மோடி தர்பார்: 4
இன்னம்பூரான்
30 05 2014
தருமமிகு தமிழ்நாட்டு மின் தமிழர்கள் வேகமாகவே தொலைக்காட்சி/நாளிதழ்கள் மூலம் அவர்கள் அறிந்ததையே, நான் சொல்வதால், மவுனம் காக்கிறார்கள் போல; வெளிநாட்டுத் தமிழரன்பர்கள் இதை மிகவும் எதிர்பார்க்கிறார்கள். சால்ஜாப்பு தன்னிலை விளக்கம் ஓவர்.
ஆட்சி நடப்பு நல்வழியில். மாஜி பிரதமரை அவருடைய இல்லம் சென்று சந்தித்தது, விவேகமே. என்னை கேட்டால், அவருடைய ஆலோசனைகளை முறையாக பெறுவதும் உதவும். கூடாநட்பை அறவே ஒழித்தால், மன்மோஹன் சிங் அவர்கள் நல்லதொரு மனிதர். இரண்டாம் உலக யுத்தம் முடிந்த பின் யால்ட்டா கான்ஃபெரன்ஸ் நடந்தது. எதிர்க்கட்சித்தலைவர் ஆட்லீயை அழைத்துச்சென்றார், பிரதமர் சர்ச்சில். யாரோ வினவ, அவர் சொன்ன பதில்: எலெக்ஷன் வருது. நான் தோற்றுப்போகலாம். தொடர்ந்து இயங்க அவருக்கு எல்லாம் தெரியவேண்டும் என்றார். அப்படியே நடந்தது. இங்கும் மக்கள் நலன் முன் நிற்கட்டுமே.
பாட புத்தகங்களில் தன்னை பற்றி எழுதவேண்டாம் என்று திரு மோடி கேட்டுக்கொண்டதும் விவேகமே. சுய விளம்பரம் சர்வாதிகாரத்தின் முதல்படி. ஜார்ஜ் ஆர்வெலை கேளுங்கள். குஜராத், மத்யபிரதேஷ், ராஜஸ்தான் தாங்கள் எடுத்துக்கொண்ட முடிவுகளை ரத்து செய்யவேண்டும். ஃபருக் அப்துல்லா ஷரத்து 370 பற்றி குரல் எழுப்பியுள்ளார். அது அடங்கிப்போகும், பொருளற்றது என்பதால். வாசகர்கள் விரும்புவார்கள் என்ற நிமித்தம் கிடைத்தால், அதன் முழு வரலாறு எழுதலாம்.
நல்ல செய்திகள் வந்த வண்ணம். சீன பிரதமர் நற்செய்தி அனுப்பியுள்ளார். ரிஸர்வ் வங்கி கவர்னர் இணைந்து பணி புரியப்போவதாக சொல்கிறார். அரசு ஆதார் அட்டை அளிப்பதை தொடர்ந்து செய்யப்போவது நல்ல செய்தி. இன்னல்களை அகற்றவேண்டும், முதலில்.
பிரதமருக்கு கிருஹப்பிரவேஷ வாழ்த்துக்கள். ஜூம் 9 அன்று ஜனாதிபதியின் அரசு கொள்கை எதிரொலி சொற்பொழிவு, திட்டவட்டங்களை அறிவிக்கும். அப்போது ஒரு பிடி பிடிக்கலாம் அகில் பில்க்ராமி புதிய அரசை பற்றி குற்றம் குறை கண்டுள்ளார். அது பற்றி பிறகு பார்க்கலாம்.
தொடரும்.
சித்திரத்துக்கு நன்றி:http://www. meritsolutions.com.au/wp- content/uploads/2011/10/ Selection_Decisions-150x200. jpg
இன்னம்பூரான்
http://innamburan.blogspot.co.
http://innamburan.blogspot.de/
www.olitamizh.com
No comments:
Post a Comment