Monday, September 30, 2013

குடவோலை:அன்றொரு நாள்: அக்டோபர் 1




அன்றொரு நாள்: அக்டோபர் 1

Innamburan Innamburan Sat, Oct 1, 2011 at 9:30 PM

To: mintamil
>
அன்றொரு நாள்: அக்டோபர் 1

‘குடவோலை’, ‘குடவோலை’ என்று கதைத்தே, காலத்தை ஓட்டி விட்டோம், ஏதோ நம் நாட்டு குறுநில மன்னர்கள், குடியரசு, மக்களாட்சி, ஜனநாயகம் ஆகிய அரசியல் பண்புகளை, இவ்வுலகுக்கு வாரி வழங்கிய மாதிரி. உத்திரமேரூரில் முதல் பராந்தகன் சோழன் காலத்தில் (கி பி 919/921) உத்திரமேரூர் சதுர்வேதி மங்கலத்தில் கிராம நிர்வாகம் குடவோலை முறைப்படி நடைபெற்று வந்ததாக, வைகுந்தப் பெருமாள் கோவில் கல்வெட்டு மூலம் அறிகிறோம். பெண்களுக்கு வாக்குரிமை கிடையாது.  மனையும், நிலமும், நீச்சும் இல்லையெனில் வாக்குரிமை கிடையாது. வயது 35 ~70. ஒழுக்கமும், கறார் கணக்கும் தகுதிகள். ஒரு வாரியத்தில் மூன்று ஆண்டுகளுக்கு மேல் நியமனம் கிடையாது. நியமிக்கப்பட்டவர்களின் பெயர்கள் ஓலை நறுக்குகளிலெழுதி ஒரு குடத்தில் இடப்படும். பிறகு அவை நன்கு குலுக்கப்படும். பிறகு ஒரு சிறுவனை அழைத்து எத்தனை உறுப்பினர்கள் தேவையோ அத்தனை ஓலை நறுக்குகள் எடுக்கப்படும். அவற்றில் உள்ள பெயர்கள் உரக்கப் படிக்கப்பட்டு அவர்கள் சபையின் உறுப்பினர்களாகத் தேர்வு செய்யப்படுவர். இதுவே குடவோலை முறையாகும். அரசனை தெய்வாம்சமாகக் கருதிய காலகட்டத்தில், இது மெச்சப்படவேண்டியது தான். ஆனால், இதை தற்காலத்து நாடு தழுவிய பொது தேர்தல் முறைக்கு இணையாக சொற்மாரி பொழிவது இம்மி அளவு கூட பொருத்தமில்லாத  ஒப்புமை. இவ்வாறு எழுதிய பிறகு பார்க்கக்கிடைத்த முனைவர் நா.கணேசனின் 27 09 2011 இடுகையை, இடம், பொருள், ஏவல் கருதி, மரியாதையுடன், இணைத்துள்ளேன்.

ஜனநாயகம் நேரடியாகவும் இருக்கலாம்; பிரதிநிதித்துவம் மூலமும் இருக்கலாம். இந்தியாவில் பிரதிநிதிகள் தடம் மாறி, தடுமாறி, நிதி தேடி, மக்களுக்கு பிரதியுபகாரத்துக்கு பதிலாக பிரதி அபகாரம் செய்து வருகிறார்களே என்ற பரிதாபத்தை எங்கு சொல்லி புலம்புவது?. தேர்தலில் புலப்படும் ‘வாக்குக்கரிசி’ முறைகேடுகளுக்கு ‘திருமங்கல சூத்ரம்’ என்ற செல்லப்பெயர் வேறு. இத்தருணம் Election, Initiative, Referendum, Recall, Plebiscite (தேர்தல், மனுப்போட்டு நிவாரணம் கோருவது, மக்கள் மாக்களாக மாறி துணிவுடன் களம் இறங்கி பொது நலனை வற்புறுத்தி பெறுவது, தேர்தலில் கெலித்தபின் மக்களை உதறும் ‘நிதிபிரதிகளை’ வீட்டுக்கு அனுப்புவது, பொதுஜன அபிப்ராயத்தை நிலை நாட்டுவது) போன்ற குடியரசு என்ற வில்லில், உரிமை என்ற நாணேற்றி, விரைந்து பாயும் கணைகளை பற்றி சற்றே பார்ப்போம். இன்றைக்கு இதற்கு என்ன தனிச்சிறப்பு என்று கேட்டால், பதில்: 
அக்டோபர் 1, 1982 அன்று இத்தகைய கணை ஒன்று ஒரு ஜெர்மன் அதிபரை இறக்கி, மற்றொருவரை அரியணையில் அமர்த்தியது. அந்த நிகழ்வு தரும் செய்தி யாதெனில்,நேரடி ஜனநாயகம், பிரதிநிதித்துவம் என்றெல்லாம் பேசிப்பேசி காலத்தை விரயம் செய்யாமல், ஆக வேண்டிய காரியத்தை பார் என்பதே. 
நடந்தது என்ன?  ஜெர்மனியில் 1919த்திய வீமார் ரிபப்ளிக் சாஸனம் ஜனாதிபதியை விலக்க வழி வகுத்தது; மற்றொருவரை அமர்த்த வழி வகுக்கவில்லை. குழப்பம்; தலைகள் பல உருண்டன. ஹிட்லர் தலை தூக்கி நாஜிக்கட்சியை துவக்க, குழி தோண்டியது, இந்த நிலையில்லா சூழல் என்று வரலாற்று ஆசிரியர்கள் சொல்வது உண்டு. இதற்கான மாற்று மருந்து 1949த்திய அரசியல் சாஸனத்தில் வைக்கப்பட்டது. விலி ப்ரேண்ட் என்ற ஜனாதிபதியின் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம், ஏப்ரல் 27, 1972 அன்று நிறைவேற்றப்பட்டாலும், 48 மணி நேரத்திற்குள் மற்றொருவரை பார்லிமெண்ட் தேர்ந்து எடுக்காததால், விலி ப்ரேண்ட் தொடர்ந்து பணி ஆற்றினார்.  அக்டோபர் 1, 1982 அன்று ஹெல்மெட் ஷ்மிட் என்ற ஜனாதிபதியின் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம், நிறைவேற்றப்பட்டு 48 மணி நேரத்திற்குள் ஹெல்மட் கோஹ்ல் என்பவரை பார்லிமெண்ட் தேர்ந்து எடுத்ததால், நட்டாற்றில் புரவியை மாற்றமுடிந்தது. இந்த வழிமுறைக்கு Constructive Vote of No Confidence (கூடு விட்டு கூடு பாயும் தன்மையுடைய நம்பிக்கையில்லா தீர்மானம்!) என்று பெயர்.
Constructive Vote of No Confidence (கூடு விட்டு கூடு பாயும் தன்மையுடைய நம்பிக்கையில்லா தீர்மானம்!) பிரதிநிதித்துவமுறையில் தான் ஜெர்மனியில் பயன்பட்டது. (அதை பற்றி விலாவாரியாக நான் பேசவில்லை; என் இலக்கு வேறு.)
மேலும், ‘திருமங்கல சூத்ரம்’, ‘பிரதியுபகாரத்துக்கு பதிலாக பிரதி அபகாரம்’, ‘நிதிபிரதிகள்’ எல்லாம் கண்டால், குலை நடுங்கிறது.
.
இந்தியாவின் தேர்தல் முறையில் மனுப்போட்டு நிவாரணம் கோருவது, மக்கள் மாக்களாக மாறி துணிவுடன் களம் இறங்கி பொது நலனை வற்புறுத்தி பெறுவது, தேர்தலில் கெலித்தபின் மக்களை உதறும் ‘நிதிபிரதிகளை’ வீட்டுக்கு அனுப்புவது, பொதுஜன அபிப்ராயத்தை நிலை நாட்டுவது எல்லாம் ஏட்டுச்சுரைக்காய், கவைக்கு உதவாது, அரசியல் சாஸனம் அவற்றை நிர்ணயம் செய்யவில்லை என்றெல்லாம் நொண்டிச்சாக்குச் சொல்லி, மாய்மாலம் செய்யாமல், இந்த லோகாயுக்தா பரமபத சோபான விளையாட்டை ஒத்திப்போட்டு விட்டு, ஆக்கபூர்வமான முறையில், மாக்னா கார்ட்டா மாதிரி ஒரு தெளிவான  பொது விண்ணப்பத்தை கோடானுகோடி இந்தியர்கள், ஜனாதிபதியிடம் சமர்ப்பித்தால் என்ன? மூன்றாம் தடவையாக, கூவிக்கேட்கும் என்னுடைய தாழ்மையான வினாக்கணை:
இந்திய மக்களின் கோடிக்கணக்கான ஜனத்தொகை ஒரு மனதுடன், ஏகாக்ரஹ சித்தத்துடன், நம் ஜனாதிபதியிடம், குடியரசு என்ற வில்லில், உரிமை என்ற நாணேற்றி, விரைந்து பாயும் கணைகளை ~ Initiative, Referendum, Recall, Plebiscite ( மனுப்போட்டு நிவாரணம் கோருவது, மக்கள் மாக்களாக மாறி துணிவுடன் களம் இறங்கி பொது நலனை வற்புறுத்தி பெறுவது, தேர்தலில் கெலித்தபின் மக்களை உதறும் ‘நிதிபிரதிகளை’ வீட்டுக்கு அனுப்புவது, பொதுஜன அபிப்ராயத்தை நிலை நாட்டுவது) வற்புறுத்தி கேட்கவேண்டுமோ? அவற்றை அரசியல் சாஸனத்தில் அமைத்து வைக்கக் கெடு வைக்கவேண்டுமோ? பெருங்குரல் எழுப்பவேண்டுமோ/ 
என்ன சொல்கிறீர்கள்? இது அரசியல் அன்று. மக்களின் வாழ்வு ஆதார பிரச்னை.
இன்னம்பூரான்2010-11-09-Constitution-Referendum-aborigines-600.jpg
01 10 2011




உசாத்துணை:

அக்டோபர் 1-கனேசனார்.pages
177K

Dhivakar Sat, Oct 1, 2011 at 9:54 PM


சூடா ஒரு மசால் தோசை சாப்பிடக் கொடுத்திருக்கீங்க..

இந்த உத்திரமேரூர் விஷயம் ஏன் அடிக்கடி இப்ப வெளியே வருதுன்னா, அதுல உள்ள சில நல்ல விஷயம் இப்ப இல்லையே என்கிற குறைதான். நீங்க சொல்லறா மாதிரி அந்தக் காலத்துக்கு அது ரொம்ப அதிகம், இன்னும் கிராம அளவிலே அது பழைய காலத்துலேருந்து வந்துகொண்டே இருக்கு. உங்களுக்குத் தெரியாததா..

அந்தக் காலத்துப் பெண்களுக்கு உரிமை எல்லாம் எப்படி இந்தக் காலத்துக்குப் பொருந்தறா மாதிரி எடுத்துக்க முடியும்னு தெரியலே. ஆனா,

சொந்தக்காரங்க போட்டி போடக்கூடாது,
ஒருவாட்டி பதவியல இருந்தா இன்னொரு தபா சான்ஸ் கிடையாது..
இவ்வளோ ஆஸ்தி பதவிக்கு வரத்துக்கு முன்னாடி வெச்சிருந்தா அதுதான் பதவி முடியற காலம் வரைக்கும் -
இத்தனைக்கும் 360 நாட்கள்தான் பதவிக்காலம்.
கள்ளம் அறியாத பச்சிளம் பாலகன் குடவோலைல எடுக்கறதுதான் தேர்தல் அதிகாரி மாதிரி.. (அல்லது ரிவர்ஸ் உள்ளத்தில் கள்ளமிலாத தேர்தல் அதிகாரிங்க கண்காணிப்பு - சிதம்பரம் கேஸ் மாதிரி இல்லாம..)

அடக் கடவுளே! இ சார் இப்படியெல்லாம் இங்கே எப்போ கொண்டு வரப்போறாங்க..
ஜோசியம் சொல்லுங்களேன்..

தி

2011/10/1 Innamburan Innamburan <innamburan@gmail.com>

Nagarajan Vadivel Sat, Oct 1, 2011 at 10:20 PM


பழங்குடிகள் வாழ்வியல் மரபு உள்ளாட்ட்சிமுறையை அடிப்படையாகக் கொண்டது.  மூவேந்தர்கள் என்றழைக்கப்பட்ட சங்ககால பழங்குடிகள் தலைவர் உள்ளாட்சி அமைப்புகளிடம் ஆளுமையை ஒப்படைத்து குமுகப் பாதுகாப்பு கவின்கலை இலக்கிய வளர்ச்சி போன்றவற்றில்மட்டும் கவனம் செலுத்தினர்.  வரி வசூல் கிஸ்தி என்ற வார்த்தைகளுக்கு அங்கே இடம் இல்லை.  குடிப்பணம் அரசரின் அரசவைச் செலவுக்க்காக மக்களால் வழங்கப்பட்டது
மத்திய ஆட்சிமுறை வரி வசூல் போரிட்டுக் கொள்ளை அடித்தல் போன்றவை பிற்கால்த்தி்ல் குறிப்பாகப் பிற்காலச் சோழர் காலத்தில் அரசாளுமைக்கு அடிப்படையாக அமைந்தது.  உள்ளா்ட்சிமுறை ஒரு சோதனை ஓட்டமாக மத்திய அரசாளுமையுடன் இணத்துப்பார்க்க எடுத்துக்கொண்ட ஒரு பரிசோதனை என்றே தோன்றுகிறது
நாகராசன்
2011/10/1 Innamburan Innamburan <innamburan@gmail.com>


Geetha Sambasivam Sun, Oct 2, 2011 at 5:53 AM


ஆனால், இதை தற்காலத்து நாடு தழுவிய பொது தேர்தல் முறைக்கு இணையாக சொற்மாரி பொழிவது இம்மி அளவு கூட பொருத்தமில்லாத  ஒப்புமை//

ஒப்புமை பொருத்தமில்லாமல் இருக்கலாம்.  ஆனால் கணேசனாரும், நீங்களுமே குறிப்பிட்டிருப்பது போல் குடவோலை முறைக்குச் சொல்லப்பட்டிருக்கும் தகுதி அடிப்படையின் நிபந்தனைகளை இங்கே கடுமையாகப் பின்பற்றலாமே!  ஒரு முறை தேர்தலில் போட்டியிட்டு மக்கள் பணி ஆற்றியவர்களுக்கோ, அவர்கள் உறவினருக்கோ, பெண்டு, பிள்ளைகளுக்கோ அடுத்த முறை வாய்ப்பளிக்கக் கூடாது.  மேலும் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டுகளில் தங்கள் தொகுதிக்கு மேம்பாட்டுப் பணிகளைச் சரிவரச் செய்யவில்லை என்ற புகார்ப்பட்டியல் பெரும்பான்மை மக்களால் கொடுக்கப்பட்டால் அவர்களும் அடுத்த தேர்தலில் போட்டியிடக் கூடாது. ஜெயிப்பவர் ஆளும் கட்சியோ, எதிர்க்கட்சியோ, அல்லது எதிரிக்கட்சியாகவே இருக்கட்டுமே; மக்கள் நலனே பிரதானமாக இருக்க வேண்டும்.  இவை அனைத்தையும் கடுமையாகப் பின்பற்றினாலொழிய தேர்தலில் நிற்க முடியாது என்ற நிபந்தனையோடு அனுமதி கொடுக்க வேண்டும்.  அரசுகள் முன்வரவேண்டும். வருமா?? சந்தேகமே!

2011/10/1 Innamburan Innamburan <innamburan@gmail.com>

அன்றொரு நாள்: அக்டோபர் 1


Subashini Tremmel Sun, Oct 2, 2011 at 1:18 PM


..
அக்டோபர் 1, 1982 அன்று இத்தகைய கணை ஒன்று ஒரு ஜெர்மன் அதிபரை இறக்கி, மற்றொருவரை அரியணையில் அமர்த்தியது. அந்த நிகழ்வு தரும் செய்தி யாதெனில்,நேரடி ஜனநாயகம், பிரதிநிதித்துவம் என்றெல்லாம் பேசிப்பேசி காலத்தை விரயம் செய்யாமல், ஆக வேண்டிய காரியத்தை பார் என்பதே. 
நடந்தது என்ன?  ஜெர்மனியில் 1919த்திய வீமார் ரிபப்ளிக் சாஸனம் ஜனாதிபதியை விலக்க வழி வகுத்தது; மற்றொருவரை அமர்த்த வழி வகுக்கவில்லை. குழப்பம்; தலைகள் பல உருண்டன. ஹிட்லர் தலை தூக்கி நாஜிக்கட்சியை துவக்க, குழி தோண்டியது, இந்த நிலையில்லா சூழல் என்று வரலாற்று ஆசிரியர்கள் சொல்வது உண்டு. இதற்கான மாற்று மருந்து 1949த்திய அரசியல் சாஸனத்தில் வைக்கப்பட்டது. விலி ப்ரேண்ட் என்ற ஜனாதிபதியின் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம், ஏப்ரல் 27, 1972 அன்று நிறைவேற்றப்பட்டாலும், 48 மணி நேரத்திற்குள் மற்றொருவரை பார்லிமெண்ட் தேர்ந்து எடுக்காததால், விலி ப்ரேண்ட் தொடர்ந்து பணி ஆற்றினார்.  அக்டோபர் 1, 1982 அன்று ஹெல்மெட் ஷ்மிட் என்ற ஜனாதிபதியின் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம், நிறைவேற்றப்பட்டு 48 மணி நேரத்திற்குள் ஹெல்மட் கோஹ்ல் என்பவரை பார்லிமெண்ட் தேர்ந்து எடுத்ததால், நட்டாற்றில் புரவியை மாற்றமுடிந்தது. இந்த வழிமுறைக்கு Constructive Vote of No Confidence (கூடு விட்டு கூடு பாயும் தன்மையுடைய நம்பிக்கையில்லா தீர்மானம்!) என்று பெயர்.
Constructive Vote of No Confidence (கூடு விட்டு கூடு பாயும் தன்மையுடைய நம்பிக்கையில்லா தீர்மானம்!)


நாளை மேலும் இது தொடர்பான சில செய்திகள் வருமா ?

சுபா 

பிரதிநிதித்துவமுறையில் தான் ஜெர்மனியில் பயன்பட்டது. (அதை பற்றி விலாவாரியாக நான் பேசவில்லை; என் இலக்கு வேறு.)
மேலும், ‘திருமங்கல சூத்ரம்’, ‘பிரதியுபகாரத்துக்கு பதிலாக பிரதி அபகாரம்’, ‘நிதிபிரதிகள்’ எல்லாம் கண்டால், குலை நடுங்கிறது.
.
இந்தியாவின் தேர்தல் முறையில் மனுப்போட்டு நிவாரணம் கோருவது, மக்கள் மாக்களாக மாறி துணிவுடன் களம் இறங்கி பொது நலனை வற்புறுத்தி பெறுவது, தேர்தலில் கெலித்தபின் மக்களை உதறும் ‘நிதிபிரதிகளை’ வீட்டுக்கு அனுப்புவது, பொதுஜன அபிப்ராயத்தை நிலை நாட்டுவது எல்லாம் ஏட்டுச்சுரைக்காய், கவைக்கு உதவாது, அரசியல் சாஸனம் அவற்றை நிர்ணயம் செய்யவில்லை என்றெல்லாம் நொண்டிச்சாக்குச் சொல்லி, மாய்மாலம் செய்யாமல், இந்த லோகாயுக்தா பரமபத சோபான விளையாட்டை ஒத்திப்போட்டு விட்டு, ஆக்கபூர்வமான முறையில், மாக்னா கார்ட்டா மாதிரி ஒரு தெளிவான  பொது விண்ணப்பத்தை கோடானுகோடி இந்தியர்கள், ஜனாதிபதியிடம் சமர்ப்பித்தால் என்ன? மூன்றாம் தடவையாக, கூவிக்கேட்கும் என்னுடைய தாழ்மையான வினாக்கணை:
இந்திய மக்களின் கோடிக்கணக்கான ஜனத்தொகை ஒரு மனதுடன், ஏகாக்ரஹ சித்தத்துடன், நம் ஜனாதிபதியிடம், குடியரசு என்ற வில்லில், உரிமை என்ற நாணேற்றி, விரைந்து பாயும் கணைகளை ~ Initiative, Referendum, Recall, Plebiscite ( மனுப்போட்டு நிவாரணம் கோருவது, மக்கள் மாக்களாக மாறி துணிவுடன் களம் இறங்கி பொது நலனை வற்புறுத்தி பெறுவது, தேர்தலில் கெலித்தபின் மக்களை உதறும் ‘நிதிபிரதிகளை’ வீட்டுக்கு அனுப்புவது, பொதுஜன அபிப்ராயத்தை நிலை நாட்டுவது) வற்புறுத்தி கேட்கவேண்டுமோ? அவற்றை அரசியல் சாஸனத்தில் அமைத்து வைக்கக் கெடு வைக்கவேண்டுமோ? பெருங்குரல் எழுப்பவேண்டுமோ/ 
என்ன சொல்கிறீர்கள்? இது அரசியல் அன்று. மக்களின் வாழ்வு ஆதார பிரச்னை.
இன்னம்பூரான்2010-11-09-Constitution-Referendum-aborigines-600.jpg
01 10 2011



Innamburan Innamburan Sun, Oct 2, 2011 at 3:14 PM
To: Subashini Tremmel
நன்றி, ஸுபாஷிணி! 'அன்றொரு நாள்: அக்டோபர் 2' அண்ணல் காந்திக்கு ரிசெர்வ்ட். ஜெர்மனியும் வருது, வேறு விஷயமாக. எனக்கு ஜெர்மானியர்கள் ஒரு 'ஹெல்மட்'டை கழட்டி, மற்றொரு 'ஹெல்மட்'ட்டை மாட்டிக்கொண்டது பற்றி சில சர்ச்சைக்குரிய கருத்துக்கள் உண்டு. அதை சொல்ல உகந்த நாளை பிடிக்கவேண்டும். இடையில் நீங்கள் சொல்ல விரும்புவதை கேட்க அவா.

Subashini Tremmel Sun, Oct 2, 2011 at 3:28 PM

நாளைய நிகழ்வை நினைத்துப் பார்க்க இன்று ஒரு பதிவு இணைத்திருக்கிறேன் Germany Reunification என்ற தலைப்பில்.. பாருங்களேன்.. விழியத்தின் வழி அன்றைய நிகழ்ச்சிகளை நன்கு தெரிந்து கொள்ளலாம். பார்ப்போம்.  வாய்ப்பும் நேரமும் அமைந்தால் நானும் எழுதுகிறேன்.

அண்ணல் காந்திக்கு காத்திருக்கிறேன்.

சுபா

Innamburan Innamburan Sun, Oct 2, 2011 at 5:33 PM
To: Subashini Tremmel
I am waiting for your kind input, Subashini.
[Quoted text hidden]

Subashini Tremmel Sun, Oct 2, 2011 at 6:10 PM
To: Innamburan Innamburan

Sunday, September 29, 2013

தடையும் விடையும்: அன்றொரு நாள்: ஸெப்டம்பர் 24




அன்றொரு நாள்: ஸெப்டம்பர் 24

Innamburan Innamburan Sat, Sep 24, 2011 at 7:17 PM


அன்றொரு நாள்: ஸெப்டம்பர் 24
தடையும் விடையும்

பரிக்ஷைக்கு வராததை படிப்பதின் சுவையை ஏவாள் கடித்த ஆப்பிளுக்கு ஒப்பிடலாம். ஒரு கையில் அறிஞர் அண்ணாவின் ‘கம்பரசம்’ ~காப்பியத்தில் மெனக்கட்டுப் பொறுக்கிய காமம் தூண்டும் வரிகள். மற்றொரு கையில் ‘Brave New World’ ~ Aldous Huxley யின் தத்துவ போதனை. முதலாவது தடுத்தாட்கொள்ளபட்டது; இரண்டாவது தடை செய்யப்பட்ட நூல். அரசியலரும், சமய போதனை/பிரசாரம் செய்பவர்களும், தமக்கு ஒவ்வாத கருத்துக்களை சிரச்சேதம் செய்ய விழைவார்கள். முதல் பலிகடா, நூல்கள். அமெரிக்காவில் ஸெப்டம்பர் 24 லிருந்து அக்டோபர் 1 வரை தடை செய்யப்பட்ட நூல்களுக்கு விழா எடுப்பார்கள். இந்தியாவிலும் விழா எடுக்கலாமே!

சில பார்வைகள்:
  1. சைனாவில் தொன்மை இலக்கியத்தில் சன்வோகோங்க் என்ற குரங்கு தேவர்களை எதிர்த்ததால், ‘புத்தரின் கையினால்’ உருவாக்கப்பட்ட மலை ஒன்றில் சிறை வைக்கப்பட்டதாம். முது மொழி: ‘என்ன குதி குதித்தாலும், புத்தரின் கைக்குள் அடங்கித்தானே ஆகணும்.”  டேனியல் வூ என்ற பாமரர் தன்னை பற்றி அப்படித்தான் சொல்லிக்கொள்ளுகிறார்.அவருடைய இடுகைகளை சைனாவின் அரசு குண்டாம் தடியெடுத்து அடித்தி, நசுக்கி, பொசுக்கி விட்டது. அவர் செய்த குற்றம்: அமைச்சர்கள் போகுமிடமெல்லாம் கவனித்து, அவர்கள் அணியும் விலை உயர்ந்த கைக்கடியாரங்களை படமெடுத்து, அவற்றின் விலையை குறிப்பிடுவது. லஞ்சலாவண்யத்தைப் பற்றி பேச்சு எழவில்லை; வெள்ளிடை மலை.புரிந்து விட்டது, மக்களுக்கு. அமோக வரவேற்பு. கருத்துத்தடை துறைக்கும் இவருக்கும் ஒரு நிழல் உடன்படிக்கை? மிகவும் விலை உயர்ந்த கைக்கடியாரங்களையும், பெரிய மீன்களையும் விட்டு விட்டால், சின்ன மீன்களை பற்றி எழுதலாம்! அதையும் தூக்கி அடித்து விட்டார்கள். மற்ற குரல்களையும் அடக்கியாச்சு.. சைனாவில் கால்ஃப் விளையாட்டு தடை செய்யப்பட்டுள்ளது, முதலாளித்துவ விளையாட்டு என்று. ஆனால், விதிகளை மீறிய பிரம்மாண்டமான கால்ஃப் விளையாட்டு மைதானங்கள் உருவாகின்றன. அதிகார பலசாலிகள் ரோலக்ஸ் வாட்சு, பெரிய காரு, தாட்டு பூட்டு தஞ்சாவூர்னு அங்கு வந்து வெளயாடுகிறார்கள். கேட்டால், தடா!
  2. ஊதிக்கெடுப்பவர்கள், விக்கி லீக்கு, தகவல் உரிமை சட்டம் எல்லாம் உங்களுக்கு தெரிந்த விஷயங்களே. காலம் மாறிக்கிட்டு இருக்கு. தடைக்கு ஒரு தடா போடணுமோ? அந்த தடாவுக்கு விதி விலக்கு தேவைப்படும் என்பதற்கு ஒரு உதாரணம், அடுத்த பகுதியில்.
  3. பாகிஸ்தான் கிரிக்கெட் விளையாடி இம்ரான் கான் ‘பாகிஸ்தானின் வரலாறு’ என்று எழுதிய புத்தகம், இந்தியாவில் வாபஸ்ட். எல்லைகள் தவறாக வரையப்பட்டன என்று குற்றச்சாட்டு எழக்கூடும் என்று, முன்சாக்கிரதையாக, ராண்டம் ஹெளஸ் என்ற பிரசுரகர்த்தா, அவற்றை தடுத்து விட்டது. அவர்களுக்கு இதே பிரச்னை பாகிஸ்தானிலும் எழுந்தது, நிக்கலஸ் ஷ்மிடில் என்பவர் எழுதிய நூலை பற்றி. 
  4.  செய்திகளுக்கு ‘வருமுன் பூட்டு’ : சோனியா காந்தியின் சிகிச்சை: ஸூப்பர் கமுக்கம்! பொது வாழ்க்கையில் இருப்பவர்களின் உடல்/மன நலம் பற்றி பொது ஜனங்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்று ஒரு கட்சி. லார்ட் மொரான் என்பவர் சர்ச்சிலின் டாக்டர். சர்ச்சிலின் மன ஓட்டம்/அழுத்தம்/சஞ்சலம் எப்படி அவருடைய அரசியல் பணிகளில் தாக்கம் அளித்திருக்கும் என்ற கவலை. அவர் எழுதிய நூல் கடுமையாக விமரிசிக்கப்பட்டது. தடை செய்யப்படவில்லை. அமெரிக்க அதிபர் பீடி பிடிப்பது முதற்கொண்டு பொது மன்றத்தில். இங்கிலாந்தில், பிரதமர் கண் பரிக்ஷை செய்து கொண்டால், ஊடகத்தில் அறிவிப்பு. ஏன். பிரதமர் மன்மோஹன் சிங்கின் இதய ஆபரேஷன் கூட மறைக்கப்படவில்லை. ஏன் சோனியா காந்தியின் உடல் நிலை பரமரகசியம், அவர் திரும்பி வந்த பிறகும்? 1982 ல் சோவியத் ரஷ்யாவில் ப்ரெஸ்னவ் உடல் நிலை பற்றி மூடுமந்திரம் முணுமுணுத்த மாதிரி, இது இருக்கு.
  5.  ஆனால், என்ன பேச்சுரிமை வேண்டிக்கிடக்கு? காஷ்மீர் முதல்வர் ஒமர் அப்துல்லாவின் உடைந்த இல்லறவாழ்க்கையை பற்றி இந்த தொல்லைக்காட்சிகள் படாதபாடு படுத்தி விட்டன?

நூலறுப்பது எப்படி?
அக்கவுண்டட் ஜெனரல்களை தணிக்கை செய்ய இன்ஸ்பெக்ஷன் பிரிவு ஒன்று உண்டு. அவர்கள் டேரா போட்டு, தோண்டித் துருவி, நம்மை வறுத்தெடுப்பார்கள். ஒரு ஆவணப்போர்:
அ:அக்கவுண்டட் ஜெனரல்; இ.பி: இன்ஸ்பெக்ஷன் பிரிவு
இ.பி: ஏஜி ‘Roses in December’ என்ற நூலை வாங்கியிருக்கிறார். ஆக்ஷேபணை.
அ: புத்தகங்கள் வாங்க ஏஜிக்கு முழு அதிகாரம் உண்டு. எதற்கும் உங்கள் மேலான பார்வைக்கு அதை முன் வைத்திருக்கிறோம். (அது எம்.சி.சக்லா என்ற இந்தியாவின் பிரபல தலைமை நீதிபதியின் வரலாற்று நினைவுகள். தணிக்கைத்துறை பிரபலங்கள் சிலாகித்த புத்தகம் என்று சொல்லவில்லை.)
இ.பி: அந்த நூலை பிரிக்க நேரமில்லை. கேட்ட கேள்விக்கு பதில் அளிக்கவும்.
அ: கேட்ட கேள்வி என்ன? ஆக்ஷேபணை என்ன?
[அங்கும் கடப்ஸ். இங்கும் கடப்ஸ். புத்தகம் அலமாரியில்.]
சீன் மாறுகிறது ~ டில்லி அக்கவுண்டட் ஜெனரல் கான்ஃபரன்ஸ்.
அ: சுருக்கமாக, கதை சொல்கிறார்.
இ.பி: அது சரி. அவர் கேட்ட கேள்விக்கு பதில் அளிக்கவில்லை.
மேலா: (ஆவணங்களை வாங்கி பார்த்து): ‘அ’ நீங்கள் கேட்ட கேள்விக்கு பதில் அளிக்காதது சரியல்ல!
(ஆடிட் உள்குத்தே இப்டின்னா, கச்சா எண்ணெய், 2ஜி, கா.வெ.கேம்ஸ் கும் குமா குத்து எல்லாம் எப்டி இருக்கும்? by the way.)
அமெரிக்க உள்குத்து ஒரு பார்வை:
அமெரிக்காவில் வருடக்கணக்காக பெரிதும் பேசப்படும் நூல்களில் நான்கு: 1. அல்டஸ் ஹக்ஸ்லியின் Brave New World, ஜே.டி.சலிஞ்சரின் Catcher in the Rye, ஜான் ஸ்டைய்பெக்கின் The Grapes of Wrath & ஃபிட்ஸ்கெரால்டின் The Great Gatsby. அமெரிக்காவின் இடாஹோ மாநிலத்தில் தற்காலிகமாக ஆகஸ்ட் 6, 2009 ல் தடை செய்யப்பட்டன, பள்ளிகளில். அந்த மாதிரியான அசட்டுத்தனங்கள் பலவற்றை உசாத்துணையில் காணலாம். ஒரு செய்தி: இறுதியில் சொல்லப்பட்ட The Great Gatsby என்ற நூலை மதிப்பீடு செய்யச்சொல்லி  14 வயது மாணவ மாணவிகளுக்கு ஹோம் ஒர்க், இங்கிலாந்தில்! ஹூம்.தடை, தடா, தட்தடா எல்லாம் அமெரிக்காவிலும், இந்தியாவிலும், சைனாவிலும் அதிகப்படி. தமிழ் நூல்கள் ஏதாவது ~ திருக்குறளின் காமத்துப்பாலை போல ~ஏதேனும் தடை செய்யப்பட்டது உண்டோ?
இன்னம்பூரான்
24 09 2011 
1stamendposters2_copy.jpg

உசாத்துணை:

Geetha Sambasivam Sun, Sep 25, 2011 at 6:08 AM


அமெரிக்காவில் ஸெப்டம்பர் 24 லிருந்து அக்டோபர் 1 வரை தடை செய்யப்பட்ட நூல்களுக்கு விழா எடுப்பார்கள்.//

இது கேள்விப்பட்டதே இல்லை. மற்றவை அனைத்துமே புதிய செய்திகள்.  நன்றி.

2011/9/24 Innamburan Innamburan <innamburan@gmail.com>

அன்றொரு நாள்: ஸெப்டம்பர் 24





rajam Sun, Sep 25, 2011 at 6:41 AM


எனக்கும் இதுபற்றித் தெரிந்ததில்லை. பள்ளிகள் திறக்கும் நேரத்தில் கவனமாக இருப்பதற்கான முயற்சியோ?


coral shree Sun, Sep 25, 2011 at 12:01 PM
To: Innamburan Innamburan

சுவாரசியமான தகவல்களுக்கு நன்றி ஐயா. தங்களுடைய பார்வை மிக வித்தியாசம்........ 



Innamburan Innamburan Sun, Sep 25, 2011 at 10:21 PM

To: mintamil
Bcc: innamburan88
எனக்கென்னமோ மணிமேகலை, இனியவை நாற்பது, நாலடியார். கொன்றைவேந்தன் ஆகிய நூல்களையாவது தடை செய்யவேண்டும் என்று தோன்றுகிறது. அவற்றை தேடிப்பிடித்து படிப்பார்கள்;மறக்கமாட்டார்கள். ரகுவம்சத்தின் சில பாடல்களை நீக்கித்தான் பாடப்புத்தகம். தேடிப்பிடித்து அவற்றை படித்ததால் தான் இன்னும் நினைவில் உள்ளன, ஸ்ருங்கார ரசமான பகுதிகள். 
நூல்களை தடை செய்வது, பகுதிகளை நீக்குவது, இடைச்செருகல், மூளைச்சலவை, தடுத்தாட்கொள்வது, ஆகிய ஒவ்வாத செய்ல்களை பற்றி  விரிவாகவே அலசுவதால், நன்மை பயக்கும்.  

பள்ளிகள் திறக்கும் நேரத்துக் கவனம் ஏடாகூடமாக செயல்படுகிறது, ராஜம். யாரோ ஒரு தந்தையோ, தாயோ குறை கூறினால், தள்ளி வைத்து விடுகிறார்கள். மீள்பார்வை வருவதற்க்குள்,பையனுக்கு பேரன் பிறந்து விடுகிறான். நான் பட்டியலிட்ட நூல்கள் அமரத்துவம் பெற்றவை. அவற்றை மூளைஹீனன் தான் தடை செய்வான். ஒரு வாரம் பூராவும் இதை பற்றி, இவ்வவையின் சான்றோர்கள் அலசுவார்கள் என்ற ஆர்வம் எனக்கு. யாராவது தூபம் போடலாமே. பேராசிரியரே! உறக்கத்தில் ஆழ்ந்தீரோ? செமினார் முடிந்தததோ, செல்வன்? தேவ வாக்கு என்னதோ? அரங்கத்தில் என்ன பேசப்படுகிறது?
இன்னம்பூரான் 
25 09 2011

rajam Mon, Sep 26, 2011 at 12:58 AM


உண்மைதான், இல்லையா! எது தடை செய்யப்பட்டதோ அதின்மேல் மக்கள் பார்வை போகலாம்!

N. Ganesan Mon, Sep 26, 2011 at 1:17 AM




On Sep 25, 11:51 am, Innamburan Innamburan <innambu...@gmail.com>
wrote:
> எனக்கென்னமோ மணிமேகலை, இனியவை நாற்பது, நாலடியார். கொன்றைவேந்தன் ஆகிய
> நூல்களையாவது தடை செய்யவேண்டும் என்று தோன்றுகிறது. அவற்றை தேடிப்பிடித்து
> படிப்பார்கள்;மறக்கமாட்டார்கள். ரகுவம்சத்தின் சில பாடல்களை நீக்கித்தான்
> பாடப்புத்தகம். தேடிப்பிடித்து அவற்றை படித்ததால் தான் இன்னும் நினைவில் உள்ளன,
> ஸ்ருங்கார ரசமான பகுதிகள்.
> நூல்களை தடை செய்வது, பகுதிகளை நீக்குவது, இடைச்செருகல், மூளைச்சலவை,
> தடுத்தாட்கொள்வது, ஆகிய ஒவ்வாத செய்ல்களை பற்றி  விரிவாகவே அலசுவதால், நன்மை
> பயக்கும்.
>
மகாகவி காளிதாசன் சங்க இலக்கியம் அறிந்தவரா? அவர் அக மரபுகள் நிறையப்
பாடுகிறார் என்கிறார்கள்.

தமிழிலும் நீங்கள் சொல்வதுபோல் உண்டு. புலவர் குழந்தை எழுதிய
இராவண காவியம் காங்கிரஸ் ஆட்சி தடைசெய்தது. திராவிட கட்சியினர்
நிறைய அதை வாங்கினர். அண்ணா ஆட்சி கட்டில் ஏறியதும் தடைநீக்கினார்.

நா. கணேசன்


> பள்ளிகள் திறக்கும் நேரத்துக் கவனம் ஏடாகூடமாக செயல்படுகிறது, ராஜம். யாரோ ஒரு
> தந்தையோ, தாயோ குறை கூறினால், தள்ளி வைத்து விடுகிறார்கள். மீள்பார்வை
> வருவதற்க்குள்,பையனுக்கு பேரன் பிறந்து விடுகிறான். நான் பட்டியலிட்ட நூல்கள்
> அமரத்துவம் பெற்றவை. அவற்றை மூளைஹீனன் தான் தடை செய்வான். ஒரு வாரம் பூராவும்
> இதை பற்றி, இவ்வவையின் சான்றோர்கள் அலசுவார்கள் என்ற ஆர்வம் எனக்கு. யாராவது
> தூபம் போடலாமே. பேராசிரியரே! உறக்கத்தில் ஆழ்ந்தீரோ? செமினார் முடிந்தததோ,
> செல்வன்? தேவ வாக்கு என்னதோ? அரங்கத்தில் என்ன பேசப்படுகிறது?
> இன்னம்பூரான்
> 25 09 2011

[Quoted text hidden]

Innamburan Innamburan Mon, Sep 26, 2011 at 1:49 AM

மகாகவி காளிதாசன் சங்க இலக்கியம் அறிந்தவரா? அவர் அக மரபுகள் நிறையப்
பாடுகிறார் என்கிறார்கள்.


"தாமங்கம் ஆரோப்ய..." என்று அவர் சீதாகல்யாணம் பாடத்தொடங்கினால், கலித்தொகை தலையாட்டும். அவர் ஸ்ருங்கார ரச மன்னர். ராஜா பர்த்ருஹரி என்றொரு ராஜரிஷி இருந்தார். அவர் நீதி சதகம் + வைராக்ய சதகம் + சிருங்கார சதகம் எழுதினார். 
[Quoted text hidden]

செல்வன் Mon, Sep 26, 2011 at 1:52 AM



2011/9/24 Innamburan Innamburan <innamburan@gmail.com>
சைனாவில் தொன்மை இலக்கியத்தில் சன்வோகோங்க் என்ற குரங்கு தேவர்களை எதிர்த்ததால், ‘புத்தரின் கையினால்’ உருவாக்கப்பட்ட மலை ஒன்றில் சிறை வைக்கப்பட்டதாம். முது மொழி: ‘என்ன குதி குதித்தாலும், புத்தரின் கைக்குள் அடங்கித்தானே ஆகணும்.” 
அது வேறு யாருமல்ல நம் ஹனுமான் தான்.பவுத்தம் இந்துகடவுள்களை உள்வாங்கிகொண்டது.அதில் ஒருவர் ஹனுமன்.

ஜாக்கி சான், ஜெட் லி நடித்த "பார்பிட்டன் கிங்க்டம்" படத்தில் சன்வோகுங் கதாபாத்திரம் இடம்பெறும்

Innamburan Innamburan Mon, Sep 26, 2011 at 1:58 AM
To: mintamil@googlegroups.com
உம்மை பிடித்திழுக்கத்தான், அப்படி மையமாகப்போட்டேன். மையமாக எழுதுவது என்றால் என்ன என்று தெரியுமோ, விஸ்கின்ஸனாரே!

செல்வன் Mon, Sep 26, 2011 at 2:02 AM




2011/9/25 Innamburan Innamburan <innamburan@gmail.com>
உம்மை பிடித்திழுக்கத்தான், அப்படி மையமாகப்போட்டேன். மையமாக எழுதுவது என்றால் என்ன என்று தெரியுமோ, விஸ்கின்ஸனாரே!
தெரியாதுங்க. அப்படின்னா என்ன?
[Quoted text hidden]

Innamburan Innamburan Mon, Sep 26, 2011 at 2:11 AM
To: mintamil@googlegroups.com
சிலபேர் சுத்தி வளைப்பாங்க. ராமன் சீதையை கல்லாணம் பண்ணிக்கிட்டான் என்று சொல்லாமே, ராமனின் அப்பனுக்கு மூணு பொண்டாட்டி என்று கதையை வளர்ப்பாங்க. என் மாதிரி ஆளுங்க நுட்பத்தையும் நுணுக்கமாக, குறிப்பால் உணர்த்தி, ஆளுக்கு தகுந்தார் போல், ப்ளேட்டை திருப்பிப்போடுவார்கள், நம்ம ராஜாவுக்கு ஜோஸ்யர் சொன்ன மாதிரி. அந்தக்கதை தெரியுமோ, செல்வா?
[Quoted text hidden]

செல்வன் Mon, Sep 26, 2011 at 2:28 AM




2011/9/25 Innamburan Innamburan <innamburan@gmail.com>
சிலபேர் சுத்தி வளைப்பாங்க. ராமன் சீதையை கல்லாணம் பண்ணிக்கிட்டான் என்று சொல்லாமே, ராமனின் அப்பனுக்கு மூணு பொண்டாட்டி என்று கதையை வளர்ப்பாங்க. என் மாதிரி ஆளுங்க நுட்பத்தையும் நுணுக்கமாக, குறிப்பால் உணர்த்தி, ஆளுக்கு தகுந்தார் போல், ப்ளேட்டை திருப்பிப்போடுவார்கள்
நீங்க இம்மாதிரி கலைகளில் வல்லவர் இ சார்.என்னை மாதிரி அப்பாவிகளுக்கு தான் இம்மாதிரி டெக்னிக் எல்லாம் தெரியாது:-)


நம்ம ராஜாவுக்கு ஜோஸ்யர் சொன்ன மாதிரி. அந்தக்கதை தெரியுமோ, செல்வா?
தெரியாதுங்க...
[Quoted text hidden]

செல்வன் Mon, Sep 26, 2011 at 2:29 AM

Reply-To: mintamil@googlegroups.com
To: mintamil@googlegroups.com
http://sino-platonic.org/complete/spp081_monkey_sun_wukong.pdf

Comparison between sunwokung and hanuman,. Interesting read and very informative for history enthusiasts
[Quoted text hidden]

Innamburan Innamburan Mon, Sep 26, 2011 at 3:01 AM

1. நான் சின்ன மீன் பிடிக்கப்போய், நீவிர் டால்ஃபினையே கொண்டு வந்து விட்டீர்கள். நன்றி. நல்லதொரு ஆய்வு. நிதானமா படிக்கணும். பேராசிரியர் மெச்சுவார். கண்ணன் இன்னொரு கட்டுரைக்கு கச்சம் கட்டுவார்.
2. அந்த இரண்டு வானரங்களும்  shapeshifing skill experts.
3. ஒரு உரையாடல்:
மன்னர், மன்னி, ஜோஸ்யர்.
மன்னர்: தட்டுக்கள் நிறைய பழங்கள், புஷ்பங்கள், ஜெர்மன், அமெரிக்கன், பிர்ட்டீஷ், சைனீஸ், தமிழ் அறுசுவை பலகாரங்கள்  எல்லாம் சிப்பந்தினிகள் மூலம் சமர்ப்பிக்கிறார்.
மன்னி: ஒரு பொன் தட்டில் ஆபரணங்கள் சமர்ப்பிக்கிறார்.
ஜோ: பஞ்சாங்கத்தால் விசிறிக்கொள்கிறார். 

மன்னர்: மஹாராணி உண்டாயிருக்காங்க.
ஜோ: அதான் தெரியுதே என்று பொருள் பட தலையாட்டுகிறார்.
மன்னி: வெட்கி தலை குனிகிறார்.
மன்னர்:  இல்லே. ஆணா? பெண்ணா?
ஜோ: மெளனம். விரல்கள் மூலம் சிக்னல் காட்றாரு. [இன்று மெளனவிரதம்]
மன்னர்: ஓ! 
மன்னி: ஓ!
ஸ்திரீ ப்ரஜை சுபஜனனம்.
மன்னர். இழுத்து வரப்பட்ட ஜோஸ்யரிடம். உன் ஜோஸ்யம் பொய்த்து விட்டது. உன் தலையை சீவப்போகிறேன்.
ஜோ: அவசரப்படேல். என் ஜோஸ்யம் பலித்து விட்டது. மன்னியை கேளுங்கள்
மன்னி: ஆமாம். அவர் பொண்ணு தான் பிறக்கும்னு சிக்னல் கொடுத்தாரு.
இது தான் மையமா பேசறது.
இன்னம்பூரான்
25 09 2011

shylaja Mon, Sep 26, 2011 at 6:08 AM




2011/9/25 Innamburan Innamburan <innamburan@gmail.com>
[Quoted text hidden]

-- <<<<<<<.:):)
சுமாராப்புரியுது இசார்!:):)


Tthamizth Tthenee Mon, Sep 26, 2011 at 2:34 PM



மையமாகப் பேசுவதில் நீர் ஜோசியர்
அல்ல அல்ல  மன்னர்!
அன்புடன்
தமிழ்த்தேனீ
[Quoted text hidden]

Nagarajan Mon, Sep 26, 2011 at 2:44 PM



//பேராசிரியர் மெச்சுவார். கண்ணன் இன்னொரு கட்டுரைக்கு கச்சம் கட்டுவார். அந்த இரண்டு வானரங்களும்  shapeshifing skill experts.
//
ஐயோ எங்க ரெண்டுபேரையும் வானரங்கள்னு சொல்லீட்டாரு
நாகராசன்
2011/9/26 Innamburan Innamburan <innamburan@gmail.com>
[Quoted text hidden]


Friday, September 27, 2013

எம்டன்




அன்றொரு நாள்: ஸெப்டம்பர் 22

Innamburan Innamburan Thu, Sep 22, 2011 at 10:56 AM

அன்றொரு நாள்: ஸெப்டம்பர் 22
பாராசாரி குதிரை என்றால், ராஜா தேசிங்கு வருவார், நினைவில். எம்டன் கப்பல் என்றால், கேப்டன் வான் முல்லர் வருவார். இது எல்லாம் இணை பிரியா உறவுகள். இனி எம்டன் மிதவை புராணம். என்னே சாகசம்! கடல் புராணங்களில் எம்டன் உபகதை மறக்கமுடியாதது. இரண்டே மாதங்களில் (செப்டம்பர் 10 ~ நவம்பர் 9, 1914) உலக கடல் வாணிகத்தை பாடாய் படுத்தி, 24 கப்பல்களை முழுகடித்து, பத்து மிலியன் டாலர் சொத்தைப் பறித்து, சும்மாவாணும் ஸெப்டம்பர் 21, 1914 அன்று மதராஸ் பட்டினத்தின் மேல் குண்டு வீசி, பெரிய மனுஷாள் எல்லாரும், அரக்க பரக்க, ஊரை விட்டு ஓடி, நிலம், நீச்சு க்ரையமெல்லாம் அடி மட்டத்துக்கு போயி... ஏன் கேட்கிறீர்கள் போங்க.
*
ரோஜா முத்தையா ஆய்வு மையத்தில் நம்ம் ஃப்ரெண்ட் தியோடார் பாஸ்கரன் ‘எம்டனை’ பற்றி பேசுவார் என்று அழைப்பிதழ் வரதும், திவாகர் சென்னை விஜயம் பிரகடனம் ஆனதும் ஒரே சமயமா? அங்கு போய் தியோடரிடம், திவாகர் எங்கே என்றதும், அவர் முழித்தார். பிறகு எம்டன் நிஜகீர்த்தி பாடினார். வரலாற்றை பிட்டு, பிட்டு வைத்தார். எம்டனில் திரு. செண்பகராமன் பிள்ளை பயணித்தாக சான்றுகள் இல்லை என்றார். மறு நாள் திவாகரை பார்த்த போது தான் தெரிந்தது: ‘Divakar "SMS எம்டன் 22-09-1914" Published by Palaniappa Brothers, Madras 600014, India. A Tamil novel written in the background of SMS Emden's bombing of Madras Harbour in 1914 என்று. பி.கு. திவாகர் அளிப்பாராக. 
*
எம்டன் குண்டு போட்ட இடம், ஹை கோர்ட்டில். கல்வெட்டு பார்க்கவும் என்று சுருக்கமாக எழுத நினைத்தால், அதனுடைய வீர தீர பராக்ரமங்களில் ஆழ்ந்து போய் விட்டேன். எதிரியோ? உதவியோ? யாராக இருந்தால் என்ன? நாம அடக்கி வாசிச்சா, மட்டுறுத்தினால், எம்டன் புகழ் மங்கி விடுமா? என்ன? சொல்லுங்கோ, திவாகர். இது திவாகர் ஸ்பெஷல்.
*
ஆகஸ்ட் 2, 1914: சைனாவருகில் எம்டன் மிதக்கையில் முதல் உலகப்போர் பிரகடனம். எம்டன் ரெடி ஃபார் ஆக்ஷன். எம்டனின் தனிச்சிறப்பு: கெளரதை, தலைவரின் மகிமை, மாலுமிகள்/வீரர்கள் எவெரெடி.’ பீரங்கிகள் ரெடி’ ‘நீர்மூழ்கி குண்டுகள் ரெடி’ எஞ்சின் ரெடி, சங்கேதங்கள் ரெடி’ எல்லாம் ரெடி’. புறமுதுகு காட்டி ஓடுது ஒரு கப்பல். இவுக துரத்தறாக. அது ரேஜஸான் என்ற ரஷ்யகப்பல். புலி மாதிரி பாஞ்சு கடிச்சு குதறி, அடிமை கப்பலாக்கி, ஜெர்மன் கொடி ஏத்தியாச்சு. சிங்க்டோ துறைமுகத்துக்கு ‘கூம்’ கூம்’ னு சங்கு ஊதிண்டு போயாச்சு. அங்குள்ள ஜெர்மன் கப்பல் படையுடன் சேர்ந்தாச்சு. இனி திக் விஜயம் தான். ஒரு பூனைக்கு ஒன்பது தடவை உயிர் காப்பாற்றப்படுமாம். அந்த மாதிரி வந்த ஆபத்துக்கள், பனி போல் விலகின, எம்டனுக்கு. மறு நாள், ஒரு பயணிகள் கப்பல் அகப்பட்டுக்கொண்டது. இப்போது, இங்கிலாந்தும் எதிரி என்ற பிரகடனம். உடனுக்குடனே, ஜப்பானும். கேப்டன் முல்லர் ஜெர்மன் அட்மிரலின் கப்பலுக்குப்போய், எம்டனின் தனி ஆவர்த்தனத்துக்கு அனுமதி வாங்கி வந்தார். மத்ராஸ் நோக்கி விட்டோம் சவாரி! உள்ளூர எல்லாருக்கும் தெரியும். இது தான் இறுதி யாத்திரை என்று. பிரச்னை! எங்களுக்கு மூன்று சிம்ணி. பிரிட்டீஷ் கப்பல்களுக்கு இரண்டு/ நாலு. நாங்கள் மிதப்பதோ எதிரியின் பிராந்தியம். பார்த்தார் கேப்டன். நாலாவது சிம்ணி (டம்மி) அமைத்துக்கொண்டோம். பாத்தா அச்சு பிரிட்டீஷ் யார்மெளத் கப்பல்! 
வங்காள விரிகுடாவில் வந்து அடைஞ்சாச்சு. ஒரு பிரிட்டீஷ் போர்கப்பல் நிழல் மாதிரி வரது. கிட்ட வரல்லையே. அஞ்சாறு நாட்களுக்கு பிறகு சிக்கிய கப்பலை மடக்கினோம். போயும் போயும் அது இந்தியாவிலிருந்து மட்டரக நிலக்கரி சுமந்த கிரேக்கக்கப்பல். அடுத்த பலி ஒரு ஏமாந்த சோணகிரி. எம்மை பிரிட்டீஷ் கப்பல் என்று நினைத்த போக்குவரத்துக்கப்பல். பல கப்பல்கள். நிறுத்துவோம். பத்து பேர் ஏறுவோம். அடிமை அல்லது ஆழம். நாங்கள் கைது செய்த பிரிட்டீஷ்காரர்கள் மதி இழக்கவில்லை. அவர்கள் விஸ்கியை பாதுகாத்ததை சிலாகித்தோம்! விரோதம் யாதும் இல்லை.
ஒரு கேப்டன் ஜாலி. நாலு கடல்-மைல் வேகத்தில் ஒரு மணல் வாரி கப்பலை இங்கிலாந்திலிருந்து ஆஸ்ட் ரேலியாவுக்கு! படு போரடிச்சதாம். மகிழ்ச்சியுடன் சரணடைந்தார். கூலி முழுதும் அச்சாரமாக வாங்கிவிட்டார், வேறே. ஸெப்டம்பர் 18, 1914 சென்னை துறைமுகம் வந்தோம். எம்டன் காலி என்ற வதந்தியை நம்பி க்ளப்பில் கொண்டாட்டம். ‘தொப்’!  சூப்லெ குண்டு! பிரிட்டீஷ்காரனுக்கு டின்னர்னா உசிறு. தெரிஞ்சிருந்தா, அன்று தாக்கி இருக்கமாட்டோம்! இந்திய அரசுக்கு நன்றி பல. ஊர் பூரா வெளிச்சம். எண்ணை கிடங்குகளை கொளுத்திப்பிட்டோம், கொளுத்தி. அடடா! நிலக்கரி தீந்து போச்சே! இந்திய நிலக்கரி ரொம்ப புகை விடுமே. அதிருஷ்டம். ஒரு பிரிட்டீஷ் கப்பல், தரமான நிலக்கரியோட சிக்கியது. அந்த கேப்டனும் ஜாலி. ‘பிரிட்டானியா வாழ்க’ என்று பாடிக்கொண்டே எல்லாவற்றையும் கொடுத்து விட்டார்.
இருக்கிறதில் சின்ன கப்பல் எம்டன். அதை மூழ்கடிக்க 16 கப்பல்கள் சூழ்ந்து கொண்டன. அல்பாயுசு, அகால மரணம் எல்லாம் கேப்டன் சொல்லிவிட்டார். நாங்கள் கவலை படவேயில்லை. ஆறிலும் சாவு. நூறிலும் சாவு. போடா! எங்க கேப்டன் தெய்வமடா! ஒரு ஜோக் நோட் புக் வச்சுண்டு கேலி, எள்ளல் எல்லாம். நாங்கள் எல்லாரும் ஒரு அன்பு வலையில் சிக்கினோம்.  ஒரு பூனை வந்தாள். குட்டி போட்டாள்: ஐந்து. லெஃப்டினண்ட் ஷால் படுக்கையில் பிரசவம். அவரும் கனிவோடு பார்த்துக்கொண்டார். ஒரு மிருக காட்சி சாலையே வைத்திருந்தோம். பிடிபட்ட கப்பல்களிலிருந்து, இரண்டு பன்றி, ஆட்டுக்குட்டி, புறாக்கள், கோழி, வாத்து எல்லாம். ஒரு மான் கூட. எப்படி வந்தது தெரியவில்லை.
தினம் பேண்ட் வாசிக்கும். ஆடுவோம். அப்றம், கொள்ளை அடிச்சதை பங்கு போட்டுக்கொள்ளும் கண் கொள்ளாக்காட்சிகள். எத்தனை சிகரெட்! இருட்டிலே மின்மினி பூச்சி போல. ‘தண்ணி’ தண்ணி பட்ட பாடு!
இனி நவம்பர் 9, 2011 அன்று தொடரலாமா?
இன்னம்பூரான்
22 09 2011
pastedGraphic.pdf
pastedGraphic_1.pdf
oil-tanks shelled at Madras
உசாத்துணை:

dhivakar Thu, Sep 22, 2011 at 11:53 AM


>>>இருக்கிறதில் சின்ன கப்பல் எம்டன். அதை மூழ்கடிக்க 16 கப்பல்கள் சூழ்ந்து
கொண்டன. அல்பாயுசு, அகால மரணம் எல்லாம் கேப்டன் சொல்லிவிட்டார். நாங்கள்
கவலை
படவேயில்லை. ஆறிலும் சாவு. நூறிலும் சாவு. போடா! எங்க கேப்டன் தெய்வமடா!
ஒரு
ஜோக் நோட் புக் வச்சுண்டு கேலி, எள்ளல் எல்லாம். நாங்கள் எல்லாரும் ஒரு
அன்பு
வலையில் சிக்கினோம்.  ஒரு பூனை வந்தாள். குட்டி போட்டாள்: ஐந்து.
லெஃப்டினண்ட்
ஷால் படுக்கையில் பிரசவம். அவரும் கனிவோடு பார்த்துக்கொண்டார். ஒரு
மிருக
காட்சி சாலையே வைத்திருந்தோம். பிடிபட்ட கப்பல்களிலிருந்து, இரண்டு
பன்றி,
ஆட்டுக்குட்டி, புறாக்கள், கோழி, வாத்து எல்லாம். ஒரு மான் கூட. எப்படி
வந்தது
தெரியவில்லை. <<<

Hats off to your 'I' sir! You gave cats' visit to Emden. Yes, that was
well mentioned by Capt. Mukke in his biography.

Compared to today's warship technology, those days, with a heavy rush
of mariners (more than 300) then and there in a small capacity vessel,
my God! how they must have worked hard and at the same time enjoyed
also.

I have visited as a visitor journalist at INS VIRAAT, Air carrier too,
three years back. I think this is the largest and biggest vessel in
Indian Navy with more than 1500 mariners.

I myself enjoyed the writing of this novel wherever mentioning Emden
ship and travelled with her too.

The Emden actual show of strength was shown in Penang, but not in
Chennai. The Penang success of Emden was a jewel in her crown.

Dhivakar



On Sep 22, 10:26 am, Innamburan Innamburan <innambu...@gmail.com>
wrote:

[

Innamburan Innamburan Thu, Sep 22, 2011 at 12:14 PM

நன்றி பல, திவாகர். எம்டன் என்ற உமது நூலை பற்றி எழுத நினைத்தேன். அந்த கடமையை பவளசங்கரி செய்யப்போவது தெரியாது. நல்லதே நடந்தது. நான் எம்டன் மிதவை புராணத்தில் ஆழ்ந்து விட்டேன். பெனாங்க் சாகசம் பற்றி எழுதும் வினாடியில், you and PavaLa Sankari forced my hands. கொஞ்சம் விவரமாக எழுதி, சற்றே சுருக்கியும் இன்று மாலை வரவேண்டிய இடுகையை 'தொடரும்' உத்தியில், காலையிலேயே, உள்ளது உள்ளபடி, பதித்துவிட்டேன். எல்லாம் திவாகர நிவாரணம் தான்.
[Quoted text hidden]

meena muthuThu, Sep 22, 2011 at 12:26 PM


வழக்கம்போல உங்கள் அட்டகாசமான நடையில்!ம்ம்.. 
பவளாவினது ஒருபுறம்! இங்கே மறுபுறம் நீங்கள்!
சும்மா தூள் கிளப்புறீங்க எம்டன் மாதிரி :)))


2011/9/22 Innamburan Innamburan <innamburan@gmail.com>
எம்டன் குண்டு போட்ட இடம், ஹை கோர்ட்டில். கல்வெட்டு பார்க்கவும் என்று சுருக்கமாக எழுத நினைத்தால், அதனுடைய வீர தீர பராக்ரமங்களில் ஆழ்ந்து போய் விட்டேன். எதிரியோ? உதவியோ? யாராக இருந்தால் என்ன? நாம அடக்கி வாசிச்சா, மட்டுறுத்தினால், எம்டன் புகழ் மங்கி விடுமா? என்ன? சொல்லுங்கோ, திவாகர். இது திவாகர் ஸ்பெஷல்.
*
[Quoted text hidden]

Geetha Sambasivam Thu, Sep 22, 2011 at 3:50 PM


எம்டன் குண்டு போட்டதை சென்னை உயர்நீதிமன்றத்தின் கல்வெட்டில் முதல்முதல் பெரியப்பா காட்டினார்.  வங்கிப் பரிக்ஷை எழுதச் சென்னை வந்திருந்த போது நான் கேட்டதன் பேரில் அழைத்துச் சென்று காட்டினார்.  அதைத் தொட்டுத்தடவி..... பெரியப்பாவுக்குச் சிரிப்பு!  அதே போல் தான் அன்றே சாந்தோம் சர்ச்சிற்கும் விஜயம். அங்கே வரைந்திருந்த படங்களைச் சுட்டிக்காட்டி எனக்கு நீண்ட விளக்கம் கொடுத்தார்.  முழுக்க முழுக்க  கான்வெண்ட்டில் படித்திருந்த எனக்குக் கொஞ்சம் அதிர்ச்சி எனலாம். அதன் பின்னர் பல புத்தகங்கள் தேடிப்படிக்க வாய்ப்புக் கிடைத்தது. எம்டனோடு எனக்கு ஏற்பட்ட இணைப்பு இப்படித் தான்.

அதன் பின்னர் தமிழ் மரபு அறக்கட்டளை விழாவில் எம்டன் எழுதிய எம்டனையே முதன் முதல் சந்தித்தேன்.  புத்தகமும் கிடைத்தது.  இப்போதும் எடுத்துப் படித்துக்கொள்வேன்.


திரு இன்னம்புரார் எம்டனில் தாம் மட்டுமல்லாமல் நம்மையும் பயணிக்க வைத்துவிட்டார்.  இந்த ஆழ்ந்த உணர்வுக்கு ஈடு இணை ஏதும் இல்லை.

2011/9/22 Innamburan Innamburan <innamburan@gmail.com>


தினம் பேண்ட் வாசிக்கும். ஆடுவோம். அப்றம், கொள்ளை அடிச்சதை பங்கு போட்டுக்கொள்ளும் கண் கொள்ளாக்காட்சிகள். எத்தனை சிகரெட்! இருட்டிலே மின்மினி பூச்சி போல. ‘தண்ணி’ தண்ணி பட்ட பாடு!
இனி நவம்பர் 9, 2011 அன்று தொடரலாமா?
இன்னம்பூரான்
22 09 2011
pastedGraphic.pdf
pastedGraphic_1.pdf
oil-tanks shelled at Madras
உசாத்துணை:



shylaja Thu, Sep 22, 2011 at 4:08 PM

அப்பாடி இவ்வளவு நடந்திருக்கா அன்னிக்கு! எம்டன் கீர்த்தி பிரமிப்பாக உள்ளது இ சார் எழுத்தில் அந்த நாளுக்கே போயிட்டமாதிரி இருக்கு..எங்கே திவாகர்  அந்த எம்டன் எனக்கும் ஒண்ணு ப்ளீஸ்...
2011/9/22 Innamburan Innamburan <innamburan@gmail.com>



Dhivakar Thu, Sep 22, 2011 at 5:02 PM


ஷைலஜா


நம் சுபாவின் விமர்சனத்தைக் கேட்கலாம்!!

திவாகர்
[Quoted text hidden]
Dhivakar
www.vamsadhara.blogspot.com
www.aduththaveedu.blogspot.com
[Quoted text hidden]

Innamburan Innamburan Thu, Sep 22, 2011 at 5:58 PM
To: mintamil@googlegroups.com
very very low volume, whatever I do.
i
[Quoted text hidden]

shylaja <Thu, Sep 22, 2011 at 6:16 PM


கேட்டுட்டு வரேன் திவாகர்
[Quoted text hidden]

K R A Narasiah Thu, Sep 22, 2011 at 10:06 PM


எம்டன் நினைவு நாளான இன்று அமைதியாக அ மர்ந்து, சுபாவின் விமர்சனத்தைக் கேட்டேன். அவரது அழகான உச்சரிப்பும், கோர்வையாக் மொழியும் திறனும் கவரும் படி உள்ளது.நானும் இந்த நாவலைப் படித்து ஆச்சர்யமடைந்தவன் தான். ஆனாலும் அதைத் திறம்பட வருணிக்கையில் வேறோர் பொருளும் தெரிகிறது. அதைத் திவாகரின் கைவண்ணம் எனலாமா அல்லது சுபாவின் சொல்வண்ணம் எனலாமா என்று நிர்ணயிக்க இயலவில்லை.
ஆனாலும், திவாகரின் ஆழ்ந்த ஆய்வு ஒளிரும் இந்த புதினத்தை  அங்கங்களாகப்பிரித்து சுபா அளித்திருக்கும் விமர்சனம் போற்றுதலுக்குரியது.
நரசய்யா
[Quoted text hidden]

Subashini Tremmel Thu, Sep 22, 2011 at 10:45 PM


ஞாபகப் படுத்தியமைக்கு நன்றி..:-)

கட்டுரையாகவும் எனது வலைப்பூவில் உள்ளது. இங்கே ..!

சுபா


Subashini Tremmel Thu, Sep 22, 2011 at 10:49 PM

Reply-To: mintamil@googlegroups.com
To: mintamil@googlegroups.com
Cc: Subashini Kanagasundaram
மிக மகிழ்ச்சி. இந்தப் பாராட்டுதல் பெற நான் கொடுத்து வைத்திருக்கின்றேன். நன்றி. 
அருமையான நாவல் அது. என்னை இந்த நாவல் மிகப் பாதித்தது. மிகப் பிடித்துப் போனது. அதனால் இப்படி ஒரு விமர்சனம்.. மனதில் வந்ததை அப்படியே எழுதி விட்டேன்..
சுபா
[Quoted text hidden]
--
Suba Tremmel

Wednesday, September 25, 2013

அண்ணல் காந்தியின் சாயலும், விபரீத விளைவுகளும். [3வது பகுதி]

அண்ணல் காந்தியின் சாயலும், விபரீத விளைவுகளும். [3வது பகுதி]


சில நாட்கள் முன்னால் புதுச்சேரியில் ஒரு திரைப்படம் காண நேர்ந்தது. எனக்கு அது ஒரு அதிர்ச்சி வைத்யமாகத்தான் தென்பட்டது. தாங்கொண்ணா விசனத்துடன் தான் அந்த தலைகீழ் தலைப்பு தன்னை அமைத்துக்கொண்டது. அதை மாற்றியமைத்துவிட்டேன்.
பாரதநாட்டின் தந்தை மஹாத்மா காந்தியின் சாயல் ஒருவருக்கு. அவர் பெயர் ராவுஜி என்போம். அவரொரு அரசு ஊழியர். கருமமே கண் அவருக்கு. மற்ற எல்லாம் அவருக்கு தள்ளுபடி, குடும்பம் உள்பட. தருமத்துக்கும், நியமத்திற்கும் கட்டுப்பட்ட அவரை, காந்திஜியாக நடிக்க அழைக்கிறார், ஒரு சினிமா டைரக்டர். இவர் மறுத்துவிடுகிறார். ஆனால், அவருடைய மகனும், மருமகளும், பேரனின் மேல்படிப்புக்கு சினிமா வருமானம் உதவும் என்று அவரை தொணத்தொணக்கிறார்கள். ராவுஜியும், நம்முடைய ஸ்பெஷல் ட் ராஃபிக் ராமசாமி, ஆம் ஆத்மி அர்விந்த் கெஜ்ரிவால், அவரது குருநாதர், யோகா டீச்சர் ஆகியோர் போல, தகவல் உருவும் சட்டம் இருந்தாலும் இல்லாவிட்டாலும் தட்டிக்கேட்கும் மனப்பான்மையுடையவர். இந்த நடிப்பினால் கிடைத்த கீர்த்தி, ராவுஜியை ஊரறிந்த சில்லறை காந்தியாக ஆக்கி, அவரை பஞ்சாயத்து வீரர் ஆக்குகிறது. அந்த லாகிரியில் அவர் மிதக்கும்போது, ஒரு சில்லறைக்கடைக்காரர், அதிகாரி லைசன்ஸ் தரமறுக்கிறார் என்று அவரிடம் புகாரித்தார். இலை மறைவு காய் மறைவாக, அதிகாரி மீது லஞ்சக்குற்றம் சொல்வது போல சொல்லாமல் சொன்னார். நம் 'அண்ணல்' காந்தியும் விரைந்து சென்று அதிகாரியை தட்டிக்கேட்க, அவர் சமாதானமாக, 'பள்ளிக்கூடம் அருகே புகையிலை விற்பது சட்ட விரோதம்' என்றார். நம்மடவர் பலமாகவே தட்டிக்கேட்கவே, பயந்த அதிகாரி உரிமத்தைக் கொடுத்து விட்டார். இவரை வீட்டில் கொண்டு வந்த கடைக்காரர், கை குவித்து நன்றி கூறி பழங்களும், மிட்டாயும் நிறைந்தக் கூடையை, வலுக்கட்டாயமாகக்கொடுத்தார், ஆவலுடன் பழங்களை அடுக்கி வைத்த மருமகள் கையில் ஒரு மணி பர்ஸ் கிடைத்தது; உள்ளே சலவை நோட்டு ரூபாய் 500/-. புளகாங்கிதம் அடைந்த அவள் புடவை வாங்க ரூபாய் 300 ஐ ரவிக்கைக்குள் நுழைத்துக்கொண்டு, ஹெல்மெட் வாங்கிக்கொள்ள சகதர்மிஷ்டனிடம் ரூபாய் 200 கொடுத்து, பையனிடன் பத்து ரூபாய் கொடுத்தாள், மிட்டாய் வாங்க. அதற்குள் வந்த மிட்டாய்களை அவன் ஸ்வாஹா பண்ணி விட்டான். அவளும் மாமனாருக்கு கும்பகோணம் டிகிரி காஃபி கொடுத்து பலமாகவே அவரை உபசரித்தாள். இரவு வேளையா! அவர் பாயை விரித்துப்படுத்தார். உறக்கம் வருமோ? அவரோ கடமையே கண்ணாயினார் ஆவர். வாய்மையின் சுபுத்திரன். அந்த வீட்டில் அசுப ஜெனனம் மூன்று, அன்று ~ 
லஞ்சமும், வம்ச பேராசையும், நாட்டின் சீரழிவும். 
அமுதத்தை ஒரு துளி நச்சு கெடுப்பதைப் போல, ராவுஜியின் குடும்பம் பணத்தாசை கண்டது. அந்த ரூபாய் தாளிலிருந்து அண்ணல் காந்தி புன்னகைத்தார், ஆண்டவனைப்போல. இந்தியாவில் லஞ்சத்தின், வம்ச பேராசையின், நாட்டின் சீரழிவின் ஊற்று, இது தான். ராவுஜி, நல்ல மனிதராகையால், அவ்வப்பொழுது போலி நடிப்பில் ஈடுபடாமல், முரண்டு பிடிக்கிறார். குடும்பமோ செழிப்புடன் இருப்பதால், வீடு கட்டுவது போன்ற மேலும் பல வம்சபேராசையில் மூழ்கிவிட்டதால், அவரை படாதபாடு படுத்துகிறார்கள். சவுக்கடி சாந்தாவாகவே மாறிவிட்டாள், சமத்து மருமகள். வளர்த்த கடாவோ மார்பில் பாய்கிறது. இது தான் மக்களின் சீரழிவுக்கு அடிக்கல்.
படிப்பினை: 
சராசரி மனிதர்கள் தான் இந்தியாவில் லஞ்சத்தின், வம்ச பேராசையின், நாட்டின் சீரழிவின் காரணகர்த்தாக்கள். அரசியல் வாதிகள் அல்ல. சேவல் கோழியை வளர்ப்பது போல், கிஸ்தியை குறைக்க, பட்டா கொடுக்க, பத்திரம் பதிவு செய்ய, ஓட்டுனர் உரிமம் பெற, ரயில் டிக்கெட் வாங்க, சினிமா டிக்கெட்டை ப்ளேக்கில் வாங்க, மாமூல் கொடுத்துக் கெடுத்து, லஞ்சலாவண்ய நடைமுறையை அமல்படுத்தியது நாம் தான். இது முதல் கட்டம். அதன் பைசாச வளர்ச்சியில், விரல் சூப்பியவர்கள், பின்னர் புறங்கை நக்கினர்; பின்னர், கலசத்திலிருந்து தேன் குடித்தனர். பின்னர் தேன்கூடுகளில் தீ மூட்டினர். லஞ்சலாவண்ய நடைமுறையில் குறை காண்பவர்கள் மறைந்து போயினர். இப்போது சொல்லுங்கள், அண்ணல் காந்தியை கொன்றது யார் என்று.
திரைப்படத்தின் பெயர் கூர்மாவதாரம்.எடுத்துவர் பிரபல கன்னடடைரக்டர் கிரீஷ் கஸரவல்லி.
இன்னம்பூரான்
26 09 2013

Saturday, September 21, 2013

     வர்ரே.....ன்.


இன்னம்பூரான்