தணிக்கையும் நிர்வாகமும் -1
இன்னம்பூரான்
செப்டம்பர் 3, 2016
அம்மா காண்டீன் என்ற மலிவு விலை சாப்பாட்டுக்கடை தமிழ் நாட்டில் மிகவும் பிரபலம். நேற்று தமிழ்நாட்டு சட்டசபையில், நமது அரசியல் சாஸனத்தில் விதித்தபடி தாக்கல் செய்யப்பட்ட தணிக்கை அறிக்கையில், நிர்வாகக்கோளாறுகளால் 3.69 கோடி ரூபாய்கள் நஷ்டம் என்று குறிப்பிடப்பட்டது. அதற்கு அரசு அளித்த விளக்கமும், அதில் அடக்கம்.
‘உகந்த நேரத்தில் சேவை, உத்தமமான அணுகுமுறை, சிக்கனம்’ ஆகியவற்றை இந்த திட்டம் கடைப்பிடிக்காததை ஆவணங்களுடன் நிரூபித்து சுட்டிக்காட்டிய அந்த அறிக்கை, சென்னை மாநகராட்சி, தான் வாங்கிய சப்பாத்தி மிஷின்களின் தரக்குறைவை ஆய்வு செய்து அறிந்து கொண்டபின்னும், ஒப்பந்தக்காரருக்குக் கொடுத்த ரூ1.33 கோடியை இழந்து விட்டதையும், மே 2015ல் கொடுத்த நோட்டீஸுக்கு பின், யாதொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றது. சில இடங்களில் மலிவு விலையையும், சுத்தமான உணவும் கொடுக்கப்படுவதை எடுத்துரைத்த அந்த அறிக்கை, சென்னை, கோவை, திருச்சி, திருநெல்வேலி மாநகராட்சிகளும், ஒன்பது முனிசிபாலிட்டிகளும் தக்கதொரு ஆய்வு செய்யாமல் அம்மா காண்டீன்கள் திறந்த வகையில் ஏற்பட்ட நஷ்டங்களை பட்டியலிட்டது. கோதுமை மாவு டி.யூ.சி.எஸ் மூலம் வாங்கியதில் அதிக செலவு ரூபாய். 30.85 லக்ஷம் என்றும்.மற்றவகையில் அதிக செலவு ரூபாய் 2.78 கோடி என்றதையும் சுட்டியுள்ளது.
ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி என்பதை தவிர, முனிசிபாலிட்டிகளும், மாநகராட்சிகளும் பற்றாக்குறையை ஈடு செய்ய தவித்தன.
அந்த அறிக்கையில் இவை சமூக நல பணி; வணிகம் அல்ல என்ற அரசின் பதில் அடக்கம். ஆனால், ஆடிட் ரிப்போர்ட்டில் அந்த கேள்வி எழவில்லை. அநாவசிய செலவும், பற்றாக்குறையும் தான் அதில் சுட்டிக்காட்டப்பட்டது.
உதவி:
TIMES OF INDIA
Mismanagement of Amma canteens cost Tamil Nadu Rs 5.69 crore: CAG
TNN | Sep 3, 2016, 02.16 AM IS
சித்திரத்துக்கு நன்றி:
இன்னம்பூரான்
http://innamburan.blogspot.co.uk
http://innamburan.blogspot.de/view/magazine
www.olitamizh.com
No comments:
Post a Comment