Monday, April 29, 2013

எப்படி ஆடினரோ? - 2 & 3



எப்படி ஆடினரோ? - 2 & 3

Mon, Apr 29, 2013 at 12:57 PM



எப்படி ஆடினரோ? - 2 & 3
Inline image 1

(...சங்கக்காலத்தை பற்றி கேட்டால், பீடிகை பலமாக இருக்கிறதே என்றா கேட்கிறீர்கள்? அக்காலத்தில் நாட்டியம் மங்கலம் நிறைந்து வாழ்ந்தது. ஆடல் இலக்கணம் காண வேண்டுமா? ... “...its baroque splendour and by the charm and magic of its lyrical parts belong to the epic masterpieces of the world...”

Kamil Zvelabil (1956)  Tamil Contribution to World  Literature.    


“...தியாகராச நகர் வாணிமகாலில் சென்னை பாரதி சங்கத்தின் சார்பில்....திருமதி.ருக்மணி அருண்டேல் அவர்கள் கூறுதாவது:

  “ ஒரு முறை தமிழ்த் தாத்தா உ.வே.சாமிநாதையர் அவர்களை நான் சந்தித்த போது, நாட்டியக்கலையில் நான் பெரும் திறமை என்று பெயர் பெற்றதை குறித்துப் பாராட்டிவிட்டு, ‘அம்மா, நீ சிலப்பதிகாரம் படித்திருக்கிறாயா?’ என்று கேட்டார். நான், ‘இல்லை, ஐயா’ என்று கூறினேன். அவர் மிகுந்த ஏமாற்றத்துடன், ‘நாட்டியக்கலையில் பெரும்புகழ் பெற்றிருந்தும், தமிழில் உள்ள ஆதி நாடகக் காப்பியமான சிலப்பதிகாரத்தைப்பற்றி உனக்கு ஒன்றுமே தெரியாதிருப்பது வியப்பைத் தருகிறது. தயவு செய்து இனியாவது அதைப் படியுங்கள்’ என்று கூறினார்.” 
~ [ ம.பொ.சி.(1990) ‘சிலப்பதிகாரத்தில் யாழும் இசையும்’: சென்னை: பூங்கொடி: ப: 37]

(தொடரும்)
Geetha Sambasivam 
7/28/10

தமிழ்த்தாத்தாவோட அருமந்த சீடர் திருவாளருக்குப் பெண்பால் திருவாட்டி என்று தான் சொல்லுவார். அவரைப் பார்த்திருப்பீங்களே?  திருமதன், திருமதி, நல்லாத் தான் இருக்கு! ஆனாலும்................

அப்புறம் க்ராஸ் ஸ்டிச் நான் போட்டதில்லை, அதெல்லாம் என் அம்மாவோட காலத்திலே, போட்டு பிரேம் பண்ணி வீட்டில் இடமே இல்லாம மாட்டி வச்சிருப்பாங்க, பார்த்திருக்கேன்! தேனீக்கு இது போதும்னு நினைக்கிறேன்.  லேடிக்கு இப்போவும் லேடன் தான் சொல்றோம். எங்க வீட்டுக் கொலுவிலே இரண்டு பேரும் உண்டு. லேடன் தான் போனவருஷம் கீழே விழுந்துட்டார். ஒட்ட வைக்க முடியுமா பார்க்கணும்.

2010/7/19 Innamburan Innamburan <innamburan@googlemail.com>
Tthamizth Tthenee 
7/28/10

திருமதி கீதாம்மா அவர்களுக்கு  சிறு வயதில் நான் ஒரு குறிப்பிட்ட காலம் வரையில்
ஆண் பெண்  பேதம் தெரியாமல் வளர்ந்தேன்
நான்  யாரிடம் பழகுகிறேனோ அவர்களிடமே  சந்தேகம் கேட்பேன்
நீ      டாவா.......  டீயா.  என்று
டா என்றால் ஆண்
டீ என்றால் பெண்
இப்படித்தான்  நான் அடையாளம் கண்டேன்
இப்போது என் பேரன்  (மூன்று வயதாகிறது)  வீட்டிற்கு யார் வந்தாலும்  பெண்ணாயிருந்தால்
உங்க  ஹஸ்பண்ட் பேர் என்ன என்கிறான்
ஆணாயிருந்தால்  உங்க வைப் பேரு என்ன என்கிறான்\
குழந்தைகளுக்கு விழிப்புணர்வு அதிகம் இந்தக் காலத்தில்
நான் இன்னும் குழந்தைதான்
க்ராஸ் ஸ்டிச்  பற்றி தெரியவில்லை
அன்புடன்
தமிழ்த்தேனீ


Geetha Sambasivam 
7/28/10

க்ராஸ் ஸ்டிச் போடனு தனியாச் சவுக்கம்னு சொல்லுவாங்க மேட்டி க்ளாத்?? சரியாத் தெரியலை, அப்படி ஒரு துணி, கலர் நூல்கள், ஊசி வேணும், அம்மா நிறையப் போட்டுப் பார்த்திருக்கேன். மயில், கிளி, ஊஞ்சல், கிருஷ்ணன் எல்லாம் போடுவா. துணியில் போடும் கைத்தையல், பூத்தையல்னு சொல்லலாமோ? அந்த வேலைப்பாடுகள். அவற்றை கிராஸாகப் போட்டுச் சேர்ப்பார்கள். அதைக் கண்ணாடி போட்டு வீட்டில் மாட்டுவதும் உண்டு. என் அம்மாவின் பிறந்தகத்தில் அவங்க சகோதரிகள்   போட்டவை சுவர் பூராவும் மாட்டி இருக்கும்.
meena muthu 
7/28/10

Flower-740-L-Free-Design.jpg
க்ராஸ் ஸ்டிச் என் அண்ணி ஏராளமாக வித விதமாக (கண்ணாடி பீரோவிற்கும்
கவர் )செய்து  போட்டிருக்கிறார்கள்! மிக அழகாக இருக்கும்!எனக்கும் கத்து கொடுத்து நானும்  சின்ன சின்னதாய் போட்டிருக்கிறேன்.மிக அழகாக இருக்கும்!  
Geetha Sambasivam 
7/28/10

அட???? இப்போவும் உண்டா?? 
Tthamizth Tthenee 
7/28/10

ஆஹா அருமை
என்னுடைய பெரிய பெண்  மிகவும் நன்றாக  இந்தக் கலையைச் செய்வாள்
Innamburan Innamburan <innamburan@googlemail.com>
7/28/10

கண்ணால் கண்டதையும் காணாதவர் தமிழ்த்தேனீ. சித்திரத்தை எழுத்தில் வடித்தார், தெளிவாக திருவாட்டியார். சித்திரத்தையே முன் வைத்து, என் தங்கயையும், லேடனையும்  கொணர்ந்தார் மீனா முத்து ஆச்சி. இனி ஆடலாம்.
இன்னம்பூரான்.


meena muthu 
7/28/10

:)))

2010/7/28 Innamburan Innamburan <innamburan@googlemail.com>
--
Innamburan Innamburan <innamburan@googlemail.com>
7/28/10

எப்படி ஆடினரோ? - 3

     (“... தமிழில் உள்ள ஆதி நாடகக் காப்பியமான சிலப்பதிகாரத்தைப்பற்றி உனக்கு ஒன்றுமே தெரியாதிருப்பது வியப்பைத் தருகிறது...” ) ‘ஆடாமல், அசையாமல் வாடா! கண்ணா’ என்ற மெட்டு கேட்கும்போதே, தாளம் போடுகிறோம். அவன் ஆடி, அசைந்து வந்து மயக்கினால், நாமும் கூட ஆடுவோம். அன்றும் அப்படித்தான், குரவைக்கூத்தில்; இன்றும் அப்படித்தான் தொலைக்காட்சியில், அரங்கில் காட்டுக்கூச்சலோடு நவீன டப்பாங்குத்து ஆடினால், சபையில், யுவனும், யுவதியும், குட்டியும், குட்டனும், பாட்டனும், பாட்டியும், சங்குச்சக்ரசாமி போல ‘ஜிங்கு ஜிங்கு’ ந்னு ஆட்றா! இத்தனைக்கும் ‘டம்ரூ பாஜே’ ந்னு தாண்டவம் ஆடினது சிவபிரான். ஆடிய பாதமோ நர்த்தனசுந்தர நடராஜர். மஹாவிஷ்ணு ஆடினதா பக்தி இலக்கியம் சொல்லலே. ரைட்டா, தேவ்? மயிலாட்டமெல்லாம் எப்டி கீது? ஹரிகி சங்காத்தமா? வேர்ட் எல்லாம் இப்டி விழுது. அவருக்கென்ன. என்ஜாய் என்பார். அது சரி. ஒரு சமயம் நம்ம கண்ணனை தான் சொல்றாளோ? கலித்தொகையில் ஒரு க்ளு இருக்காப்லெ. 

     சங்க இலக்கியங்களில் கலித்தொகையும் பரிபாடலும் ஒரு தனித்துவம் வாய்ந்தவை. அவற்றை இசையோடு பாடலாம். ‘கல்வி வலார் கண்ட கலியின்’ அமைப்பே, பரதநாட்டியத்தின் சொல்லுக்கட்டுப்போல. துள்ளலோசை. தரவுக்கு பிறகு, தாழிசை மூன்றில் தொடங்கி, இரண்டு அல்லது மூன்று அசைகளால் ஆன தனிச்சொல் பின் தொடர, அதே வழியில் சுரிகதம். இளவழகனார் சொல்றார், ‘...முதலில் தரவுப்பகுதியில் குறிப்பாகத்தோன்றிப்பின், தாழிசைகளில் தெளிவாக விளக்கப்பட்ட கருத்துக்கள், இத்தனிச்சொல்லின் வழி சாறு போற் பிழிந்திறுகி, இறுதிப்பகுதியான் சுரிதகத்தின் பயன் தோன்றி நிற்கும்...’ பரத நாட்டியத்தில் அரைமண்டியிலிருந்து தில்லானா வரை என்பது போல இல்லை? 

   கலித்தொகையின் காலம், பெரிய அளவு கோலில் வைத்துப்பார்த்தால், கிட்டத்தட்ட சிலப்பதிகாரத்திம் காலம் எனலாம். அக்காலத்தில் பிரபலமான மக்கள் ஆடல் பாடல் குரவை. 

     ‘...ஆரவுற்று எமர், கொடை நேர்ந்தார் - அலர் எடுத்த
         ஊராரை உச்சி மிதித்து,
                                ஆங்குத்
         தொல்கதிர்த் திகரியான் பரவுவதும் -ஒல்கா
         உரும் உறழ் முரசின் தென்னவற்கு
         ஒருமொழி கொள்க, இவ் வுலகுடன், எனவே [75-80]
என்றல்லவோ குரவை ஆடிப்பாடுகிறார்கள்.

க்ளு இங்கு உள்ளுறை என்க.
(தொடரும்)
devoo 
7/28/10

>> மஹாவிஷ்ணு ஆடினதா பக்தி இலக்கியம் சொல்லலே. ரைட்டா,<<
வெண்ணெய்க்காடும் பிரான் இல்லாத விண்ணகரம்  எங்கே உள்ளது ?
‘குடமாடு கூத்தனை வலத்தே வைத்து ...’ என நாயன்மார்களும்  பாடியுள்ளனரே !
எம்பெருமான் குடமாடியதையும், குரவை கோத்ததையும்  தமிழ் இலக்கியம் பேசும்.
ராஸ மண்டல மத்தியில் அவன் ஆடாத ஆட்டமா !!   தான் ஆடுவதோடு  நில்லாமல்
நிஸ்சலனமாக  ஒதுங்கி வாழும் கைவல்ய நிஷ்டர்களையும்  ஆட்டிப்படைக்கிறானே.

க்ஷீராப்தியின் உறக்கமும் அலைகடலின் ஆட்டத்துக்கு  இடையில்,
அதுவும்  நெளிந்து கொண்டே  இருக்கும் ஒரு பாம்புக்கு மேல்.
தென்னகத்தில் சிவபிரானுக்கு நடராஜன் என்று பெயர்;
கண்ண பிரானை வடபுலத்தில் நடவரலால் என்பர்.

தேவரீர்கள் ஸூத்ர ரூபத்தில் வெகு சுருக்கமாக அருளிச்செய்துவிட்டு அடியேனை
உபந்யாஸம் செய்ய வைத்துவிட்டீர்கள்; இருக்கட்டும், அசடுகள் எப்போதும்
மாட்டிக்கொள்ளும்


தேவ்
Tthamizth Tthenee 
7/28/10

 திரு தேவ் அவர்களே  இன்னம்புரான் அறியாத  ராசக்ரீடையா?
நம்மை  வேண்டுமென்றே  வம்புக்கிழுக்கிறார்
அன்புடன்
தமிழ்த்தேனீ
:
devoo  
7/29/10

>> ‘குடமாடு கூத்தனை வலத்தே வைத்து ’ என நாயன்மார்களும் ...<<

இது  தவறு, ‘குடமாடு  கூத்தனை இடத்தே வைத்து’ என்று இருக்க வேண்டும்.

தில்லையின்  இறைவன் கூத்தபிரான்; திருக்குளந்தையின்  இறைவன்
மாயக்கூத்தன்.

தில்லையில் காளிக்குப் போட்டியாக   ஈசனாரின் கூத்து ; திருக்குளந்தையில்
மாயக்கூத்தர்  அச்மஸாரனுக்குப் போட்டியாக . கேரளத்தின் மோஹினி ஆட்டத்தை
மோஹினி   அவதாரத்தோடு  தொடர்பு படுத்துவர்



தேவ்
Geetha Sambasivam 
7/29/10

காளிங்க நர்த்தனத்தை விட்டுட்டீங்களே? 
devoo 
7/29/10

> காளிங்க நர்த்தனத்தை விட்டுட்டீங்களே? [?][?]<

ஆம், அம்மா

பாம்புத்தலைமேல் நடமிடும்  பாதத்தைப் புகழாத கவிகள் உண்டா ?
உங்கள்  வலைப்பூவில் ஊத்துக்காடு ஆலயத்தின் அற்புதமான அந்தச் சிற்ப
அதிசயத்தை
ஏற்கெனவே எழுதி இருக்கிறீர்களே ?

 http://sivamgss.blogspot.com/2007/02/217.html


தேவ்
Dhivakar 
7/29/10

யார்தான் ஆடினரோ?! யார் யாரெல்லாம் ஆடினரோ..
http://www.poetryinstone.in/lang/ta/2009/08/19/first-year-anniversary-post.html

venkatachalam Dotthathri v.dotthathri@gmail.com via googlegroups.com 
7/29/10

ஓம்
நடவரலால கிரிதர கோபால ஜெய் ஜெய் யசோத நந்தலால
வெ. உப்பிரமணியன் ஓம்.
______________
இன்னம்பூரான்
29 04 2013

Sunday, April 28, 2013

அன்றொரு நாள்: ஏப்ரல் 30: கண்ணியம்


அன்றொரு நாள்: ஏப்ரல் 30: கண்ணியம்

Innamburan Innamburan Wed, May 2, 2012 at 3:19 AM

அன்றொரு நாள்: ஏப்ரல் 30:
கண்ணியம்
செவிவாய் செய்தி. இந்தியாவின் பிரபல நாளிதழ் ஒன்றுக்கு, ஜனவரி 26, 1950 அன்றைய பதிப்பை வெளி கொணருவதில் சங்கடம், தாமதம், பிரச்னை, காரியாலயத்தில் கோபம், தாபம் எல்லாம். ஆங்கில இதழ். ‘இண்டியன் யூனியன்’ என்பதற்கு பதிலாக, ‘இந்தியன் ஆனியன்’ என்ற சொற்றொடர், கொட்டை கொட்டை எழுத்தில், முதல் பக்கத்தலைப்பில்! ஆயிரக்கணக்கான பிரதிகள் கொளுத்தி அழிக்கப்பட்டனவாம். அந்த மாதிரி ஒரு மஹாபுருஷரின் ஜன்மதினம் இன்று என்று இணையதளத்தில் தென்படுகிறதே என்று, அவரை பற்றி விலாவாரியாக எழுதின பிறகு, அவருடைய திருமகனே மற்றொரு இணையதளத்தில் வேறு தேதியை குறிப்பிடுகிறார் என்பதை பார்த்தேன். என் செய்வது? ‘அடியை பிடிடா, பாரதபட்டா!’ என்று என்னையே நொந்து கொண்டு, இன்றைய தினம் கண்ணியத்துக்கும் வாய்மைக்கும் உகந்த நாளாக, சில இடங்களில் கொண்டாடபடுகிறது என்பதை பதிவு செய்து விட்டு, ஓடி விடுகிறேன்.
அமெரிக்காவின் மேரிலாந்து மாநிலத்து கவர்னரின் இதழியல் காரியதரிசியான ஹிர்ஷ் கோல்ட்பெர்க், ஏப்ரல் 30 தான் ‘கண்ணியத்துக்கு உகந்த நாள்’ என்று நான்கு வருட ஆய்வுக்கு பின் அறிவித்தார். ஏப்ரல் முதல் தேதி ஏமாந்தவர்களுக்கு, இது ஆறுதல் தினமென்க. போதாக்குறைக்கு, ஏப்ரல் 30, 1973 அன்று தான் கண்ணியத்தை, மண்ணீயமாக்கி, வாய்மையை பொய்மையாக்கிய அமெரிக்க ஜனாதிபதி ‘திரு’ ‘திரு’. நிக்சனார் தன்னுடைய ‘மண்ணீய’/‘பொய்மை கூஜாக்கள் இருவர் வேலையிலிருந்து விலகியதாக அறிவித்தார். அந்த ஹிட்லரும், அவனுடைய ‘ஒரு நாள்’ மனைவியும்/‘பலநாள் சினேகிதியுமான ஈவா பிரானும் தற்கொலை செய்து கொண்ட தினமும், ஏப்ரல் 30, 1945.
இன்னம்பூரான்
Inline image 1
உசாத்துணை:

அம்பா! நீ இரங்கலாகாதா?


அம்பா! நீ இரங்கலாகாதா?
Innamburan Innamburan Fri, Sep 28, 2012 at 7:24 AM

அம்பா! நீ இரங்கலாகாதா?


*
1941: ஒரு நாள் அதிகாலை. கும்பகோணம் ஐயங்கார் தெரு. மேற்கு மூலையில் சம்பத்து மாமாவோட திண்ணைப்பள்ளி. கிழக்கு மூலையில் கறுப்பு ராமாஞ்சு வீடு, அண்ணா பட்டு ஸ்வாமிகளுடன்.  அவர் தான் பிரபல வைணவ சான்றோன் வைகுண்டவாசி அக்னிஹோத்ரம் ராமானுஜ தாத்தாச்சாரியார். என் அப்பாவுக்கு மாப்பிள்ளைத்தோழன், அவர் கல்யாணத்தின்போது. எங்கள் குடும்பத்திற்கு ஆச்சார்யன். அருகாமையில் இருந்த காஞ்சி காமகோடி பீடாதிபதி பகவத்பாதாள் ‘பெரியவா‘ சந்திரசேகரசரஸ்வதி மகானின் தூதுவர், அம்பேத்காரிடம். தெருவின் மத்யபாகத்தில் தான் சிவப்பு ராமாஞ்சு வீடு. அவர் தான் வைணவ சான்றோன் வைகுண்டவாசி ஸுதர்ஸனம் வாஜபேயம் கோடிகன்னிகாதானம் ராமானுஜ தாத்தாச்சாரியார். சாக்ஷாத் என் வேத அத்தை ஆத்துக்காரர். நாலு வேதம் அத்யனனம் பண்ணவர். கரதலையாக ஒப்பிப்பார், மனசு இருந்தால். எனக்கு ‘பழேத்து நாமத்தின்‘ அருமையை உணர்த்தியவர். சில காலம் முன்பு அவரது புத்திரர்கள் அவரது நூற்றாண்டு விழாவை கொண்டாடினார்கள். அவர் தான் இந்த பாமர கீர்த்தியின் கதாநாயகனின் தோப்பனார். இரண்டு ராமாஞ்சுவும் காஞ்சி காமகோடி மடத்துக்கு வாடிக்கையாக போய் வருவார்கள். 
நம் கதாநாயகன், குளிச்சி,கிளிச்சுப்பிட்டு, அழகிய திருநாமத்துடன், சந்தியாவந்தனம் எல்லாம் செய்து விட்டு, கதிரவன் ‘இளநீர்’  கதிர் விடும்போதே, ஓடி விடுவான். சம்பத்து மாமாவோட திண்ணைப்பள்ளிக்கு, ரகுவீரகத்யம் கற்றுக்கொள்ள. ஆத்துக்கு வந்து அப்பாவிடம் சந்தஸுடன் ஒப்பிக்கவேண்டும். மயில் சிலிர்த்துக்கொள்ளுமே, அந்த மாதிரி பீற்றிக்கொள்வான், மற்றவர்கள் கேட்டால். எனக்கு பொறாமையாக இருக்கும். எனக்குத்தான் ஸத்ருக்ன கத்யம் கூட தெரியாதே. ஒரு நாள் நானும் திண்ணைப்பள்ளிக்குப் போனேன், இவன் கொட்டத்தை அடக்க வேண்டும் என்று. சம்பத்து மாமா ‘நீ வரக்கூடாது. உங்கப்பன் ஏன் உனக்கு பூணல் போடவில்லை’ என்று கேட்க, நான் ‘நீங்க தான் போட்டுவிடுங்கோளேன்’ என்று சொல்லப்போய், சிவப்பு ராமாஞ்சுக்கு ரொம்ப திருப்தி. ஆனால், என்னை கோவிச்சிண்டார், அத்தை கிளுகிளுக்க. அத்தைக்கு எல்லாமே கேலி. அதான் பிள்ளையாண்டானுக்கும் வந்துடுத்து. அக்கா ராஜம்மா கல்யாணத்தின் போது தான் இவனுக்கு பூணுல் போட்டார்கள். மறுநாள் காலையில் அத்திம்பேர் அவனை அக்னிசந்தானம் பண்ணணும் வாடான்னு கூப்டறார். அவன் வாயை பொத்திண்டு அழறான்! பூணலை காணும்! என் தாத்தா இன்னம்பூர் பட்டாமணியம் ராஜம் அலையஸ் ஸெளந்தரராஜ ஐயங்கார் சமயசஞ்சீவி. டக் என்று தன் பூணலை கழற்றி அவனுக்கு அணிவித்து பேரனை உய்வித்தார். தாத்தாவைப்போல பேரன்!
*
1945: நன்னா பாடுவான், கீ கொடுத்தமாதிரி. கொஞ்சம் ஙொண ஙொண என்று மூக்கால் பாடினாலும். ஆலாபனையெல்லாம் பிரமாதம். பிடித்த கீர்த்தனை: அம்பா! நீ இரங்கலாகாதா? இப்போ எனக்கு பொறாமை ஜாஸ்தி. எனக்கு தெரிஞ்சதெல்லாம் எட்டாம் வாய்பாட்டை முணமுணப்பது போல் ‘பனை மரமே! பனை மரமே!  ஏன் வளர்ந்தாய் பனைமரமே?’ என்ற ஒப்புவித்தல். அவன் பாடினால் ரசிப்பார்கள். நான் பாடினால் சிரிப்பார்கள். அப்ப வந்த இன்ஃபீரியாரிட்டி காம்ப்ளெக்ஸ் இன்னும் போகவில்லை. இன்ஃபீரியாரிட்டி காம்ப்ளெஸ்ஸுக்கு இன்னொரு பிரமேயம். எனக்கு இரண்டுங்கெட்டான் வயசு. அவனுக்கு அரும்பு மீசை பருவம். ரகசியமாக வசீகர கலை என்ற புத்தகம் படிப்பான். கொஞ்சம் சொல்லுவான். ரொம்ப மறைச்சுடுவான். எப்போ பார்த்தாலும் பொண்டுகளை பற்றித்தான் பேச்சு. பொறாமையாக இருக்கும்.
*
1951: நான் தர்மமிகு சென்னையில் பட்டணப்பிரவேசம் செய்த வருடம். அந்த அரிய நிகழ்வுக்கு அவன் தான் சர்வாதிகாரி. ஒரு தடவை மின் தமிழில் எழுதியிருந்தேன். இப்போ அதை காணோம். ஒரு டப்பா வண்டியை இரவல் வாங்கிக்கொண்டு, எழும்பூர் ஸ்டேஷனுக்கு வந்தான். என்னை நிழல் மனிதனாக வைத்துக்கொண்டு, ஸ்டோன் நைல் படவாகினியை அடக்கி வைத்தான். நாளாவட்டத்தில் சென்னையின் எல்லா பரிமாணங்களையும் எனக்கு புரியவைத்த புண்ணியம் அவனை சார்ந்தது. அதான், இப்போ தகரியமா லண்டன் உலா வர முடிகிறது. ஒரு மூன்று வருடங்களில், ‘செல்ஃப் இல்யூமினேஷன்’ (சுயம்பிரகாசம் மாமா நடத்தியது.) தட்டச்சு நிலையத்தில், இவன் தயவால் பரிச்சியமான பெண்கள் எல்லாருடைய பெயர்களும், அந்தக்காலத்து முகாரவிந்தங்களும், பசுமையாக நினைவில் உள்ளன. இதையெல்லாம் கண்டு வியந்த என் தந்தை அவனுக்கு ‘ஜகதலபிரதாபன்’ என்று நாமகரணம் செய்தார். 
*
1955: என் திருமணத்தின் போது, இவன் அடித்த லூட்டியை பார்த்த பெண்ணை பெற்ற ஐயங்கார் மாமிகள் எல்லாரும் இவனை வளைத்துப்போட பார்த்தார்கள்; பெண்களும் தான். பிற்காலம் கெலித்தது பட்டு. இவன் கல்யாணம் பிரமாதம். சமையலுக்கு வந்தவர்கள் சாமான்யமாக கிடைக்காத அஸ்கா சர்க்கரையை அமுக்க, அதை எஜமானி அம்மாள் பிடிக்க, அவர்கள் ஸ்ட்றைக் செய்ய, வீட்டு பெண்மணிகளே அருமையாக சமைத்து விருந்தோம்பினார்கள். கோமளவல்லி & ஶ்ரீநிவாஸன் வயலின் கச்சேரி.
*
1986: நான் அஹமதாபாத் நகருக்கு மாற்றலாகி வந்த போது, அவன் அங்கிருந்தான். நளபாகன். அவன் எங்களுக்கு நல்வரவு கூறி, ஒரு நாள் செய்து அளித்த அக்கார வடிசல் இன்றும் இனிக்கிறது. என் பெண் சொல்றமாதிரி,’ நெய் பெய்து முழங்கை வழி வார...’
*
1994: அவனுடைய பையர் ஶ்ரீனிவாஸனுக்கும் ஶ்ரீமதிக்கும் விவாகம் 20 05 1994. அந்த நன்னாளன்று அவன் கொடுத்த வடூவூர் ராமனின் உத்ஸவ கோல சித்திரம் இன்று போர்ட்ஸ்மத் பூஜை அறையில்.
*
2009: அவனுடைய சதாபிஷேகத்துக்குப் போயிருந்தேன். அவனுக்கு ஒரே குஷி. நான் ஏதோ சொல்ல வாயெடுத்தேன். ‘வாயை மூடு. கொன்னுப்பிடுவேன்’ என்றான். ஏனென்றால், ஒத்தரை ஒத்தர் ப்ளாக்மைல் செய்வது தொன்று தொட்டு வழக்கம். அத்தனை பயம், அவனுக்கு.
1933லிருந்து நாங்கள் சேக்காளிகள். உறவை நாங்கள் பெரிதாக கண்டுகொள்ளவில்லை. எங்கள் இரு குடும்பங்களும் நகமும், சதையுமாக இருந்தன. உற்ற துணை என்றால், அவனுக்கு நான்; எனக்கு அவன். எத்தனை சுகதுக்கங்களை பகிர்ந்து ஆறுதல் கண்டிருக்கிறோம். ஓடோடி வந்து உதவியிருக்கிறோம். பிரச்னை என்றால் ஆலோசனைக்கு அவன் எனக்கு;நான் அவனுக்கு. இத்தனைக்கும் எங்கள் வாழ்வியல் அலை வரிசைகள் வேறு வேறு. மனோபாவமோ ஒன்று.
***
2012: இன்று கிடைத்த செய்தி. 25 09 2012 அன்று கண்ணன் என்ற ஸுதர்ஸனம் வாஜபேயம் கோடிகன்னிகாதானம் ரங்காச்சாரியார் ஆச்சார்யன் திருவடிகளை அடைந்தார். சாதம் அளிஞ்சு போனமாதிரி, மனசு குழம்பிக்கிடக்கிறது. வாழ்க்கையின் பல தளங்களை, இன்பமும், துன்பமுமாக, சுகமும், துக்கமுமாக அனுபவித்து, நீண்ட நாள் வாழ்ந்து மூப்பு அடைந்த பின் தான் அத்தான் கண்ணன் மறைந்தான். ஆனாலும் என் துக்கம் தாங்கொண்ணா துக்கம் தான். அவனுடைய குடும்பத்திடம் உபசாரம் கேட்பதை விட வேறு ஒன்றும் வெளிப்படையாக செய்ய இயலவில்லை.
அவனுடைய ஆத்மா சாந்தியடைக என்று மனதார வேண்டிக்கொண்டாலும், அது சம்பிரதாயமாக படுகிறது.
இன்னம்பூரான்
27 09 2012
பி.கு. இது முழுதும் நிஜம். கற்பனை கிஞ்சித்தும் இல்லை. 


காமேஷ் Fri, Sep 28, 2012 at 7:30 AM

பாவம் அன்னாரின் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள். புகைப்படம் இல்லியோ ?

1930, 1940களில் நடந்த நிகழ்வுகளையெல்லாம் எப்படி ஞாபகத்தில் வச்சிருக்கீங்க இன்னபூரானாரே ?

 

coral shree Fri, Sep 28, 2012 at 7:34 AM

அன்பின்ன் இ ஐயா,

உங்களுடைய நினைவாற்றலும், விவரிக்கும் நடையும் அபாரம். தங்களுடைய ஆத்மார்த்த இழப்பிற்கு ஆழ்ந்த அனுதாபங்கள். அவர்தம் குடுமபத்தினருக்கு மன அமைதியை ஆண்டவன் அருள பிரார்த்தனைகள்.

அன்புடன்
பவளா



                                                              
            *    
வருத்தம்தான்.. முடிவு இப்படியாக இருக்கலாகுமோ என முதலிலேயே ஒரு கணம்
எதிர்பார்த்ததை இங்கே சொல்லிவிடுகிறேன். முதியவர்தானே என்று ஒரு போதும்
தோன்றவில்லை.. ஏனெனில் நினைவுகள் எப்போதுமே பசுமையான இளமைதானே.. உங்களைப்
போன்றோரின் அன்பு கிடைத்திருக்கும் பேறு பெற்றிருக்கும்போது உங்கள்
அத்தானின் ஆத்மா சாந்தியடைந்திருக்கும்..

திவாகர்


amaithi cchaaral Fri, Sep 28, 2012 at 7:54 AM

 நினைவுகளால் நம் உயிருடன் இரண்டறக் கலந்தவர்கள் பிரியும்போது, நம் உயிரைப் பிய்த்துக்கொண்டு போகும் துயரம் தாளமுடியாததுதான். அன்னாரின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அஞ்சலிகள்.

உங்கள் நினைவாற்றல் என்னை எப்போதும் பிரமிக்க வைக்கும் ஒன்றி இ. ஐயா,

அன்புடன்,
சாந்தி மாரியப்பன்
[Quoted text hidden]

--

 

amaithi cchaaral 
உங்கள் பகிர்வில் ஒன்றி விட்டதால் ஒன்று என்பது திரிந்து விட்டது. மன்னிக்கவும்.


யதார்த்தா கி.பென்னேஸ்வரன் Fri, Sep 28, 2012 at 9:45 AM

நெகிழவைக்கும் நட்பின் நெருக்கம்  உங்களுடையது.  உங்கள் கண்ணன் கொடுத்து வைத்தவர்.  உங்களைப் போன்ற நண்பர்கள் கிட்டியமைக்கு.

அவருடைய ஆன்மா சாந்தியடைய பிரார்த்தனை செய்கிறேன்.  உங்கள் துயரத்தில் பங்கேற்கிறேன்.

உங்களுக்கு சொல்லத் தேவை இல்லை.  காலம் பற்றி.

வருத்தங்களுடன்

பென்

-----------------------------------------------------------------------------------------

 

Granny Visalam Fri, Sep 28, 2012 at 9:47 AM

அன்பு இன்னம்பூரான்   ஜி    முதல் முக்கால்  பகுதியில்   உங்கள் எழுத்து
என் மனதைக்கவர்ந்தது

கடைசிப்பகுதியில்  என் மனமே கனத்தது .  உண்மைதான்  பழையகால நட்பு  நட்புதான் .
அவருடைய ஆன்மா சாந்தியடையட்டும்

Tn Elango Fri, Sep 28, 2012 at 10:10 AM

அன்புள்ள இ ஐயா,

இந்த சோகத்திலும் , இவ்வளவு கோர்வையாக, ரசமாக எப்படி எழுத முடிகிறது?

உங்கள் சோகம் என்னையும் தாக்குகிறது.

நட்பின் பிரிவின் சோகத்தை அதிகமாக உணர்ந்தவன், உணர்பவன் நான்.

அவருடைய ஆன்மா சாந்தியடைய என்னுடைய பிரார்த்தனைகள்.

இளங்கோ


 

Tthamizth Tthenee Fri, Sep 28, 2012 at 10:31 AM

நண்பனாய் மந்திரியாய் பண்பிலே தெய்வமாய்
பார்வையிலே சேவகனாய்  கண்ணன்
கண்ணன் ஆன்மா  சாந்தியடைவதாக
அன்புடன்
தமிழ்த்தேனீ

 

meena muthu Fri, Sep 28, 2012 at 10:39 AM

தங்களின் வேதனை ... கண்ணீராய் திரள்கிறது

கனத்துப்போன மனது ஒன்றும் சொல்ல தோன்றவில்லை.

Innamburan Innamburan Fri, Sep 28, 2012 at 2:00 PM

இதோ கண்ணனுடைய ஃபோட்டோ. நீங்கள் எல்லாரும் இத்தனை வாத்ஸல்யத்துடன் பேசினதால், விட்டுப்போன சிலவற்றையும் பகிர்ந்து கொள்கிறேன். என் பையனிடம் சொன்னேன். எல்லா குடும்பநிகழ்வுகளையும் ‘lively’செய்யும் மாமா என்றான். மாட்டுப்பெண்ணிடம் சொன்னேன். ‘என் கல்யாணத்தின் போது அப்படி ஓடியாடி எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டார் என்றாள். தமிழ்த்தேனீ பேசும் கண்ணன் தான், இவன். இவனுடைய வாழ்க்கை எதிர் நீச்சல் சுயமுன்னேற்றத்திற்கு உதாரணம். பீ ஈ எம் எல் நிறுவனத்தில் அடி மட்டத்தில் வேலைக்கு சேர்ந்தவன் அந்த நிறுவனத்தின் ஸ்டோர்ஸ் இலாக்காவில் நிபுணராக விளங்கினான். ஓய்வு பெற்ற பின், பல வருடங்கள் அகில இந்திய தேசாந்திரியாக அலைந்து, திரிந்து வேலை பார்த்தான். சென்ற விடமெல்லாம் நல்ல பெயர். ஆனால், கேலிக்கும், கூத்துக்கும், லூட்டிக்கும் பஞ்சமில்லை. ஃபோட்டோ மூப்பின் கொடுமையை பிரதி பலிக்கிறது. அவனுடைய பெர்சனாலிட்டியை அல்ல.
இன்னம்பூரான்
[Quoted text hidden]

KANNA MAAMA PHOTO.jpg
36K

Tthamizth Tthenee Fri, Sep 28, 2012 at 2:29 PM

பழுத்த பழம்!

அன்புடன்
தமிழ்த்தேனீ

meena muthu Fri, Sep 28, 2012 at 3:53 PM


ஆம் பழுத்தபழமாக இவரில் அந்தப்பெருமாளை பார்க்கிறேன்! 

2012/9/28 Innamburan Innamburan <innamburan@gmail.com>
ஃபோட்டோ மூப்பின் கொடுமையை பிரதி பலிக்கிறது. அவனுடைய பெர்சனாலிட்டியை அல்ல.

--

 

rajam Fri, Sep 28, 2012 at 4:18 PM

மிக அன்யோன்யமானவர்களை இழப்பது மிகவும் கொடுமை. அவர் ஆன்மா சாந்தியடையட்டும்.


Subashini Tremmel Fri, Sep 28, 2012 at 6:47 PM

உங்கள் துக்கத்தில் நானும் இணைந்து கொள்கின்றேன். 
அவரது ஆன்மா சாந்தியடைய என் ப்ரார்த்தனைகள்.

சுபா

shylaja Sat, Sep 29, 2012 at 5:11 AM

உங்களின் நினைவுப்பெட்டகமிருந்து  அத்தனையும்  எடுத்துக்கொடுத்து விட்டீர்கள்  இ சார். ஈடு செய்யமுடியாத இழப்பு..ஆச்சார்யன் திருவடியை அடைந்த அன்னாரின் பிரிவைத் தாங்கும் சக்தியை  இறைவன் தங்களுக்கு அளிக்க  வேண்டும். நேற்று  என் கணவரின்  நண்பரின் தந்தை  (75வயதிருக்கும்) இறந்துவிட்டார். மாலை  தகனம் செய்கிற  வரைக்கும் கல்போல  இருந்த நண்பர் அப்புறம்  வெடித்து அழுதார் பாருங்கள், யாரும் சமாதானம் செய்ய நெருங்கவில்லை... அழட்டும் அப்போது  தான் நல்லது என்றார் ஒரு பெரியவர்.  உங்க நண்பரின் பிரிவையும் இந்த  இடுகையில் வெளியிட்டதால்  சரியாகலாம். மனதை  தேற்றிக்கொள்ளுங்கள் இ சார்.
 

Innamburan Innamburan Sat, Sep 29, 2012 at 6:25 AM

வாஸ்தவம், ஷைலஜா. அன்றொரு நாள் 
'அப்பா எனக்கு ‘Home They Brought Her Warrior Dead’ [Alfred Tennyson], ‘Ye know, We stormed Ratisbon’ [Robert Southey], ‘We are Seven’ [Oliver Goldsmith] சொல்லிக்கொடுத்து இருக்கிறார். முடித்தது இல்லை. உணர்ச்சி வசப்படுவார். '
என்று எழுதியது ஞாபகம் வருகிறது.இன்னம்பூரான்


sk natarajan 
அவர்தம் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்கள் 

என்றும் அன்புடன்
சா.கி.நடராஜன்.






2012/9/28 Innamburan Innamburan <innamburan@gmail.com>
அம்பா! நீ இரங்கலாகாதா?

_______________________________________________________
இந்த இழையை சுபம் அன்று சபையில் படித்த கண்ணனின் மகனும், மருமாளும் தேம்பித்தேம்பி அழுதனராம். அதுவே ஆறுதலாக அமைந்ததாம்.
சித்திரத்துக்கு நன்றி:https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgHsj46RpQH0__pGCG6kU2iYEscHkmbSw7rTMtoHPTyJoNw1G6i1xpkFMLESeCvfOamjGkBmtn8KYd3Pm6zZvzu5JZCgBtjtGJEjczxdEFt8-rdU4By52jijjec3Ul_wgqeGs57uEwryG0/s1600/amma.JPG

இன்னம்பூரான்
28 04 2013 

 

“ஃபேஸ்புக்”: தணிக்கை செய்வதில் தணியா வேகம் -20




“ஃபேஸ்புக்”: தணிக்கை செய்வதில் தணியா வேகம் -20


Innamburan Innamburan Tue, Jan 19, 2010 at 6:07 PM

20 01 2010

 ஃபேஸ்புக்: தணிக்கை செய்வதில் தணியா வேகம் -2

இந்த ஹிந்தி கார்யாலாவின் முக்கிய சலுகை: ஃபேஸ்புக் போன்ற அரசு சமூக தொடர்புகள். சென்னையில் உள்ள ஒவ்வொரு மத்திய அரசு அலுவலகத்திலிருந்து ஒரு தொடர்பு அதிகாரி என்று ஒருவருக்கு அதிகப்படி பொறுப்பு. அவர்கள் எல்லாருக்கும் தலை மாந்தர் இந்த ஆஃபீஸர் இன் ஓவரால் சார்ஜ். மாதம் ஒரு முறை எல்லாரும் சந்தித்துஹிந்தி பரப்ப வேண்டிய தலை போகும் பணியை சிறப்புற செய்வது பற்றி விவாதிக்கவேண்டும். முந்திரிப்பருப்புமைஸூர்பாக்பக்கோடாடீ/காஃபி என்னுடைய உபயம்அரசு செலவில். ஏன் வரமாட்டார்கள்?

ஆக மொத்தம்தெரிந்தவர்கள் பல துறைகளில் இருப்பதாலும்தலை மாந்தன் என்ற சிறப்பு துணை போனதாலும்புதிய உறவுகள் முளைத்தன. கற்றோனுக்கு சென்றவிடமெல்லாம் சிறப்பு என்றால்தொடர்பு உள்ளவனுக்கு கேட்டதெல்லாம் நடக்கும் என்பது உறுதியாச்சு. அடக்கி வாசித்ததாலும்ஏற்புடைய வகையில் பரஸ்பர உதவி என்று இயங்கியதால்அன்றைய கால கட்டத்தில்அனேகருக்கு உற்ற நண்பனாகிவிட்டேன் என்றால் மிகையாகாது. அந்த கால கட்டத்தில்அங்கும் இங்கும் வேண்டப்பட்ட ஆள் இல்லை யென்றால்டெலிஃபோன் கிடைக்காது: ரயில்வே ரெசெர்வஷன் செய்யமுடியாதுஸ்கூல் அட்மிஷன் கஷ்டம். க்வார்ட்டார்ஸ் கிடைக்காதுதகுந்த டாக்டர் சிக்க மாட்டார்எண்ணில் அடங்காஅன்றாட இன்னல்கள்பின்னல்கள்சிக்கல்கள். ஏ.ஜீ.யேஅந்த  பீ.ஆர்.ஓ வை  (Public Relation Officer)  கூப்பிடு என்ற அளவுக்குசெல்வாக்கு. இது பொறுக்குமோதெய்வத்திற்க்கு?

என்னை சித்தரஞ்சன் ரயில்வே எஞ்சின் தொழிற்சாலைக்கு டிபுடி சீஃப் ஆடிட்டராக மாற்றி விட்டார்கள். டைம் லைன் 1960. சில மாதங்களே தணிக்கை செய்ய கற்றுக்கொள்வதற்குள்ஹிந்தி சீட்டிங்கைடீச்சிங்கா ரசவாதம் செய்வதற்குள்பொதுநல அதிகாரநுட்பங்கள் கற்றுக்கொள்வதற்குள்ஜ்யோதி பாஸு அவர்களின் பிரதேசத்துக்குப் பக்கம்பயணம்புது அனுபவங்களை நோக்கி. கிட்டத்தட்டஇந்த சமயத்தில் தான் ஒரு ஞானஸ்நானம் எதிர்பாராத விதமாகநடந்து முடிந்தது..

யானும்காசிக்குப் போன பார்ப்பனன் தனக்கு பிடிக்காத கத்திரிக்காயை தியாகம் செய்த மாதிரிஒரு மாதிரியான! 'துறவறம்பூண்டேன். சமயோசிதமாகஇன்று வரை யாரிடமும் சொன்னதும் இல்லை.

அது சரிநான் சஸ்பென்ஸ் வைச்சாஷைலஜாக்கூடபெண்ணேஸ்வரன் கூட,  'இன்னா சமாச்சாரம்?' ந்னு கேக்கலையென்றால்இங்கு பனி உருகறமாதிரிசுரத்து இறங்கிவிடுகிறது. சான்றாக, 'சிம்லா போன கதைஎன்றேன். கமுக்கம். ஸீல் போட்ட டெண்டரை பிரிப்பது என்றேன். கம். இந்த துறவறம் பற்றி கேட்காவிட்டால்மண்டையே வெடித்து விடும் போல தோற்றம். முனைவர் திருவேங்கடமணி கூட காஷ்ட மெளனம்! ஒய்?
இன்னம்பூரான்
Tirumurti Vasudevan Wed, Jan 20, 2010 at 7:38 AM

அருமையா போய்கிட்டு இருக்க்ற கதை நடுவிலே பூந்து தடுக்கவோ திசை திருப்பவோ வேண்டாம்ன்னுதான்.  ஏற்கெனெவே ஒரு இழை பிரிஞ்சாச்சு!சிம்லா கதை ஸீல் கதை துறவறக்கதை எல்லாமே சொல்ல வேணும். தட்ஸ் ஒய்,  சரிதானே ஓய்?


Tthamizth Tthenee Wed, Jan 20, 2010 at 7:53 AM
அது சரிநான் சஸ்பென்ஸ் வைச்சாஷைலஜாக்கூடபெண்ணேஸ்வரன் கூட,  'இன்னா சமாச்சாரம்?' ந்னு கேக்கலையென்றால்இங்கு பனி உருகறமாதிரிசுரத்து இறங்கிவிடுகிறது. சான்றாக, 'சிம்லா போன கதைஎன்றேன். கமுக்கம். ஸீல் போட்ட டெண்டரை பிரிப்பது என்றேன். கம். இந்த துறவறம் பற்றி கேட்காவிட்டால்மண்டையே வெடித்து விடும் போல தோற்றம்
ஐய்யா  இன்னம்புரரரே  தயவு செய்து  அந்த ரகசியத்தை (துறவறத்தைப்) பற்றி   சொல்லிவிடாதீர்கள்
 
ஆனாலும்  மர்மக் கதை  மன்னன் போல  இருக்கிறீர் நீர்
 
துறவறம் பற்றித் தெரிந்து கொள்ளாமல்  தூக்கம் வருமோ
 
ஆனாலும் நீங்கள் அதை சொல்லிவிடாதீர்கள்
 
மனது கேட்கவில்லை 
 
மர்மக் கதை படித்தாலே  கடசீப் பக்கத்தை  முதலில் படிப்பவர்கள்  ஏரரளம்
 
அன்புடன்
தமிழ்த்தேனீ
_______________________________________________________________________________________

Image Credit:http://image.shutterstock.com/display_pic_with_logo/172795/172795,1274706007,1/stock-vector-public-relations-word-cloud-53764561.jpg
innamburan
28 04 2013
 
 
 


 

அன்றொரு நாள்: ஏப்ரல் 29: கிழக்கில் ஒரு மேற்கு!


அன்றொரு நாள்: ஏப்ரல் 29: கிழக்கில் ஒரு மேற்கு!
Innamburan Innamburan Tue, May 1, 2012 at 2:08 AM


அன்றொரு நாள்: ஏப்ரல் 29:
கிழக்கில் ஒரு மேற்கு!
அசையும், ஓசையும், இசையும் அபூர்வ சஹோதரிகள். யார் எங்கே எதை அருமையாக இசைத்தாலும், எம் கண் முன்னே தோன்றுவது தொன்மை வாய்ந்த நாடக மேடை, திரைகள், கச்சிதமாக அளவெடுத்து அழகுறை அமைத்த அந்த அரங்கத்தில் அகவை பனிரெண்டே ஆகிய மாதவியின் நடனம், பாட்டு, ஆசான்கள், இலக்கணம், மரபு. சபையே மகுடிக்கு மயங்கிய நாகமாக சுருண்டு கிடந்தது. இளங்கோ அடிகளார் இசையை ரசித்த விதத்தை இங்கே காணலாம்.
யாழும், குழலும், சீரும், மிடறும்
தாழ் குரல் தண்ணுமை, ஆடலொடு இவற்றின்
இசைந்த பாடல் இசையுடன் படுத்து,
வரிக்கும் ஆடற்கும் உரிப்பொருள் இயக்கி
=தேசிகத்திருவின் ஓசை எல்லாம்
ஆசு இன்று உணர்ந்த அறிவினன் ஆகி,
கவியது குறிப்பும், ஆடல் தொகுதியும்,
பகுதிப்பாடலும் கொளுத்தும் காலை-
வசை அறுகேள்வி வகுத்தனன் விரிக்கும்
அசையா மரபின் இசையோன்.—(சிலப்பதிகாரம் - அரங்கேற்றுக்காதை 26 - 36 வரிகள்)

அந்த ‘அசையா மரபின் இசையோன்’ ஒருவரையும், அவருடைய குழுவையும் சைண்ட் லூயிஸ் இசை அரங்கில் கண்டு, அவர்கள் அளித்த இசை விருந்தை பருகியபோது, நினைவலைகள் ஒரு நிமிடம் இரண்டாம் ஆயிரம் ஆண்டுகள் பின் சென்று, ‘நான்கடி, எட்டடி, பதினாறடி, முப்பத்திரண்டடியாக வரும் சுண்ணம், சுரிதகம், வண்ணம், வரிதகம், சந்தம் என்றெல்லாம் மனமுழுதிலும் அலை பாய்ந்தன, பீத்தோவன் என்ற இசை ஆசானின் கவின் நிறைந்த அரிதான படைப்புகளும், உள் புகுந்து, அலைகளை சற்றே சலசலத்தன. அதா அன்று. மற்றொரு நினைவலையும் தனிப்பாட்டை ஒன்றில். கடலலை ஓய்ந்தாலும் நினைவலை ஓய்வதில்லை அல்லவா! இந்த தரணி தனில் நிரந்தரமானவை, இந்த நினைவலைகள் தான். என்றென்றும் சுழற்சியில் இருப்பவை அவை தான். அதா அன்று. மூன்றாவது நினைவலையும் இன்னொரு தனிப்பாட்டையில்: அன்றொருநாள்: மார்ச் 24 ‘மஜிஸ்டர் லூடி’ (குருப்யோ நம:):http://heritagewiki.org/index.php?title=அன்றொருநாள்:_மார்ச்_24
மும்பை ஷண்முகானந்த சபா. 1984/85. ஒரு கச்சேரி. சில மாதங்கள் முன்னாலேயே நுழைவுச்சீட்டு வாங்கி, இடம் பதிவு செய்தாகி விட்டது. நாங்கள் வசித்த கொலாபா பகுதியிலிருந்து வெகு தூரம். போக்குவரத்து நெரிசல் தாங்கமுடியவில்லை. ஒரு பாடாக போய்ச்சேர்ந்தோம். சபை களை கட்டி இருந்தது. அன்றைய ‘அசையா மரபின் இசையோன்’ கனகச்சித்தமான மேற்கத்திய இசை அரங்கத்து ஆடை உடை, பாவனைகளுடன், பொலிவுடன் வந்து நின்று, தலை குனிந்து, கட்டியம் கூறி, சபையோருக்கு பவ்யமாக வணக்கம் தெரிவித்த போது, யாவரும் ஒரு சேர, நின்று கொண்டு ஆரவாரத்துடன் கை கொட்டியது கண் கொள்ளாக்காட்சி. நிகழ்ச்சிகள் தொடங்கின. யான் உள்பட பெரும்பாலோருக்கு மேற்கத்திய இசை பரிச்சயம் மிகக்குறைவு என்றாலும், அடுத்த வந்த ஒரு இஸ்ரேலிய பெண்ணழகி, இசையோனின் நுட்பமாக கட்டளைத்தொகைக்கிணங்க, கிட்டத்தட்ட  அரை மணி நேரம். வயலின் வாசித்த போது, நிசப்தம். பிறகு எல்லாருமே ( இருபது வயலின், பத்து குழல், பலவகை பேரிகை, டமாரம், முரசு, மத்தளம், ராக்ஷஸ குழாய் வாத்தியங்கள்) ஒலி கூட்டின. எல்லரும் ஒரே மாதிரியான உடையா? ஜான் யாரு, பீட்டர் யாரு என்றும், லைஸா யாரு, மார்கெரட் யாரு என்று இனம் காணமுடியவில்லை.
நீங்களே பாருங்கள். ஒரு மாஹ்லர் சாகித்யம்: 1984. இசை பொருத்தம், இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்: ‘...யாழ், குழல், தாளம், சீர், வாய்ப்பாட்டு, மெல்லிய குரலுடனான அமைப்பாக வாசிக்கப்படும் மத்தளம், இவற்றுடன் கூத்து வகைகள் ஆரம்பிக்கப்படும் வேளை இசைந்த பாடலினை இனிமையாக, தாளக்கட்டுடன் பொருந்தி’ அல்லவா அமைந்திருந்தது. பிறகு ஒரு மென்மையான ஷுபெர்ட் ஸாகித்யம் என்று நினைவு: ‘... வரிப்பாடு மற்றும் ஆடல் போன்றவற்றிற்குரிய பொருளினை விளக்கி இயற்சொல், திரிசொல், திசைச்சொல், வேற்றுச்சொற்களின் ஓசைகளைச் சுத்தமாகக் கடைபிடித்தும் அவ்வோசைகளின் இலக்கணங்களினை பிழையில்லா பாடல் ஒன்று...’. சுருங்கச்சொல்லின், சிலப்பதிகாரம் வகுத்த இசை மரபையும், இலக்கணத்தையும் ஜுபின் மேஹ்தா அவர்கள், செவிக்குணவாகவும், கண்ணுக்கு இனிய காட்சியாகவும், மனத்துக்கு நிறைவாகவும், ஒரு 180 நிமிட நிகழ்வில், அவைக்கு விருந்து படைத்தார். தெரிந்தவர்கள் அனுபவித்தார்கள். தெரியாதவர்கள், சற்றும் குறையாமல், அனுபவித்தார்கள். கச்சேரி முடிந்தவுடன், வானளாவிய கரகோஷம். 
கொலாபா நோக்கி அவர்களின் வண்டித்தொடரும், எமது காரும்  விரைவாக பயணித்துச் செல்ல, தாஜ் ஹோட்டலை அடைந்தோம். ஜுபின் மேஹ்தாவுடன் கைலாகு. மகிழ்ச்சி நிரம்பி வழிந்தது. அப்போது கிடைத்தத் திடுக்கிடும் செய்தி: அவர்களுக்கு இந்த நிகழ்வின் போது குண்டு வெடித்து, குழுவையும், சபையோரையும் கொல்லப்போவதாக மிரட்டல் வந்திருந்ததாம். போலீஸ் பாதுகாப்பு இருந்திருந்தாலும், இந்த மிரட்டலால், அஞ்சி, நடுங்கி, ஒடுங்காமல், இசை நிகழ்வை நடத்தியதற்கு என்ன சன்மானம் கொடுக்கலாம்!
மும்பை மைந்தரான ஜுபின் மேஹ்த்தா டாக்டராகி இருக்க வேண்டும். ஆனால், 18 வயதிலேயே, வியன்னாவில் மேற்கத்திய சங்கீதம் படிக்கப்போய்விட்டார். அதற்கு பிறகு ஏறுமுகம் தான். இசை உலகில் அவருடைய ஆளுமை, திறன், ஆற்றல், புகழ், பதவிகள், வருமானம் எல்லாம் ஏணியின் உச்சியில். இன்று (29 04 1936) அவருடைய பிறந்த நாள். அதான்... இன்னும் சொல்ல எத்தனை விஷயங்கள் உளன!
ஒரு துணுக் செய்தி: அவர் ஏழையாகி விட்டார். அவருடைய நிதி ஆலோசகரின் அயோக்கியத்தனத்தால், எல்லாவற்றையும் இழந்தார். பிறகு, சம்பாதித்தது தான்.
அதே மாதிரி தன் சொத்துப்பத்துக்களை இழந்த மற்றொரு இந்திய பிரமுகர்?
கேட்டால் சொல்லப்படும்.
இன்னம்பூரான்
29/30 - 04 2012
Inline image 1

உசாத்துணை:


செல்வன் Tue, May 1, 2012 at 2:11 AM

Reply-To: mintamil@googlegroups.com
To: mintamil@googlegroups.com


2012/4/30 Innamburan Innamburan <innamburan@gmail.com>
அதே மாதிரி தன் சொத்துப்பத்துக்களை இழந்த மற்றொரு இந்திய பிரமுகர்?
கேட்டால் சொல்லப்படும்.
தெரியலையே...

--
செல்வன்


Innamburan InnamburanThu, May 3, 2012 at 1:54 AM

ஸர்.சி.வி.ராமன்.

[Quoted text hidden]