Tuesday, October 6, 2015

நோபெல் விருது: 2


நோபெல் விருது: 2

இன்னம்பூரான்
அக்டோபர் 6, 2015
துகள் இயற்பியல் (Particle Physics) முற்காலத்து பெளதிக ஏணியின் உயரமான நிலையில் உன்னதமாக மிளிரும் படிகளில் ஒன்று. NEUTRINO - நுண்நொதுமி - ஒளிவேகம் அருகாமையில் செல்லக்கூடிய அடிப்படைத் துகள்களை அந்த இயலில் உள்ள/ இன்று பாராட்டப்பட்ட ஆராய்ச்சிகள் நம்மை வியக்கத்தக்கவை. இந்த வருட பெளதிக நோபெல் விருது Arthur McDonald, a professor emeritus at Queen's University in Kingston, Ontario என்பவருக்கும் (17வது கனடிய நோபெல் விருதாளர்) Takaaki Kajita of the University of Tokyo என்பவருக்கும் அளிக்கப்பட்டுள்ளது. அவர்கள் இருவரும் கண்டு பிடித்து நிரூபித்த உண்மை: இந்த நுண்நொதுமிகள் தமது நீண்ட பயணங்களில், எப்படியோ தன் தன்மைகளை மாற்றிக்கொள்கின்றன. இந்த மாற்றம் ஏற்பட அவைகள் MASS - திணிவு, நிறை ஆக இருக்கவேண்டும். இதனால் சகலமானவர்களுக்கும் நோபல் கமிட்டி சொல்வது: MATTER - பொருண்மை, பருப்பொருள் எனப்படும் பெளதிக பொருண்மையை பற்றி நாம் அறிந்து கொண்டது எல்லாம் ‘பழையன கழிதலும், புதியன புகுதலும்’ ஆக மாறிவிட்டன. துகள் இயற்பியல் (Particle Physics) மேலும் உச்சாணிக்கிளையை பிடித்து விடும் போல தோன்றுகிறது. 1998லியே ஜப்பானில் இந்த நுண்நொதுமியின் ஆள்மாறாட்டம் கண்டுபிடிக்கப்பட்டது. சூரியனிடமிருந்து புறப்பாடு செய்யும் நுண்நொதுமிகள் கூடு விட்டு கூடு பாய்வது கனடாவில் 2001ல் திண்ணமாக நிரூபிக்கப்பட்டது. இது ஒரு யுரேகா மூமெண்ட் என்று இன்று McDonald சொல்வது ஒரு மயிர் சிலிர்க்கும் நிகழ்வு என்று நான் நெகிழ்ந்து போகிறேன். நீங்கள் எப்படியோ?!

உசாத்துணை: நோபெல் ஆங்கில ஆவணங்கள்.

சித்திரத்துக்கு நன்றிள் http://static.dnaindia.com/sites/default/files/2015/10/06/382711-nobel-physics-prize.jpg

No comments:

Post a Comment