11 ~ 12 ~ 13
இத்தகைய வரிசை நூற்றாண்டுக்கு ஒரு முறை தான் வருமாம். என்னை கேட்டால் ஆயிரம் ஆண்டுகளுக்கு ஒரு முறை கூட அரிது, அரிது, அரிது என்பேன். மூன்று மேதாவிகளின் ஜன்மதினம் கொண்டாடும் தினமிது. மூவரும் இரத்தினங்கள். வரிசையாக வாரேன்.
இதே தேதியில் 1920ல் பிறந்த பாரதரத்னா ரவி சங்கர் அவர்கள் புவனமெங்கும் பயணித்து பாரதத்தின் இசை செல்வத்தைப் பகிர்ந்து கொண்டார். அவர் சிதார் வாத்தியம் வாசிப்பதை கேட்க அஹமதாபாத்தில் தருணம் கிட்டியது. மாலை ஆறு மணிக்கு சபை நிரம்பியது. எட்டு மணி சுமாருக்கு மீட்ட ஆரம்பித்தவர் மீட்டி, மீட்டி moodக்கு லாகிரி மூட்டினார். தபேலா மாஜிக் அல்லா ரக்கா தட்டினார். நாகரீகமாகவே தட்டினார். அவரது புன்னகையும் சேர்ந்து எம்மை மயக்கி விட்டது. ஒரு பாடாக நடுநிசி மவுனத்திலே ஜங்கார ஸ்ருதி நர்த்தனமாடியது. விடிவெள்ளி மறையும் வேளை.காலை மணி மூன்று. சிதாரும், தபேலாவும் இணைந்ததாலே புஷ்பமாரி பொழிந்தது. மோன நிலை கலைந்து வீட்டுக்கு செல்லும் போது கார் விட முடியவில்லை. மனம் பறி போய் விட்டதே!
இதே தேதியில் 1922ல் பெஷாவர் பழக்கடை வியாபாரிக்கு பிறந்த தாதா சாஹேப் சாதனையாளர் விருது பெற்ற அழகு ராஜா திலீப் குமாருக்கு பாகிஸ்தான் அரசு நிஷானே இம்தியா என்ற விருது கொடுத்து தன்னை கெளரவப்படித்துக்கொண்டது: 1998. கார்கில் போர் நடந்த போது அந்த விருதை விரைவாக விரட்டிவிடவேண்டும் என்றது மும்பை கண்ட்ரோலர் சிவ சேனா. ‘ஏழை எளியவர்களுக்கு சேவை செய்ததற்கும், இரு நாடுகளின் உறவை மேன்படுத்த நான் உழைத்ததற்கும் அளித்த விருது, அது. கார்கில் போருக்கும் அந்த மனித நேயப்பணிக்கும் சம்பந்தம் இல்லை’ என்று விளக்கம் அளித்து மறுத்து விட்டார். நீடுழி வாழ்க.
இதே தேதியில் 1935ல் பிறந்த ப்ரணாப் முகர்ஜி இந்தியாவின் ஜனாதிபதி. அரசியல் இலக்கணத்தை இலக்கியமாகவும், இலக்கியத்தை இலக்கணமாகவும் ரசவாதம் செய்த நூற்றுக்கு நூற்றொரு பங்கு அரசியல் விற்பன்னரான பாலிடிக்ஸ் மாயாஜாலி ப்ரணாப் முகர்ஜியின் மாமா நம்ம ஃபெரண்ட். அது போகட்டும். இந்திய ஜனாதிபதிகளில் வரலாறு படைத்த பெருமை இவரை சாரும். காரணம் யாதோ? பின்னணி என்னவோ? ராகுலு சொல்லல்லையோ?என்றெல்லாம் சண்டைக்கு வராதீர்கள். குற்றம் சாற்றப்பட்ட பிரதிவாதிகள் ( அச்சுப்பிழை: ‘பிரதிநிதிகள்’) தேர்தலுக்கு நிற்பதை பற்றி உச்ச நீதி மன்ற தீர்ப்பை வளைத்துக்கட்ட அரசியல்வாதிகள் முயன்றபோது அந்த பலூனின் காற்றை பிடுங்கிவிட்ட சாதனை நிச்சயமாக ‘பாரத ரத்னா’ வாங்கப்போகும் திரு. ப்ரணாப் முகர்ஜியோடது தான். நீடூழி வாழ்க.
அடடா! சீனியாராட்டி மறந்துட்டேனே. இதே தேதியில் கொம்மாளம் போட்டு மறு நாள் நடந்த டில்லி தர்பார்: 1911
'... ஆம்பளையெல்லாம் பொம்பளெ மாதிரி ஜரிகையும், பட்டுமா, கவுனு. நம்ம பேட்டை ரவுடி மாதிரி ஜ்வெல்லரி ~ சங்கிலிகள், தோடா, தோடு, பதக்கம், தலைப்பாலெ வைரம், வைடூர்யம். கும்பிடு போடத்தானெ வந்திருக்காஹ. எதுக்குன்னு கத்தியும் கப்டாவும்! எல்லாம் ஃபில்ம்லெ காட்றாஹ. ஆனாப்பாரு...' என்று நேற்று நான் எழுதியதை, அன்றே நம்ம ஏகேசி ஃபில்ம் எடுத்திருக்காரு! பரோடா மவராசா மட்டும் கொஞ்சம் 'தில்லா' இருந்தாரு.அந்த படத்தை போட்றேன். இந்த மண்டியிட்ட மன்ன்ர் பிரான்கள் எல்லாருமா சேந்து, பாடியாலா மவராணி மூலமாக, அகில இந்திய மாதர்கள் சார்பில் (?) ஒரு இம்மாம் பெரிய நகையை பட்டமகிஷிக்கிட்ட தானம் வாத்தாஹ. தர்பாரில் முதல் பதக்கம் 'ஸ்டார் ஃஃப் இந்தியா'! அதை மவராசா பட்டமகிஷிக்கு, கன்னத்தில் முத்தமிட்டு, சூட்ட, அவளும் 'அண்ணலின்' கன்னத்தில் முத்தமிட்டாள். காணாது கண்டது போல, சபையோரும் ஆரவாரம் செய்தனர்….'
சுபம்.
நாம தான் பாவம்! இதே தேதியில் பாரதரத்னா எம்.எஸ். சுப்புலக்ஷ்மி அவர்களை 2004ல் இழந்தோம்.
இன்னம்பூரான்
11 12 13
இன்னம்பூரான்
http://innamburan.blogspot.co.uk
http://innamburan.blogspot.de/view/magazine
www.olitamizh.com
|
|
No comments:
Post a Comment