Tuesday, September 4, 2018

பேஷ்! பேஷ்!! [6]



பேஷ்! பேஷ்!! [6]
இன்னம்பூரான்
செப்டம்பர் 4, 2018

தண்டல்காரன் [போலீஸ்] என்றால்  'தூத்துக்குடி பீதி' என்றாலும், பொதுவாக மக்கள் அவனை தள்ளித்தான் வைக்கிறார்கள். அவர்கள் படும் அவதியும், ஆற்றாமையும் வெளியில் தென்படுவதில்லை. உயர் அதிகாரிகள் வீட்டில் எடுபிடி வேலை செய்கிறார்கள் என்பதும் உலகமறிந்த விஷயம் தான். ஒரு சமயம் கனம் கோர்ட்டார்கள் ஆணைக்கு உட்பட்டு நிறுத்தி விட்டார்களோ என்பதை யான் அறியேன். அவர்கள் சங்கம் அமைத்து கம்யூனிஸ்ட் வழியில் போராடவும் முடியாது. அவர்களில் ஒருசாராரை அரசு படுத்துவதாக கோர்ட்டாருக்கு தெரிய வந்துள்ளது. நியாயமான தீர்ப்பை வழங்கிவிட்டார்கள்.

வழக்கு:
பாபுலால் மித்தரலால் என்ற டில்லி போலீஸ் கான்ஸ்டபிள் அவர்களுக்கு ஒரு மன அழுத்தம், கவலை, 
அவமானம், பட்ஜெட்டில் உதைக்கிறது, மனைவிக்கு பதில் சொல்ல முடியவில்லை. ஏனென்று கேட்டால், அவருடைய மாத சம்பளம் 2006க்கு பிறகு வந்த கான்ஸ்டபிள்களை விட ரூ.1900 குறைவு. அரசு பணியில் உள்ளவர்களுக்கு தனியாக அமைந்துள்ள நீதி மன்றத்தில் தாவா தொடர்ந்து வெற்றி பெற்றார். அவருடைய வக்கீல், தொழிற்சங்கங்கள் இருந்தால், இவ்வாறு பாதிக்கப்பட்ட 4000 நபர்களும் ஒரு வழக்குப்போட்டு நியாயம் பெறலாம். ஆனால், போலீசார் சங்கம் நிறுவ முடியாதே. என்று போட்டு உடைத்தார். சர்வ வல்லமையுடன், அங்கேயும், இங்கேயும் அரசாளும் மத்திய அரசு, கஜானா காலி என்று கையை விரித்து, பாபுலாலுக்கு மட்டும் ஈடு செய்தார்கள். அப்பனே! இது அரசியல் சாஸனத்துக்கு விரோதம் என்று உயர் நீதி மன்றம் டோஸ் கொடுத்தது. தேவையா?
பேஷ்! பேஷ்!! [6]
-#-

இன்னம்பூரான்

http://innamburan.blogspot.co.uk

http://innamburan.blogspot.de/view/magazine

www.olitamizh.com














No comments:

Post a Comment