நாளொரு பக்கம் 23
Thursday ,the 19th March 2015
வழங்காத் துறை இழிந்து நீர்ப் போக்கும்,
ஒப்ப வீழைவு இலாப் பெண்டிர் தோள் சேர்வும்,
உழந்து விருந்தினனாய் வேற்றூர் புகலும்,
இம் மூன்றும் அருந் துயரம் காட்டும் நெறி.
திரிகடுகம் 5
கோயில் குளமாயினும் சரி, காவேரி பெருக்கு என்றாலும் சரி, விவரம் தெரிந்தவர்கள் நினைத்த இடங்களில் இறங்கமாட்டார்கள். அத்தகைய இடங்கள் தான் வழங்காத் துறை எனப்படும். அங்கு இறங்கினால் வேகமாக அடித்துச் செல்லப்படலாம். சுழலில் மாட்டிக்கொண்டு மூழ்கி சாக நேரிடலாம். அக்கம்பக்கத்தில் உதவிக்கு யாரும் இல்லாமல் போகலாம். ‘வழங்காத் துறை இழிந்து நீர்ப் போக்கும்’ ஆழம் தெரியாமல் காலை விடுவது போல அமையலாம். தவிர்க்க வேண்டியதே, இது.
அம்மாதிரியே, நம்மிடம் விருப்பம் இல்லாத பெண்களை நாடுவது துன்பம் விளைவிக்கும். ‘ஒப்ப வீழைவு இலாப் பெண்டிர் தோள் சேர்வும்’ வேண்டா என்றால் நல்லாதனார்.
‘மதியாதார் தலைவாசல் மிதியவேண்டாம்’. அழையா விருந்தினராக, வலுவில் நுழைந்து விருந்துண்பது கேவலம். ‘உழந்து விருந்தினனாய் வேற்றூர் புகலும்,’ செய்கை நமக்கு அவமானத்தை ஈட்டித் தரும்.
எனவே, மேற்படி மூன்று இழிச்செயல்களையும் தவிர்க்க வேண்டும் என்பதே, இச்செய்யுளின் சாரம்.
-#-
No comments:
Post a Comment