நல்ல மாட்டுக்கு ஒரு சூடு போதுமாம், சுரணை வர. அசோகர், அக்பர், கரிகாலன் போன்ற நிர்வாகிகளால் ஆளப்பட்ட ‘காமதேனு’ இந்திய மக்களுக்கு எத்தனை சூடுகள், ஆண்டவா! நமது மந்திரிமார் ஆளாளுக்கு ராசா. வச்சதே சட்டம். கொண்டதே கோலம். சராசரி இந்தியன் வருமான வரியை பைசல் செய்து ஜூலை 31க்குள் கட்டி, ஆவணத்தை பதிவு செய்யவில்லை என்றால், நிதி அமைச்சரகம் பிறாண்டிப்பிடும், பிறாண்டி. ஆனா பாருங்கோ. 1966ல் வருமானவரியை அறவே மறந்து வரலாறு படைத்தவர் பாபு ஜகஜீவன் ராம். லஜ்ஜையை இழப்போம் என்று வலுக்கட்டாயமாக கஜ்ஜை கட்டிக்கொண்டு நியாயத்தையும், தர்மத்தையும் செய்கைகளால் குலைக்கும் தலை மாந்தர்களுக்கு சூடும் இல்லை, சுரணையும் இல்லை என்ற தோற்றம் நம்மை அலக்கழிக்கிறதே.
சுதந்திர இந்தியாவில் அமைச்சர்களுக்கான நெறி ஒன்று உளது. அதன் படி மத்திய/மாநில அமைச்சர்பிரான்கள் தங்களின் சொத்து சுதந்திரம், சுற்றத்தின் சொத்து சுதந்திரம், வர்த்தக ஈடுபாடுகள் வகையறா பற்றி பிரதமரிடம்/ முதல்வரிடம் வருடாவருடம் ஆகஸ்ட் 31க்கு முன்னால் அறிவிக்க வேண்டும். போதாக்குறைக்கு இவர்களுக்கு ரிமைண்டர் வேறே. இந்த வருடம், உரிய காலத்தில் அலக்ஷ்யமாக அந்த அறிவிப்பை தராத நம்பர் ஒன் ஆசாமிகள்;
ஜனாப் குலாம் நபி ஆசாத்;
சட்டம் பேசும் சட்டாம்பிள்ளை கபில் சைபல்;
நிலக்கரி சர்ச்சையில் சற்றே மாட்டிக்கொண்டிருக்கும் ஶ்ரீபிரகாஷ் ஜைஸ்வால்;
திரு. பல்லம் ராஜு;
திரு. ஹரீஷ் ராவத்.
அலக்ஷ்யமாக அந்த அறிவிப்பை தராத நம்பர் டூ ஆசாமிகள்;
உலகாளும் ஆசை கொண்டிருந்த திரு.சசி தரூர்.
ஹோம் இலாக்கா ஆர்.பி.என். சிங்.
ஆந்திரா மாமி டி.புரந்தேஸ்வரி.
பிரதீப் ஜைன்.
அதிர் ரஞ்சன்.
இன்றைய தேதி வரை அதை சமர்ப்பித்தவர்கள்: ஏ.கே.அண்டனி, ஷரத் பாவர், சுஷீல்குமார் ஷிண்டே,பி.சிதம்பரம், வீரப்ப மொய்லி, மல்லிகார்ஜுன கார்கே, ஆஸ்கர் ஃபெர்ணாண்டெஸ், சால்மன் குர்ஷித்.
இந்த தொட்டகுறை தொடாதகுறை சமாச்சாரங்கள் மத்திய அரசை சார்ந்தது. மாநில அரசுகளில் எப்படி நடக்கிறதோ!!! இன்றைய சூடு படி 14 காபினெட் அமைச்சர்கள், 21 உப அமைச்சர்கள் கமுக்கமா இருக்கிறார்கள் போலும். இந்த அழகில் தேர்தல் வரும் சின்னங்கள் தென்படுகின்றன.
நீங்க என்ன பண்ணுவேள்?
Published in Vallamai on 18 10 2013
No comments:
Post a Comment