மோடி தர்பார்: 3
இன்னம்பூரான்
29 05 2014
நாள்தோறும் நற்செய்திகள். இழையை திருத்தியமைக்க நேரமில்லை. பிரதமரின் துரிதநடை மெச்சத்தக்கது. அது தொய்ந்து போகக்கூடாது. சில விஷயங்கள் மட்டும் இப்போதைக்கு. அமைச்சரவையில் குஜராத் மாநிலத்துக்கு மோடி மட்டும் தான். எனக்கு லட்டு, அவனுக்கு குட்டு போன்ற சுயநல வாதங்கள் எடுபடவில்லை. தோப்புக்கு ஒரு பிரதிநிதி, துரவுக்கு மற்றொரு பிரதிநிதி என்றால், இந்தியாவுக்கு யார் என்று கேட்கத் தோன்றுகிறது. மாநிலங்களின் கோரிக்கைகள் மீது சிரத்தை காட்டவேண்டும் என்ற பிரதமரின் அறிவுரை போற்றத்தக்கதே. இந்தியாவின் ஃபெடரல் அரசியல் அமைப்பில் இணக்கமும், உகந்த வகையில் பங்கு அளிப்பதிலும், நன்மை தான் நிகழும். ஆனால், அவரவர்கள் முன்னுரிமை கோருவார்கள். காஷ்மீர சச்சரவை பாருங்கள். மூன்று தலைமுறைகளாக தன்னிச்சையாக ஆட்சி புரிந்த ஷேக் அப்துல்லா வம்சம் தன் சுயரூபத்தைக் காட்டி பாச்சா காட்டுகிறார்கள்.
- ராணுவம், வெளியுறவு, தகவல் தொடர்பு ஆகியவை தவிர, மற்ற சட்டங்களை, அந்த மாநில அரசின் சம்மதம் பெற்ற பிறகே, நாடாளுமன்றத்தின் தீர்மானங்கள், காஷ்மீரில் எடுபடும்; காஷ்மீர் மக்கள் குடியுரிமை, சொத்துரிமை, அடிப்படை உரிமைகளுக்கு அவர்களே ராசா. இந்திய சட்டங்கள் அதற்கு கீழே. இது தான் ஷரத்து 370 சிறப்பு அந்தோஸ்து! ‘அனுபவி ராஜா’ என்று ஆட்சி பிரமுகர்கள் சேர்த்த ஶ்ரீநகர் மத்திய பகுதி பல கோடி பொறும். சும்மா சொல்லக்கூடாது. காங்கிரஸ் தலைமையும் கொஞ்சம் நன்றிக்கடன் பெற்றுக்கொண்டது. 60 வருடங்களில் கோடானுகோடி கை மாறியதை மறுக்க இயலாது. இப்போது மடியில் கை போட்றமாதிரி, மீள் பார்வை பார்க்கலாமா என்றவுடன். ‘நாங்கள் இந்தியாவில் இருக்கமாட்டோம்’ என்று லுக் விடுகிறார், பேரன் ஓமர் அப்துல்லா. பேஷ்! என்னே தேசபக்தி!
- ஆமாம்! அமைச்சர்களின் மடி மேல் கை போட்டு விட்டார், மோடி. உறவினர்களை உதவியாளர்களாக ( ரயில்வே அமைச்சர் பன்ஸல் (காங்கிரஸ்) அந்தத்துறையையே சொந்தபந்தங்களுக்கு தத்து கொடுத்து - எத்தனை தொந்திகள்!) நியமனம் செய்வதை தடுத்துவிட்டார். எழுத்து மூலம் ஆணை. தமிழ் நாட்டில் மட்டுமே, அந்த உதவியாளர்களின் சமூக விரோத நடைகள் எண்ணில் அடங்கா, ஜூனியர் விகடன் சர்வே படி. மோடி ஆர்டர் இங்கும் அமலில் இருந்தால் நமக்கு நல்லது.
- பிரதமர் ஒரு வடநகரான். ஒருகாலத்தில் குஜராத்தின் தலை நகர், வட நகர். அண்ணன் தம்பிகளுக்குள் நல்ல இணக்கமாம். ஆனால், அதை விளம்பரம் படுத்துவதும் கிடையாது. துஷ்பிரயோகமும் இல்லை என்கிறது, வரலாறு. அய்யா ஆடை விரும்பி.அதில் ஒரு திருப்தி. இருந்து விட்டு போகட்டுமே. அதே மாதிரி கைக்கடியாரங்கள், காலணி மோஹம். எல்லாம் பரிசுத்தமே டைப். இவர் டெக்னாலஜி காதலர். அரசு பணத்திலும், சொந்த பணத்திலும் சிக்கனம். அம்பாஜி தேவி பக்தர்.
- பிரதமரின் பிரதம காரியதரிசி ஆன ந்ருபேந்திரர், நரேந்திரருக்கு பொருத்தமான தேர்வு.
- பிரதமர் வீர் சவர்க்காருக்கு அஞ்சலி செய்தது எதிர்பார்த்தது தான். அண்ணல் காந்திக்கும். நேருவுக்கும் அஞ்சலி செலுத்தியதும் நற்செயல்கள். பாகிஸ்தான் பிரதமரின் அன்னைக்கு பரிசு அனுப்பியதும், அவரிடமும், ஶ்ரீலங்கா அதிபரிடம், மூடி மெழுகாமல் பேசியதும், அவருடைய ராஜதந்திரத்துக்கும் மேலான ராஜாங்க அணுகுமுறையை காட்டுகின்றன. அவருடைய இணையதளம் சிறப்பாக அமையவில்லை என்பது என் கருத்து.
- காத்திருந்து பார்ப்போம்.
(தொடரும்)
சித்திரத்துக்கு நன்றி: http://i.dailymail.co.uk/i/pix/2013/10/28/article-2478511-190B830100000578-212_634x422.jpg
No comments:
Post a Comment