Showing posts with label Narendra Modi. Show all posts
Showing posts with label Narendra Modi. Show all posts

Thursday, June 5, 2014

சிரிச்சு மாளலெ 1

சிரிச்சு மாளலெ 1



இன்னம்பூரான்
ஜூன் 6, 2014

பாரதவர்ஷம் என்ற பொன் விளையும் பூமியிலே அரியக்குடி ராமானுஜ அய்யங்கார் என்ற சங்கீத வித்வான் ரொம்ப பிரபலம். அவரை, மற்ற உஸ்தாத்களுடன் ஜனாதிபதி மெடல் சூட்டி கெளரவித்தார். உஸ்தாத் -வித்வான் தாரதம்யம் கண்டு கடுப்பில் இருந்தார், அய்யங்கார்வாள். ஜனாதிபதியின் விஐபி எடுபிடியாக (மிஸ்ட்ரெஸ் ஆஃப் செரமனீஸ்) இருந்த நிர்மலா ஜோஷி அம்மையார், அய்யங்காரின் எரிச்சலை கண்டு கொள்ளாமல், இசை கேடாக ‘அய்யங்கார்ஜீ! உங்கள் தோடி பிரபலம். பாடுக’ என்று பணித்தாராம். அய்யங்காரும், ‘சரி தாண்டி, போடீ!’
என்றாராம். சான்று: சுப்புடு.

அந்த மாதிரி பிரியங்காவை ‘என் பொண்ணு மாதிரி’ என்று இணக்கமாக சொன்னதற்கு பதிலடியாக ‘நான் ராஜீவ் காந்தியின் பொண்ணாக்கும். போடா மோடி பிண்ணாக்கு..’ என்று பொருள்பட அந்த பொண்ணு சொல்லிடிச்சாம். பேப்பர்காரங்க சொல்றாங்க. அசோக சக்கரவர்த்தியின் ‘ப்ரியம் வத’ என்ற ஸுபாஷிதம் தான், ப்ரியாங்கா என்ற பெயரின் பின்னணி. தப்பா பேர் வச்சுட்டா, பாட்டி என்று தான் தோன்றது! அம்மாகாரி பொன்னம்மா அந்த வருண் வாண்டுக்கு சரியான புத்தி புகட்டினாராம். அவன் பதவிப்பிரமாணம் எடுத்தவுடனேயே பெரியம்மாவுக்கு படா கும்பிடு போட்டானாம். ‘மொதல்ல பத்திரத்திலெ கையொப்பம் போடு என்றாளாம், பெரியம்மா. அவங்களுக்கு தெரியும், ஆவணங்களின் மகிமை. வருண் கத்துக்குட்டி. 

அடுத்தபடியாக:

சல்மான் குர்ஷீத் தருண் தேஜ்பாலுக்கு வக்காலத்தாம். கபில் சைபால் கல்கத்தாவுக்கு போய் வாதாடறப்போறாரம். ப.சி. யும் எங்காத்து மாமா போல கேஸ்கட்டு எடுத்தக்கப் போறாராம்.
பொழைக்க தெரிந்த மனுஷா. அவா காட்லெ மழை பொழியும்.
*
பி.கு. சுப்புடு சொல்றார்: ‘அய்யங்காரா! கொக்கா! மெடலை தேச்சு பாத்தார். கில்ட்டு!
எடுபிடி மாமி ரசவாதம்னு கொமைஞ்சு போய்ட்டாராம், அய்யங்கார்வாள். 
பாரதவர்ஷம் என்ற பொன் விளையும் பூமியிலே நிலக்கரி கறுப்பாக இருந்தாலும் அயல்நாடுகளில் கொழிக்கும். அலைகற்றை ஆகாசத்தை வளைக்கும். இன்னும் எத்தனையோ!
-x-

சித்திரத்துக்கு நன்றி: http://solvanam.com/wp-content/uploads/2009/12/img430.jpg






இன்னம்பூரான்

http://innamburan.blogspot.co.uk

http://innamburan.blogspot.de/view/magazine

www.olitamizh.com

Friday, May 30, 2014

மோடி தர்பார்: 4

மோடி தர்பார்: 4


இன்னம்பூரான்
30 05 2014


தருமமிகு தமிழ்நாட்டு மின் தமிழர்கள் வேகமாகவே தொலைக்காட்சி/நாளிதழ்கள் மூலம் அவர்கள் அறிந்ததையே, நான் சொல்வதால், மவுனம் காக்கிறார்கள் போல; வெளிநாட்டுத் தமிழரன்பர்கள் இதை மிகவும் எதிர்பார்க்கிறார்கள். சால்ஜாப்பு தன்னிலை விளக்கம் ஓவர்.

ஆட்சி நடப்பு நல்வழியில். மாஜி பிரதமரை அவருடைய இல்லம் சென்று சந்தித்தது, விவேகமே. என்னை கேட்டால், அவருடைய ஆலோசனைகளை முறையாக பெறுவதும் உதவும். கூடாநட்பை அறவே ஒழித்தால், மன்மோஹன் சிங் அவர்கள் நல்லதொரு மனிதர். இரண்டாம் உலக யுத்தம் முடிந்த பின் யால்ட்டா கான்ஃபெரன்ஸ் நடந்தது. எதிர்க்கட்சித்தலைவர் ஆட்லீயை அழைத்துச்சென்றார், பிரதமர் சர்ச்சில். யாரோ வினவ, அவர் சொன்ன பதில்: எலெக்ஷன் வருது. நான் தோற்றுப்போகலாம். தொடர்ந்து இயங்க அவருக்கு எல்லாம் தெரியவேண்டும் என்றார். அப்படியே நடந்தது. இங்கும் மக்கள் நலன் முன் நிற்கட்டுமே.

பாட புத்தகங்களில் தன்னை பற்றி எழுதவேண்டாம் என்று திரு மோடி கேட்டுக்கொண்டதும் விவேகமே. சுய விளம்பரம் சர்வாதிகாரத்தின் முதல்படி. ஜார்ஜ் ஆர்வெலை கேளுங்கள்.  குஜராத், மத்யபிரதேஷ், ராஜஸ்தான் தாங்கள் எடுத்துக்கொண்ட முடிவுகளை ரத்து செய்யவேண்டும். ஃபருக் அப்துல்லா ஷரத்து 370 பற்றி குரல் எழுப்பியுள்ளார். அது அடங்கிப்போகும், பொருளற்றது என்பதால்.  வாசகர்கள் விரும்புவார்கள் என்ற நிமித்தம் கிடைத்தால், அதன் முழு வரலாறு எழுதலாம். 

நல்ல செய்திகள் வந்த வண்ணம். சீன பிரதமர் நற்செய்தி அனுப்பியுள்ளார். ரிஸர்வ் வங்கி கவர்னர் இணைந்து பணி புரியப்போவதாக சொல்கிறார். அரசு ஆதார் அட்டை அளிப்பதை தொடர்ந்து செய்யப்போவது நல்ல செய்தி. இன்னல்களை அகற்றவேண்டும், முதலில்.

பிரதமருக்கு கிருஹப்பிரவேஷ வாழ்த்துக்கள். ஜூம் 9 அன்று ஜனாதிபதியின் அரசு கொள்கை எதிரொலி சொற்பொழிவு, திட்டவட்டங்களை அறிவிக்கும். அப்போது ஒரு பிடி பிடிக்கலாம் அகில் பில்க்ராமி புதிய அரசை பற்றி குற்றம் குறை கண்டுள்ளார். அது பற்றி பிறகு பார்க்கலாம்.

தொடரும்.

சித்திரத்துக்கு நன்றி:http://www.meritsolutions.com.au/wp-content/uploads/2011/10/Selection_Decisions-150x200.jpg






இன்னம்பூரான்

http://innamburan.blogspot.co.uk

http://innamburan.blogspot.de/view/magazine

www.olitamizh.com