Saturday, May 23, 2015

நாளொரு பக்கம் 26

நாளொரு பக்கம் 26


 Sunday, the 22th March 2015

தேம்படு பனையின் திரள்பழத் தொருவிதை
வானுற வோங்கி வளம்பெற வளரினும்
ஒருவர்க் கிருக்க நிழலா காதே.
  • நறுந்தொகை 16


பனங்கனி சுவை பொருந்தியதானாலும், அதனுடைய விதையானது முளை விட்டு, வளர்ந்து வானளாவ செழுமை பெற்றிருந்தாலும், அதனடியில் ஒருவர் கூட அமர்ந்து அதன் நிழலில் இளைப்பாறமுடியாது. விதை முளைத்து வளரினும் அது நிழலாகாது என்பது உருவகம் ( metaphor).

உருவத்தால் பெரியவர்கள் எல்லாரும் பெருமை உடையவர்கள் என்று கொள்ளலாகாது. அது தான் இந்த நறுந்தொகை எனப்படும் வெற்றி வேற்கை செய்யுளின் உட்கருத்து.
-x-

சித்திரத்துக்கு நன்றி: http://mrswarnerarlington.weebly.com/uploads/6/9/0/0/6900648/3040892.jpg?632

No comments:

Post a Comment