீர்,
சரித்திர இழை என்பதாலும் வரலாறு என்று வரும்போதும் கொஞ்சம் ஆவண் உட்திற்னாய்வு Internal criticism of document தேவை.
 உங்களின் மலரும் நினைவுகளில் சில சந்தேகங்கள்
அண்ணாமலைப் பல்கலையின் இணை வேந்தர் செட்டிநாட்டு அர்சர் குடும்பத்தில் ஒருவராக் இருத்தல் மரபு.  எனவே சந்திரன் தேவநேசன் இணைவேந்தராய் இருப்பதற்கு வாய்ப்பில்லை. என் யூகம் சரியா?
மேலும் சந்திரன் தேவநேசன் வரலாற்றுப் பேராசிரியர். அவர் சென்னை கிறிஸ்துவக் கல்லூரியில் பேராசிரியராக, முதல்வராகப் பணியாற்றியவர். 
அருள்கூர்ந்து மீண்டும் நினைவுகூர்ந்து நீங்கள் லோயர் பெர்த் கொடுத்து கெமிஸ்ட்ரி சீட் வாங்கிய பேராசிரியரின்  பெயரை மீண்டும் நினைவு கூறவும்..
நானும் ‘கொடாய்ங்க்’ மார்க் லிஸ்ட் தான்.  கெமிஸ்ட்ரி தான், அந்த்க்காலத்தில் அந்தமார்க்குக்கு கெமிஸ்ட்ரி அந்தர் பல்டி போட்டாலும் கிடைக்காது.
அண்ணாமலைப் பல்கலையில் டாக்டர்.  ஆதிநாராயணா என்ற உளவியல் பேராசிரியர் துணைவேந்தராக இருந்திருக்கிறார்.  ஒரு வேளை அவராக இருக்குமோ
நாகராசன்
*
மிக்க நன்றி, பேரசிரியரே, I am all for internal criticism of document
and shall welcome it. 'துணை'/இணை குழப்பம் இருந்திருக்கலாம் என்னிடம்.
நிகழ்வுகள் நடந்தவை என்பதால், டாக்டர் ஆதிநாராயணாவைத்தான் நான்
குறிக்கிறேன் என்று இப்போது தோன்றுகிறது. எனக்கு இருவரையும் தெரியும்;
சந்திரன் தேவநேசன், டாக்டர் பாயிட்டின் காலத்திற்கு பிற்காலம் சென்னை
கிறிஸ்துவக்கல்லூரியில் பேராசிரியராக, முதல்வராகப் பணியாற்றியதும்
ஞாபகத்தில் இருக்கிறது.
பிழை திருத்தம்: 'சந்திரன் தேவநேசன்' என்பதற்கு பதில் 'டாக்டர் ஆதிநாராயணா'.
இன்னம்பூரான்
*
Sir, I gave you a berth that day. I want only a seat now.’ <<
Superb,  Excellent!!
Dev
*
அதெல்லாம் அப்படித்தான்! Accountant General--னா எப்பவும் balance book-எ maintain பண்ணுவார்கள் என்று சொல்லிக் கேள்வி!
அன்புடன்.
ராஜம்

*
சித்திரத்துக்கு நன்றி: http://www.mazhalaigal.com/images/issues/mgl0907/im0907-045_train.jpg
இன்னம்பூரான்
26 04 2013
 

‘பாரத தேசமென்று பெயர்சொல்லுவார்...’ 6: கல்வி.




‘பாரத தேசமென்று பெயர்சொல்லுவார்...’ 6: கல்வி.
பாரத தேசமென்று பெயர்சொல்லுவார்...’ 6
Inline image 1

ஜனவரி 8, 2013 அன்று திரு. ஶ்ரீரங்கம் மோஹனரங்கம் ஹிமாலய மலைச்சாரலில், ஸன்ஸ்கார் பள்ளத்தாக்கில் சிறார்கள் பள்ளி செல்லும் கடினமான பாதையை பற்றியும், தந்தையர்களின் கல்வி அளிப்பதில் உள்ள ஈடுபாட்டைப் பற்றியும் ஒரு அருமையான விழியத்தை காண்பித்து, ‘... இந்தக் குழந்தைகளும், அவர்களது தந்தையும் கல்விக்காகச் செய்யும் சாதனையைவிட உலகில் வேறு எந்தச் சாதனையும் எனக்குப் பெரிதாகப் படவில்லை... எந்த நேரமும் பனித் தரை உடையலாம். அது முழுக்க ஆறு. ஆழமான ஆறு. அதன் உறை படலத்தின் மீதுதான் நடந்து வரவேண்டும். ஏதாவது எக்குத்தப்பாய் கால் வைக்கும் போது உடைந்தால் ஆற்றின் ஆழம் பனிக்கல்லறை...’ என்று வியந்து பேசினார். அவர் கூறியதை வழிமொழிந்து, அதே விழியத்தை நம் எல்லாருக்கும் முன்னுதாரணமாக, இத்துடன், நன்றி கூறி, இணைக்கிறேன்.

இரண்டு நாட்களுக்கு முன்பு இராமம்பாளையம் ஊராட்சி ஒன்றிய அரசு துவக்கப்பள்ளியின் மேன்மையை பற்றியும், அதனுடைய ஆசிரிய பெருமக்களின் வேள்வியை பற்றியும் நண்பர் கதிர் எழுதிய மடல் மகிழ்ச்சி அளித்தது. பத்து வருடங்களாக, பெங்களூரு கோரமங்கலா பகுதியில் இயங்கி வரும் ராயல் பரிக்கிரமா பள்ளியை பற்றி ஒரு ஊடகச்செய்தி: எல்.கே.ஜி. யிலிருந்து பத்தாம் வகுப்பு வரை உள்ள மாணவர்கள் வந்த வி.ஐ.பி. விருந்தினருடன் சகஜமாக அளவளாவினர்;  அவர்களில் பெரும்பாலோர் சமுதாயத்தின் விளிம்பில் உள்ளோர் (marginalized) வீட்டு சிறார்கள்; வந்தவர்,அவர்களின் தட்டுத்தடுமாறாத ஆங்கில உரையாடலையும், பல விஷயங்கள் அறிய விரும்பும் ஆர்வத்தையும் கண்டு வியந்து போனார். அந்த தன்னார்வபள்ளியின் இலக்கு, சமுதாயத்தின் விளிம்பில் உள்ளோர் வீட்டு சிறார்களுக்குக் கல்வி அளிப்பதில் புரட்சிகரமான ஆக்கப்பூர்வ வழிமுறைகளைக் கையாளுவதே. அதன் நிறுவனர் சுக்லா போஸ் அவர்கள் பள்ளி அறை, வசதி, கணினி ஆகியவை போதாது; ஆர்வமும், சூழலும் தான் முக்கியம் என்கிறார். அந்த பள்ளிக்கு நான்கு கிளைகள்; மூன்று அனாதை இல்லங்களிலிருந்து, 69 சேரிகளிலிருந்தும் மாணவர்கள் படிப்பதாக, ஹிந்து இதழ் கூறுகிறது. மாணவர்களுக்கு இலவச கல்வியும், சத்துணவும், அடிப்படை மருத்துவ வசதியும் அளிப்பதோடு நிற்காமல், வயது வந்தோர்களுக்குக் கல்வியும், தையல் வகுப்புகளும் நடத்துகிறார்கள். கடும்போட்டியில் வெற்றி பெற்ற ஒரு மாணவர் முதல் தர வழக்கறிஞர் கல்லூரியில் சேர்ந்திருக்கிறாராம். இவர்களில் சிலர் மத்திய/மாநில அரசுகளின் உயர் பதவில் வகித்தால், சமுதாயம் மறுமலர்ச்சி அடையும் என்று எழுத நினைத்தவுடன் மற்றொரு செய்தி.
ஐ ஏ எஸ் அதிகாரிகளுக்கு முஸொளரியில் ஒரு பள்ளி இருக்கிறது. அங்கு பாடம் எடுத்தது ஒரு படிக்காத மேதை; ஆந்திர விவசாயி திருமதி. ஐதலா லலிதாம்மா அவர்கள். அவருடைய திறனும், அனுபவமும்: பூச்சிக்கொல்லி இல்லாத விவசாயம், மழைநீர் சேகரிப்பு; தரமான இயற்கை உரமும், வித்துக்கள் தயாரிப்பு. செல்வமும் ஈட்டினார். இதையெல்லாம் அவர்களுக்கு சொல்லிக்கொடுத்தார்.
இந்த செய்திகள் ‘பாரத தேசமென்று பெயர் சொல்ல’ துணிவை கொடுக்கின்றன.
இந்த சட்டத்தின் (RTE Act) அடித்தளமே, பள்ளிகளை நடத்துவதில் சமூக ஈடுபாடு. ஆந்திரபிரதேசத்தில், இதற்காகவே பிரசாரம் நடைபெறுகிறது. அஸ்ஸாமில் அன்னைமார் சங்கங்கள் பள்ளிகளை நடத்துவதில் பங்கு கொள்கின்றன.’ என்று போன இழையில் சொன்ன நான், அநாவசியமாக அருமை நண்பர் செல்வனுடன் முட்டி மோதியதால், திசை மாறிய இழை குலைந்தே போய் விட்டது. தவறு என்னுடையது; ஆர்வமிகுதியின் விளைவு. மேலும், சொல்ல வேண்டியதை சொல்லி விட்டு, ‘...மார்ச் 31 கெடு முடிந்த பின்னும் உங்கள் பேட்டை/ஊர்/ மாவட்ட நிலவரம் என்ன, எப்படி என்று உங்களுக்குத் தெரியும். என்ன செய்யப்போகிறீர்கள்?...’  என்று கேட்க எனக்கு உரிமை யாதும் இல்லை.  திரு.செல்வனிடமும், மடலாடும் தோழர்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொண்டு, அந்த சட்டத்தின் அடிப்படையை அரசு தளத்திலிருந்து எடுத்து, இணைப்பதுடன், என் தற்காலிக பணி முடிந்தது; அடுத்து இவ்விழை தொடர்ந்தாலும், கல்வி உரிமையை பற்றி பேசுவதை தவிர்த்து விடுகிறேன்.
நன்றி, வணக்கம்.
இன்னம்பூரான்
05 04 2013
RTE.pdfRTE.pdf
63K   View   Download  
YouTube - Videos from this email
செல்வன்
Apr 5

தேவையில்லாமல் உங்கள் இழையில் புகுந்து சண்டைபோட்டதுக்கு நீங்க தான் என்னை மன்னிக்கணும் இ சார்:-). இழையை தொடருங்கள். நல்ல தலைப்பு. அது இதனால் எல்லாம் திசைமாறவேண்டாம்
கி.காளைராசன்
Apr 5

ஐயா ‘இ‘னா அவர்களுக்கு வணக்கம்.
2013/4/6 Innamburan S.Soundararajan <innamburan@gmail.com>

கடும்போட்டியில் வெற்றி பெற்ற ஒரு மாணவர் முதல் தர வழக்கறிஞர் கல்லூரியில் சேர்ந்திருக்கிறாராம்.
திருப்பூவணத்தில் தெய்வீகப் பேரவையினர், திருக்கோயில் வளாகத்தில் கல்வி கற்றுக் கொடுக்கின்றனர். விடுமுறைநாட்களில் திருக்கோயில் உழவாரப்பணியும் உண்டு.

இங்கு படித்த மாணவர்களே இங்கு ஆசிரியர்கள்.
மாணவர் பலர் காவல்துறை, கல்வித்துறை எனப் பல துறைகளில் பணியாற்றி வருகின்றனர்.

 உங்கள் பேட்டை/ஊர்/ மாவட்ட நிலவரம் என்ன, எப்படி என்று உங்களுக்குத் தெரியும். என்ன செய்யப்போகிறீர்கள்?...’ 
அன்பன்

பழமைபேசி
Apr 12

// தமிழகத்தில் கல்வி செழிப்பாகத்தான் இருக்கிறது இன்னம்பூரான் ஐயா? //

நானும் அப்படியே கருதுகிறேன். இந்நாள் சட்டமன்ற உறுப்பினர் வழியாக நான்
அறிந்து கொண்டது. கோவைப்பகுதியில் 10 பொறியியற் கல்லூரிகள் உட்பட 100
கல்லூரிகள் விற்பனைக்கு உள்ளனவாம். ஏனென்றால் அவ்வளவாக மாணவர் சேர்க்கை
இல்லையாம்.

நாட்டிற்குத் தேவை சமூகச் சீர்திருத்தம். அவை நல்ல கலை, இலக்கியத்தால்
மட்டுமே முடியும். ஊடகங்கள் அதற்குத் துணை புரிய வேண்டும். நூல்கள்
வாசிப்பதை ஊக்கப்படுத்தலாம். தனிமனிதனாக எனது வீட்டாருக்கும், என்னை
அண்டியுள்ளவர்களிடத்திலும் எனது கருத்தினைப் பகிர்ந்து விவாதத்திற்கு
அவர்களை ஆட்படச் செய்ய முடியும். அதுவே எனக்கான பெரிய வெற்றி!!
Innamburan S.Soundararajan <innamburan@gmail.com>
Apr 12

இது ஒரு முகம். ஏன் மாணவர் சேர்க்கையில்லை என்ற வினாவுக்கு பதில். தரமான பொரியியல் கல்வி கிடைப்பது அரிது. கல்வியை தவிர பல விஷயங்களிலும் பிரிதினித்துவ குடியரசு பொய்த்து விட்டது. 

Tthamizth Tthenee
Apr 13 (13 days ago)

கல்வியை தவிர பல விஷயங்களிலும் பிரிதினித்துவ குடியரசு பொய்த்து விட்டது.
கல்வித்
  ​ துறையும்   வியாபார நோக்கில்தான்  நடத்தப் படுகிறது
அன்புடன்
தமிழ்த்தேனீ ​   
​  
Subashini Tremmel
Apr 13 (13 days ago)

On Sat, Apr 13, 2013 at 6:30 AM, Tthamizth Tthenee <rkc1947@gmail.com> wrote:
கல்வியை தவிர பல விஷயங்களிலும் பிரிதினித்துவ குடியரசு பொய்த்து விட்டது.
கல்வித்
 ​ துறையும்   வியாபார நோக்கில்தான்  நடத்தப் படுகிறது

கல்வித்துறை கூட தேர்வு எனும் ஒன்றை மட்டுமே குறிக்கோளாக வைத்து செயல்படுவதாகத்தான் நான் காண்கின்றேன். மாணவர்கள் பொது அறிவு, கல்வித்திட்டம் காட்டும் வரையறயை மீறி தேடல், பல நூல்கள் பல்வேறு துறையில் வாசித்தல்  என்ற வகையில் அழைத்துச் செல்லாத கல்வித்திட்டமாகத்தான் உள்ளது. 

சுபா


 
 


Tthamizth Tthenee
Apr 13 (13 days ago)

தேர்வு முறைகளே  
புரிந்து கொண்டு படித்தல் என்னும் சிறந்த முறையைக் கடைப்பிடிக்காமல் 
மனப்பாடம் செய்து யார்  அப்படியே  விடை எழுதுகிறார்களோ  அவர்களுக்கு உயர்ந்த  மதிப்பெண்  என்கிற முறையிலே  இருக்கிறது
பழமைபேசி
Apr 13 (13 days ago)

பிரசன்னா – சிநேகாவை காண மாணவ – மாணவிகளின் பெற்றோர்கள், பொதுமக்கள்
உட்பட ஏராளமானோர் கல்லூரி வளாகத்தில் குவிந்திருந்தனர். இதனால் தள்ளு
முள்ளு ஏற்பட்டது.

#விளங்கும் கல்வி!!

On Apr 13, 4:42 am, Tthamizth Tthenee <rkc1...@gmail.com> wrote:
> தேர்வு முறைகளே
>
> புரிந்து கொண்டு படித்தல் என்னும் சிறந்த முறையைக் கடைப்பிடிக்காமல்
>
> மனப்பாடம் செய்து யார்  அப்படியே  விடை எழுதுகிறார்களோ  அவர்களுக்கு உயர்ந்த
> மதிப்பெண்  என்கிற முறையிலே  இருக்கிறது
>
> அன்புடன்
> தமிழ்த்தேனீ
Nagarajan Vadivel
Apr 14 (12 days ago)

//பிரசன்னா – சிநேகாவை காண மாணவ – மாணவிகளின் பெற்றோர்கள், பொதுமக்கள்

உட்பட ஏராளமானோர் கல்லூரி வளாகத்தில் குவிந்திருந்தனர். இதனால் தள்ளு
முள்ளு ஏற்பட்டது.//


இந்தத் தள்ளு முள்ளுவில் பேராசிரியர்களும் முதல்வரும் இருந்தார்களா?
கொஞ்சம் கேட்டுச் சொல்லுங்க ப்ளீஸ்
நாகராசன்

பழமைபேசி
Apr 14 (12 days ago)

பேராசிரியர்கள் இருந்திருக்கக் கூடும். :-)

Rishi Raveendran
Apr 14 (12 days ago)




கேடில் விழுச்செல்வம் கல்வி யொருவற்கு
மாடல்ல மற்றை யவை.
 
 
ஒருவனுக்கு அழிவில்லாத சிறந்த செல்வம் கல்வியேயாகும். ஏனைய மணி, பொன் முதலிய செல்வங்கள் அழியக் கூடியன. ஆதலால் அவை செல்வங்கள் ஆகா,
 
இந்த வாக்கியங்களை  கல்லாதவரிடல் சொல்லவேண்டும். என் சிநேகிதிகளில் சிலர் தங்கள்  பிள்ளைகளுக்கு படி்ப்பு
வராததை  சுலபமாக  ஜீரணிக்கிறார்கள்.”அவனுக்கென்ன  ஏதாவது பிசினஸ் பண்ணி  பொழச்சிப்பான்  படிச்சாதானா?” என்கிறார்கள்..படிக்காதபாமரர்களை  திருத்திவிடலாம் படித்த முட்டாள்களோடு வாதாடவே இயலாது.
 
சமுதாயத்தில்கீழ்த்தட்டுமக்களில்  பலருக்கு  இன்னமும் கல்வியின் மேன்மை தெரியவில்லை
 
மற்றும்..
 
.சுயதொழில் என்று பரமபரையாக  தாங்கள் செய்யும்  தொழிலுக்கு
உதவியாக பிறகு தலைவனாக  தன் மக்களை தயார்ப்படுத்திவிடுகிறார்கள்.
 
கல் உடைக்கும்  பணியாளர்களில் பலர்  தன் பெண் குழந்தைகளை  வீட்டில்விட்டு மற்ற சின்னக்குழந்தைகளைப்பார்த்துக்கொள்ளும் பணிக்காக பள்ளிக்கு அனுப்புவதில்லை.
 
கன்னட சமூக அமைப்புடன் அருகில் சில  கிராமங்களுக்குச்சென்று இந்தமாதிரிப்பெண்களிடம் நான் பேசி இருக்கிறேன்.எல்லாவற்றையும்்   கேட்டு  விட்டு,
,”புருஷன் சரி இல்ல குடிக்கிறான் நாந்தான் வேலை செய்து குடும்பத்தைக்காப்பாத்தணும்  இதுல புள்ளங்களை எங்கம்மா படிக்க வைக்கிறது?“ என்று புலம்புவார்கள்.
 
 
அப்படியும் சிலர்  கல்வியின் அவசியத்தை நாங்கள்  வலியக்கூறும்போது கேட்டுவிட்டு  குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புகிறார்கள். கூடியவரை சிறுவர் சிறுமிகளை  காய்கறி விற்கும்போதோ பூ விற்கும்போதோ கட்டிட வேலையில்  இருக்கும்போதோ பார்த்தால்  ‘ஏன் படிக்காம இந்த வேலைக்கு வந்தே?” என்று கேட்பது வழக்கம்.
 
சிலர்  சிரித்துவிட்டுப்போய்விடுவார்கள்”இதெல்லாம்  உனக்கு ஒரு பிரச்சினையா?” என்பதுபோல
 
சிலர், குடும்ப நிலை சொல்லி புலம்புவார்கள்.
 
எனக்குத் தெரிந்து காலனியில் இரண்டு கன்னட சிறுமிகள்
 பள்ளிக்கூடமும் போய் பூவிற்கும் வேலையும் செய்து அந்த சம்பாத்தியத்தில் புத்தகம் வாங்கிக்கொள்வதாக சொல்வார்கள். அவர்களின் எதிர்காலம் கண்டிப்பாக மணக்கும் அல்லவா? ////

>>>>>>
பலரும் கல்வி என்பதனை மிகவும் சரியாக தவறாகப் புரிந்து கொண்டுள்ளனர்.
கல்வி என்பது கலாசாலைகளுக்கோ அல்லது கல்லூரிகளுக்கோ அல்லது பல்கலைக் கழகங்களுக்கோ சென்று பயின்று பட்டம் பெறுவதல்ல.
நீங்கள் கூறும் இலக்கணத்தின்படி கவனித்தால் கடந்த 20 ஆண்டுகளில் இந்தியாவில் கல்லூரிக் கல்வி கற்றவர்களின் எண்ணிக்கை  உலக நாடுகளை ஒப்பிடும்பொழுது அதிகமே.  நம் தேசம் முன்னேறியிருக்கின்றதா ?  இல்லை ஊழல் இல்லாமலிருக்கின்றதா ? அல்லது தனி மனிதனின் வாழ்க்கையில் தரம் உயர்ந்திருக்கின்றதா ? பிணக்குகள் தணிந்திருக்கின்றதா ?
கல்வி என்பது தெளிவான சிந்தனையைத் தருவதே. முறைப்படி கல்வி கற்காக எத்தனையோ மேதைகள் இருக்கின்றனர். இருந்திருக்கின்றனர். பல்வேறு ஆராய்ச்சிகளிலும் தலை சிறந்து விளங்கினர். தனி மனித ஒழுக்கத்திலும் தலை சிறந்திருக்கின்றனர்.
தெளிவான சிந்தனையே உண்மையான கல்வி !

Granny Visalam
6:27 PM (58 minutes ago)

அன்னையும் தான் ஆரம்பித்த பள்ளியில் இந்தக்கருத்தைக்கொண்டே   மேலே உயர்த்தினார்
காந்திஜியும் கல்வி என்றால் வெறும் புத்தகம் படிப்பது மட்டுமல்ல  என்று மிக விரிவாக கூறியிருக்கிறார் 


_________________________________________________________________________________________________________
 "பாரத தேசமென்று பெயர்சொல்லுவார்...’ : கல்வி"
முற்றும்.   அடுத்து வருவது?

சித்திரத்துக்கு நன்றி:http://www.vikatan.com/entrichy/2012/10/ndriyz/images/school-1.jpg

இன்னம்பூரான்
26 04 2013

தணிக்கை செய்வதில் தணியா வேகம் 18 & 19: “வேற்றுமுகம்” & “அடியும் தடியும்”




தணிக்கை செய்வதில் தணியா வேகம் 18 & 19: “வேற்றுமுகம்” & “அடியும் தடியும்”
Innamburan S.Soundararajan Fri, Apr 26, 2013 at 4:59 PM



தணிக்கை செய்வதில் தணியா வேகம் 18 & 19: வேற்றுமுகம்& “அடியும் தடியும்”
Inline image 1

இன்று கணினி ஒத்துழைக்க மறுத்ததால்ஒரு சிறிய இடுகை. இந்த இழை விழுதுகள் விட்டுசீரிய அரசாங்க ஆளுமை பற்றியும் தணியா வேகம் எடுத்திருப்பது நல்லதே. மற்றும் பலர் கருத்து தெரிவிப்பதால்பயன் அதிகரிக்கிறது.

பொதுப்பணித்துறை தணிக்கைப் பற்றி கற்றுக்கொள்வதற்குள்பலதரப்பட்ட துறைகளை நேரில் சென்று தணிக்கை செய்யும் துறைஎனக்கு அதிகப்படி பொறுப்பாக தரப்பட்டது. நாம் நிர்வாகங்களை எவ்வளவு குறை சொன்னாலும்கேலி செய்தாலும்,சில முறைகளின் பயன் போகப்போகத்தான் தெரியும்.

ஒரு அதிகாரிக்கு திடீரன்று அதிகப்படி வேலை கொடுப்பதின் பின்னணி சுவாரஸ்யமானது. டிகிரி வாங்கின உடனேயே,சின்ன வயதில் பெரிய பொறுப்புகள்,  சலுகைகள்சமுதாயத்தில் ஒரு சிறந்த இடம்நல்ல சம்பளம் ஆகியவற்றைக்கொடுப்பதுஅவர்களை கெடுப்பதற்கும் வகை செய்யக்கூடும். கர்வம்அதிகார மோகம், 'தாட் பூட்'கலாச்சாரம் ஆகியவை தலை தூக்கலாம். உதாரணமாகநாங்கள் சிம்லா போனபோது (அந்தக்கதை கன ஜோர்!) அங்கே கaசு எடுத்து செல்லத் தேவையே இல்லை. எல்லாக்கடையும் கடன் கொடுப்பார்கள். அப்ப்டித்தானே ஆங்கிலேய அதிகாரிகள் கடனாளி ஆகிவிட்டனர். எங்கள் பிரின்சிபலோஒரு பில்லுக்கு ரிமைண்டர் வந்தாலும் தோலை உரித்து விடுவார்.


அவ்வாறேஎங்களுக்கு பணியும்பயிற்சியும் இணைந்தே வரும். சவால்களை சமாளிக்கிறானா என்று பார்ப்பார்கள். சுணங்கிறானா என்று பார்ப்பார்கள். அதிகப்படி வேலை கொடுப்பதும் ஒரு சவால் தான். இத்துடன் இன்னொரு அதிகப்படி.த்ரீ இன் ஒன்! ஆம்! எனக்கும்என் துறைக்கும் சம்பந்தமில்லாத ஹிந்திமொழி படிப்பிக்கும் துறை என் தலையில் கட்டப்பட்டதுஅது முற்றிலும் வேற்றுமுகம். பிறகு நடந்தவை - தமாஷ்புதிய அனுபவங்கள்உளவியல்மற்ற இடங்களிலும் நல்ல பெயர்கொஞ்சம்திவாஜி சொல்றமாதிரி அடி தடி!

இன்னம்பூரான்
18 01 2010


தணிக்கை செய்வதில் தணியா வேகம் -19: அடியும் தடியும்

தணிக்கையை கொஞ்சம் தள்ளிப்போடுவோம், 'ஆடிட் அப்ஜெக்ஷன்இழையில் பதில் வரும் வரை.

இந்த ஹிந்திப்படிப்புத்துறைக்கு நான் வைத்திருந்த செல்ல பெயர், “Hindi Cheating Scheme” ! அதன் இயற்பெயர், “Hindi Teaching Scheme”.  பாப்பா கையிலே ஒரு ஆழாக்குஅது உழக்கை விட பெரியதாஇல்லையா என்ற பட்டும் படாத பட்டிமன்றம்.  அதற்குள்ளே ஒரு மகாபாரத யுத்தம் என்ற வகையில்பத்து ஆசிரியர்களும்ஒரு பிராந்தியா அலுவலரும்'நித்திய கண்டம்பூரணாயுஸாககாலையும்மாலையும்இடையில் எல்லாவேளைகளிலும்போர்க்கள ஆயத்தமாக இருந்து வந்தார்கள்பொழுது விடிந்தால் புகார் காண்டம் தான்; 'கரணம் தப்பினாமரணம்என்று அனாமதேயக் கடுதாசு இலக்கியத்தலைவர்களாககாலம் தள்ளி வந்தார்கள்.

ஆட்சி மாறின உடனே, ஆளைப்பிடிடா என்று சேர்ந்தும்பிரிந்தும்அணிகள் பல வகுத்தும் என்னிடம் தூது வந்தார்கள்;கோள் சொன்னார்கள்ஆதாரமற்ற ஆதாரங்களை பிட்டு பிட்டு வைத்தார்கள். ஆனால்யாரைக்கேட்டாலும்பாடம் எடுப்பதைப்பற்றி காஷ்ட மெளனம். முந்திய Officer in Charge (அது தான் பதவி : சன்மானம் மாதம் தோறும் ரூபாய் எம்ப்ளது.)எனது நண்பர். அவரிடம் கேட்டேன். அவரின் கூற்று, " உன்னைக்கேட்க ஆளில்லைஅனாமதேய கடுதாசுக்களை தவிர.அவற்றை தடுக்க ஆண்டவனாலும் முடியாதுஇந்த பிச்சைக்காசுக்கு அதுவே அதிகப்படிசலுகைகளை அனுபவி"
பாய்ண்ட் மேட். நாட் டேகன்.

 ஒரு நாள்முன்னறிவிப்பு இல்லாமல்நாலு வகுப்புக்களுக்கு சென்று, 'வாத்தியார்/அம்மா வாராரோ என்று காத்துக்கிடந்தேன். மாணவர்கள் எல்லாருமே அரசு ஊழியர்கள் தானே. அடுக்கினார்கள்களத்துப்பட்டியலை. இங்கு தான் நிர்வாகத்திறன் கை கொடுத்தது..நான் குற்றப்பத்திரிக்கை கொடுத்ததுவகுப்புக்கு வாரா ஆசிரிய சிரோன்மணிகளுக்கு அல்ல. பிராந்திய அதிகாரியோ என் கட்டுப்பாட்டில் இல்லை. எனவேஅவருக்கு பணிவன்புடன்வாத்திமார்களுக்கு குற்றப்பத்திரிக்கை கொடுத்தோகொடுக்காமலோஅவர்களின் விளக்கம் வாங்கி 24 மணி நேரத்துக்குள் (ஒரு நாள் அல்ல.) அனுப்பவும் என்றுலிகிதம் எழுதிவிட்டுஅந்த வாத்தியார்களின் சம்பளப்பட்டியலைப் பூட்டி வைத்துவிட்டேன். இந்த முறையை சொல்லிகொடுத்தவர்ஒரு பழம்பெருச்சாளி. வாழ்க அவர் நாமம்!

அப்பறம் தான் சீட்டிங்க் தவிர்த்து டீச்சிங்க் செய்ய வந்தார்கள். நான் கண்டிப்பாக கோப்புக்களை மட்டும் பார்ப்பேன். ஹிந்தியாளர்களுக்கு நேர்முகம் மறுப்பு. என்னுடைய உதவியாளருக்கு வராத வதந்திகளே கிடையாது. அவரே நமக்கும் பாங்கன். ரொமப் கெடுபிடி என்று அஞ்சுகிறார்கள் என்று ஒரு நாள் சொல்லி அகமகிழ்ந்தார். விட்றுலாமோ?

ஒரு மீட்டிங்க் கூட்டினேன். அதற்கு முன்பிராந்திய அதிகாரியை தேனீர் அருந்த அழைத்தேன். என் கண்டிப்பான போக்கை அனுசரித்து அவர் தான் கொள்கை பிரகடனம் செய்யவேண்டும் என்றும்அது செய்ய மறுக்க அவருக்கு உரிமை உண்டு என்றும்எது எப்படி இருந்தாலும்தவறு செய்வோருக்கு தண்டனைப்பட்டியல் இது தான் என்றும் கூறினேன். பாவம் அவர். தேனீர் அருந்தவே இல்லை!.

மீட்டிங்க் சக்செஸ் என்று சொல்லத்தான் வேண்டுமாபழி அவர் மேல்என்றும் இல்லாத கண்டிப்புக்காக. தண்டனைப்பட்டியலை கூட கனிவுடன் அளித்ததற்காகஎனக்கு நல்ல பெயர். இந்ததுறைக்கு மேலாண்மைமத்திய உள்துறை இலாக்கா. கிட்டத்தட்ட ஆறு மாதங்களில்  நல்ல முன்னேற்றம். எனக்கு சென்னையிலிருந்து மாற்றல் வந்த போதுஅந்த துறையிலிருந்து கடிதம் வந்தது, " உங்களுக்கு ஆக்ஷேபணை இல்லை என்றால்ஆடிட்டர் ஜெனெரலிடம் சொல்லிஅதை நிறுத்தக்கேட்டுக்கொள்கிறோம். ஏனென்றால்இந்த திட்டத்தின் முன்னேற்றம் அடிபடும் என்று. " ஐயா! நன்றி ஆளை விடுங்கள். என்னுடைய முதலாளி ஆடிட்டர் ஜெனெரல். அவர் சினந்தால்எனக்கு தான் இன்னல்என்று எழுதி,தியாகம் செய்த இந்த துறை மறுபடியும் என்னிடம் வந்ததுஇன்னொரு கதை.

படிப்பினைகள்.

1. சின்ன ஆஃபீஸ்வேலைக்குறைவு. கேட்பார் இல்லை என்றால்ஆளுக்காள் நாட்டாண்மை.
2. நிர்வாகத்திறன் தர்மத்துக்கு கட்டுப்பட்டால் தான் எடுபடும்.
3.. அடி உதவறமாதிரிஅண்ணன் தம்பி உதவமாட்டார்கள்நிச்சயமாகசக உத்யோகஸ்தர்கள்.
4.. விதிமுறைசட்டம்திட்டம் எல்லாம் பண்புக்கும்நியாயத்திற்கும் அடுத்த படி தான்.
5. அனுபவம் கை கொடுக்கும்தவறு செய்யவும். அதை நியாயமாக கையாளும் பண்பை பயிற்சியால் அளிக்கமுடியும்.

பி.கு.

கீதாபெண்ணேஸ்வரன்கண்ணன்ஓம் ஐயா ஆகியோரின் ஊக்கத்திற்கு நன்றி. ஆடிட்டர் ஜெனெரல் மக்களின் நண்பனாக பணி புரிவது பற்றி ஆங்கிலத்தில் ஒரு நூல் வடித்து வந்தேன்மின்னாக்க பைத்தியம் பிடிக்கும் வரை.  பிறகு மற்றும் பல ஜோலிகள். மறுபடியும் விட்டுப்போன அந்த 'நூலைபிடிக்கவேண்டும்.

இன்னம்பூரான்
19 04 2013


2010/1/18 N. Kannan 
> யான் அன்றே நாவன்னா காவன்னாவிடம் இயம்பினேன், தாசில்தார் ஐயாவை அழைத்து வருவேன்
> என்று.
உண்மைதான். உம்ம எழுத்துதான் கொக்கின்னு இப்பப் புரியுது ;-)

க.>

devoo 
1/18/10



> ஆடிட்டர் ஜெனெரல் மக்க்ளின் நண்பனாக பணி புரிவது பற்றி ஆங்கிலத்தில் ஒரு நூல் வடித்து
> வந்தேன், மின்னாக்க பைத்தியம் பிடிக்கும் வரை.  பிறகு மற்றும் பல ஜோலிகள்.
> மறுபடியும் விட்டுப்போன அந்த 'நூலை' பிடிக்கவேண்டும்.<
நீங்களும், உங்கள் மின்னாக்கப் பித்தும் தீர்காயுஸாக இருக்கும்படி
பெருமாளை ப்ரார்த்திக்கிறேன். ஆங்கில ’நூல்’ அப்படியே இருக்கட்டும்;
தமிழ் ’இழை’ வளரட்டும்

தேவ்

Venkatachalam Subramanian 
1/22/10

படிப்பினைகள்.

1. சின்ன ஆஃபீஸ்வேலைக்குறைவு. கேட்பார் இல்லை என்றால்,ஆளுக்காள் நாட்டாண்மை.
2. நிர்வாகத்திறன் தர்மத்துக்கு கட்டுப்பட்டால் தான் எடுபடும்.
3.. அடி உதவறமாதிரிஅண்ணன் தம்பி உதவமாட்டார்கள்நிச்சயமாகசக உத்யோகஸ்தர்கள்.
4.. விதிமுறைசட்டம்திட்டம் எல்லாம் பண்புக்கும்நியாயத்திற்கும் அடுத்த படி தான்.
5. அனுபவம் கை கொடுக்கும்தவறு செய்யவும். அதை நியாயமாக கையாளும் பண்பை பயிற்சியால் அளிக்கமுடியும்.

ஓம்.
அரசு அளித்துவரும் இனாம்களில் முதியோர் உதவித் தொகை, விதவைகள் உதவித்தொகை,கணவனால் கைவிடப்பட்டவருக்கு உதவித் தொகை போன்றவை தகுதியானவை.
ஒவ்வொரு வட்டத்துக்கும் எத்தனை பேருக்கு வழங்கலாம் என்பது தனித்தனியே நிர்ணயிக்கப் பட்டிருக்கிறது.. பயன் பெறுவோர் கால வோட்டதில்  மரணம், அல்லது வேறு இடத்திற்கு தன் கணக்கை மாற்றிக் கொண்டதால் ஏற்படும் காலி யிடங்களுக்கு காத்திருப்போர் பட்டியலில் இருந்து தேர்வு செய்து முதிர்ச்சியின் அடிப்படையில் பூர்த்திசெய்யப் படும்.

முதியோர் உதவித் தொகை பெறுவதற்கு உரிய தகுதி என்பது அவருக்கு ஆண் வாரிசுகள் இல்லை என்பதை உறுதி செய்து சான்றுகள் பெற்ற பின்னர் வழங்கப் பட்டிருக்கும்.
தலைமை அமைச்சரின் தனிப்பிரிவில் ஒரு மனுக் கொடுக்கப்பட்டிருந்தது.(Chief minister's cell). ’ஒரு கிராமத்தில் வசிக்கும் 15 பேர் மூதாட்டிகள் அரசினை ஏமாற்றி வாரிசுகள் வசதியாக இருப்பதை மறைத்து அரசாங்கத்திலிருந்து முதியோர் உதவித் தொகை(Old age pension) பெறுகிறர்கள்’என்பது அந்த மனுவினில் கண்ட செய்தியாகும்.
இந்த மனுவின் மீது உடனடி நடவடிக்கை மேற்கொண்டு நடிவடிக்கையின் முடிவு பற்றிய தகவலை மனுதாருக்குத் தெரிவிப்பதுடன் முதலமைச்சர் தனிப் பிரிவுக்கும் இறுதி அறிக்கைத் தகவல் தரவேண்டும். கால அவகாசம் 15 தினங்கள்.

அந்த மனுவில் கண்ட மூதாட்டியரின் கணக்கு ஆரம்பிக்கப்பட்டு 7 வருடங்கள் ஆகியுள்ளன. அவர்களுக்கு மு.உ.தொ.ஒப்பளிக்கப்பட்ட ஆணைகள் அடங்கிய முடிவுற்ற கோப்பினை வைப்பறையினின்றும் தேடி எடுத்துப் பார்த்ததில் அந்த மூதாட்டியருக்கு வாரிசுகள் ஏதும் இல்லையென்று குறிப்பிடப்பட்டிருக்கின்றது. அந்த மனுவினைக் கொடுத்தவரும் அந்த மூதாட்டியரும் ஒரே ஊர்க்காரர்கள்.
ஒரு குறிப்பாணை அனுப்பி மனுதாரையும் மூதாட்டியர்களையும் ஊராட்சி மன்ற அலுவலக்த்தில் ஒரு நாள் குறிப்பிட்டு, வருமாறு  அழைத்தேன். முடிவுற்ற ஒப்பளிப்பு கோப்பும் கொண்டு சென்றிருந்தேன்.ஊராட்சித் தலைவரையும் முன்னிறுத்தி அவர்களுடன் பேசினேன்.கள்ளச் சிரிப்புடன் மனுதாரர் இஞ்ஞாசி, கிழவிகளைப் பார்த்து எக்காளம் காட்டிச் சைகையில் ஏதோ உணர்த்திக் கொண்டிருந்ததைப் பார்த்தேன். 

மனுவில் கண்ட செய்தி உண்மையென நிறுவப்பட்டால் ஏழு ஆண்டுகளுக்கு அவர்களுக்கு வழங்கப்பட்ட உதவித் தொகை முழுமையுமாக திரும்பவும் வசூலிக்கப்படவேண்டும். உடுத்தியிருக்கும் சேலையும் அலுமினிய குவளையும் தட்டும் தவிர வேறு எந்தப் பொருளும் அவர்களுக்கு இல்லை.

இஞ்ஞாசிதான் அவர்களை அழைத்துவந்து உதவித்தொகை வழங்க உள்ளூர்வாசி என்ற முறையில் முதலில் ஏழு ஆண்டுகளுக்கு முன்னர் பரிந்துரை செய்திருக்கிறான். அவன் கையெழுத்து மட்டும் இருந்தது முந்திய கோப்பினில். ஒரு வாக்குமூலம் அவனுடைய மனுவின்படிப் பதிவு செய்தேன். கையெழுத்துகளை ஒப்பிட்டுப் பார்த்ததில் பரிந்துரைத்ததும் பழிசொல்வதும் ஒரே நபர்தான் என்பதும் கிழவிகளிடம் மாதாமாதம் பங்குபெறுவதில் தபால்காரர் முதலாவதாகவும் பின்னர் இஞ்ஞாசியும் தொடர்ந்து முனைந்திருக்கிறார்கள். சில கிழவிகள் மறுப்புடன்  முணுமுணுக்கவும், நேரில் மிரட்டியது போலவே முதலமைச்சர் தனிப்பிரிவிற்கும் மனுச் செய்துள்ளான்.
இதற்கு முன்னர் ஒரு நாள் நேரடியாக அந்த கிராமம் சென்று மூதாடியரைச் சந்தித்தும் அவ்வூர் பெரியவர்களிடம் விசாரணை மேற்கொண்டேன். மூதாட்டியர் மதிய உணவுக் கூடத்தில் கிடைக்கும் உணவை நம்பித் தான் உயிர்வாழ்கிறார்கள், உதவுவோர் எவரும் இல்லை என்பதையும் பராரிகளை துன்புறுத்துகிறான் என்பதையும் தெரிந்து கொண்டேன்.
இத்தகவலை ஊராட்சிமன்றத் தலைவரிடம் பேசியும் ஒப்பளிப்பு கோப்பில் கண்ட பரிந்துரையாளரும் ,மனுதாரும் ஒருவரே என்றும் உறுதிப்படுத்திக் கொண்டபின் அவரிடம் மேலும் ஒரு வாக்குமூலம் வாங்கினேன்.இந்த மூதாட்டீயர் 15 பேருக்கும் இதுவரை வழங்கப்பட்ட முதியோர் உதவித் தொகையாகிய 200x15x7= ரூபாய்  21000/ -       உடனடியாக கருவூலத்தில் செலுத்திவிடுகிறேன் . தவறினால், என்னுடைய கதவிலக்கம் 13-1, கீழ்த்தெருவில் உள்ள மச்சுவீட்டின் மீது வில்லங்கப்படுத்தி ஈடாகக் காட்டுகிறேன்.
கையெழுத்தினைப் போட மறுத்தான் இஞ்ஞாசியிடம்.முடிவுற்ற கோப்பினை நேரில் காட்டி அவன் முன்னர் தந்த பரிந்துரை வாக்குமூலமும், அவன் வழங்கிய சான்றாவணங்களும்  காட்டிய பின்னர் மன்றத்தலைவரின் கால்களில் விழுந்து தன்னை விடுவிக்குமாறு வேண்டினான். தலைவர் அவனுக்கு புத்திமதி சொல்லி மூதாட்டிய்ர் ஒவ்வொருவருக்கும் தலா ஐம்பது ரூபாய் வழங்குமாறு கூறினார். கையோடு வைத்திருந்த பணத்தில் தலைவரின் ஆணைப்படி வழங்கிவிட்டு ’தன்னுடைய புகார் மனு தவறாக தரப்பட்டுவிட்டது. அந்த மூதாட்டியார் வாரிசு அற்றவர்கள்தான். தன்னுடைய பிழைபட்ட புகார் மனுவின் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கவேண்டாம்’ என்று ஒரு மனு கைப்பட எழுதிக்கொடுத்து அதன் சாட்சியாக ஊராட்சித் தலவரின் கையொப்பமும் பெற்று மேல் நடவடிக்கை ஏதும் தேவை இல்லை என்பதை உரிய விசாரணை வாக்குமூலங்களுடன் அரசுக்கு அறிக்கை செய்தேன்.
ஓம்.

Tirumurti Vasudevan 
1/22/10

இதான் ரொம்ப அவசியமான நீக்குப்போக்கா?
வாழ்த்துக்கள்.
சென்னையில் சந்தித்தபோதே உங்களுக்கு அனுபவங்கள் நிறைய இருக்கிறது.
அனுபவங்களை எழுதுங்கள் என்றேன். இப்போதுதான் வேளை வந்து இருக்கிறது.
இழுத்து வந்த இ க்கு நன்றி.
:-))
திவாஜி
PSJ Sigamany 
1/22/10

9 pm அன்று, Venkatachalam Subramanian <v.dotthusg@gmail.com> எழுதியது:
அரசுப்பதவியில் இருந்து ஓய்வு பெற்ற பின் இவ்வாறு பணி விவரங்களை வெளிப்படுத்துவது அழகன்று.

Tirumurti Vasudevan 
1/22/10

ஏன்? எந்த ரகசியம் இப்போது வெளி வந்துவிட்டது?
என்னவெல்லாம் அந்நியாயம் நடக்குது என்பதெல்லாம் இப்போ ஓபன் சீக்ரெட்.
அதில இப்படியும் சிலர் இருக்கிறது எனக்கு ஆறுதலா இருக்கு.

திவாஜி

Innamburan Innamburan <innamburan@googlemail.com>
1/22/10

ஓம் ஐயாவின் இடுகை
 
முதியோர் உதவித் தொகைவிதவைகள் உதவித்தொகை, கணவனால் கைவிடப்பட்டவருக்கு உதவித் தொகை போன்றவை ஒவ்வொரு வட்டத்துக்கும் எத்தனை பேருக்கு?…’ என்ற விதியே தவறு; தன்னிச்சை முடிவுக்கு அடிகோல்;தகுதி அடிப்படை அற்றது. தலைமை அமைச்சரின் தனிப்பிரிவு இங்கெல்லாம் தலையிடாமல் மாவட்ட ஆட்சி நடப்பது தான் முறை. அளவுக்கு மிஞ்சினால் அமிருதமும் விஷம். இது அதிகாரமையம் அமைக்க மட்டுமே உதவும். ஆனால்ஓம் ஐயாஇந்த கட்டுப்பாட்டிற்குள் தான்.  நீதியை நிலை நாட்டியிருக்கமுடியும். அவர் அருமையான தணிக்கை செய்து உண்மையை கண்டுபிடித்து இருக்கிறார். அது நல்லதே. ஆனால்இஞ்ஞாசியை கிரிமினல் கேஸ் போட்டுசட்டப்படி தண்டனை கிட்ட வாய்ப்பு இருந்தது. அதை நழுவ விடஅவருக்கோமன்றத்தலைவருக்கோ, . தலைமை அமைச்சரின் தனிப்பிரிவிற்கோ சட்டப்படி தகுதி [discretion] இல்லை. இது என் தாழ்மையான கருத்துநடைமுறைக்கு ஒவ்வாமல் இருக்கலாம்.

உள்ள சட்டங்களைமுதற்கண்ணாகநாம் மதிக்கவேண்டும்.
*