உருண்டு பிரண்டு திரண்டு முரண்டு!!!!!!!
நாத்திகம் உட்பட எம்மதமும் சம்மதமே என்பதே எல்லா மதாபிமானங்களின், நாத்திகம் உட்பட, உள்ளுறை. அதாவது, நமது நம்பிக்கை பாட்டைகள் எத்தனை முரண் தெரிவித்தாலும், மனிதநேயம் அடி வாங்காது, காளை. இங்கிலாந்தில் பெரும்பாலாக மதாபிமானம் ( நாத்திகம் உட்பட) அன்றாட வாழ்க்கையில் இடம் பெறுவதில்லை. அதனால், மாதாகோயில்கள் விற்கப்படுவதை காணலாம். கோயில்களோ, மசூதிகளோ, மாதா கோயில்களோ மனிதர்கள் வீடு போல் வாழ உகந்தவை அல்ல. தெய்வங்கள் அங்கு வாழலாம். சில இடங்களில் சினிமா தியேட்டர் கட்டலாம். எனவே, யாதொரு விதமான பிரச்னைகள் இல்லாமல் அவை மசூதியாக/ குருத்வாராவாக, கிருஷ்ணன் கோயில்களாக மாறி விடுகின்றன. இதில் குற்றமே இல்லை. எனினும், குற்றம் இழைத்தன் விளைவாக ஒம்மாச்சிகள் எல்லா மதங்களிலும், நாத்திகத்திலும் ஓங்கி வள்ர்கின்றன. ஃபைஸாபாத்தில், ஒரு மசூதி அவ்வாறு கட்டப்பட்டது. இராமபிரான் வாயை திறக்கவில்லை. மசூதி இந்து மத தீவிர அபிமானிகளால் இடிக்கப்பட்டது. பக்கத்து வீட்டில் இராமர். ஆனாலும் அங்கு மனிதநேயம் மறையவில்லை. அந்த ஊரில் ஒரு கனவின் நல்வரவாக ஒரு தென்னிந்திய ராமர் கோயில் உள்ளது. கனவை பற்றி சொன்னால்,இவ்விடம் 'பிலு பிலு' என்று சண்டை போடுபவர்கள் உளர். அவர்களை கண்டாலே, ஏன் காணாமல் கூட, எனக்கு அப்படி ஒரு அச்சம்!. மதவாத பிரச்னைக்கு பயந்து ஒரு வருடம் ராம நவமி உத்ஸவத்தை ரத்து செய்ய நினைத்தார்கள். ஆண்டாண்டு தோறும் புஷ்பம் கொண்டு தரும் இஸ்லாமிய நண்பர்கள், 'கவலையற்க' என்று ஆதரவும், பாதுகாப்பும் அளித்தனர். உத்ஸவமும் 'ஜாம் ஜாம்' என்று நடந்தது.
ஆனாலும் அதருமமிகு சென்னையில் ஒரு நடுத்தெரு ராமசாமி கோயில் இருக்கிறது. திறந்தவெளி சிலை, சில அனுமார் கோயில்கள் மாதிரி. நேர்த்திக்கடன், ஜபம், தபம், யாகம், யஞ்கம், விளக்கு பூசை, மண்தரை சாப்பாடு, மொட்டை, பார்ப்பனர் கோயிலில் பார்ப்பன பூசாரியை வைத்து வடமொழி அர்ச்சனை என்றெல்லாம் இயங்கும் ராமசாமி பக்தர்கள், அந்த சிலாரூபத்தின் கல்வெட்டில் இருக்கும் 'கடவுளை நம்புவோன் முட்டாள்' என்ற வாசகத்தை ஸ்வீகரித்துக்கொண்டார்களோ அல்லது உள்ளுறை பொருட்டு அதை விட்டு வைத்திருக்கிறார்களோ? என்னவோ! நான் இரண்டாவது நிலைப்பாட்டை நம்புகிறேன். திரு. கருணாநிதியின் மகளிர் அவருக்காக, கோயிலுக்கு போனது கேட்டு, எம்மதமும் சம்மதம் என்று சொல்லிக்கொண்டேன்.
No comments:
Post a Comment