Showing posts with label Jalianwallahbaug. Show all posts
Showing posts with label Jalianwallahbaug. Show all posts

Saturday, April 13, 2013

அன்றொரு நாள்: ஏப்ரல் 13:3 என்றோ துவக்கம்!




அன்றொரு நாள்: ஏப்ரல் 13:3 என்றோ துவக்கம்!
14 messages

Innamburan Innamburan Sun, Apr 15, 2012 at 9:20 PM

அன்றொரு நாள்: ஏப்ரல் 13:3
என்றோ துவக்கம்!


நான் வரலாற்றுத்துறையில் புலமை நாடியவனல்ல. குழந்தைகளின்‘படிப்பு தான் முக்கியம்’ என்பதற்காக, பல இன்னல்களுக்கிடையே,பிரிந்து வாழ்ந்துத் தியாகம் செய்த என் பெற்றோர்கள், பெரியவர்கள் பேச்சுப்படி நடப்பார்கள். அக்காலத்து பெரியர்கள் பேச்சு: சரித்திரம், இலக்கியம், தமிழ், சம்ஸ்க்ருதம் சோறு போடாது. பள்ளி உபாத்தியாயர் வேலை தான் கிடைக்கும். மெக்காலே சொன்னதைத் தவறாக புரிந்து கொண்டதின் விளைவு. ஆள வந்த ஆங்கிலேயர்களோ பழமை வாய்ந்த கிரேக்க, ரோமானிய இலக்கியங்களில், தத்துவ விசாரணையில் திளைத்து ஊறியவர்கள். வந்த இடத்து வரலாறு எழுத, ஆய்வு செய்ய முனைந்தவர்கள். நாம் தான் கண்டும் காணாமல் விட்டவர்கள். இந்த பீடிகை எதற்கு?

சில கொடுப்பினைகள் தற்செயலாகத்தான் கிடைக்கும், எனக்கு தமிழ் கிடைத்தது போல. மின் தமிழில் எழுதத் தொடங்கிய பின் தான், அவ்வப்பொழுது படித்து மனதில் பதுக்கி/நிறுவி வைத்திருந்த விஷயங்களின் உள்ளுணர்வின் ‘தாம்பக்கயிறு’ தொடர்பு எட்டிப்பார்க்க ஆரம்பித்தது. குறிப்பாக, 1954ம் வருடம். அது வரை வரலாற்றுப்பாடங்களில் ஆர்வம் காட்டாத நான், சரித்திரத்துறையில் ஆழ்ந்து படித்தால் ஒழிய, ஐ.ஏ.எஸ். தேர்வில் வெற்றி பெறமுடியாது, என்ற முடிவுக்கு வந்தேன். இந்திய சரித்திரம் நீண்டது என்பதால், அதை விட்டு விட்டு, பிரிட்டீஷ் சரித்திரமும், அகில உலக வரலாற்றையும் படித்தேன், பரிக்ஷைக்கு. கிட்டத்தட்ட 1942ம் வருடத்தில், ‘வெள்ளையனே! வெளியேறு’ என்ற அண்ணல் காந்தியின் அறை கூவலால் என்னை தேசாபிமானம் உந்த, உந்த,அதனால் தனக்கு ஏற்பட்ட இன்னல்களை பொறுத்துக்கொண்ட என் தந்தையாரின் பெருந்தன்மையினால், இந்திய வரலாற்றையும், பாலபருவத்திலேயே படிக்கத் தொடங்கினேன். அந்த காலகட்டம், கிட்டத்தட்ட கடந்த ‘நந்தன’ வருடத்திற்கும் பலவருடங்கள் முந்தியது எனலாம். அந்த பின்னணியில் இன்று சிந்திக்கும்போது, பின் மண்டையில் ஒரு ‘பளார்‘ மின்னல்! அதுவும் கீற்று மின்னலாக, இந்த தொடர் தொடங்கியவுடனே அடிக்கிறது. அதாவது,

“குமரு! வரலாறே ஒரு அகண்ட நதிப்பிரவாஹமன்றோ! ஊற்றுக்களும், உப நதிகளும், கிளை நதிகளும், காட்டாறுகளும், நீரோடைகளும், நீர் வீழ்ச்சிகளும், கால்வாய்களும், வாய்க்கால்களும் புடை சூழத்தானே, கங்காமாதா கங்கோத்ரியில் ஜனித்து, தேவப்ரயாக், ருத்ரப்ரயாக் என்றெல்லாம், பேதையாக விளையாடி, பெதும்பையாக குதூகலித்து, மடந்தையாக மகிழ்ந்து, அரிவையாக மகிழ்வித்து, தெரிவையாக தேறி, பேரிளம்பெண்ணாக உம்மையெல்லாம் இன்பசாகரத்தில் குளிப்பாட்டி, ரிஷிகேசத்தின் உள்ளே புகுந்து, ஹரித்துவாரத்தில் தலையெடுத்து, காசி க்ஷேத்ரத்தில், உமது அழுக்கையும் சுமந்து, பிரயாகையில் யமுனையின் நீலநிறநீரில் அதைக் கழுவி, சரஸ்வதியின் பவித்ரத்தை அணிந்து கொண்டு, ஹூக்ளியாற்றின் நீரால் கொல்கத்தா வீதிகளை அலம்பி, சாகரத்தில் ஐக்கியமானதை மறந்தாயோ? அல்லது, காவேரி வழி நடந்ததை மறந்தாயோ? அதற்குத்தானே, உன்னை அங்கெல்லாம் அனுப்பிவைத்தேன்...”

என்றெல்லாம் என் மனது எதிரொலித்தது. இது என்ன உப பீடிகை? அதுவும் தன்னை பற்றி. சரியான கேள்வி. இந்த பத்தி ‘என்றோ துவக்கம்’ அன்று. பின்னூட்டங்களுக்கு உடனக்குடன் பதில் அளிக்க முடிவதில்லை. அதுவும் இன்று/நேற்று வந்த டானிக் பின்னூட்டங்களுக்கு. தனிமடல்கள் பல வருகின்றன. ஒரு சிலர் தங்கள் மேல்படிப்புக்கு உதவுகிறது என்றெல்லாம் எழுதுகிறார்கள். ஒரு சிலர் உணர்ச்சித்துணைவர் ஆகிறார்கள். அவர்களுக்காக, இந்த உப பீடிகை.

விஷயத்துக்கு வருகிறேன். இந்த ஜாலியன்வாலா நந்தவன நிகழ்வு ஏப்ரல் 13, 1919 அன்றைய தனி ஓலம் அன்று. அந்த ஆலங்கன்றின் நுண்ணிய வித்து என்றோ விதைக்கப்பட்டது; கும்பினிக்காரன் வந்த சில வருடங்களுக்குள் சுதந்திர தாகம் நெஞ்சை உலர்த்தியது; ஒளரங்கசீப் காலத்திலியே உரமிடப்பட்டது; ஆனால் இந்த ‘நந்தன‘ வருடம் வருமுன், சில கிளைகள் உளுத்துப்போயினவே என்ற வ்யாகூலமும் இந்த பாரதவர்ஷத்தை அலைக்கழிக்கிறது. அதையெல்லாம் கருதி தான் ‘என்றோ துவக்கம்!‘ என்ற தலைப்பு. 
(தொடரும்)
இன்னம்பூரான்
14 04 2012
Inline image 1


renuka rajasekaranSun, Apr 15, 2012 at 10:59 PM


அருமையான "முக"வுரை- அறிமுக உரை - 
அறிவு மிக உரை - அறிவு முகவுரை
முகவரிக்குள் - "முக" வரிக்குள் - முக "வரி"க்குள் 
உரை காட்டி - உரை கூட்டி 
உணர்ச்சிக் கேணியில் என்னை மூழகவைத்த உரை 
நான் அரைவாளி 
என் அரைகுறைத் தமிழும் - அரைகுறை ஞானமும் 
விளிம்பில் நின்றபடி ஊசலாடிக்கொண்டிருந்த எனக்கு 
கனம் தந்து - கல்லாப் பெட்டியே! 
சரஸ்வதி தீர்த்தத்தில் மூழ்கி, 
கர்வம் கரைத்து,பளுவைக் குறைத்து
அதன் பின் மேலே மிதக்கவா என்ற மந்திரம்!!
கங்கையா காவிரியா - இந்த பிரவாகம் 
மானுடவேதப் பிரவாகம்
 

உமது எழுத்து - எனக்கு உரம் 



shylaja Mon, Apr 16, 2012 at 2:59 AM



2012/4/15 Innamburan Innamburan <innamburan@gmail.com>
அன்றொரு நாள்: ஏப்ரல் 13:3
என்றோ துவக்கம்!
நான் வரலாற்றுத்துறையில் புலமை நாடியவனல்ல. குழந்தைகளின்‘படிப்பு தான் முக்கியம்’ என்பதற்காக, பல இன்னல்களுக்கிடையே,பிரிந்து வாழ்ந்துத் தியாகம் செய்த என் பெற்றோர்கள், பெரியவர்கள் பேச்சுப்படி நடப்பார்கள். அக்காலத்து பெரியர்கள் பேச்சு: சரித்திரம், இலக்கியம், தமிழ், சம்ஸ்க்ருதம் சோறு போடாது. பள்ளி உபாத்தியாயர் வேலை தான் கிடைக்கும். மெக்காலே சொன்னதைத் தவறாக புரிந்து கொண்டதின் விளைவு. ஆள வந்த ஆங்கிலேயர்களோ பழமை வாய்ந்த கிரேக்க, ரோமானிய இலக்கியங்களில், தத்துவ விசாரணையில் திளைத்து ஊறியவர்கள். வந்த இடத்து வரலாறு எழுத, ஆய்வு செய்ய முனைந்தவர்கள். நாம் தான் கண்டும் காணாமல் விட்டவர்கள். இந்த பீடிகை எதற்கு?

//சில கொடுப்பினைகள் தற்செயலாகத்தான் கிடைக்கும், எனக்கு தமிழ் கிடைத்தது போல. மின் தமிழில் எழுதத் தொடங்கிய பின் தான், அவ்வப்பொழுது படித்து மனதில் பதுக்கி/நிறுவி வைத்திருந்த விஷயங்களின் உள்ளுணர்வின் ‘தாம்பக்கயிறு’ தொடர்பு எட்டிப்பார்க்க ஆரம்பித்தது. //

ஆமாம்  சிலகொடுப்பினைகள் தற்செயலாகத்தான் கிடைக்கிறது..தாம்பக்கயிறு தொடர்பு  நல்ல உவமை  ஆனா முழுப்பொருள் எட்டவில்லை  நேரமிருந்தால் விளக்க  இயலுமா இ சார்?
 
 
 
 
//குறிப்பாக, 1954ம் வருடம். அது வரை வரலாற்றுப்பாடங்களில் ஆர்வம் காட்டாத நான், சரித்திரத்துறையில் ஆழ்ந்து படித்தால் ஒழிய, ஐ.ஏ.எஸ். தேர்வில் வெற்றி பெறமுடியாது, என்ற முடிவுக்கு வந்தேன். இந்திய சரித்திரம் நீண்டது என்பதால், அதை விட்டு விட்டு, பிரிட்டீஷ் சரித்திரமும், அகில உலக வரலாற்றையும் படித்தேன், பரிக்ஷைக்கு. கிட்டத்தட்ட 1942ம் வருடத்தில், ‘வெள்ளையனே! வெளியேறு’ என்ற அண்ணல் காந்தியின் அறை கூவலால் என்னை தேசாபிமானம் உந்த, உந்த,அதனால் தனக்கு ஏற்பட்ட இன்னல்களை பொறுத்துக்கொண்ட என் தந்தையாரின் பெருந்தன்மையினால், இந்திய வரலாற்றையும், பாலபருவத்திலேயே படிக்கத் தொடங்கினேன். அந்த காலகட்டம், கிட்டத்தட்ட கடந்த ‘நந்தன’ வருடத்திற்கும் பலவருடங்கள் முந்தியது எனலாம். அந்த பின்னணியில் இன்று சிந்திக்கும்போது, பின் மண்டையில் ஒரு ‘பளார்‘ மின்னல்! அதுவும் கீற்று மின்னலாக, இந்த தொடர் தொடங்கியவுடனே அடிக்கிறது. அதாவது,//

கீற்றுமின்னல்! ஆஹா என்ன  ஒரு அழகான சொல்...பளிச்சென்று மனசில் பதிகிறது. உங்கள் தந்தையாரின் பெருந்தனமை போற்றுதலுக்குரியது. 


//“குமரு! வரலாறே ஒரு அகண்ட நதிப்பிரவாஹமன்றோ! ஊற்றுக்களும், உப நதிகளும், கிளை நதிகளும், காட்டாறுகளும், நீரோடைகளும், நீர் வீழ்ச்சிகளும், கால்வாய்களும், வாய்க்கால்களும் புடை சூழத்தானே, கங்காமாதா கங்கோத்ரியில் ஜனித்து, தேவப்ரயாக், ருத்ரப்ரயாக் என்றெல்லாம், பேதையாக விளையாடி, பெதும்பையாக குதூகலித்து, மடந்தையாக மகிழ்ந்து, அரிவையாக மகிழ்வித்து, தெரிவையாக தேறி, பேரிளம்பெண்ணாக உம்மையெல்லாம் இன்பசாகரத்தில் குளிப்பாட்டி, ரிஷிகேசத்தின் உள்ளே புகுந்து, ஹரித்துவாரத்தில் தலையெடுத்து, காசி க்ஷேத்ரத்தில், உமது அழுக்கையும் சுமந்து, பிரயாகையில் யமுனையின் நீலநிறநீரில் அதைக் கழுவி, சரஸ்வதியின் பவித்ரத்தை அணிந்து கொண்டு, ஹூக்ளியாற்றின் நீரால் கொல்கத்தா வீதிகளை அலம்பி, சாகரத்தில் ஐக்கியமானதை மறந்தாயோ? அல்லது, காவேரி வழி நடந்ததை மறந்தாயோ? அதற்குத்தானே, உன்னை அங்கெல்லாம் அனுப்பிவைத்தேன்...”//

வார்த்தைகளே கங்கையாய் காவிரியாய்  பிரவாகமெடுக்கிறது அருமை! 


என்றெல்லாம் என் மனது எதிரொலித்தது. இது என்ன உப பீடிகை? அதுவும் தன்னை பற்றி. சரியான கேள்வி. இந்த பத்தி ‘என்றோ துவக்கம்’ அன்று. பின்னூட்டங்களுக்கு உடனக்குடன் பதில் அளிக்க முடிவதில்லை. அதுவும் இன்று/நேற்று வந்த டானிக் பின்னூட்டங்களுக்கு. தனிமடல்கள் பல வருகின்றன. ஒரு சிலர் தங்கள் மேல்படிப்புக்கு உதவுகிறது என்றெல்லாம் எழுதுகிறார்கள். ஒரு சிலர் உணர்ச்சித்துணைவர் ஆகிறார்கள். அவர்களுக்காக, இந்த உப பீடிகை.

விஷயத்துக்கு வருகிறேன். இந்த ஜாலியன்வாலா நந்தவன நிகழ்வு ஏப்ரல் 13, 1919 அன்றைய தனி ஓலம் அன்று. அந்த ஆலங்கன்றின் நுண்ணிய வித்து என்றோ விதைக்கப்பட்டது; கும்பினிக்காரன் வந்த சில வருடங்களுக்குள் சுதந்திர தாகம் நெஞ்சை உலர்த்தியது; ஒளரங்கசீப் காலத்திலியே உரமிடப்பட்டது; ஆனால் இந்த ‘நந்தன‘ வருடம் வருமுன், சில கிளைகள் உளுத்துப்போயினவே என்ற வ்யாகூலமும் இந்த பாரதவர்ஷத்தை அலைக்கழிக்கிறது. அதையெல்லாம் கருதி தான் ‘என்றோ துவக்கம்!‘ என்ற தலைப்பு. <<<< 
 
நல்ல தலைப்புதான்....   இடுகை ஆலங்கன்றின் நுண்ணியவித்தாக  மனதில் புகுந்து  விருட்சமாய் விஸ்வரூபம் எடுக்கிறது.
(தொடரும்)
இன்னம்பூரான்
14 04 2012
Inline image 1


-- 

Nagarajan VadivelMon, Apr 16, 2012 at 10:29 AM
Reply-To: mintamil@googlegroups.com
To: mintamil@googlegroups.com
இது தொடர்பான ஒரு தகவல்
1919-ஆம் ஆண்டு ஜாலியன் வாலாபாக் படுகொலைக்கு எதிர்ப்புத் தெரிவித்து ஆங்கில அரசு அளித்த பட்டத்தைத் தாகூர் துறந்தார்
காலத்தால் அழிக்க முடியாத அமரத்துவம் பெற்ற இவருக்கு இது இன்னும் மெருகேற்றும் என்று யங் இந்தியா தலையங்கம் எழுதியது
நாகராசன்

கி.காளைராசன் Mon, Apr 16, 2012 at 10:35 AM

வணக்கம்.
>> //“குமரு! வரலாறே ஒரு அகண்ட நதிப்பிரவாஹமன்றோ! ஊற்றுக்களும், உப நதிகளும்,>> கிளை நதிகளும், காட்டாறுகளும், நீரோடைகளும், நீர் வீழ்ச்சிகளும்,>> கால்வாய்களும், வாய்க்கால்களும் புடை சூழத்தானே, கங்காமாதா கங்கோத்ரியில்>> ஜனித்து, தேவப்ரயாக், ருத்ரப்ரயாக் என்றெல்லாம், பேதையாக விளையாடி,>> பெதும்பையாக குதூகலித்து, மடந்தையாக மகிழ்ந்து, அரிவையாக மகிழ்வித்து,>> தெரிவையாக தேறி, பேரிளம்பெண்ணாக உம்மையெல்லாம் இன்பசாகரத்தில் குளிப்பாட்டி,>> ரிஷிகேசத்தின் உள்ளே புகுந்து, ஹரித்துவாரத்தில் தலையெடுத்து, காசி
>> க்ஷேத்ரத்தில், உமது அழுக்கையும் சுமந்து, பிரயாகையில் யமுனையின்>> நீலநிறநீரில்>> அதைக் கழுவி, சரஸ்வதியின் பவித்ரத்தை அணிந்து கொண்டு, ஹூக்ளியாற்றின் நீரால்>> கொல்கத்தா வீதிகளை அலம்பி, சாகரத்தில் ஐக்கியமானதை மறந்தாயோ? அல்லது, காவேரி
>> வழி நடந்ததை மறந்தாயோ? அதற்குத்தானே, உன்னை அங்கெல்லாம்
>> அனுப்பிவைத்தேன்...”//

வார்த்தைகளே கங்கையாய் காவிரியாய்  பிரவாகமெடுக்கிறது அருமை!
ஆமாம் மிகவும் அருமையாக ஆறுபோல் ஓடிவந்துள்ளன.

அன்பன்
கி.காளைராசன்


Innamburan Innamburan Mon, Apr 16, 2012 at 2:52 PM
To: mintamil@googlegroups.com
சரஸ்வதி நதி போல், பின்னூட்டங்களும், அவ்வப்பொழுது ஓடி மறைகின்றன. 'மைத்ரேயின்' வினாவை காணவில்லை, தற்பொழுது. அருமையான தனி மடலொன்றும், மறைமுகமாக! 
ஸைலஜா!
உவமை தத்க்ஷணம் தோன்றியது. இந்த 'மனம்', அதன் காதலி 'மூளை' நடத்தும் இல்லறத்தின் பரிமாணம் சொல்லில் அடங்கா. ஊற்று பெருகிய வண்ணம். நான் அவ்வப்பொழுது ஒரு வாளி அளவு தான், தாம்பக்கயிறை ஒத்த ஞாபகம் என்ற தொடர்க்கருவி மூலம், அள்ள முடிகிறது. உதாரணமாக, ரபீந்தரநாத் டாகூர் 'ஸர்' ரை 'சர்' என்று களைந்ததை ஆங்கிலேயர் காலத்துப் பாடபுத்தகங்கள் மறைக்கவில்லை என்று எழுதி, அது பற்றி காந்திஜி எழுதிய மடலை பற்றி, அடுத்த இழையில் எழுதுவதாக இருந்தேன். பேராசிரியர் நல்லதொரு கொசுறு தந்துள்ளார்.
நன்றி,


Innamburan Innamburan Mon, Apr 16, 2012 at 2:59 PM
To: mintamil@googlegroups.com
அச்சுபிழை. ஷைலஜா என்று படிக்கவும்.
[Quoted text hidden]

shylajaMon, Apr 16, 2012 at 3:31 PM



2012/4/16 Innamburan Innamburan <innamburan@gmail.com>
//சரஸ்வதி நதி போல், பின்னூட்டங்களும், அவ்வப்பொழுது ஓடி மறைகின்றன. 'மைத்ரேயின்' வினாவை காணவில்லை, தற்பொழுது. அருமையான தனி மடலொன்றும், மறைமுகமாக! 
ஸைலஜா!//
 
அப்பப்போ ஸைலண்ட் லஜா என்பதை  இப்படி சுருக்கமாய்  அழைக்கிறீங்கன்னு நினச்சேன்:0:)  மைத்ரேயியை வினா எழுப்பவிடாமல் தாடிக்காரர்  மிரட்டறாரே!!
 
//உவமை தத்க்ஷணம் தோன்றியது. இந்த 'மனம்', அதன் காதலி 'மூளை' நடத்தும் இல்லறத்தின் பரிமாணம் சொல்லில் அடங்கா. ஊற்று பெருகிய வண்ணம். நான் அவ்வப்பொழுது ஒரு வாளி அளவு தான், தாம்பக்கயிறை ஒத்த ஞாபகம் என்ற தொடர்க்கருவி மூலம், அள்ள முடிகிறது. உதாரணமாக, ரபீந்தரநாத் டாகூர் 'ஸர்' ரை 'சர்' என்று களைந்ததை ஆங்கிலேயர் காலத்துப் பாடபுத்தகங்கள் மறைக்கவில்லை என்று எழுதி, அது பற்றி காந்திஜி எழுதிய மடலை பற்றி, அடுத்த இழையில் எழுதுவதாக இருந்தேன். பேராசிரியர் நல்லதொரு கொசுறு தந்துள்ளார்.//
 
ஆஹா  தாம்பக்கயிறுக்கு இப்படி ஒரு  அருமையான  விளக்கமா!   அனாயாச சொல்லோட்டம் உங்கள் இடுகைகளில்! 
 
நன்றி,
இன்னம்பூரான்


Mohanarangan V Srirangam Mon, Apr 16, 2012 at 3:35 PM


2012/4/16 Innamburan Innamburan <innamburan@gmail.com>
//சரஸ்வதி நதி போல், பின்னூட்டங்களும், அவ்வப்பொழுது ஓடி மறைகின்றன. 'மைத்ரேயின்' வினாவை காணவில்லை, தற்பொழுது. அருமையான தனி மடலொன்றும், மறைமுகமாக! 
ஸைலஜா!//
 
அப்பப்போ ஸைலண்ட் லஜா என்பதை  இப்படி சுருக்கமாய்  அழைக்கிறீங்கன்னு நினச்சேன்:0:)  மைத்ரேயியை வினா எழுப்பவிடாமல் தாடிக்காரர்  மிரட்டறாரே!!
 
//உவமை தத்க்ஷணம் தோன்றியது. இந்த 'மனம்', அதன் காதலி 'மூளை' நடத்தும் இல்லறத்தின் பரிமாணம் சொல்லில் அடங்கா. ஊற்று பெருகிய வண்ணம். நான் அவ்வப்பொழுது ஒரு வாளி அளவு தான், தாம்பக்கயிறை ஒத்த ஞாபகம் என்ற தொடர்க்கருவி மூலம், அள்ள முடிகிறது. உதாரணமாக, ரபீந்தரநாத் டாகூர் 'ஸர்' ரை 'சர்' என்று களைந்ததை ஆங்கிலேயர் காலத்துப் பாடபுத்தகங்கள் மறைக்கவில்லை என்று எழுதி, அது பற்றி காந்திஜி எழுதிய மடலை பற்றி, அடுத்த இழையில் எழுதுவதாக இருந்தேன். பேராசிரியர் நல்லதொரு கொசுறு தந்துள்ளார்.//
 
ஆஹா  தாம்பக்கயிறுக்கு இப்படி ஒரு  அருமையான  விளக்கமா!   அனாயாச சொல்லோட்டம் உங்கள் இடுகைகளில்!  

இப்படிச் சொல்லிச் சொல்லி இ , தே கு ந ஆயிட்டார் :-)))

shylaja Mon, Apr 16, 2012 at 3:38 PM



2012/4/16 Mohanarangan V Srirangam 


On Mon, Apr 16, 2012 at 8:01 PM, shylaja


இப்படிச் சொல்லிச் சொல்லி இ , தே கு ந ஆயிட்டார் :-)))//
 
ஹரே ராம ஹரேராமான்னு சொல்லிட்டு  உ.மூ  ஆக இருப்பதைவிட  தேகுந  தேவலை... 
 



 
 
நன்றி,
இன்னம்பூரான்
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minTamil@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil



--
அன்புடன்
ஷைலஜா
DEV RAJ Mon, Apr 16, 2012 at 3:42 PM

On Apr 16, 6:52 am, Innamburan Innamburan <innambu...@gmail.com>
wrote:
>>> டாகூர் 'ஸர்' ரை 'சர்' என்று களைந்ததை ஆங்கிலேயர் காலத்துப் பாடபுத்தகங்கள்
>> மறைக்கவில்லை என்று எழுதி, அது
>> பற்றி காந்திஜி எழுதிய மடலை பற்றி,.......<<<


அந்தக்கால சரித்திரமா, அகதா க்ரிஸ்டியின் எழுத்தா  ?
எண்டிசைக்கும் புகழ் இன்னம்பர் ஊரர் அல்லவா எழுதுகிறார் !
ஐயாவின் அளவுக்கு மீறிய சொற்செட்டு ஒன்று மட்டும்தான்
அடியேனைப் போன்ற மந்தமதிகளுக்குத் தொந்தரவு தருகிறது :))


தேவ்

Mohanarangan V Srirangam Mon, Apr 16, 2012 at 3:45 PM


இப்படிச் சொல்லிச் சொல்லி இ , தே கு ந ஆயிட்டார் :-)))//
 
ஹரே ராம ஹரேராமான்னு சொல்லிட்டு  உ.மூ  ஆக இருப்பதைவிட  தேகுந  தேவலை...  


உ சொ நொ க நோ வரும்....சத்யமேவ ஜயதே. 

***
[Quoted text hidden]
[Quoted text hidden]

கி.காளைராசன் Mon, Apr 16, 2012 at 5:10 PM

இப்படிச் சொல்லிச் சொல்லி இ , தே கு ந ஆயிட்டார் :-)))//

ஹரே ராம ஹரேராமான்னு சொல்லிட்டு  உ.மூ  ஆக இருப்பதைவிட  தேகுந  தேவலை...  
உ சொ நொ க நோ வரும்....சத்யமேவ ஜயதே. 

போக்கப்பா,
என்னால் அதிக நேரம் சிரிக்க முடியலெ.

அன்பன்
கி.காளைராசன்

--
[Quoted text hidden]

Innamburan Innamburan 
Mon, Apr 16, 2012 at 5:13 PM

ஏன்? அதற்காகத் தேறல் பருகலாமோ?


2012/4/16 கி.காளைராசன் <kalairajan26@gmail.com>
[Quoted text hidden]
_____________________________
சித்திரத்துக்கு நன்றி

Friday, April 12, 2013

அன்றொரு நாள்: ஏப்ரல் 13:2: 'குருதிப்புனல்'




அன்றொரு நாள்: ஏப்ரல் 13:2: 'குருதிப்புனல்'
7 messages

Innamburan Innamburan Fri, Apr 13, 2012 at 9:30 PM
To: mintamil , thamizhvaasal
அன்றொரு நாள்: ஏப்ரல் 13:2
'குருதிப்புனல்'
இன்றைய ஜூனியர் விகடனில் பிரபல எழுத்தாளர் ராமகிருஷ்ணன் அவர்கள் ஜாலியன்வாலா பாக் இழிநிகழ்வை பற்றி எழுதியிருக்கிறார். அவர் ஏன் முனைவர் கிச்லூ அவர்களின் பெயரை தவறாக உச்சாடனம் செய்துருக்கிறார் என்று புரியவில்லை. ஜாலியன்வாலா பாக் நிகழ்வுக்கு மதம் சார்ந்த பின்னணி என்று சொல்கிறார். அரசியல், தேசீய பின்னணி பற்றி அவர் ஒன்றும் கூறவில்லை. வரலாற்றுப்போக்கில் நோக்கினால். 1919க்கு முன்னும், பின்னும், பைஷாகி திருவிழா இத்தனை விமரிசையாக நடக்கவில்ல்ஐ. இது நாட்டுப்பற்று பரவசம் ஐயா! அவருடைய அணுகுமுறை நிகழ்வை சார்ந்தது. எனது, நிகழ்வு, அதன் பின்னணி, நிகழ்வின் பலாபலன்கள் ஆகியவை பற்றியது. இது நிற்க.
ரெளலட் சட்டத்தை பற்றி மட்டுமல்ல, அயல் நாடுகளில் (சான்றாக, மெஸபட்டோமியா) இந்திய ராணுவம் உயிரிழப்பது, அகில இந்திய காங்கிரஸ்ஸின் தேசாபிமான பிரச்சாரம், பொருத்தமான பிரமேயங்கள் இல்லாமல், முந்திரிக்கொட்டைத்தனமாக, அதுவும் ரஹஸ்யமாக, அதுவும், வஞ்சகமாக முனைவர் ஸைஃபுத்தீன் கிச்லூவையும், டாக்டர் சத்யபாலையும் கைது செய்து நாடு கடத்தியது எல்லாம் மக்களை உசுப்பி விட்ட சம்பவங்கள். அது ஏப்ரல் 6, 1919 அன்று கொழுந்து விட்டு எரிந்தது. சொல்லப்போனால், கலோனிய அரசு அன்று ஆளுமையை இழந்துவிட்டதாக, அஞ்சியது. அதனால் அவசர நடவடிக்கை. போர்க்கோலம். தொடை நடுக்கம். தாரதம்யம் இல்லாத தடை உத்தரவுகள். இது எல்லாம், ‘விநாச காலே விபரீத புத்தியின்’ முதல் பகுதி. இல்லாவிடின், பைஷாகி திருவிழாவுக்கு மதம் சார்ந்த அளவுக்கு ஏற்பாடு செய்யாமல், அரசு செயல் இழந்திருக்குமா? அல்லது, அலங்கோலம் நடந்த பின்னரும் தத்து பித்து என்று:
  1. அந்த கடங்காரனுக்கு பதவி உயர்வு அளித்திருக்குமா?
  2. கையோடு கையாக, அவனை பதவியிலிருந்து விலக்கி, கட்டாய ஓய்வில் வைத்திருக்குமா?
  3. அவனுடைய காழ்ப்புணர்ச்சி அமில உளரல்கள்: ‘அது புரட்சி; அடக்கினேன்.’/‘சுடாமல், கூட்டத்தை கலைத்திருக்க முடியும்; அது மறுபடியும் கூடினால், நான் கேலிக்கு உள்ளாவேன். அதான், சுட்டேன்.’/‘மிஷீன் கன்கள் கொண்டு போக இடமில்லை. முடிந்திருந்தால், குருதிப்புனல். ஆஹாஹா.’/‘நான் எதற்கு அடிப்பட்டவர்களை ஆஸ்பத்திரிக்கு எடுத்துச் செல்லவேண்டும். ஆஸ்பத்திரிகள் திறந்த வண்ணம். யார் வேணுமானாலும் போயிருக்கலாம்.’/ 
  4. கர்மவினை: அம்ருத்சரசின் சீக்கிய தங்கக்கோயில் அறங்காவலர்கள் அந்த துஷ்டனுக்கு, ‘அண்ணாச்சி’ என்று விருது கொடுத்து அபகீர்த்தி தேடிக்கொண்டார்கள்.
  5. இங்கிலாந்தின் பிரபுக்கள் அவை, அவனுடைய மெய்கீர்த்தி பாடியது. 
  6. கன்செர்வேட்டிவ் கட்சியினர், அவனை, ‘பஞ்சாப் காவலன்’ என புகழ்ந்து, பட்டாக்கத்தி ஒன்றை பரிசிலாக அளித்தது.
இத்தனை ‘விநாசகாலே விபரீத புத்தி’ நடுவில் ஒரு கண்டனம்: ‘ இந்த ஜாலியன் வாலா பாக் நிகழ்வு அசாதாரணமானது. அசுர நிகழ்வு. பயங்கரமான தனித்த பைசாச நிகழ்வு.’ யார் தெரியுமோ? மிஸ்டர் வின்ஸ்டன் சர்ச்சில். அவருக்கு மூடி மெழுகப்பிடிக்காது. மேலும் சொல்ல பல விஷயங்கள் உளன.
(தொடரும்)
இன்னம்பூரான்
13 04 2012
Inline image 1

யதார்த்தா கி.பென்னேஸ்வரன் Fri, Apr 13, 2012 at 9:37 PM

இ சார்

சரியான ஐயத்தை எழுப்பி இருக்கிறீர்கள்.

இதில் எஸ்.ராமகிருஷ்ணனை மட்டும் சொல்வதில் பயன் இல்லை.  இது கட் பேஸ்ட் பிரச்னை.  ஆங்கிலத்தில் படித்து விட்டு அதனைஅறைகுறையாக, பல நேரங்களில் தவறாக மொழிபெயர்ப்பு செய்கிறார்கள்.  உங்களைப் போன்றவர்கள் அவற்றை துல்லியமாகக் கண்டுபிடித்து மானத்தை வாங்குகிறீர்கள்.  மற்றவர்கள் ஏக பரவசத்துடன் இந்த அபத்தங்களை விஷயம் தெரியாமல் ரசிகர் மன்றங்கள் வைத்துக் கொண்டாடுகிறார்கள்.

தமிழில் வலைத்தள வித்தகர்களின் பதிவுகளில் இவை போன்ற கணக்கற்ற அபத்தங்கள் நிறைந்து கிடக்கின்றன.
--------------------------------------------------------------------------------------------------------------------

shylajaSat, Apr 14, 2012 at 2:39 AM


குருதிப்புனல்  இழிநிகழ்வு உச்சாடனம்  பலாபலன்கள்  பிரேமயங்கள்(ப்ரமயங்கள்?) தாரதம்யம்..இப்படிப்பட்ட வார்த்தைகளை உங்கள் இழையில் ரசித்துப்படிக்கிறேன்  இ சார் அநாயசமாய் எழுதுகிறீர்கள் ஆனாலும் ஜாலியன் வாலாபாக் நிகழ்வு மனதில் என்றும் குருதி ஊற்றுதான். அதுபற்றி மேலும் சொல்ல இருக்கின்றதாய் முடித்திருக்கிறீர்கள் ,எழுதுங்கள்.
2012/4/13 Innamburan Innamburan <innamburan@gmail.com>


coral shree Sat, Apr 14, 2012 at 8:35 AM

ஜாலியன்வாலாபாக் படுகொலை மறக்க முடியாத நினைவுகள்....  பிணக்குவியல்களின் காட்சி பார்க்கும் போதே மனம் பிசைகிறது. உங்கள் எழுத்துக்களின் வேகமும் அதை அப்படியே பிரதிபலிக்கிறது.... நன்றி ஐயா,

அன்புடன்

பவள சங்கரி.
[Quoted text hidden]

Subashini Tremmel Sat, Apr 14, 2012 at 8:39 AM

ஆமாம். நானும் இப்படி பல புழக்கத்தில் குறைந்த ஆனால் மிக இனிமையான பல சொற்களை திரு.இன்னம்புரானின் மடல்களில் பார்க்கின்றேன். மறந்து போன பல சொற்களை இவரது கட்டுரைகளை வாசிக்கும் போது மீண்டும் அறிமுகம் செய்து கொள்ள முடிகின்றது. இதுமட்டுமல்லாமல் இவரது கட்டுரைகளில் மிகவும் உணர்ச்சிப் பூர்வமான விளக்கம் பெரும்பாலும் அமைந்திருக்கும்.ஒரு செய்தியை மிக மிக உள்வாங்கி அதனை தனது உணர்வுகளோடு இணைத்து சேர்த்து தருகின்றார். அதனால் செய்தினை  உணர்ந்து அறிந்துகொள்ள முடிகின்றது.

சுபா

கி.காளைராசன் Sat, Apr 14, 2012 at 11:27 AM


ஐயா ‘இ‘னா அவர்களுக்கு வணக்கம்.

2012/4/14 Innamburan Innamburan <innamburan@gmail.com>
'குருதிப்புனல்'
இன்றைய ஜூனியர் விகடனில் பிரபல எழுத்தாளர் ராமகிருஷ்ணன் அவர்கள் ஜாலியன்வாலா பாக் இழிநிகழ்வை பற்றி எழுதியிருக்கிறார்.
பிரபலமானவர்
பிறபலமும் வேண்டும் என்று எழுதியிருப்பார்.

இதுதான் நாட்டுப்பற்று பரவசம் ஐயா! 
 
  1. அம்ருத்சரசின் சீக்கிய தங்கக்கோயில் அறங்காவலர்கள் அந்த துஷ்டனுக்கு, ‘அண்ணாச்சி’ என்று விருது கொடுத்து அபகீர்த்தி தேடிக்கொண்டார்கள்.
 
மிஸ்டர் வின்ஸ்டன் சர்ச்சில். அவருக்கு மூடி மெழுகப்பிடிக்காது. மேலும் சொல்ல பல விஷயங்கள் உளன.
இவையெல்லாம் நீங்கள் சொன்னால்தான் உண்டு.
இல்லையென்றால் எங்களுக்குத் தெரியமாலேயே போயிடும்.
சொல்லுங்கள் ஐயா,

அன்பன்
கி.காளைரான்




அன்றொரு நாள்: ஏப்ரல் 13:1 கனல்

அன்றொரு நாள்: ஏப்ரல் 13:1 கனல்
3 messages


Innamburan Innamburan Fri, Apr 13, 2012 at 12:56 AM
To: mintamil , thamizhvaasal

அன்றொரு நாள்: ஏப்ரல் 13:1
கனல்
முனைவர் சைஃபுடீன் கிச்லூ சென்னை வந்திருந்தார். வரலாற்றில் பதிவு பெற்ற மனிதரென, அவரை பார்க்க சென்றிருந்தோம். அவர் பேசியது எல்லாம் நினைவில் இல்லை. ஆனால், தள்ளாத வயதில், மேஜையை ஓங்கி குத்திய வண்ணம், அவர் ஆவேசமாக பேசியது மட்டும் மறக்கவில்லை. 1947ல் இந்தியாவின் பிரிவினையை கடுமையாக எதிர்த்த ஒரே காங்கிரஸ்க்காரர், இவர் தான். அந்த கட்சியின் வரலாற்றுக்கிணங்க வெளியேறிய சான்றோர்களில், அவரும் ஒருவர். பிற்காலம், கம்யூனிஸ்ட் ஆகிவிட்டார். அவரும் டாக்டர் ஸத்யபால் அவர்களும்... அதற்கு பிறகு வருவோம். அண்மையில் வெளிவந்த ஒரு புதினத்தின் தலை மாந்தர்கள், இருவரும்.
  • ரெளலட் சட்டம் என்று ஒன்றை, ‘விநாசகாலே விபரீத புத்தியின்’ பயனாக, கலோனிய அரசு இயற்றியது. அதனுடைய கர்த்தாக்களில் ஒருவர் ஸர்.ஸி.வி. குமாரஸ்வாமி சாஸ்திரி, மதராஸ் ஹைகோர்ட் ஜட்ஜ். மற்றொரு இந்தியர் பீ.சீ.மிட்டர். அதனுடைய பிரதிகளை எல்லாம் எரித்து விட்டார்களாம், என்னிடம் இருந்தததை, தவிர. அதை த.ம.அ. வுக்காக, மின்னாக்கம் செய்ய ஒரு நண்பரிடம் கொடுத்தேன். அவர் உறக்கத்தில். கனலை கிளறி தீயை பற்ற வைத்த மட்டமான சட்டம் அது. விசாரணையில்லாமல் கைது செய்ய உதவியது. மேலும் அது பற்றி பேசப்படும்.  
  • இன்று அது பற்றிய முதல் கட்டம் மட்டுமே. ஏப்ரல் 13, 1919 அன்று தான், சில நாட்களாக ‘கண கண’ என்று சூடு தணியாத கனல் வேள்வித்தீயாக ஓங்கி வளர்ந்தது. அந்த ஆஹூதியில் சாம்பலானவர்கள்: ஒரு கைக்குழந்தை, 41 சிறார்கள், 337 மனிதர்கள். 37 வருடங்கள் கழிந்த பின் அங்கு சென்று அவர்களுக்கு அஞ்சலி செலுத்தியபோது, உடல் நடுங்கியது. மனம் அழுதது. ஆத்மா கிலேசத்தில். எங்கள் குழுவில் இருந்த நான்கு பேரும் பேசிக்கொள்ளவில்லை, வருத்தம் மேலோங்கியதால்.
  • மேலும் 56 வருடங்கள் கடந்த பின், இன்று, 1956ல் ஜாலியன்வாலா பாக் என்ற மாஜி நந்தவனத்தில் ஏப்ரல் 13, 1919 அன்று நடந்த சின்னாபின்னத்தின் சின்னங்கள் எம்மை வருத்தத்தில் ஆழ்த்தியபோது மனக்கண் முன் ஓடிய நவீன மஹாபாரதத்தின் குருக்ஷேத்திர யுத்தத்தின் சித்திர இதிஹாஸத்தின் முதல் அத்தியாயம், இன்று. முழு வரலாறும் சொல்ல 30 பக்கங்களாவது வேண்டும். ஆகவே, நீங்கள் யாவரும் சம்மதித்தால், அன்றொரு நாள்: ஏப்ரல் 13:1:கனல் தொடரட்டும்.
  • ஏப்ரல் 6, 1919 அன்றிலிருந்தே, அமிருதசரஸ், கொந்தளிப்பில், மார்ச் மாதம் அந்த சட்டத்தை அமலில் கொண்டு வர முஸ்தீபுகள் நடந்த போது. அன்று ஒரு ஹர்த்தால். சில வன்முறை சம்பவங்கள். வஞ்சகமாக, முனைவர் சைஃபுடீன் கிச்லூவும், டாக்டர்.சத்யபாலும் கைது செய்யப்பட்டு தரம்சாலாவுக்குக் கடத்தப்பட்டனர், போலீஸால்.கவர்னர் போர்க்கால கட்டுப்பாடுகளை பிரகடனம் செய்தார். பக்கத்திலிருந்த ஜலந்தரிலிருந்து வந்து சேர்ந்த பிரிகேடியர்- ஜெனரல் டையர் தடியெடுத்தான், ஏப்ரல் 12ம் தேதி. கூட்டம் சேர்ந்தால், சுடுவேன் என்றான். நாளை நமக்கு பிறக்கும் ‘நந்தன’ வருடம் போல், ஏப்ரல் 13, பைஷாகி பண்டிகை. வருஷப்பிறப்பு, குரு கோவிந்த் சிங் அவர்களின் ஞாபகார்த்தாமாக. ஆயிரக்கணக்கான மக்கள், ஜாலியன்வாலா பாக் இல், தடையுத்தரவை மீறி. ஆதவன் அஸ்தமிக்கும் வேளை.மாலை ஐந்து மணி. அந்த கடங்காரன், கூர்க்கா கூலிப்பட்டாளத்துடன், அந்த நந்தவனத்தின் ஒரே குறுகலான நுழைவாயிலை அடைத்துக்கொண்டு, மாலை 5 50லிருந்து ஆறு நிமிடங்களுக்கு பீரங்கிகளிலிருந்து, மக்கள் அடர்த்தியாக இருந்தவிடமெல்லாம் சுட்டுத்தள்ளினான். தாங்கமுடியாமல், அங்கிருந்த கிணற்றில் குதித்து மாண்டவர்கள், 120 பேர்.
  • உடனடி பலன்: பிரிகேடியர்- ஜெனரல் டையருக்கு, மேஜர்-ஜெனரலாக பிரமோஷன். படு பாவிகள்.
  • தொடரலாமா? 
  • எதற்கும் ஒரு வேண்டுகோள். தயை செய்து, முதல் உசாத்துணையில் உள்ள படங்களை கண்டு, ஜாலியன்வாலா பாக் தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்துங்கள். அதை என்னிடம் சொல்லுங்கள்.
இன்னம்பூரான்
பி.கு: அமெரிக்க பல்கலைக்கழகங்கள் ஈடு, இணை அற்றவை. கலிஃபோர்னியா பல்கலைக்கழக்க்குழு, இந்த சட்டத்தின் ஒரு பிரதியை பாதுகாத்து, மின்னாக்கம் செய்ததை,இப்போது பார்த்தேன். அது உசாத்துணையில்.
Inline image 1

உசாத்துணை:

renuka rajasekaran Fri, Apr 13, 2012 at 1:31 AM


ஐயா
ஆத்மா எனும் சத்ய ஒளியின் சாட்சியாய் என் முன்னோர் இன்றைய எனக்காய், அன்று அனுபவித்துப் போயிருக்கிற கொடுமைகளை நினைந்துநெஞ்சமுருகி, ஜீவன் கரைய 
அஞ்சலி செலுத்தியபடியிருக்கிறேன்.

தள்ளாத வயதில் மேஜையைக் குத்திப் பேசிய அந்தப் பெரியவரின் ஆவேசம் என் கண் முன்னே தெரிகிறது.

012/4/12 Innamburan Innamburan <innamburan@gmail.com>
[

rajam Fri, Apr 13, 2012 at 2:09 AM

ஜலியன் வாலாபாக் படுகொலை பற்றிப் பள்ளிக்கூடப் பாட புத்தகத்தில் படித்ததுதான். அப்போது, விவரம் புரியாத வயது.
கொடுமை பலதுக்கும் நடுவில்தான் நாம் வாழ்கிறோம். புகை நடுவினில் தீ இருப்பதும், முள்ளின் மேல் மலரும் பூக்களைக் காண்பதும் உண்மை!