Monday, August 27, 2018

பேஷ்! பேஷ்! [4]


பேஷ்! பேஷ்! [4]
இன்னம்பூரான்
ஆகஸ்ட் 26, 2018
காவேரியும் கொள்ளிடமும் கரை புரண்டு பாய்ந்தோடுகிறமாதிரி தான் ஏழையின் காசு செல்வந்தனின் திரவியமாக நமது சோஷலிஸ்ட் குடியரசில் பாய்ந்தோடுகிறது, நாட்தோறும் பலவருடங்களாக. முப்பது வருடங்களுக்குள் இந்தியாவின் படா கோடீஸ்வரர்கள் (பில்லினையர்ஸ்) இரண்டு நபர்களிலிருந்து 120 நபர்களாக அதிகரித்துள்ளனர்(ஜேம்ஸ் க்ரேப்ட்ரீ).இந்த நதி கீழிருந்து மேலே பாயும். அதற்கு முந்திய முப்பது வருடங்களில் இத்தனை மோசமில்லை. அதாவது, பொது ஜனங்களாகிய நாம் வருமான வரி கட்டுகிறோம்; ஜிஎஸ்டி கட்டுகிறோம்; செல்வந்தர் வரி கட்டுகிறோம்; லஞ்ச வரி கட்டுகிறோம்.

ஒரு செய்தி: ‘இனி யாமார்க்கும் குடியல்லோம்.’ என்று சபதமிடுவது போல் ‘இனி அமைச்சர், எம்.எல்.ஏ.க்களுக்கு கமிஷன் தரப்போவதில்லை’ என்று பொதுப்பணித்துறை ஒப்பந்தக்காரர்கள் மதுரையில் கூடி முடிவு எடுத்துள்ளனர். கசிந்த கமிஷன் ரேட் பட்டியல்: தி.மு.க.ஆட்சியில் 3% கொடுத்தோம்; ஜெ. ஆட்சியில் அது 5 ஆனது. தற்பொழுது உள்ளூர் அமைச்சருக்கு 9%, எம்.எல்.ஏவுக்கு 5%ம், மாவட்ட செயலருக்கு 5%ம் கொடுக்கவேண்டியிருக்கிறது என்ற காண்டிராக் மகாஜனங்கள் ஜி.எஸ்.டி 12% கட்ட வேண்டியிருக்கிறது என்றும் அங்கலாய்த்தார்கள். அவர்களின் சங்கத்தலைவர் திரு. சுதர்ஷன் அவர்கள் பராமரிப்புப்பணி லஞ்சம் 35% என்றும், புதிய கட்டுமானப்பணி லஞ்சம் என்றும் கூறி இருக்கிறார். மேல்நோக்கி பாயும் இந்த கமிஷன் வெள்ளம், ஏழையை பரம ஏழையாக்கி, சீமானுக்கு அளப்பதற்கரிய செல்வத்தை வாரி வழங்கி…!

ஆமாம். லஞ்சம் கொடுப்பதும் தப்பாச்சே! அப்போ இவங்களை ஜெயிலில் போட்டு விட்டால், கண்மாய் தூர்ப்பரது ஆரு?, ரோடு போட்றது ஆரு. இது ஒரு துளி நஞ்சு; பத்திரப்பதிவு செய்யப்போனால், வீட்டைக்காணோம்💣 காரோட்ட லைசன்ஸ் வாங்கப்போனால் காரைக்காணோம்.🔕

கமிஷனுக்கு லகான் போட்டதால், லஞ்சத்துக்கு அழறப்பணத்தை கட்டுமானத்தில் போட்டு, லாபம் ஈட்டலாம். சட்டரீதியான வரியை கட்டலாம். நாடு கடைத்தேறும். மக்கள் செழிப்புடன் வாழ்வார்கள், ஓட்டுக்குத் துட்டு வாங்காவிட்டால். ( படித்தது: தினமலர்:ஆகஸ்ட் 23, 2018 +).
-#-
வால்:
ராஜாஜி பொதுப்பணித்துறையை தனது ஒண்ணாம் நம்பர் விரோதி என்று அசெம்பிளியில் கூறினார். ஹூம்! போய்ச்சேர்ந்த்தார் மஹானுபாவன்

பிரசுரம்: வல்லமை:http://www.vallamai.com/?p=87227#respond













இன்னம்பூரான்

http://innamburan.blogspot.co.uk

http://innamburan.blogspot.de/view/magazine

www.olitamizh.com

No comments:

Post a Comment