அந்தோ பரிதாபம்!!! தொடர் [5]
இன்னம்பூரான்
ஜூலை 19, 2015
‘ஆண்டாண்டு தோறும் அழுது புரண்டாலும்/ மாண்டார் வருவரோ மாநிலத்தீர் ...’ என்று நல்வழியில் ஒளவைபாட்டி உணர்த்தினார். தானே நாண்டு கொண்டு மாண்டவர்களை பற்றி பரிதாபப்படுவதைத் தவிர, யாது செய்ய முடியும்? கிட்டத்தட்ட நூறாண்டுகளுக்கு முன்னால் இங்கிலாந்தில் ஒரு சிறுமி பூப்படைந்தாள். உதிரப்போக்கு அவளை நிலைகுலைய செய்தது. அத்தனை திகில்! மென்மையாக உணர்த்த யாரும் இல்லை போலும். தாங்கொண்ணா மன அழுத்தம் உந்த, தன்னை மாய்த்துக்கொண்டாள். இதன் பொருட்டு, சிந்தித்த ஒருவர் துவக்கிய Befriender International அமைப்பு எத்தனையோ தற்கொலைகளை தடுத்து நிறுத்தி, அந்த மாந்தர்களுக்குப் புத்துயிர் அளித்துள்ளது. சென்னையிலும் அத்தகைய அமைப்பு பற்பல வருடங்களாக, இந்த பணியை சிறப்புற செய்து வருகிறது. எனினும், போன வருடம் 16,122 நபர்கள் [16.2%: இந்தியா] தமிழ்நாட்டில் தற்கொலை செய்து கொண்டனர். எனக்கு அரைகுறையாக தெரிந்தவர் ஒருவரும் தன்னை மாய்த்துக்கொண்டார். அந்த 16, 122 நபர்கள் வறுமை, கஞ்சா, சாராயம் போன்ற லாகிரி, இல்லறச்சிக்கல், தீரா வியாதி என பல காரணங்களால் உந்தப்பட்டனர் என்று ஆய்வு கூறுகிறது. காதல் தோல்வி: 506. தற்கொலை செய்து கொண்டவர்களில், பெரும்பாலோர் எட்டாவது வகுப்புக்கு மேல் படிக்கவில்லை. 16,122 ல் 11,738 நபர்களுக்கு வருட வருமானம் ஒரு லக்ஷத்துக்குக் குறைவு; அவர்களில் 3,880 நபர்கள் அன்றாடம் காய்ச்சிகள்; 166 நபர்கள் திவாலானவர்கள். 5,155 பெண்மணிகளில், 2,143 பெண்மணிகள் இல்லத்தரசிகள். என்ன அரசியோ! 36 நபர்களுக்கு சீதனக்கொடுமை; 853 மாணவர்கள் தற்கொலை; அவர்களில் 247 மாணவர்கள் தேர்வில் தோல்வி அடைந்தவர்கள். 70% தற்கொலையாளர்கள் திருமணம் ஆனவர்கள். 552 நபர்கள் லாகிரி சாவு என்று ஒரு ஆய்வு. எய்ட்ஸ் பொருட்டு 18 நபர்கள் தற்கொலை.
தற்கொலை தலைநகரம் சென்னை, பின்னர் பெங்களூரு, டில்லி, மும்பை.
சரி, தடுக்க/ கட்டுப்படுத்த/ புத்துயிர் கொடுக்க என்ன செய்யலாம். ‘ஸ்நேகா’ என்ற புகழ் வாய்ந்த அமைப்பு சென்னையில் நாட்தோறும், இடை விடாமல், நேரிலும், தொலை பேசி மூலமாக ஆலோசனை வழங்கி ஆயிரக்கணக்கான தற்கொலைகளை தடுத்து உளது.
ஸ்நேகா சினேகத்துடன் சொல்வதை கேளுங்கள்.
*
விலாசம்:
SNEHA
11, Park View Road,
R.A. Puram,
Chennai-600028.
R.A. Puram,
Chennai-600028.
Helpline Phone
91-44-2464 0050 [HOT LINE]
91-44-2464 0060
Helpline Email
help@snehaindia.org
Admin E-mail
admin@snehaindia.org
admin@snehaindia.org
சித்திரத்துக்கு நன்றி: http://ivanhanigan.github.io/images/sneha-ad.jpg
-#-
No comments:
Post a Comment