நோபெல் விருது: 2015: 3
இன்னம்பூரான்
அக்டோபர் 7, 2015
இன்று அறிவிக்கப்பட்ட வேதியியல் நோபெல் விருது Tomas Lindahl, Paul Modrich, Aziz Sancar எனப்ப்டும் மூன்று விஞ்ஞானிகளுக்கு பகிர்ந்து அளிக்கப்பட்டது. உயிரணுக்களின் விநோதமான வாழ்வியலை அறியவும், ஆக்சிஜனற்ற ரைபோ கரு அமிலம் (DNA) எவ்வாறு உயிரணுக்களால் பராமரிக்கப்படுகிறது என்ற ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வெற்றியடைந்த மேற்காணும் விஞ்ஞானிகளை பாராட்டுவது நலமே. புற்று நோய் சிகிச்சைகளுக்கு, இந்த ஆராய்ச்சிகள் மிகவும் உதவும். ஆக்சிஜனற்ற ரைபோ கரு அமிலம் (DNA) அழுகி, அழிந்து போகும் வேகத்தைப்பார்த்தால், புவியில் வாழ்க்கை அமைந்து வளர்வது சாத்தியமில்லை என்ற கூற்றை முதன்முறையாக நிரூபித்த Tomas Lindahl, அடுத்த கட்டமாக அந்த அழிவை எவ்வாறு மூலக்கூறு (molecular machinery) அடிப்படை மராமத்து செய்யும் விந்தையை base excision repair எடுத்துக்கூற nucleotide excision repair என்ற நுட்பத்தை Aziz Sancar விவரித்தார். இதற்கெல்லாம் முத்தாய்ப்பாக, mismatch repair என்று காரணப்பெயர் எடுத்த (ஒரு விதத்தில் அறுவை சிகிச்சை போன்ற) ஆக்சிஜனற்ற ரைபோ கரு அமிலம் உயிரணுக்கள் பெருகும்போது ஏற்படும் ஆயிரக்கணக்கான சிக்கல்களை அவிழ்ப்பதை நிரூபணம் செய்தார்.
சுருங்கச்சொல்லின், இவ்வருட முக்கூடல் நோபெல் விருது உயிரணுக்களின் நடைமுறை,அந்த இயல்பை உபயோகம் செய்வது, குறிப்பாக புற்று நோய் நிவாரணம் ஆகியவற்றை பற்றி அடிப்படை நுட்பங்களை பாராட்டியுள்ளதை நாமும் பாராட்டவேண்டும்.
-#-
உசாத்துணை: பல தளங்கள்.
சித்திரத்துக்கு நன்றி: http://pbs.twimg.com/media/CQtKEK7UsAAITh5.jpg
No comments:
Post a Comment