Monday, May 18, 2015

நாளொரு பக்கம் 20

நாளொரு பக்கம் 20

Monday ,the 16th March 2015

பகை முன்னர் வாழ்க்கை செயலும், 
தொகை நின்ற பெற்றத்துள் கோல் இன்றிச் சேறலும், 
முன் தன்னைக் காய்வானைக் கை வாங்கிக் கோடலும், - 
இம் மூன்றும் சாவ உறுவான் தொழில்.

திரிகடுகம்  4


பகைவர்களுக்கு எதிரில் செல்வங் காட்டினால் அவர்கள் அதற்குக் கேடு செய்ய முற்படுவார்கள்.  (அதாவது) நம்மீது பகையும், பொறமையும், காய்ச்சலும், காழ்ப்புணர்ச்சியும் உள்ளவர்கள் முன்னால் நமது மயிலாட்டமும் வேண்டாம்; ஒயிலாட்டமும் வேண்டாம். அதனால் தான் ‘துஷ்டனைக் கண்டால் தீர விலகு.’ என்றார்கள்.

கோலில்லாது மாட்டு மந்தையிற் போனால் ஏதாவது ஒரு மாடு முட்டும்.  இது ஒரு உவமை. எங்கு சென்றாலும், என்ன செய்தாலும், பொருத்தமும், பொருத்தமான உபகரணங்களும் தேவை.  அமாவாசை இருட்டில்,  தீவட்டி இல்லாமல் நடந்தால், அரவம் தீண்டலாம். The right tool for the right job.

நம்மீது பகையும், பொறமையும், காய்ச்சலும், காழ்ப்புணர்ச்சியும் உள்ளவர்களை விலக்கி விட்டு, மறுபடியும் கூட்டுச் சேர்த்துக்கொள்வதை விட வேறு வினை வேண்டாம்.

இவை மூன்றும்  சாவு நாடுபவன்  தேடி வருவித்து தன்னை வறுத்துக்கொள்பவனின் செய்கையாகும்.

கேவலமான சிக்கல்களில் மாட்டிக்கொள்வதை விட நாக்கைப்பிடுங்கிக்கொண்டு சாகலாம் என்ற சொலவடை தமிழில் உண்டு.


-#-
சித்திரத்துக்கு நன்றி: http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/c/c4/Flickr_-_don_macauley_-_Shepherd_with_cows.jpg/220px-Flickr_-_don_macauley_-_Shepherd_with_cows.jpg

No comments:

Post a Comment