Wednesday, November 16, 2016

கற்பிழந்த கரன்சி நோட்டுக்கள்: தகவல் மையம் [2]





கற்பிழந்த கரன்சி நோட்டுக்கள்: தகவல் மையம்
[2]

இன்னம்பூரான்
17 11 2016

  1. அரவங்குறிச்சி வகையறா இடங்களில் வாக்காளர்கள் ஒவ்வொருவருக்கும் ரூ.5000/- செல்லா நோட்டுகளில் கொடுப்பதாக சகல கட்சிகளும் தாராளமய கோட்பாட்டை கையில் எடுத்து உளராம் என்று தினமலர் செய்தி. நம்ம ஆளப்போகும் பிரதிநிதிகளின் இந்த ‘ஒரு கல்லில் இரண்டு மாங்காய்’ அணுகுமுறை விபரீதத்தில் முடியட்டும் என்று சித்தரின் சாபம்.
  2. கூகிளாண்டவரிடம் இந்தியாவிலிருந்து அதிகம் கேட்கப்பட்ட கேள்வி: “கறுப்புப்பணத்தை வெள்ளையாக்குவது எப்படி? நேர்மை கொழுந்துகளே! வணக்கம். 
  3. கர்நாடகா எம் எல் ஏ நாரயண்சாமி தலா மூன்று லக்ஷம் கொடுத்து, பெருமளவில் கல்லா கட்டுகிறாராம். இல்லை அது வங்கி அளித்த விவசாயக்கடன் வினியோகம் என்கிறார், அவர். அட! நாராயணா!
  4. நீண்ட காலமாக செயல்படாத ஒரு கோடி வங்கி கணக்குகளில் முடங்கி கிடக்கும் ரூ.2400 கோடி. விடுதலை இதழ் தலையங்கம்
  5. இதில், தேசியமயமாக்கப்பட்ட வங்கி களில் மட்டும் 86 லட்சம் கணக்குகள் முடங்கியுள்ளன. அவற்றில் ரூ.1900 கோடி பணம் உள்ளது. இதிலும் ஸ்டேட் பாங்க் குரூப் வங்கிகளில் மட்டும் பார்த்தால், 10 லட்சம் செயல்படாத கணக்குகளில் ரூ.233 கோடி முடங்கியுள்ளது. 
  6. தனியார் வங்கிகளில் 14 லட்சம் செயல் படாத கணக்குகளில் ரூ.233கோடிக்கும் அதிகமான பணம் முடங்கியுள்ளது. வெளி நாட்டு வங்கிகளில் 46,000 செயல்படாத கணக்குகளில் ரூ.69கோடி முடங்கியுள்ளது.
  7. Property developers are putting up a brave front on prices, but registration authorities report a sharp fall in revenue in leading real estate markets in Haryana, Uttar Pradesh, Karnataka, Telangana and Tamil Nadu in the first week after demonetisation. 17 11 2016
  8. Some small developers in Bengaluru, a segment that makes up an estimated 12 per cent of the market, have reportedly cashed in on the Centre’s decision, making sales in “old currency”, to be regularised using loans later. 17 11 2016
  9. மும்பை : சர்வதேச அந்நிய செலாவணி சந்தையில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 5 காசுகள் உயர்ந்து காணப்படுகிறது. டாலரின் மதிப்பு உயர்வுடன் துவங்கிய போதிலும்...இந்திய ரூபாய் மதிப்பு உயரத் துவங்கியது. இன்றைய வர்த்தக நேர துவக்கத்தின் போது ரூபாய் மதிப்பு 67.89 ஆக இருந்தது. முன்னதாக நேற்றைய வர்த்தக நேர முடிவில் ரூபாய் மதிப்பு 67.94 ஆக இருந்தது.
  10. சிங்­கப்பூர் : ரிசர்வ் வங்கி முன்னாள் கவர்னர், டி.சுப்­பாராவ், சிங்­கப்­பூரில், நிதித் துறை கருத்­த­ரங்கில் பேசி­ய­தா­வது: மத்­திய அரசு, கறுப்புப் பணத்தை கட்­டுப்­ப­டுத்த, 500, 1,000 ரூபாய் நோட்­டு­களை செல்­லா­த­வை­யாக அறி­வித்­தி­ருப்­பது வர­வேற்­கத்­தக்­கது. இதனால், மக்கள் படும் துயரம், தற்­கா­லி­க­மா­னது. ஆனால், இந்­ந­ட­வ­டிக்­கையால், நாட்­டிற்கு நீண்ட கால பயன்கள் கிட்டும். குறிப்­பாக, இந்­தி­யாவில் முத­லீ­டுகள் அதி­க­ரிக்கும்; விலை­வாசி உயர்வு கட்­டுக்குள் வரும்; பண­வீக்கம் மறைந்து, பண வாட்டம் என்ற நிலையை, நாடு சந்­திக்க நேரும். ரொக்க பரி­மாற்றம் குறைந்து, மின்­னணு வாயி­லான பணப் பரி­மாற்றம் அதி­க­ரிக்கும். இந்­தியா, ரொக்கப் பொரு­ளா­தாரம் சார்ந்த நாடு என்ற நிலையில் இருந்து, குறை­வான ரொக்கப் பரி­மாற்றம் உள்ள நாடு என்ற சிறப்பை பெறும். இவ்­வாறு அவர் கூறினார்.

பின்குறிப்பு: சில குமுகங்களில் எழுதுபவர்களில் பலரும், அங்கெல்லாமும், என் வலைப்பூவிலும் என்னுடைய வாசகர்களில் பலரும் இந்திய பிரஜையாக இல்லாமல் இருக்கலாம். அவர்கள் இந்திய நாட்டின் மேலாண்மையை (sovereignty) மதிப்பாதவர்களாகவும், இந்தியாவில் தற்காலம் நடக்கும் நிகழ்வுகளை துச்சமாக கருதபவர்களும் இருக்கலாம். தீவிரம் புரியாமல் எள்ளி நகையாடுவதிலும் ஞானஸ்நானம், விதண்டாவாதம் செய்பவர்களாகவும், வதந்தி காதலர்களாகவும் இருக்கலாம். அத்தகைய உத்தமபுத்திரர்கள் இந்தியாவிலிருந்தே குட்டை குழப்பலாம். அவர்களை நான் கண்ணெடுத்தும் பார்க்கவில்லை. புறக்கணிக்கிறேன். பொருட்படுத்தவில்லை. சில குமுகங்கள் நான் எழுதுவதை மட்டுறுத்தலாம். I don’t care.
இன்னம்பூரான்
17 11 2016

[தொடரும்]
சித்திரத்துக்கு நன்றி:






இன்னம்பூரான்

http://innamburan.blogspot.co.uk

http://innamburan.blogspot.de/view/magazine

www.olitamizh.com








இன்னம்பூரான்

http://innamburan.blogspot.co.uk

http://innamburan.blogspot.de/view/magazine

www.olitamizh.com

Tuesday, November 15, 2016

இன்னம்பூரான் பக்கம் 5: 29: கனம் கோர்ட்டார் அவர்களே! 29:இழுபறி வைத்தியம்

Innamburan S.Soundararajan

இன்னம்பூரான் பக்கம் 5: 29: கனம் கோர்ட்டார் அவர்களே! 29:இழுபறி வைத்தியம்
1 message

Innamburan S.Soundararajan Wed, Nov 16, 2016 at 7:13 AM


இன்னம்பூரான் பக்கம் 5: 29: கனம் கோர்ட்டார் அவர்களே! 29
இழுபறி வைத்தியம்

இன்னம்பூரான்
13 11 2016
பிரசுரம்: http://www.vallamai.com/?p=73288#respond



கலோனிய அரசு கெடுபிடிகள் பல காட்டினாலும், திலகரின், காந்திஜியின், பாரதியாரின் எழுத்துரிமையும், பேச்சுரிமையையும் முச்சூடும் பறிக்கவில்லை. தடா போட்டுப் பார்த்ததுடன் சரி. காந்திஜியுடன் வைஸ்ராய் இர்வின் பிரபு பேச்சு வார்த்தை நடத்தினார். நீதித்துறை தன் பெருமையை காத்துக்கொள்வதில் கவனம் செலுத்தும் என்பார்கள். ஆனால், மதராஸ் ஹைகோர்ட்டில் ஒரு ஜட்ஜை வழக்கறிஞர் ஒருவர் நாய் என்று பொருள்பட நகைத்தார்.  சிரித்துக்கொண்டு விட்டு விட்டார்கள். ஏனெனில், அது பூடகமான நகைச்சுவையாக இருந்தது. சினம் பொங்க, ஒரு ஜட்ஜ் ‘நீங்கள் யாரிடம் பேசுகிறீர்கள் என்று தெரியுமா?’ என்ற வினவ, பழம் தின்னி கொட்டை போட்ட வக்கீல் ஐயா, ‘ஆஹா! தெரியுமே! ஒரு ஒல்லிப்பிச்சான் [puisne] ஜட்ஜிடம் பேசுகிறேன்.’ என்றார். எல்லாரும் கமுக்கமாக சிரித்துக்கொண்டார்கள்,  ஜட்ஜ் உள்பட.

அத்தகைய அலாதி உறவு எல்லாம், சுதந்திர இந்தியாவில் பறி போகத் தொடங்கின, கொஞ்சம், கொஞ்சமாக. 

எனக்கு ஒரு கெட்ட வழக்கம். இங்கிலாந்தில் படித்து வந்த காலகட்டத்தில் உயர் நீதி மன்ற (ஹவுஸ் ஆஃப் லார்ட்ஸ்) தீர்ப்புகளை தினம்தோறும் படிப்பேன். கறாரில் மையக்கரு நகைச்சுவையிலும், அலட்டிக்கொண்ட தீர்ப்பில் தர்மமும் இருக்கும். எல்லாம் பாடமே. இந்திய அரசியல் சாஸனத்தில் நீதித்துறைக்கு மவுசு அதிகம் கொடுக்கப்பட்டுள்ளது. அப்பீல் என்ற சட்ட நடவடிக்கை இருப்பதே, நீதிபதிகள் தெய்வாம்சம் கொண்டவர்கள் அல்ல, ஒருவர் அளித்த தீர்ப்பை மேலா ரத்து செய்யலாம் என்பதால், தீர்ப்புகளை விமர்சனத்துக்கு உட்பட்டவை என்பதை குறிக்கிறது. அதே விமர்சனத்தை மக்களில் ஒருவர் செய்வது வரவேற்கபடுவதில்லை. அப்படி செய்தாலும், கவனமாக நீதிபதியை கொஞ்சம் வெளிப்படையாக விமர்சித்தால் கோர்ட்டை அவமதித்தாக எடுத்துக்கொண்டு, ஆறு மாதம் ஜெயிலில் போடலாம். 


அந்த நிலைப்பாட்டுக்கு அஸ்திவாரமே சற்றே தடுமாற்றம் தான். வில்மாட், வில்மாட் என்று ஒரு ஜட்ஜ் 1765ல் ‘கோர்ட்டை அவமதிப்பது குற்றமே’ என்று ஒரு நிருபர் மேல் எழுந்த வழக்கில் ஒரு தீர்ப்பில் எழுதி இருந்தாலும்,  டெக்னில் காரணங்களால். அது குறைப்பிரசவம் ஆனது வில்மாட்டின் மைந்தர் காலம் சென்ற தந்தையின் படைப்புகளை பதிவு செய்த போது, சட்டத்தை அணுகாத அந்த கருத்து ஒரு மரபு ஆகி விட்டது. அப்பறம் என்ன? நீதி அரசர்கள், நீதி மன்னர்களானர்கள், சில இடங்களில் நீதி தேவர்களும் ஆனார்கள் -இந்தியாவில். இங்கிலாந்தில் மரபை பதிவு செய்து விட்டு, காமன் சென்ஸ் படி நடந்து கொண்டார்கள். பொதுவாக சொன்னால், அங்கே நீதிபதிகள் அமரிக்கையாக இருந்தார்கள். 

மேல்நாட்டு ஊடகங்கள் எந்த உத்தமபுத்திரனையும் உச்சாணிக்கிளையில் அமர்த்தி மெய்கீர்த்தி பாடமாட்டார்கள். தடாலடியை எல்லாம் இறக்கி வைத்து வேப்பிலை அடிப்பார்கள். பல வருடங்களுக்கு முன்னால்   [1989?] நீதிபதிகளின் தலைமை போன்ற டெம்பிள்டன் பிரபு, பிரபல வழக்கறிஞர்களும், நீதிபதிகளின்புடை சூழ, இந்தியா வந்திருந்தார். அப்போது, ‘ ஊடகங்களின் எழுத்துரிமை ‘கனம் கோர்ட்டாரை அவமதித்தால்..!?.’ என்ற பட்டி மன்றம் நடந்தது. அப்போது அவர் 1987ல் உலகெங்கும் பேசப்பட்ட ஸ்பைகேட்சர் புத்தகம் பற்றிய தீர்ப்பில், அந்நூலின் ஆசிரியர் பீட்டர் ரைட் வாக்கு மீறி அரசு ஒற்றர்களின் ரகசியங்களை (ஒரளவு லீக் ஆனவை தான்) பிரசுரம் செய்யக்கூடாது என்று தானும், இரு சக ஜட்ஜ்கள் மெஜாரிட்டி தீர்ப்பு கொடுத்ததை ஊடகங்கள் பரிகசித்தன. மூவரின் படங்களை தலை கீழாக மாட்டி, ‘மூன்று முட்டாள்கள்’ என்ற தலைப்பை டைலி டெலிக்ராஃப் பிரசுரம் செய்தது. ஐயா அவர்கள் உடனே நடவடிக்கை எடுத்தார். என்ன? அதை தன் வரவேற்பு அறையில் அலங்காரமாக மாட்டி விட்டு, தினம் அதை பார்த்து சிரித்துக்கொண்டார்.
[தொடரும்]
சித்திரத்துக்கு நன்றி:






இன்னம்பூரான்

http://innamburan.blogspot.co.uk

http://innamburan.blogspot.de/view/magazine

www.olitamizh.com

Sunday, November 13, 2016

Life Certificate

Time for submission of Life Certificate extended up to 15th January 2017.
We suggested extension unto 31 Dec 2017. The above is Government's response within 24 hours.

Friday, November 11, 2016

கற்பிழந்த கரன்சி நோட்டுக்கள்: தகவல் மையம் [1]



கற்பிழந்த கரன்சி நோட்டுக்கள்: தகவல் மையம்
[1]

இன்னம்பூரான்
12 11 2016
சில நாட்களாக ஊடகங்களும் பூடகங்களும் மத்திய அரசு ரூ. 1000/- & ரூ. 500/- கரன்சி நோட்டுகள் செல்லாது என்ற உத்தரவை பிறப்பித்த பின், ஓயாமல் செய்திகள்/ கருத்துக்கள்/ அபிப்ராயங்கள்/ சிக்கல்கள்/ தீர்வுகள் ஆகியவை பற்றி பறை சாற்றி வருகின்றன. நேற்று பிறந்த குழந்தை கூட குறை கூறுகிறது என்ற மிகையை யதார்த்தமாகக் கூறலாம்.

இந்த கனஜோர் நடவடிக்கையை வரவேற்கும் நான், சில தகவல் துணுக்குகளை மட்டும் ஓரோரு வரியில் இந்த மையத்தில் தருகிறேன்.

எல்லாம் பொது மன்றத்தில் வந்தவை தான் என்று உறுதி அளிக்கிறேன். தனித்தனியாக உசாத்துணை கொடுக்க இயலாது.

  1. 21/2 லக்ஷம் பொறும் போலி நோட்டுகளை கேந்திரபாராவிலிருந்து குர்தா ரோடு வந்த சுமித் குமார் துடு என்ற வாலிபன் வங்கியில் செலுத்தும்போது பிடிபட்டான். அவன் ஒரு தேசத்துரோகி கும்பலை சார்ந்தவன் என்று சொல்லவும் வேண்டுமா?
  2. மும்பையிலும், டில்லியிலும், வருமான வரி அதிகாரிகள் 12 ஹவாலா துரோகிகளையும், உண்ட வீட்டுக்கு துரோகம் செய்த ஆபரண வியாபாரிகளையும் துளைத்து எடுத்தார்கள் - ஏன்? அவர்கள் சட்டவிரோதமாக செல்லா நோட்டுகளை திரவியமாக்கினர்.
  3. கோவாப்பரேட்டிவ் வங்கிகளில் விதிகள் மீறப்பட்டன. அவர்கள் தலையிலும் கை.
  4. ஹவாலா திவாலானதால் வெளி நாட்டிலிருந்து வரி செலுத்தாமல், வங்கிக்கட்டணம் கட்டாமல் தாய்நாட்டுக்கு பல வருடங்களாக துரோகம் செய்த பாவிகள், தேள் கொட்டிய திருடர்கள் போல் தவிக்கின்றனர்
  5. அவர்களிடம் பெற்ற பணத்தை என் செய்வது என்று தெரியாமல், அரசியலர் ஆதரவுடன் பல வருடங்களாக மக்களை ஏமாற்றியவர்கள் சிக்கி வருகிறார்கள்.
  6. ஏழு வருடங்களாக தி.மு.க. ‘அற’ கட்டளை சொத்து வரி கட்டவில்லை. இன்றைய பாக்கி ரூ.72 லக்ஷம். வாத்தியார் நின்று கொண்டு.....
  7. டாஸ்மாக் கடைகளில் விற்பனை கடும் சரிவு. மது மயக்கம் நாடுவோர் மால்களில் க்ரெடிட் கார்டு கொடுத்து வாங்கி சரியலாம்.
  8. வாட்ஸ் அப்: திருவான்மியூர் குப்பை தொட்டியில் நோட்டுகள்! ~இது வதந்தியாம்.
  9. ஹிந்தி நடிகை பிபாஷா பாசு முட்டை வாங்க கடன் வாங்க நேரிட்டதால், ‘கொதிப்பு’ ~ செய்தி 
  10. திருமலை ஒம்மாச்சி சார்பில் அந்த கோயில் ‘அறங்காவலர்கள்’ செல்லா நோட்டுகளையும் உண்டியலில் பெற்றுக்கொள்கிறார்கள். யாத்திரீகர்களை என்றும் கவனிக்கும் அவர்கள் கனிவுடன் இரண்டாவது உண்டியல் பெட்டியையும் வைத்துள்ளார்கள். மோடி என்ன சொல்வார்? ஒம்மாச்சி என்ன நினைப்பார்?

அடக்கத்துடன்,
இன்னம்பூரான்

சித்திரத்துக்கு நன்றி: 
http://indianexpresstv.com/vvtimages/news-images/thumbs/tiger-information-center-is-across-the-country-நாடெங்கும்-அமைகிறது-புலிகள்-தகவல்-மையம்-07-08-16.jpg















இன்னம்பூரான்

http://innamburan.blogspot.co.uk

http://innamburan.blogspot.de/view/magazine

www.olitamizh.com

Tuesday, November 8, 2016

துட்டும் நோட்டும்


துட்டும் நோட்டும்


ஆயிரம் ரூபாய்/ ஐந்நூறு ரூபாய் நோட்டுக்கள் செல்லாது. அது நல்லது என்பது என் கருத்து.

அறுவை சிகிச்சை தேவையாகும்போது, களிம்பு உதவாது. ஓரிரு நாட்கள் பொது ஜனத்துக்கு சின்ன கஷ்டங்கள். என்னிடம் வாடகை வண்டிக்கு பணம் இல்லை, இன்று தமிழ் சந்திப்புக்கு செல்ல. அதை பெரிது படுத்தலாமா? பொடி நடையா போனால் போச்சு. நடப்பில் பாகிஸ்தான் கள்ளப்பணம் இருப்பது உமக்கு தெரியுமா? தென்னிந்தியர்களுக்கு போர் என்ன என்று தெரியாது. சொகுசு வாழ்க்கை. அதான் முணுமுணுப்பு.
அன்புடன்,
இன்னம்பூரான்
http://www.noolulagam.com/book_images/27804.jpg

Monday, November 7, 2016

உருண்டு பிரண்டு திரண்டு முரண்டு!!!!!!!

Innamburan S.Soundararajan

உருண்டு பிரண்டு திரண்டு முரண்டு!!!!!!!

Innamburan S.Soundararajan Mon, Nov 7, 2016 at 10:32 PM


உருண்டு பிரண்டு திரண்டு முரண்டு!!!!!!!

நாத்திகம் உட்பட எம்மதமும் சம்மதமே என்பதே எல்லா மதாபிமானங்களின், நாத்திகம் உட்பட, உள்ளுறை. அதாவது, நமது நம்பிக்கை பாட்டைகள் எத்தனை முரண் தெரிவித்தாலும், மனிதநேயம் அடி வாங்காது, காளை. இங்கிலாந்தில் பெரும்பாலாக மதாபிமானம் ( நாத்திகம் உட்பட) அன்றாட வாழ்க்கையில் இடம் பெறுவதில்லை. அதனால், மாதாகோயில்கள் விற்கப்படுவதை காணலாம். கோயில்களோ, மசூதிகளோ, மாதா கோயில்களோ மனிதர்கள் வீடு போல் வாழ உகந்தவை அல்ல. தெய்வங்கள் அங்கு வாழலாம். சில இடங்களில் சினிமா தியேட்டர் கட்டலாம். எனவே, யாதொரு விதமான பிரச்னைகள் இல்லாமல் அவை மசூதியாக/ குருத்வாராவாக, கிருஷ்ணன் கோயில்களாக மாறி விடுகின்றன. இதில் குற்றமே இல்லை. எனினும், குற்றம் இழைத்தன் விளைவாக ஒம்மாச்சிகள் எல்லா மதங்களிலும், நாத்திகத்திலும் ஓங்கி வள்ர்கின்றன. ஃபைஸாபாத்தில், ஒரு மசூதி அவ்வாறு கட்டப்பட்டது. இராமபிரான் வாயை திறக்கவில்லை. மசூதி  இந்து மத தீவிர அபிமானிகளால் இடிக்கப்பட்டது. பக்கத்து வீட்டில் இராமர். ஆனாலும் அங்கு மனிதநேயம் மறையவில்லை. அந்த ஊரில் ஒரு கனவின் நல்வரவாக ஒரு தென்னிந்திய ராமர் கோயில் உள்ளது. கனவை பற்றி சொன்னால்,இவ்விடம் 'பிலு பிலு' என்று சண்டை போடுபவர்கள் உளர். அவர்களை கண்டாலே, ஏன் காணாமல் கூட, எனக்கு அப்படி ஒரு அச்சம்!. மதவாத பிரச்னைக்கு பயந்து ஒரு வருடம் ராம நவமி உத்ஸவத்தை ரத்து செய்ய நினைத்தார்கள். ஆண்டாண்டு தோறும் புஷ்பம் கொண்டு தரும் இஸ்லாமிய நண்பர்கள், 'கவலையற்க' என்று ஆதரவும், பாதுகாப்பும் அளித்தனர். உத்ஸவமும் 'ஜாம் ஜாம்' என்று நடந்தது. 

ஆனாலும் அதருமமிகு சென்னையில் ஒரு நடுத்தெரு ராமசாமி கோயில் இருக்கிறது. திறந்தவெளி சிலை, சில அனுமார் கோயில்கள் மாதிரி. நேர்த்திக்கடன், ஜபம், தபம், யாகம், யஞ்கம், விளக்கு பூசை, மண்தரை சாப்பாடு, மொட்டை, பார்ப்பனர் கோயிலில் பார்ப்பன பூசாரியை வைத்து வடமொழி அர்ச்சனை என்றெல்லாம் இயங்கும் ராமசாமி பக்தர்கள், அந்த சிலாரூபத்தின் கல்வெட்டில் இருக்கும் 'கடவுளை நம்புவோன் முட்டாள்' என்ற வாசகத்தை ஸ்வீகரித்துக்கொண்டார்களோ அல்லது உள்ளுறை பொருட்டு அதை விட்டு வைத்திருக்கிறார்களோ? என்னவோ! நான் இரண்டாவது நிலைப்பாட்டை நம்புகிறேன். திரு. கருணாநிதியின் மகளிர் அவருக்காக, கோயிலுக்கு போனது கேட்டு, எம்மதமும் சம்மதம் என்று சொல்லிக்கொண்டேன்.


Friday, November 4, 2016

வம்பும் தும்பும் ~5





வம்பும் தும்பும் ~5

இன்னம்பூரான்
நவம்பர் 4, 2016

காலம் கெட்டுப்போச்சு. சுயம்புவாக புவனியெல்லாம் பவனி வரும் வம்பும் தும்பும் தேடினால் தான் கிடைக்கும் போல இருக்கிறது. காலையில் நாளிதழ் பிரிக்கவே, (படிக்கிறது அப்றம்) பயமாக இருக்கிறது. பக்கத்துக்குப் பக்கம் கொலை, வன்புணர்வு, கொள்ளை, இத்யாதி.

ஆனாலும், இந்த ‘ அடுத்த வீட்டுக்காரன் நெய்யே! என் பொண்டாட்டி கையே’ என்கிற கோட்பாடு இந்திய பொருளிருட்டல் விவகாரத்தில் பூதாகாரமாக வளைய வருகிறது.  அன்றைக்கு ஆடிட்டர் ஜெனெரல் ‘ஐயோ! அப்பா!’ என்று அடித்துக்கொண்ட போது கேள்வி முறையில்லை. ஓஎன் ஜிசி ஒரு அரசு நிறுவனம். நேரு காலத்தில் கே.டி. மாளவியா என்ற மந்திரி தான் இதனுடைய பிதாமஹன். பர்மா ஷெல், கால்டெக்ஸ், எஸ்ஸோ என்ற மூன்று அமெரிக்க எண்ணை கம்பெனிகள் தான் இந்திய எண்ணை கிணறாளர்கள், ஊற்றிக்கெடுப்பவர்கள். அவர்களின் கொட்டத்தை அடக்கத்தான் ஓஎன்ஜிஸி. அவர்களின் எண்ணைக்கிணறுகளிலிருந்து பாய்ந்த எரிவாயுவை (As much as 11.122 billion cubic metres of ONGC gas had migrated from its Godavari-PML and KG-DWN-98/2 blocks to adjoining KG-D6 of RIL between April 1, 2009 and March 31, 2015. At prevailing prices, the gas was worth Rs 11,000 crore.)
ஸ்வாஹாஹா செய்த வகையில் ரிலையன்ஸ் இண்டெஸ்ட்ரீஸ் அரசுக்கு நியாயமாக கொடுக்கவேண்டியது $ 1.55 பிலியன் என்று கூறிய ஏ.பி.ஷா, கமிட்டி ஆகஸ்ட் 30 அன்று பிரகடனம் செய்தது. ஆகஸ்ட் போச்சு; செப்டம்பர் போச்சு; அக்டோபர் போச்சு. இன்று செய்தி வருகிறது. அந்த கமிட்டி இந்த ‘அப்பாவி’
பரிவர்த்தனையை அந்த தனியார் கம்பெனிக்கு நியாயமற்ற செல்வ வரவு என்கிறது. இல்லை என்று சொல்லமுடியாது என்றாலும், 2009லிருந்து வறண்டு போன கிணறாளும் ஓஎன் ஜீ.ஸி. என்ன தான் செய்து கொண்டிருந்தது?

வாலு தான் போச்சு! தும்பு என் செய்யும்? பார்க்கலாம்.
-#-
சித்திரத்துக்கு நன்றி: 


இன்னம்பூரான்

http://innamburan.blogspot.co.uk

http://innamburan.blogspot.de/view/magazine

www.olitamizh.com

Sunday, October 30, 2016

சிவகாமியின் செல்வன் 21

சிவகாமியின் செல்வன் 21

Innamburan S.Soundararajan Sun, Oct 30, 2016 at 8:13 PM
சிவகாமியின் செல்வன் 21


இன்னம்பூரான்
அக்டோபர் 30, 2016
[சிவகாமியின் செல்வன் 20: இறுதி வரி
பிடிஎஃப் கோப்பில் முழு  அத்தியாயம்]


[காந்திஜி, ‘clique’(‘குழுவினுள்ளிருந்துகொண்டு தனி நலங்களுக்காகத் தனிச் செயலாற்றும் சிறு உட்குழு.’ ~தமிழ் லெக்சிகன்) என்ற சொல்லை வழக்கம் போல் நன்கு சிந்தித்த பின் தான் பயன்படுத்தினார்....] [பற்றிக் கொண்டது  என்னமோ தீப்பொறி !.]

“...இந்த காரணம், இந்திய அரசியல் உலகத்தின் சாபக்கேடான தீப்பொறி.” 


காமராஜரை பலி வாங்கிய அந்தத் தீப்பொறி தனியார் வணிகத்தின், என்றென்றும் பரவலாக காணப்படும் அரசியலில், மறைமுகமான நுழைவு. விடுதலைக்கு முன்பு ஜி.டி.பிர்லா காந்திஜியை தன் முதலீட்டாக பயன்படுத்திக்கொண்டார் என்று சொல்பவர்கள் உண்டு. 1990 களில் ஒரு பெரிய கருத்தரங்கத்தில், ஒரு மும்பை செல்வந்தர் டில்லி போலீஸ் கமிஷனரை ‘நாங்கள் அமர்த்தினோம்’ என்று என்னிடம் கூறினார். இத்தகைய ‘முதலையீடுகள்’ இந்தியாவில் மிகவும் அதிகரித்து விட்டன. அவற்றின் தந்திர, மந்திர, விசித்திர முதலையீட்டு தலையீடுகள் மக்களாட்சியை கேலி செய்கின்றன. பொது மக்களின் நலனை திருடுகின்றன. அரசியல் நிர்வாகத்தை மறைமுகமாகவும், நேரடியாகவும் கைப்பற்றி, பகல் கொள்ளை அடிக்கின்றன. தொட்டது எல்லாம் மஞ்சம், அதிலும் லஞ்சம், வலிமை படைத்தவர்களிடம் தஞ்சம், மக்களுக்குப் பஞ்சம் என்று ஐம்பது வருடங்களாக சராசரி குடிமகனை ஏமாற்றி, பின்னர் அவனையும் அவளையும் தன் கைக்குள் போட்டு கொண்டு, அமுக்கி விடுகின்றன. சில தமிழ் ஏடுகள், பல வருடங்களாகவே, மக்கள் பிரதிநிதிகள், மந்திரிமார்கள், அவர்களின் மெய்காப்பாளர்கள், சுற்றம், பினாமி எல்லாம்  அத்து மீறீ சம்பாதிப்பது, கூத்தடிப்பதைப் பற்றி ஆணித்தரமாக எழுதி விடுகின்றன. இதற்கு எந்த கட்சியும் விலக்கு அல்ல.  

இந்த அமங்கலமான நிலை ஏற்பட்டது எப்படி என்பதை வரலாற்று நோக்கில் புரிந்து கொள்வது நலம் பயக்கும். 

‘வரலாற்றில் மறைக்கப்பட்ட / புறக்கணிக்கப்பட்ட இனத்தின் மக்கள் ஒருநாள் தமக்கான வரலாற்றைத் தாங்களே எழுதுவார்கள்’ என்ற பாபா அம்பேத்காரின் வாக்கு யாவரையும் பொருட்டுத் தான் அமைகிறது. அவருக்கெல்லாம் முன்னோடியாக திகழ்ந்த மஹாத்மா பூலே அவர்களுக்கு உறுதுணையாக இருந்தவர்கள், பார்ப்பனர்கள் தான்.

சுருங்கச்சொல்லின் 1852லியே தொடங்கப்பட்டு, விரைவில் முடங்கிய சென்னை மக்கள் சங்கம், 1884ல் துவக்கப்பட்ட சென்னை மகாஜனசங்கம் ஆகியவை பிராமணரல்லாதோர் முன்னேற்றத்தை விரும்பின. பார்ப்பன விரோதம் துவங்கியது 1884ல், 133 வருடங்களுக்கு முன்னால். அரசு பதவிகளில் பார்ப்பனர்கள் அதிக இடம் பிடிப்பது தான், இந்த வெறுப்புக்குக் காரணம். நான் தணிக்கை இலாக்காவை சார்ந்தவன். எங்கள் IAAS நிர்வாக அமைப்பை  Indian Iyer & Iyengar Service என்று 1940 களில் கேலி செய்வது உண்டு. தற்காலம் அது நாங்கள் பெருமைப்பட வேண்டிய அல்லி ராஜ்யம் ஆகி விட்டது. 150 வருடங்களுக்கு மேல் எங்கள் துறையில் ஆளெடுப்பது தகுதி அடிப்படையில் மட்டுமே தான்.  1960 களில் எங்கள் இலாக்காவின் உபதலைவர், ஒரு தலித். அதற்கு முன்னும் பின் தங்கிய வகுப்பினரும் உண்டு, பெருபான்மை எனவோ, ஐயர் & ஐயங்கார். மற்று துறைகளில் இது தென்பட்டது. நீங்கள் எந்த ஒரு பாமரகீர்த்தி படித்தாலும், பட்டினி கிடந்து, மழையில் நனைந்து, வெயிலில் காய்ந்து, கந்தல் உடுத்தி, மாண்டோர் சவுண்டி கிரியைகள் செய்து, பெரும்பாலான பார்ப்பனர்கள் மைந்தர்களை படிக்க வைப்பார்கள். மகளிரை படிக்க வைப்பதில்லை. அது ஒரு சாபக்கேடு.  அந்த பாவத்தின் கர்மவினை தான், தகுதிக்கு தீ வைக்கப்பட்டது, குறிப்பாக 1967க்குப் பின்; அதனால், படிப்புக்கும், வேலை வாய்ப்புக்கும் விலக்கப்பட்ட பார்ப்பனர்கள் அமெரிக்கா செல்ல தொடங்கினர் என்று நினைக்கிறேன். தனியார் நிறுவனங்கள் அவர்களை அமர்த்திக்கொண்டன. சட்டநாத கரையாளர், நல்லக்கண்ணு பிள்ளை, சிவஷண்முகம் பிள்ளை போன்ற நசுக்கப்பட்ட இனத்தை சார்ந்த சான்றோர்கள் தகுதி அடிப்படையில் தான் முன்னுக்கு வந்தனர். இந்த பிராமண அல்லாதார் பிரிவினை வாதமும், அதை கைப்பற்றி, தந்தை பெரியார் ஈ.வே.ரா. அவர்கள் அமைத்த திராவிட இயக்கமும், அவரது முற்போக்குக் கருத்துக்களையும், சீரிய சிந்தனைகளையும், போற்றத்தக்க நாத்திக கோட்பாடுகளையும் தூர எறிந்து விட்டு, அவரது முரட்டு அணுகுமுறையை மட்டும் சுவீகரித்துக்கொண்டு, ‘ஹரே ராம! ஹரே கிருஷ்ண! ஹர! ஹர!’ என்று பஜனை செய்வதை அவருடைய காலத்திலேயே தொடங்கிய கிளை கட்சிகள், தங்களது தொலைக்காட்சிகளில் பல வருடங்களாக பிரசாரம் செய்வது கோயில், குளம், ஆத்திகம், பஜனை, பூஜை, நேர்த்திக்கடன்கள், சோதிடம், வஞ்சகமான ‘இந்த கல்லை வாங்கினால், லாட்டரி வாகை’ போன்ற மூட நம்பிக்கைகள் . நடை முறையும் அதே! அதே! 1960ல், காசிக்கயிறு, ஒளிந்து. இன்று பெரியவருக்கு உடல் நிலை சரியாக , கோயில்களில் பூஜை! பிரார்த்தனை, தொழுகை, சாமக்கிரியைகள், இத்யாதி. 

இத்தகைய முரண்கள் தோன்றாமல், மக்கள் நலனை மட்டுமே நாடி, தன் வாழ்க்கையையே உருப்படியான அரசாட்சி செய்த பெருந்தலைவர் காமராஜ் அவர்களின் அரசாட்சி காலகட்டத்தை எல்லாருமே ‘பொற்காலம்’ என்று வருணித்தார்கள். ‘காமராஜர் ஆட்சிக் காலகட்டத்தைத் தமிழகத்தின் பொற்கால ஆட்சி என்று சொல்லும்போது, பலரும் ஏதோ அதை வெற்றுப் புகழாரம்போலவே இன்றைக்கு நினைக்கின்றனர்... “மூவேந்தர்கள் ஆட்சிக்காலத்தில் நிகழாத அற்புதங்கள் எல்லாம் தமிழகத்தில் நடந்தது காமராஜர் ஆட்சியில்!” இப்படிக் கூறியவர் தந்தை பெரியார். உண்மையில், காமராஜர் ஆண்ட அந்த ஒன்பது ஆண்டுகளில் தமிழகத்தில் என்ன நடந்தது? ஏன் வரலாறு தெரிந்தவர்கள் இன்றைக்கும் அதைப் பொற்கால ஆட்சி என்று கூறுகின்றனர் என்பதற்கு விடையும், அதிலிருந்து தமிழர்கள் கற்றுக்கொள்ள வேண்டியதை பற்றிய கட்டுரை பகுதிகள், அடுத்த இரண்டு சுற்றுகளில் முடியும்.

சிவகாமியின் செல்வன் 20.pdf
89K 

Saturday, October 22, 2016

வம்பும் தும்பும் ~4


வம்பும் தும்பும் ~4


இன்னம்பூரான்
22 10 16

எல்லாரும் தவிச்சுப்போய்ட்டோம். நோ இண்டெர்னெட். நோ தொலை பேசி. ஒரு பாடா வந்தது. லாவம். வந்து வேறே சொல்லி விட்டுப்போனார்கள்.

அந்த காலத்தில் மஹா கனம் பொருந்திய சேஷைய்யா சாஸ்திரிகள் திருவிதாங்கூர் திவானாக இருந்த போது ஒரு பட்ஜெட் திட்டம் வந்தது, ஒரு ரோடு போட. திவான் அவர்கள் அதை நிராகரித்து எழுதினார், ‘ அத்தையும் செய்யலாம். இத்தையும் செய்யலாம். ஐவேஜு இல்லாதத்துக்கு என்னத்தை செய்யலாம்?’.  அந்த மாதிரி ஐவேஜு இல்லாமல் தவிக்கிறது, லக்ஷ்மணபுரி நகரத்தின் கண்டோன்மெண்ட் பகுதி திட்டங்கள். எங்கே போச்சு ஐவேஜு? 

திருமதி ரீதா பஹுகுணா அவர்கள், தன் சகோதரரை கூட வியப்பில் ஆழ்த்தி, காங்க்ரஸிலிருந்து பிஜேபிக்கு ‘டபால்னு’ கூடு விட்டு கூடு தாவி விட்டார். உடனே ஜகதலபிரதாப வக்கீலைய்யா கபில் சைபால் அவர்கள் ‘அம்மா என் துட்டை எடுத்துக்கிட்டு ஓடிட்டாங்க.’ என்று பிரலாபித்தார். அதுவும் எப்டி? ரீதா பறந்து போகும் புள் என்று? தேவையா?இதை நான் லண்டன் கார்டியன் படிக்கும் போது  இந்த நிமிட நிகழ்வாகக் கண்டு, மேய தொடங்கினால், குட்டு வெளிப்படுகிறது. ரீதா மாமி பிஜேபி என்ற புக்ககம் வந்த உடனேயே, திரு.சைபாலுக்கும், கலெக்டர் சாஹிபுக்கும், அந்த ஐவேஜை சிறைப்படுத்தி வைத்துக்கொள்ளுங்கள். எனக்கு வேண்டாம் என்று எழுதியிருக்கிறார். ஆக மொத்தம், லக்ஷ்மணபுரி நகரத்தின் கண்டோன்மெண்ட் ‘எங்கே போச்சு ஐவேஜு? ‘ அத்தையும் செய்யலாம். இத்தையும் செய்யலாம். ஐவேஜு இல்லாதத்துக்கு என்னத்தை செய்யலாம்?’ என்று அலறுகிறார்களாம்!
-#-
சித்திரத்துக்கு நன்றி; 





Tuesday, October 18, 2016

வம்பும் தும்பும் ~3





வம்பும் தும்பும் ~3

இன்னம்பூரான்
18 10 16

கொஞ்சம் ரசாபாசம் ஆயிடுமோ என்று கவலைப்பட்டேன். தற்காலம் தமிழ்க்குழுக்களில் எதிர்மறை வழிமுறை கோலோச்சுவதால், அச்சத்தின் மறு உருவாகிய நான் ‘நாலடியாரும், பெரியாரும், தமிழ்த்தென்றலும், குல்லுகப்பட்டரும்’ என்ற ஆய்வுக்கட்டுரையை கேம்பிரட்ஜ் பல்கலையின் அழைப்பிற்கிணங்க அனுப்புவதில் முனைந்து இருந்த பொது, வாசற்கதவை, அந்தக்காலத்து தீவட்டிக்கொள்ளைக்காரன் தட்டுவது போல் (இது நிஜமா நடந்ததின் மலரும் நினைவு.) ஒருவர் தட்டிய பராக்கிரமத்தில் அதுவே திறந்து கொண்டது. பார்த்த ஜாடையாக இருந்தாலும், ஆள் புரியவில்லை. கார்டு கொடுத்தார்: டணால் கிராம்பு. உலருவதற்காக என் அம்மா தூணில் சுற்றிய புடவையை அடித்துப்பிடித்துக்கொண்டு அவிழ்த்து, அப்பாவின் வாக்கிங் ஸ்டிக்கினால், மடிசஞ்சிக்குள் ஒளித்து வைத்தேன்.  இல்லாவிட்டால், அம்மா இது தீட்டு என்று கொளுத்தி விடுவாள்.   அந்தக்காலத்துப் பாப்பாத்தி. அவளுக்கு டணால் கிராம்பாரின் அருமை பெருமைகள் தெரியாது. மிலேச்சன். தள்ளுபடி அவ்ளவு தான்.

டணால் சுபாவம் உலக பிரசித்தம். அதனால் தான். ‘கொஞ்சம் உள்ள வந்துட்டுப்போங்கோ’ என்று கொஞ்சலும், கட்டளையுமாக உக்கிராண அறையிலிருந்து குரல் வரவே, நம்ம கிராம்பு கிட்ட சாக்குப்போக்கு சொல்லிவிட்டு, உள்ளே பிரவேசித்தேன். என்னடா பொம்மானாட்டிக் குரலாக இருக்கே என்று, டணால் கூடவே வந்துட்டான். வேறு வினை வேண்டாம். இவளும், சேலத்துப்பொண்ணா, கையில் கிடைத்த புழுதுணியால், வாயை   காபந்து செய்து கொண்டாள். கராட்டே  கப்ரியேல் சொல்லிக்கொடுத்தபடி துடுப்பை அடுப்பில் காய்ச்சினாள். தாலிக்கயிறுடன் முடிச்சுப்போட்ட வெள்ளித்தாயத்தைத் தொட்டுப்பார்த்துக்கொண்டாள். அதனுள்ளே நல்ல சாத்தூர் மொளகாய் பொடி.  இசைகேடாக, தொலைக்காட்சியில் ஒலித்தப் பாட்டு, ‘மாலையிட்டவன் போல் வாயில்...’ நான் டபக்னு அணைச்சுட்டேன். 

சொல்லி வச்ச மாதிரி, டெலிபோன் அலறியது. படி தாண்டா பத்தினியான அம்புலு, ஒரே தாவலில், டணால் எடுக்கும் முன், அதை எடுத்தவுடன், அவள் முகம் பத்தாயிரம் வோல்ட் எல்.இ.டி. விளக்குப்போல பிரகாசிக்கவே, எதோ அனர்த்தம் வரப்போறது என்று மேலும் கவலைப்பட்டேன்.

ஓவர்ஹேர்ட் சம்பாஷணை:

“ வாங்கோ! வாங்கோ! தாராளமா வாங்கோ ! உங்காத்து (கொஞ்சம் ஷை ஆனாள். என் கண்ணில் படாமல் போகுமான்னேன்!)  இவரையும் கூட்டிண்டு வாங்கோ! “

“ அவரை பிடிக்கமுடியாது. யார் பின்னாலையோ? ஹூம்!” பெருமூச்சு காதில் விழுந்தது. நம்மூர் நிரந்தர மாப்பிள்ளை ஒத்தனை நினைத்துக்கொண்டேன்.

அம்புலு போனை தள்ளிப்பிடித்துக்கொண்டு, என்னிடம்,

“நமக்கு லாட்டிரி கிடச்சமாதிரியாக்கும். ‘வதனமோ சந்திர பிம்பமோ’ போன்ற பிலஹரி  சந்திரலேகா மாமி டென்னஸியிலிருந்து பேசறா.  என்னமோ ட்ரோனாமே! அதோட  நம்ம குயில்சாமியின் இந்தியா ஸ்பேஸ் தயாரிப்பான அதி நவீன பாராசாரி ட்ரோனாத்தில் வந்து இறங்கராளாம் என்று சொல்லி வாயை மூடல்லே, கிராம்பு திறந்த போட்ட கதவு அப்படியே மல்லாக்கத் திறந்து கிடக்க, பிலஹரி மாமி வந்து நிக்கறா. எனக்கு கையும் ஓடலை; காலும் ஓடலை. அம்புலுவா பல்லவி ராவ் மாதிரி தக்கத்தையா என்று குதிக்கிறாள். கிராம்பு எதித்தாப்போல இருந்த சோஃபா மேலெ காலைப்போட்டுண்டான். பிலஹரி ஒக்காரக்கூடாது. அதான்.

உரையாடல்:

பி (பிலஹரி): நவம்பர் எட்டு வரட்டும். உன் குட்டு அவுட்டு.

ட (டணால்): சட்டுப்புட்டுன்னு சொல்றேன். கேளடி பிலஹரி!  செட்டு சேர்ப்பேன் நானே! இந்தியா சூபர் எனக்கு மெட்டு போட்டுத் தாளமும் ஜால்ராவும் அடிப்பாங்க. உனக்கு லொட்டு, லொசுக்கு.

பி: கூவாதே! கூவாதே! என் பகையே! வேட்டு வைக்கிறேன், நானுனக்கு.

ட: கோட்டுப்போட்டு வந்தேனே! அடுத்தாத்துப் பாட்டியே. உன் வேட்டை துட்டாக்கி...!

அ: (அம்புலு): இவாளை வெளிலே போகச்சொல்லுங்கோ. நான் தூங்கணும். 

அவள் தூங்க, நான் தூங்க, கிராம்பு ஓட, பிலஹரி துரத்த, என் கனவும் கலைந்தது.
-#-
சித்திரத்துக்கு நன்றி:

டிஸ்கி: சித்திரத்துக்கும் பாத்திரங்களுக்கும் ஒத்தடம்கொடுக்கவேண்டாம்.


இன்னம்பூரான்

http://innamburan.blogspot.co.uk

http://innamburan.blogspot.de/view/magazine

www.olitamizh.com