Creative Writings in Tamil: Series: 5: 1: 1:1
Key and details will follow in 5:1:1:2
This is the first instalment of a new series on creative writing of recent origin in Tamil. This series on Gautama Buddha was inspired by two inputs on him yesterday.
We target the Tamil Diaspora who can barely understand the language; simple language and English explanations. Your preference is ours. All suggestions and criticisms will be attended to.
Mail to innamburan@gmail.com
இன்று ஏப்ரல் 15, 2014.
‘பூரண ஞானம் பொலிந்த நன்னாடு/ புத்தர் பிரானருள் பொங்கிய நன்னாடு’ என்று மஹாகவி பாரதியார் பாடியதை, அவரது முன்னோடி ஒருவர் நிரூபித்து விட்டார்.
இன்றைய பதிவில் ஒரு புத்த காவியத்தின் சில செய்யுள்கள் மட்டும், சுவையை எடுத்தோதுவதற்காக இடம் பெருகின்றன. தொடரின் அமைப்பு பார்வையாளர்களின் ஆர்வத்தைப் பொருட்டு அமையும். படைப்பாளரின் பெருமையும், மூலத்தின் பின்னணியும் பிறகு வரும். ஒவ்வொரு பதிவும் ஏழு நிமிடங்கள் அமையும். Message repeated in English.
*
|
ஆசிய ஜோதி
|
|
|
|
|
1. புத்தர் அவதாரம்
|
|
1445
|
|
வையகத்தில் உயிர்கள்மிக வாடக் கண்டேன்;
வழியறியாது அவைமயங்கி வருந்தக் கண்டேன்;
மெய்யிதுஎன்று உய்யுநெறி காட்டிநன்மை
விளைவிப்பார் எவரையுமே கண்ணிற் காணேன்.
|
1
|
1446
|
|
எண்ணிரிய சென்மங்கள் எடுத்து முன்னம்
எவ்வுடம்பின் எவ்வுயிருக்கும் இடர்க ளைந்தேன்;
மண்ணுலகம் ஈடேற இன்னும் ஓர்கால்
மனிதஉடல் தாங்கமனத்து ஆசை கொண்டேன்;
|
2
|
1447
|
|
இப்பிறப்பை யல்லாது பிறப்பு வேறிங்கு
எனக்குமில்லை; என்னைவழி பட்டு வாழும்
ஒப்பரிய அடியவர்கள் எவர்க்கும் இல்லை;
உண்மைஈது எந்நாறும் உண்மை யாமால்.
|
3
|
1448
|
|
வானெழுந்து வளர்இமய மலையின் தென்பால்
வாழும்உயர் சாக்கியர்தம் மன்ன னுக்கு
யானுமொரு மகனாகச் செல்வேன்" என்றான்.
இமையவரை நோக்கிஅருள் இறைவன் மாதோ!
|
4
|
|
|
வேறு
|
|
1449
|
|
அந்நாளில் அவ்விரவில் சுத்தோத னப்பேர்
அண்ணற்கு வாய்த்தமனை அலர்மங்கை யனையான்
எந்நாளும் காணாத கனவொன்று கண்டாள்
எந்நாடும் எவ்வுயரும் இன்புறவே அம்மா!
|
|
|
|
வேறு
|
|
1450
|
|
ஆறு கதிரொளி செய்திடுமீன் - கண்ணுக்கு
அற்புதக் காட்சி அளித்திடுமீன்
ஏறும் அழகு பொலிந்திடுமீன் - திசை
எட்டும் ஒளிர ஒளிவிடுமீன்
|
|
சின்னஞ் சிறுமருப் பாறுளதாய்க் - காம
தேனுவின் பால்நிறம் பெற்றுள்ளதாய்,
மன்னும் மதவேழம் போன்றிடுமீன் - இந்த
வையம் ஒளிர ஒளிவிடுமீன்.
|
7
|
|
1452
|
|
விண்ணகம் விட்டு விரைந்திறங்கி - வரும்
வீதி யெலாம்ஒளி வீசிவந்து,
மண்ணகம் வாழ வலந்திரிந்து - தேவி
மாயை வயிற்றில் புகுந்ததுவே.
|
8
|
|
|
வேறு
|
|
1453
|
|
வலமருங்கில் விண்மீனும் வயிற்றில் பாய
மாதேவி துயிலுணர்ந்து மகிழ்ச்சி யுற்றாள்;
உலைவறியாத் திருவருளை வியந்து றின்றாள்;
ஒருதாயுங் கண்டறியா இன்பங் கண்டாள்.
|
9
|
மாதேவி கண்ட இன்பம் பற்றி அடுத்த பதிவில் பார்ப்போம்.
நன்றி வணக்கம்.
அன்புடன்,
இன்னம்பூரான்
No comments:
Post a Comment