Sunday, April 27, 2014

Creative Writings in Tamil: Series: 5: 1: 1: 7 ஆசிய ஜோதி



Creative Writings in Tamil: Series: 5: 1: 1: 7 ஆசிய ஜோதி

This is the Seventh instalment of a new series on creative writing of recent origin in Tamil. 

It is wise to do a brief Retrospective for absorbing the message from Literary passages, particularly when Divinity is perceived. I present  a string of such gems from Asia Jothi on episodes already covered.

இலக்கிய சோலைகளின் அழகை அனுபவிக்க, திரும்பி, திரும்பி பார்க்க வேண்டும். தெய்வீக மணம் வீசும் இலக்கியங்களை மனனம் செய்வது சாலத்தகும். கவிமணி அவர்களின் ஆசியஜோதியிலிருந்து கோர்த்த ஒரு சொல் மாலை. அது எனக்கு அளிக்கப்பட்ட வரமாகக் கருதுகிறேன்.

*
‘வையகத்தில் உயிர்கள்மிக வாடக் கண்ட (இறைவன்)... இன்னும் ஓர்கால்
மனிதஉடல் தாங்கமனத்து ஆசை கொண்டு... சாக்கியர்தம் மன்ன னுக்கு
யானுமொரு மகனாகச் (சென்றார்.)... விண்ணகம் விட்டு விரைந்திறங்கி - வரும்
வீதி யெலாம்ஒளி வீசிவந்து, மண்ணகம் வாழ வலந்திரிந்து - தேவி
மாயை வயிற்றில் புகுந்ததுவே... பட்ட மரங்கள் தளிர்த்தனவே - எங்கும்
பாழ்ங்கிண றும்ஊறிப் பொங்கினவே; திட்டுத் திடர்மணற் காடும் - சுடுகாடும்
சில்லென்று பூத்துச் சிலிர்த்தனவே... இடைவெளி யின்றி எவ்வெவ் வுலகும்
பாதல மீறாப் படர்ந்து சென்றது;

மக்கள்

"பிறந்திட இறந்தீர்! இறந்திடப் பிறந்தீர்!
எழுமின்! எழுமின்! யாவரும் எழுமின்!
புத்த பெருமான் புவியில் உதித்தனன்;
அவனை வணங்குமின்; அவன்வழி பற்றுமின்;
அவனுரை கேண்மின்; அழிமனம் ஒழிமின்;
நலமுறு மெனவே நம்பி நாடுமின்;
உள்ளந் தெளிமின்; உறுதி கொண்மின்;
உய்யும் வழிஈது; உண்மையும் ஈதாம்;
என்னும் மொழிகள் எவ்வெவ் விடத்தும்
மந்திர மொழிகளாய் வந்தெழக் கேட்டனர்...

... தேவி,
நோவு நொம்பலம் நோக்கா டின்றியோர்
மகவினைப் பெற்று மகிழ்ச்சி யுற்றனள்.
மகவின் அழகிய வடிவினில் அமைந்த
எண்ணான் கரிய இலக்கணம் கண்டு, இது
தெய்விக மகவெனச் செப்பினர் தெரிந்தோர்.
சோபன மறிந்து சுத்தோ தனனும்
தாயை மகவொடு தண்டிகை ஏற்றி
அரண்மனை உய்த்திட ஆணை யிட்டானன்...உம்பரும் அன்று மனிதராய் மாறி
உலாவிக் களித்துநின்றார் - என்றும்
அம்புவி வாழ இறைவனும் வந்தங்கு
அவதரித் தான் எனவே.

நம்பினால் நம்புங்கள். இலாவிடினும் பரவாயில்லை. இந்த மணிமாலையை கோர்க்கும் போது என் மனம் வெல்லப்பாகாக உருகுகிறது.

புத்தம் சரணம் கச்சாமி
தம்மம் சரணம் கச்சாமி

சங்கம் சரணம் கச்சாமி

No comments:

Post a Comment