Showing posts with label கற்பிழந்த கரன்சி நோட்டுக்கள்: தகவல் மையம். Show all posts
Showing posts with label கற்பிழந்த கரன்சி நோட்டுக்கள்: தகவல் மையம். Show all posts

Thursday, December 1, 2016

கற்பிழந்த கரன்சி நோட்டுக்கள்: தகவல் மையம் [4]


Update:
My follow up comments;

I thank the Hindu for not rejecting my first flush comments and congratulate the commentators for doing a much better job, than Visvak & Mahima & the Hindu, (and, of course, me!)individually and collectively thru 'Likes' & 'Dislikes' in critical  comments. The Hindu should not have claimed the 'access' privilege and exclusivity on a matter Google has filled reams of paper. Secondly, the Government of India has put the whole thing in http://www.pmindia.gov.in/en/assets-and-liabilities-of-the-union-council-of-ministers-2015-2016/ 
Jaitley's Return was on 21.06.16 long before the D Day. He had 4 savings a/cs  and two company deposits other the Cash (obviously) in hand 
Rs. 65,29,400/- . Luckily for me, my comments stand vindicated.


The Hindu is in the epicenter of Chennai/Tamil Nadu. 
There is no black money here. ONLY DARK MONEY amounting to billions held 
by a horde of minuscule to superheavy politicians and hangers on. Why shy away from exposing them? The Hindu should tell us now.

கற்பிழந்த கரன்சி நோட்டுக்கள்: தகவல் மையம் [4]





இன்னம்பூரான்
30 11 2016

மற்ற செய்திகளை ஒத்தி வைத்து விட்டேன். இன்றைய ஹிந்துவில் வந்த தகவலும், அங்கு நான் பதித்த கருத்தும், இங்கு மேலதிக விமர்சனமும்.

தங்களிடம் பிரத்யேகமாக தருவிக்கப்பட்டதான ஆதாரங்களின் அடிப்படையில், ‘
‘ஹிந்து’ இதழ் இன்று கூறிய முடிவு:

The data also reveals that not everyone in the government’s roster of Ministers shares the Prime Minister’s enthusiasm for cashless transactions.

அந்த பதிவின் மீது என் கருத்து:
~True. You have opened the can of worms, which is going to spill ugly truths. The poser is not only to all of us, but, particularly to the Prime Minister and also Mr. Modi, as an Indian, presiding over this group of persons.
You have done a service for the nation and are charged with the responsibility of going the whole hog, relentlessly and unceasingly. Mr.Modi's cash holding is not much, Mine was Rs.5000/- since deposited.

செய்தி:
பொது மக்கள் க்யூ வரிசையில் வாட, அரசியல் வாதிகளும், அமைச்சர்களும் சுகவாசம் செய்கிறார்கள். அமைச்சர்கள் மார்ச் 31,2016 அன்றைய நிலவரப்படி, தங்கள் சொத்து பத்துகள் விவரங்களை வருடந்தோறும் பிரதமரிடம் அறிவிக்கவேண்டும். அதை காமன்வெல்த் மனித உரிமை கழகம் தொகுத்ததை, ஹிந்து இதழ் பெற்று அதன் அடிப்படையில் இந்த செய்தி என்று பறை சாற்றிக்கொண்டது. 

[என் விமர்சனம்: இந்த பட்டியல் என்றோ மோடியின் அரசு இயந்திரத்தால் தொகுக்கப்பட்டது; அதை ஏதோ தன்னார்வ பணி என்று மார்பை தட்டிக்கொள்வதும், அதை  ஒரு புதிய ஆய்வு போல,இன்று பதிவு செய்வதும், உள் நோக்கம் என்று தான் தோன்றுகிறது. தமிழ்நாட்டு அரசியல் வாதிகள் கொள்ளை கொள்ளையாக சுருட்டுவதும், சுருட்டியதும், இங்கு பகிங்கிர ரகசியம். அவற்றை அச்சம் பொருட்டு ஹிந்து பதிவு செய்வதில்லை போலும். சரி. விஷயத்துக்கு வருவோம்.]

  1. மொத்தம் 76 அமைச்சர்கள்: 36 அமைச்சர்கள் இன்று வரை இந்த ஆணைக்கு இயங்கி விவரம் கொடுக்கவில்லை.  அவர்களில் கட்கரி, பரிக்கர், உமா பாரதி அடக்கம்.
  2. 23 அமைச்சர்கள் ரூபாய் 2 லக்ஷத்துக்குக் குறைவாக வைத்துக்கொண்டிருப்பதாக பதிவு செய்தனர்.
  3. 15 அமைச்சர்கள் ரூபாய் 2.5 லக்ஷத்துக்கு மேல் வைத்திருந்தனர்.
  4. அவர்களில் அருன் ஜெட்லி: 65 லக்ஷம் + ரொக்கம்; நாயக்: 22 லக்ஷம். ஹன்ஸ்ராஜ் 10+
  5. பிரதமர் மோடி: ரூபாய் 89,700/-.

ஹிந்து இதழின் நோக்கம் யாதாயினும், நாம் கவனிக்கப்படவேண்டியது:
  1. இந்த ‘கற்பிழந்த நோட்டு’ தாக்கீதுகளை பிரதமர் உரிய ரகஸ்யத்துடன் தான் அமல் படுத்திருக்கிறார். இல்லையெனில் கட்கரி வகையறா, ஜெட்லி வகையறா சுதாரித்துக்கொண்டிருப்பார்கள். 
  2. ஆணையை உதாசீனம் செய்த அமைச்சர்கள் மீது பா.ஜ.க. கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். அதை பொது மன்றத்தில் வைக்க வேண்டும்.
  3. அருன் ஜெட்லி வாய் கிழிய ‘காசு வேண்டாம். காசில்லா செலவு செய்க’ என்று முழுங்குகிறார் (முழங்குகிறார்). அவர் 65 லக்ஷம் வைத்துக்கொண்டிருந்தது சட்டவிரோதம் அல்ல. எனினும், தார்மீக ரீதியில் அது விந்தையான/தவிர்த்து இருக்கக்கூடிய தொகை. அவர் அது பற்றி உண்மை கூறவேண்டும்; அது வந்த விதம் என்ன? அது ஏன் காசாக இருக்கிறது என்பதை பொது மன்றத்தில் விளக்கவேண்டும். அதை அவர் யார் யாரிடமிருந்து எதற்கு எதற்கு பெற்றாரோ, அவர்கள் வருமான வரி கட்டிய விவரமும், தான் வருமானவரி கட்டிய விவரமும் கூறவேண்டும். அமைச்சரவையில் அமர்ந்து கொண்டு அவர், ‘கருடா? சுகமா?’ என்று வடேராவை வினவக்கூடாது.
  4. எதையும் சீர் தூக்கிப்பார்ப்பது தான் நலம்.
  5. “சமன் செய்து சீர்தூக்கும் கோல்போல் அமைந்துஒருபால்
கோடாமை சான்றோர்க்கு அணி [திருக்குறள் 118]
-#-
சித்திரத்துக்கு நன்றி: 


இன்னம்பூரான்

http://innamburan.blogspot.co.uk

http://innamburan.blogspot.de/view/magazine

www.olitamizh.com




Wednesday, November 30, 2016

கற்பிழந்த கரன்சி நோட்டுக்கள்: தகவல் மையம் [4]




கற்பிழந்த கரன்சி நோட்டுக்கள்: தகவல் மையம் [4]




இன்னம்பூரான்
30 11 2016

  1. இந்தியா விடுதலை அடைவதற்கு சில நாட்கள் (19 ஜூலை 1947) நமது அண்டை நாடாகிய கடாரத்தின் [பர்மா/மியான்மார்] தந்தை என்று போற்றப்பட்டவரும், அந்த நாட்டு பொதுவுடமை கட்சியின் தந்தையும், கலோனிய ஆட்சியில் பிரதமராகவும், நாட்டுக்கு விடுதலை பெற்றவரும் ஆன ஆங்க்ஸான் அவர்களும் அவருடைய அமைச்சரவையும் [7 நபர்] சுட்டுக்கொல்லப்பட்டனர்.  [தற்காலம் அவரது மகள் ஆங்க்ஸான் ஸு யி மிகவும் பிரபலம்.] அவருடைய காலத்துக்கு முந்திய பிரதமர் ஊ சா வின் கைக்கூலிகள் , அரசு நிர்வாகக்குழு அமர்வு அறையில் புகுந்து இந்த கைங்கரியத்தை செய்தனர். பிற்காலம் அந்த ஊ சா தூக்குமேடையில் ஊசலாடி செத்தான், சட்டரீதியாக. கோர்ட்டில், வெளியேறிய பிரிட்டீஷ் சிப்பாய்கள் ஊ சாவுக்கு பல துப்பாக்கிகளை விற்றது தெரிய வந்தது.
  2. அக்காலம் பள்ளி இறுதி ஆண்டு படித்து வந்த என்னை இது மிகவும் பாதித்தது. ஃபோரம் என்ற இதழ் நடத்தி வந்த ஜோஷிம் ஆல்வா அவர்கள் இதை எல்லாம் புரியும்படி எடுத்துக்கூறியிருந்தார். அக்காலம் என் தந்தை என்னிடம் கூறிய தகவல் (என்னிடம் வேறு ஆதாரமில்லை.) நேருவின் அமைச்சரவையை ஒழிக்க ஒரு அண்டை நாட்டு பயங்கரவாதிகள் கும்பல் பயணித்த லாரியை ஆர்.எஸ்.எஸ். காரர்கள் மடக்கி, அவர்கள் எல்லாரையும் கொன்று நம் தலைவர்களை காப்பாற்றினார்கள். அதை சர்தார் படேல், (ஹோம் மினிஸ்டர்) நேருவிடம் எடுத்துக்க் கூறினார். தந்தையிடம் ஒரு ஆவணம்/ ஊடகம் இருந்தது. அதன் பெயர் எனக்குத் தெரியாது.
  3. கிட்டத்தட்ட 70 வருடங்களுக்கு பின் வந்த நேற்றைய இந்திய செய்தி:
  4. மதுரையில் 27 11 2016 அன்று அல் க்வைடாவுடன் சம்பந்தப்பட்டவர்களும், சித்தூர், கொல்லம், மைசூர், நெல்லூர், மல்லபுரம் ஆகிய இடங்களில் கோர்ட்டுகளில் குண்டு வீசியவர்களும் ஆன மூவர் கைது செய்யப்பட்டனர். நாலாவது ஆசாமி சென்னையில் அகப்பட்டான். மல்லபுரம் குண்டு வீச்சு நடந்த இடத்தில் கிடைத்த தடயங்கள் மூலம் தெரிய வந்த செய்தி: நரேந்திரமோடியை சுட்டுத்தள்ளுவது, அமெரிக்கன், ரஷ்யன், இஸ்ரேல் தூதரங்களையும், ஹைதராபாத் கோர்ட்டையும் குறி வைப்பது, அவர்களில் ஒருவன் பள்ளியை துறந்த மாஜி மாணவன். பி.காம் படித்த மற்றொருவன் கோழிக்கறி வணிகர். மூன்று பிராந்திய போலீஸ் படைகள் ஒத்துழைத்து, அவர்களை பிடித்தது. ஒருவரின் தந்தை குற்றச்சாட்டுகளை மறுக்கிரார்.
  5. மொத்தம் 22 இந்திய பிரபலங்களை பிலாக்கணத்திற்கு இலக்காக கொலை செய்வதாக, இவர்கள் உத்தேசமாம்.
  6. நவம்பர் 8க்கு பிறகு, கடந்த 20 நாட்களில்  விமானம் மூலம் கடத்த முயன்று பிடிபட்ட பணம்: 
மும்பாய்: 12.5 கோடி
டில்லி    6.2  “
கொல்கத்தா 5.9 கோடி;
மற்றவை: 4.4 கோடி;’

இது எல்லாமே கறுப்புத்தான் என்று சொல்லக்கூடிய சான்றுகளை அவர்கள் முன் வந்து அளிக்கவில்லை. தவிர முதல் வாரத்தில் 5 கோடி, பின்னர் 24 கோடி பற்றி விசாரணை நடந்தது. தவிர, கணக்கிடமுடியாத வகையில் ஹரியானாவிலிருந்து பல கோடிகள் ஒரு பிரத்யேக விமானத்தில் நாகாலாந்துக்கு அனுப்பப்பட்டது. அங்குள்ள தலித் மக்களுக்கு வரி சலுகைகள் உண்டு. நோ வருமான வரி. அவர்களின் வரவு எகிறுவதாக சந்தேகம். 135 கிலோ தங்கமும் பிடிபட்டது. 

செல்லாக்காசாக்கப்பட்ட ரூபாய் நோட்டுக்கள் பல பயங்கரவாதத்துக்கு போகிறது என்று அரசின் கூற்று. நம்பினால் நம்புங்கள். நம்பாவிட்டாலும் பரவாயில்லை. ஆங்க்ஸான் படுகொலையை போல... வேண்டாம். மோடியும் 22 பேர்களும் பிழைத்துப்போகட்டும்.
-#-
சித்திரத்துக்கு நன்றி:


https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/e/e7/Aung_San_BNA.jpg/220px-Aung_San_BNA.jpg











இன்னம்பூரான்

http://innamburan.blogspot.co.uk

http://innamburan.blogspot.de/view/magazine

www.olitamizh.com

Tuesday, November 22, 2016

கற்பிழந்த கரன்சி நோட்டுக்கள்: தகவல் மையம் [3]



கற்பிழந்த கரன்சி நோட்டுக்கள்: தகவல் மையம்
[3]

இன்னம்பூரான்
22 11 2016

  1. கற்பிழந்த நோட்டுகளின் எண்ணிக்கை: 22 பிலியன்;வைத்திருந்த 1.3. பில்லியன் மக்கள். வங்கிக்கிளைகள் 1.3 லக்ஷம். உலகில் இத்தனை பெரிய திட்டம் எங்குமே எடுத்து கொள்ளப்படவில்லை.
  2. பாகிஸ்தானாவது இந்தியாவுக்கு கள்ள கரன்சி நோட்டு அனுப்பவதாவது! இந்த மோடி இப்படி ஒரு சால்ஜாப்பு சொல்லி மாஜி கரன்சி நோட்டுக்களை களை இழக்க செய்து விட்டார், இதோ பார். அந்த கள்ளப்பண கணக்கு வழக்கு; அது சொற்பம் என்றெல்லாம்  வாதாடி, இந்தியாவின் மேலாண்மைக்கு விளையக்கூடிய ஆபத்தை பொருட்படுத்த வேண்டாம் என்று ஒரு கட்சி இருக்கிறது. அவர்கள் கவனிக்க மறுக்கும் நிகழ்வுகளில் சில; ஆறு வருடங்களுக்கு முன்னால் (24 12 1999) காட்மாண்டு-கந்தஹார் விமானம் ஹைஜேக் செய்தவர்களுக்கு, துப்பாக்கி, குண்டு, கத்தி ஆகியவற்றை கொடுத்தவன் ஜியா அன்சாரி என்ற பாகிஸ்தான் தூதரக ஊழியன். அந்த ஆபீஸ் முதன்மை காரியதரிசி அன்சாரியிடம் இந்திய கள்ளப்பணம் வாங்கிய சபூர் நேபால் போலீசால் கைது செய்யப்பட்டான். ஒரு ரைய்டில் ஒரு கோடி ரூபாய் கள்ளப்பணம் கைப்பற்றப்பட்டது.  நேபால் கண்காணிப்பு தீவிரமானவுடன் பங்களா தேஷ் அவர்களின் உறைவிடமானது. அங்கு ஆட்சி மாறியபின் தாய்லாண்ட், மியான்மார் ஆகியவை, அவர்களிம் பாசறையாக அமைந்தது. பாகிஸ்தானுக்கு காஷ்மீர் இரண்டாம் பக்ஷம் தான். எப்படியாவது இந்தியாவின் வலிமையை குறைக்கவேண்டும் என்பது தான் அவர்கள் இலக்கு. இன்றல்ல; நேற்று அல்ல. எப்போதுமே. பாகிஸ்தானில் அடித்த மாஜி கரன்சி  பயங்கரவாதிகளுக்கு வெல்லம் மாதிரி. தெரிந்தே பாகிஸ்தான் கள்ள நோட்டுகளை உலவ விடுவது, நமது நாட்டில் பிறந்து வளர்ந்தவர்களே.
  3. ‘நான் செய்ததலில் தப்பு இருந்திருக்கலாம்; தப்பிதம் இல்லை என்று கொக்கரிக்கிறார், சுபாஷ் தேஷ்முக். அவர் மஹாராஷ்ட்ரா மாநிலத்தின் பி.ஜே. பி. அமைச்சர். அவருடைய கம்பெனி ஒன்றின் வாஹனத்தில் பிடிபட்டது ரூ. 91.5 லக்ஷம் மாஜி கரன்சி நோட்டுகள். கம்பெனி ஊழியர்களுக்கு சம்பளம் என்ற இந்த அமைச்சரின் வாதம் வேடிக்கையாக இருக்கிறது. அவரிடமிருந்து நம்பகத்தனமான பதில் வரவில்லை. மேலும் ஒரு செய்தி. அமைச்சர்கள் முழு நேர வணிகம், தொழில், பணி எல்லாம் செய்வார்கள், இந்தியாவின், எல்லா மாநிலங்களிலும். 
  1. தமிழ் நாட்டில் ஹிந்தி மொழிக்கு என்ன தான் எதிர்ப்பு இருந்தாலும், பினாமி (அநாமதேயம்) புழக்கத்திலிருக்கிறது; அநேகருக்கு அது தொட்டில் பழக்கம். அது இந்தியா முழுதும் பரவியிருப்பது கங்கை கொண்டான் போல, தெற்கிலிருந்து வடக்கே பயணித்தது என்போருமுண்டு. அகத்தியரின் கமண்டலநீர் போல அங்கிருந்து இங்கே வந்தது என்போரும் உண்டு. எது எப்படியோ, ஜார்க்கண்டு கிரிதி: மாநிலத்து கிராமம் ஒன்றில் ஒரு தெருவோர வெற்றிலைப்பாக்குக்கடை வைத்திருக்கும் பப்புக்குமார் திவாரிக்குக் கனஹதாரா வரன் கிடைத்ததா அல்லது அவருக்கு யாரோ குழி தோண்டுகிறார்களோ? தெரியவில்லை. தடாலடியாக, அவருடைய வங்கிக்கணக்கில் சேமிப்பு ரூ. 9.99 கோடியாக எகிறியிருக்கிறது. கணக்கு தப்பா அல்லது குறி வைத்து யாரோ கோடீஸ்வரன் அவரை தற்காலிக கோடீஸ்வரனாக்கி, கற்பிழந்த கரன்சி நோட்டுகளை ... சரி விடுங்க, சாமி.
  2. ஜி.ஜனார்த்தன் ரெட்டிகாரு கர்நாடாக மாநிலத்தில் பிஜேபி ஆண்ட போது ஓங்கி, உலகளந்து உச்சாணிக்கிளையிலிருந்து ஆட்டம் போட்ட மாஜி அமைச்சர். மெகா அளவில் தாதுப்பொருள் சுரண்டி கோடி கோடியாக சுருட்டியவர். உச்ச நீதி மன்றத்தால் சட்டவிரோத சுரண்டலுக்குத் தண்டிக்கப்பட்டவர். சொந்த ஊரான பல்லாரியில் காலெடுத்து வைக்கக்கூடாது என்று கோர்ட்டார் ஆணை. பொண்ணுக்கு கல்யாணம் செய்ய ஜாமீனில் வெளிவந்த அவர் பற்பல கோடிகள் செலவழித்து தாம் தூன் என்று படோடாபமாக அந்த கல்யாணத்தை நடத்தி வைத்தார். பிஜேபி பெருந்தலைகள் ஆஜர். நரசிம்ஹமூர்த்தி என்ற சராசரி மனிதன் இத்தனை கோடிகள் எங்கிருந்து வந்தது என்று கேட்டு வேட்டு வைக்கவே, பத்து வருமானவரி அதிகாரிகள் பல்லாரியில் டேரா போட்டு இவரை குடைந்ததாக செய்தி. இந்த செய்தியை கசிந்து விட்டு அவரை விட்டு விடுவார்களா அல்லது மோடியின் கோட்பாடு படி டின் கட்டுவார்களா? மக்கள் தான் கவனிக்கவேண்டும்.
[தொடரும்]
சித்திரத்துக்கு நன்றி:












இன்னம்பூரான்

http://innamburan.blogspot.co.uk

http://innamburan.blogspot.de/view/magazine

www.olitamizh.com

Wednesday, November 16, 2016

கற்பிழந்த கரன்சி நோட்டுக்கள்: தகவல் மையம் [2]





கற்பிழந்த கரன்சி நோட்டுக்கள்: தகவல் மையம்
[2]

இன்னம்பூரான்
17 11 2016

  1. அரவங்குறிச்சி வகையறா இடங்களில் வாக்காளர்கள் ஒவ்வொருவருக்கும் ரூ.5000/- செல்லா நோட்டுகளில் கொடுப்பதாக சகல கட்சிகளும் தாராளமய கோட்பாட்டை கையில் எடுத்து உளராம் என்று தினமலர் செய்தி. நம்ம ஆளப்போகும் பிரதிநிதிகளின் இந்த ‘ஒரு கல்லில் இரண்டு மாங்காய்’ அணுகுமுறை விபரீதத்தில் முடியட்டும் என்று சித்தரின் சாபம்.
  2. கூகிளாண்டவரிடம் இந்தியாவிலிருந்து அதிகம் கேட்கப்பட்ட கேள்வி: “கறுப்புப்பணத்தை வெள்ளையாக்குவது எப்படி? நேர்மை கொழுந்துகளே! வணக்கம். 
  3. கர்நாடகா எம் எல் ஏ நாரயண்சாமி தலா மூன்று லக்ஷம் கொடுத்து, பெருமளவில் கல்லா கட்டுகிறாராம். இல்லை அது வங்கி அளித்த விவசாயக்கடன் வினியோகம் என்கிறார், அவர். அட! நாராயணா!
  4. நீண்ட காலமாக செயல்படாத ஒரு கோடி வங்கி கணக்குகளில் முடங்கி கிடக்கும் ரூ.2400 கோடி. விடுதலை இதழ் தலையங்கம்
  5. இதில், தேசியமயமாக்கப்பட்ட வங்கி களில் மட்டும் 86 லட்சம் கணக்குகள் முடங்கியுள்ளன. அவற்றில் ரூ.1900 கோடி பணம் உள்ளது. இதிலும் ஸ்டேட் பாங்க் குரூப் வங்கிகளில் மட்டும் பார்த்தால், 10 லட்சம் செயல்படாத கணக்குகளில் ரூ.233 கோடி முடங்கியுள்ளது. 
  6. தனியார் வங்கிகளில் 14 லட்சம் செயல் படாத கணக்குகளில் ரூ.233கோடிக்கும் அதிகமான பணம் முடங்கியுள்ளது. வெளி நாட்டு வங்கிகளில் 46,000 செயல்படாத கணக்குகளில் ரூ.69கோடி முடங்கியுள்ளது.
  7. Property developers are putting up a brave front on prices, but registration authorities report a sharp fall in revenue in leading real estate markets in Haryana, Uttar Pradesh, Karnataka, Telangana and Tamil Nadu in the first week after demonetisation. 17 11 2016
  8. Some small developers in Bengaluru, a segment that makes up an estimated 12 per cent of the market, have reportedly cashed in on the Centre’s decision, making sales in “old currency”, to be regularised using loans later. 17 11 2016
  9. மும்பை : சர்வதேச அந்நிய செலாவணி சந்தையில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 5 காசுகள் உயர்ந்து காணப்படுகிறது. டாலரின் மதிப்பு உயர்வுடன் துவங்கிய போதிலும்...இந்திய ரூபாய் மதிப்பு உயரத் துவங்கியது. இன்றைய வர்த்தக நேர துவக்கத்தின் போது ரூபாய் மதிப்பு 67.89 ஆக இருந்தது. முன்னதாக நேற்றைய வர்த்தக நேர முடிவில் ரூபாய் மதிப்பு 67.94 ஆக இருந்தது.
  10. சிங்­கப்பூர் : ரிசர்வ் வங்கி முன்னாள் கவர்னர், டி.சுப்­பாராவ், சிங்­கப்­பூரில், நிதித் துறை கருத்­த­ரங்கில் பேசி­ய­தா­வது: மத்­திய அரசு, கறுப்புப் பணத்தை கட்­டுப்­ப­டுத்த, 500, 1,000 ரூபாய் நோட்­டு­களை செல்­லா­த­வை­யாக அறி­வித்­தி­ருப்­பது வர­வேற்­கத்­தக்­கது. இதனால், மக்கள் படும் துயரம், தற்­கா­லி­க­மா­னது. ஆனால், இந்­ந­ட­வ­டிக்­கையால், நாட்­டிற்கு நீண்ட கால பயன்கள் கிட்டும். குறிப்­பாக, இந்­தி­யாவில் முத­லீ­டுகள் அதி­க­ரிக்கும்; விலை­வாசி உயர்வு கட்­டுக்குள் வரும்; பண­வீக்கம் மறைந்து, பண வாட்டம் என்ற நிலையை, நாடு சந்­திக்க நேரும். ரொக்க பரி­மாற்றம் குறைந்து, மின்­னணு வாயி­லான பணப் பரி­மாற்றம் அதி­க­ரிக்கும். இந்­தியா, ரொக்கப் பொரு­ளா­தாரம் சார்ந்த நாடு என்ற நிலையில் இருந்து, குறை­வான ரொக்கப் பரி­மாற்றம் உள்ள நாடு என்ற சிறப்பை பெறும். இவ்­வாறு அவர் கூறினார்.

பின்குறிப்பு: சில குமுகங்களில் எழுதுபவர்களில் பலரும், அங்கெல்லாமும், என் வலைப்பூவிலும் என்னுடைய வாசகர்களில் பலரும் இந்திய பிரஜையாக இல்லாமல் இருக்கலாம். அவர்கள் இந்திய நாட்டின் மேலாண்மையை (sovereignty) மதிப்பாதவர்களாகவும், இந்தியாவில் தற்காலம் நடக்கும் நிகழ்வுகளை துச்சமாக கருதபவர்களும் இருக்கலாம். தீவிரம் புரியாமல் எள்ளி நகையாடுவதிலும் ஞானஸ்நானம், விதண்டாவாதம் செய்பவர்களாகவும், வதந்தி காதலர்களாகவும் இருக்கலாம். அத்தகைய உத்தமபுத்திரர்கள் இந்தியாவிலிருந்தே குட்டை குழப்பலாம். அவர்களை நான் கண்ணெடுத்தும் பார்க்கவில்லை. புறக்கணிக்கிறேன். பொருட்படுத்தவில்லை. சில குமுகங்கள் நான் எழுதுவதை மட்டுறுத்தலாம். I don’t care.
இன்னம்பூரான்
17 11 2016

[தொடரும்]
சித்திரத்துக்கு நன்றி:






இன்னம்பூரான்

http://innamburan.blogspot.co.uk

http://innamburan.blogspot.de/view/magazine

www.olitamizh.com








இன்னம்பூரான்

http://innamburan.blogspot.co.uk

http://innamburan.blogspot.de/view/magazine

www.olitamizh.com