Showing posts with label Lincoln. Show all posts
Showing posts with label Lincoln. Show all posts

Thursday, March 7, 2013

அன்றொருநாள்: மார்ச் 6 வழக்கின் இழுக்கு!




அன்றொருநாள்: மார்ச் 6 வழக்கின் இழுக்கு!
1 message

Innamburan Innamburan Mon, Mar 5, 2012 at 6:29 PM
To: mintamil , thamizhvaasal

அன்றொருநாள்: மார்ச் 6
வழக்கின் இழுக்கு!
‘அன்றொருநாள்: மார்ச் 4: உரையின் உரைகல்’ என்ற லிங்கனை பற்றிய இழையில் ‘நாடு பலத்த கலவரத்திலும், குழப்பத்திலும், உள்நாட்டு காழ்ப்புணர்ச்சியிலும் உழன்று கொண்டிருந்த காலகட்டம், அது.’ என்று குறிப்பிட்டதின் பின்னணி, மார்ச் 6,1857 அன்று வழங்கப்பட்ட ‘ட்றெட் ஸ்காட்/சான்ஃபோர்ட் வழக்கில் அளிக்கப்பட்ட தடாலடி தீர்வே. 1861ல் அப்ரஹாம் லிங்கனுக்கு பதவி பிரமாணம் செய்த தலைமை நீதிபதி ரோஜர் டேனி, ரகசியமாக 1857ல் பதவியிலிருந்த ஜனாதிபதி புக்கனுக்கு,முறைகேடாக, வாக்கு அளித்த படி, கறுப்பர்கள் -அடிமைகளும் சரி, விடுதலை பெற்றவர்களும் சரி - அமெரிக்க பிரஜை அல்ல. என்றுமே, அவர்கள் அமெரிக்க பிரஜை ஆகமுடியாது என்று மெஜாரிட்டி தீர்ப்பு அளித்து, தன் மேல் கரும்புள்ளி குத்திக்கொண்டார்.
’ வெள்ளையர்கள் மதிக்க வேண்டிய மனித உரிமைகள் யாதும் கறுப்பர்களுக்கு இல்லை; அவர்களின் நலம் காப்பதற்கே அவர்கள் அடிமையாக்கப்படுகிறார்கள்; கண்டாமுண்டான் சாமான் மாதிரி ஆதாயத்துக்கு வாங்கி விற்கும் அஃறிணை தான் அவர்கள்... அமெரிக்க விடுதலை பிரகடனம் ‘மனிதர்கள் யாவரும் சமமே’ என்று முரசொலித்தாலும், அதில் அடிமை ஆஃப்பிரிக்கர்கள் அடக்கம் இல்லை’ என்றும் வாய்ச்சொல் அருளினார். இதற்கெல்லாம் அடிமை ஒழிப்பாளர்கள் அசைந்து கொடுக்கவில்லை. ஃப்ரெடெரிக் டக்ளஸ் என்றவர் கூறியமாதிரி, இந்த ‘உளரல்’ அடிமை ஒழிப்பாளர்களின் கூற்றுக்கு வலிமை சேர்த்தது. ‘என் நம்பிக்கை வலுக்கிறது. அடிமைப்படுத்துவதின் அநீதியை, இது தேசத்தின் முன் எடுத்து வைக்கும். அடிமை ஒழிப்பதின் முதல் படி இந்த முரண்’ என்றார், அவர். அப்படியே நடந்தது. 1857லியே இந்த தீர்ப்பை கடுமையாக விமரிசித்த லிங்கன் அடிமைத்தளையை, ஒரு உள்நாட்டுப் போருக்கு பின், அகற்றினார். நாளாவட்டத்தில்,  இனபேதம் கணிசமாக குறைந்தது. 150 வருடங்களுக்கு பிறகு, அந்த மாஜி அடிமை இனத்தை சார்ந்தவரான ஒபாமா அமெரிக்காவின் ஜனாதிபதியானது குறிப்பிடத்தக்கது.
வரலாற்றை, திருப்பித்திருப்பி படிப்பதால், மூன்று பயன்கள் புலப்படுகின்றன.
1. நடந்ததை நடந்தபடியே, தொடர்புகளை இணைத்துப் பார்க்காமல், படிப்பிக்க வைத்தால், அவ்வப்பொழுது இணைந்தும்/விலகியும்/மாற்றியும் நிகழ்வுகள் அவற்றை பாதிக்கின்றன. ஃப்ரெடெரிக் டக்ளஸ் சுட்டிய முரண், அதற்கு ஒரு உதாரணம்;
2. வரலாறு படைப்பது மனிதனின் நடவடிக்கைகள்; அதை எழுதுவது மனித சார்பு. உண்மைகள் மறைக்கப்படுகின்றன; உதாரணம்:நீதிபதி ரோஜர் டேனியின் முறைகேடான செயல்கள்;
3. நீங்கள் சொல்லுங்களேன்.
இன்னம்பூரான்
06 03 2012
Inline image 1

உசாத்துணை

Sunday, March 3, 2013




அன்றொருநாள்: மார்ச் 4 உரையின் உரைகல்
2 messages

Innamburan Innamburan Sat, Mar 3, 2012 at 6:35 PM
To: mintamil , thamizhvaasal

அன்றொருநாள்: மார்ச் 4
உரையின் உரைகல்
Inline image 1
The final paragraph of Lincoln's First Inaugural Address

அன்றொரு நாள்/பெப்ரவரி 12: உயர்ந்த மனிதரால் உயர்ந்த நாடு.’ என்ற இழையின் தொடரே இது எனலாம். கீதா சாம்பசிவத்தின் உபயம். ஒரு தனி இழையாகவும், இதை கருதலாம். அன்று பேசப்பட்ட அப்ரஹாம் லிங்கன் மார்ச் 4, 1861 அன்று அமெரிக்காவின் 16வது ஜனாதிபதியாக பதவியேற்றார். உயிருக்கு ஆபத்து என்று எச்சரிக்கைகள் வந்திருந்த போதிலும், திறந்த வாகனத்தில் தான், ஜனாதிபதியின் முதல் உரையாற்ற பயணித்தார். அந்த நீண்ட உரை சம்பிரதாயமானது என்றாலும், இன்றளவும் அது போற்றப்படுகிறது. நாடு பலத்த கலவரத்திலும், குழப்பத்திலும், உள்நாட்டு காழ்ப்புணர்ச்சியிலும் உழன்று கொண்டிருந்த காலகட்டம், அது. அதை மனதில் கொண்டு, மிகுந்த கவனத்துடன் தயாரிக்கப்பட்டது அந்த உரை. அரசியலர் சுற்றி வளைத்து பேசுவர்; காந்திஜி, ராஜாஜி போன்றோர் அதற்கு விதிவிலக்கு; அவர்களுக்கு முன்னோடி லிங்கன். பிரச்னையும், சர்ச்சையும் இல்லாத விஷயங்களை பற்றி பேச்சில்லை என்று தான் உரையை துவக்குகிறார். மாநிலங்களின் சுயேச்சையை மதிப்பது, சொத்து, நிம்மதி, பாதுகாப்பு மூன்றுக்கும் தேவையான உத்தரவாதம், அடிமை தளையை கழற்றுவது, மனிதநேயம், மென்மையான ஆய்வு, அரசியல் சாஸனத்தின் அருமையை பற்றி, மாநிலங்கள் ஐக்யநாடுகளாக திகழ்வதின் இலக்குகள் ஆகியவற்றை தொகுத்து அவர் அளித்தவிதத்தின் நேர்மையும், வாய்மையும், சுயம்பிரகாசமாக, பிரகாசிக்கின்றன.
ஒரு டைம்லைனை, தன் கூற்றுக்கு சாக்ஷியாக, அவர் கூப்பிடும் நேர்த்தியை பாருங்கள். “...அரசியல் சாஸனத்திற்கு முந்தியது நமது ஐக்யம் -1774. பழம் கனிந்தது, 1776ம் வருட சுதந்திர பிரகடனத்தினால். கனிந்த பழமும் நழுவி பாலில் விழுந்தது போல், 1778ல் பதிமூன்று மாநிலங்களும், நிரந்தர ஐக்யத்திற்கு அடி கோலின. அந்த நிரந்தர ஐக்யம் வழுவமைதியுடன் இயங்க வேண்டும் என்று 1787ல், சாஸனப்பதிவு ஆயிற்று.” கையோடு கையாக, எந்த மாநிலமும் ஐக்யத்திலிருந்து விலகமுடியாது என்ற எச்சரிக்கை. விலக நினைப்பதே நாட்டின் மேலாண்மையை குலைக்கும்; அதை தடுத்தாட்கொள்வது தான், என் பணி என்று ஒரு போடு போட்டார். அது கேட்டு, எதிர்ப்பாளர்களின் முகம் சிவக்கும் முன், சமாதான புறா:
“...ஜனாதிபதிக்கு ஆளுமை கொடுத்தது மக்கள்...அவனுடைய கடமை அரசை உருப்படியாக நடத்துவது...என் தேசவாசிகளே. நிதானித்து யோசியுங்கள். நேரம் எடுத்துக்கொள்வதால், நட்டமில்லை...உள்நாட்டுப்போரை தவிர்ப்பது உங்கள் கையில். அரசு தாக்காது. ஆனால், நான் அரசை போற்றி, பாதுகாப்பதாகத்தான் சத்தியபிரமாணம் செய்கிறேன்...உரை முடிய போகிறது. நமக்குள் பகையில்லை. கருத்து வேற்றுமையின் வலிமையை விட, நம் பரஸ்பர அன்பு திடமானது. முடிந்து போன போர்கள், உயிரை தியாகம் செய்த தேசாபிமானிகள் ஆகிய சேதனங்கள், நம்மை ஆசீர்வதிக்கின்றன. நம் இயல்பே தேவதைகளின் இருப்பிடம் அல்லவா!”
எளிதில் மொழியாக்கத்திற்கு வளைந்து கொடுக்காத இலக்கிய கோர்வை, இது. என்னுடைய மொழியாக்கம் சிறப்புற அமையவில்லை; ஆனால், கருத்தைத் தெரிவிக்கிறது என்று நினைக்கிறேன். லிங்கனின் முழு உரையை படித்து விடுங்கள், உசாத்துணையிலிருந்து.
இன்னம்பூரான்
04 03 2012
Inline image 1


உசாத்துணை:







Geetha Sambasivam Sat, Mar 3, 2012 at 6:41 PM
To: thamizhvaasal@googlegroups.com
Cc: mintamil , Innamburan Innamburan
வழக்கம்போல் அருமையான பதிவு.  நன்றி. சில தலைவர்களின் பேச்சு ஒரு தீர்க்கதரிசனம் போல் எக்காலத்துக்கும் பொருந்துபவை.

On Sat, Mar 3, 2012 at 12:35 PM, Innamburan Innamburan <innamburan@gmail.com> wrote:
அன்றொருநாள்: மார்ச் 4
உரையின் உரைகல்

The final paragraph of Lincoln's First Inaugural Address