Saturday, September 1, 2018

பேஷ்! பேஷ்!! [5]

பேஷ்! பேஷ்!! [5]
இன்னம்பூரான்
ஸெப்டம்பர் 2, 2018-09-02

சுப்பராயநாதனும், சையது ஒமரும், ஹாசனும் கூட்டுக்களவாணி பயசங்க. ஒத்தன் ஜட்காவண்டி ஓட்ரவன். ஒத்தன் மினி ஜவுளி வியாபாரி. கடசி பொடிப்பய வெட்டிப்பய. மே 17 தேதி அன்று முதல் ஆசாமியின் ஜட்காவில் 6 வீசை 31/2 பலம் கஞ்சா கடத்திப்போவதை மோப்பம் பிடிச்சு, பிடிச்சுப்பிட்டாங்க. மாஜிஸ்ட்ரேட் எசமானும் அவங்களுக்கு அவராதம் போட்டாரு. கட்டாட்டா காராகிருகம் அப்டின்னு கறாரா சொல்லிட்டாரு. கசக்குதா என்ன? காசைக்கட்டிப்பிட்டு, காட்டுக்குப்போய் கஞ்சா பறிச்சு அடுத்த ராஸ்தாலெ போய் கஞ்சாவை காசாக்கினாங்க.

சத்யா ராவும், சீநியும் ஜனவரி 8 2013 அன்று கெளரிப்பட்டினம் கிட்ட போலீஸ்லெ 

மாட்டிக்கிட்டாங்க. ஒரு காரில் 475 கிலோ கஞ்சாவை படேரு கிராமத்திலிருந்து 

விசாகப்பட்டினத்துக்குக் கடத்திட்டு போறாங்க. அப்பத்தான் மாட்டிக்கிட்டாங்க. இது 

எத்தானாவாது தடவையோ? வந்த கோபத்தில் ஜட்ஜ் ஐயா 14 வருஷம் ஜெயில் என்று சொல்லிப்போட்டார்.

மகாஜனங்களே! என்ன முன்னேற்றம் பாருங்க. ஆறு வீசையை நாதனோட ஜட்காவில் கடத்தியது 

மே 17, 1918. 475 கிலோவை காரில் கடத்தியது ஜனவரி 8,2013.

கிட்டத்தட்ட 95 வருடங்களில் என்னே முன்னேற்றம், லாகிரி வியாபாரத்தில்!

பேஷ்! பேஷ்!!


No comments:

Post a Comment