Showing posts with label கழுதை. Show all posts
Showing posts with label கழுதை. Show all posts

Saturday, November 23, 2013

வர வர கழுதை மாமியார் போல ஆன கதை!அன்றொரு நாள்: நவம்பர் 24

அப்டேட்: அருமை நண்பர் ஆண்டோ பீட்டர் அவர்கள் தற்காலம் நம்முடன் இல்லை. அவருக்கு சமர்ப்பணம்.
இன்னம்பூரான்
24 11 2013


அன்றொரு நாள்: நவம்பர் 24 ‘வர வர கழுதை மாமியார் போல ஆன கதை!
Innamburan Innamburan 24 November 2011 18:02

அன்றொரு நாள்: நவம்பர் 24
‘வர வர கழுதை மாமியார் போல ஆன கதை!
தலைப்பு கொஞ்சம் கிருத்திரமமாக இருந்தாலும், இலக்கு உன்னதமாக இருப்பதால், இந்த இழையும் சீதாலக்ஷ்மி ஸ்பெஷல். அவருக்கு பிடித்த சமாச்சாரம்: வசீகரம். உரையாடல் நடை. புகுந்து விளி ஆடுவது எளிது. என்ன தான் திசை மாற்றினாலும், வள்ளிசா புறமுதுகுக் காட்டி, கம்பாஸ் போல துருவ நக்ஷத்திரம் நோக்கி திரும்பிக்கொள்ளும். 
அன்றொரு நாள் ஆண்டோ பீட்டருடன் கதைத்துக்கொண்டிருந்தேன். வாழ்நாளில் ஒரே ஒரு நாள் தான் அந்த அரிய தருணம் கிடைத்தது என்பதையும் தக்கதொரு தன்னடக்கத்துடன் கூறிக்கொண்டு, விஷயத்துக்கு வருகிறேன். ஆருத்ரா தரிசனம் கிடைத்தாலும் ஆண்டோ தரிசனம் கிடைக்குமோ? அந்த சமயம் கூட இருந்த நண்பர் ஒருவர் சுயமுன்னேற்றத்தை பற்றி ஆர்வத்துடன் பேசி வரும் போது, வழக்கம் போல் குறுக்கிட்ட யான், டேல் கார்னீகீ பற்றி அறிவீரோ என்று கேட்டேன். ‘லபக்’ என்று அவர் திசை மாற்ற, எனக்கும் பசியெடுக்க, சு.மு. பேச்சு அபார்ஷன் ஆகிவிட்டது! அது தொடர்ந்திருந்தால்.....!
ஒரு கற்பனை உரையாடல்:
பாத்திரங்கள்: ஆண்டோ பீட்டர், நண்பர், இன்னம்பூரான்.
நிழல் மாந்தர்: சாமுவேல் ஸ்மைல்ஸ், டேல் கார்னீகீ, நெப்போலியன் ஹில், மரியன் ரூடி கோப்மேயர், மற்றும் பலர்.
தமிழ்ச்சாயலில்: சிபி.கே.சாலமன், சோம.வள்ளியப்பன், ‘வல்லமை’ புகழ் N.கணேசன், மற்றும் பலர்.
நண்பர் சுனா.முனா. ஏணியில் விரைவாக ஏறி வரும் வேளையில்:
இ: நீங்கள் டேல் கார்னீகீ எழுதிய ‘How To Win Friends And Influence People’ படித்திருக்கிறீர்களோ?
ந: நான் சுனா. முனா. பற்றி பேசிக்கொண்டிருக்கிறேன், சார்.
இ: (தனி மொழி) இவர் தமிழர் என்பதில் ஐயமில்லை. இனி பேசியும் பயனில்லை. நவம்பர் 24,1888 அன்று வறுமையில் பிறந்து,உழன்று, ஒரு ‘ஜயங்கொண்டான்’ விற்பனை பிரதிநிதியாக, ஊரெல்லாம் சுற்றி, பல அனுபவங்களை சுவைத்து, அசைபோட்டு, ஒரு சொற்பொழிவாளாராகத் திகழ்ந்தார், டேல் கார்னீகீ. அவர் எழுதிய மேற்படி நூல் தன்னை ஒரு ‘ஜயங்கொண்டானாக‘ மாற்றியது என்கிறார், வாரன் பஃபெட். அந்த நூல் 1955லியே 50 லக்ஷம் பிரதிகள் விற்று வாகை சூடியது. 29 மொழிகளில் மொழி பெயர்ப்பு.
சுருங்கச்சொல்லின், மக்களை வசீகரித்து ஆட்டிப்படைப்பது எப்படி, அவர்கள் நம்மை நாடவைக்க ஆறு வழிமுறைகள், நம்ம ரூட்டுக்கு அன்பர்களை கட்டி இழுத்து வருவது எப்படி, மற்றவர்களுக்கு கசப்பு ஏற்படுத்தாமல் தலைமை எடுத்துக்கொள்ளும் உத்திகள் என்ற தலைப்புகளில் அவர் அளித்த அரிச்சுவடி, தன்னம்பிக்கை வளர்ப்பதற்கும், தமது திறன்களை பலப்படுத்துவதற்கும், பயனளிக்கும் பேச்சு வார்த்தை திறமைகளை தரமுயர்த்துவதிலும், தலைமை தாங்கும் சக்தியை விளக்குவதிலும், தமது நோக்கு, போக்கு, சுளிவுகளை சரி செய்து, அநாவசிய அழுத்தங்களை குறைப்பதிலும், லக்ஷக்கணக்கான மக்களுக்கு தக்கதொரு அறிவுரையை உரிய தருணத்தில் அளித்துள்ளது.
ஆண்டோ: இவற்றையெல்லாம் தன் வாழ்க்கையில் அவர் கடை பிடித்தாரோ?
நண்பர்: அதெல்லாம் இருக்காது சார். இவங்க எல்லாம் பேச்சோடு சரி.
இ: அதான் இல்லை. விற்பனை வேலையை அவர் விட்டதும் விவேகம். முதல் லெக்சரில், மக்கள் கருத்துக்கேட்டு, அதன்படி இயங்கியது, வசீகரம். மனுசன் கில்லாடி, சார். அவர் பெயர் “Carnagey”. அக்காலம் Andrew Carnegie பிரபல தொழிலதிபர், செல்வந்தர், வள்ளல். தன் பெயரை Carnegie என்று மாற்றிக்கொண்டு உலகையே வில்லாக வளைத்து விட்டார்! அது சூத்திரம். இத்தனைக்கும் ஆண்ட்ரூ கார்னீகி, இவருடைய போட்டியாளரான நெப்போலியன் ஹில் அவர்களுக்கு வேண்டப்பட்டவர்.
ஆண்டோ: எனக்கு புரிகிறது. சில நாட்களுக்கு முன்னால் என்னுடைய சுயமுன்னேற்றத்தை பற்றி மின் தமிழில் எழுதியிருக்கிறேனே. உங்களுடைய மேலான மீள் பார்வைக்கு:
இ: படித்து மகிழ்ந்தோம். ஆமாம். டையின் முடிச்சு தளர்ந்து இருக்கே.
அன்டோ: நான் தளரவில்லையே. அதான் பாயிண்ட்:-) உங்களுடைய வாத்தியார் யாரு?
இ: எனக்கு உத்வேகம் கொடுத்தது சாமுவேல் ஸ்மைல்ஸ். வேளை வந்தா எல்லாம் சொல்லலாம். கார்னீகியை கேட்டால் ‘வள வள’னு பேசாதே. நாலு பேர் கேட்டால் சொன்னால் போதும் என்பார். சீதாலக்ஷ்மியை கேட்டால், எத்தனையோ பேருக்கு சுயமுன்னேற்ற பாடம் எடுக்க வேண்டியிருக்கிறது. அதை விட உனக்கு என்ன வேலை என்பார். அவரே பாடம் எடுத்தால் நன்முத்துக்கள் உதிரும். இப்போதைக்கு ஒரு கார்னீகி மேற்கோள். ஃபெப்ரவரி 14, 1937 அன்று, இந்த நூலை மதீப்பிடு செய்த ந்யூ யார்க் டைம்ஸ் சொன்னது: ‘ டேல் கார்னீகி வாகை சூட தரும் சூத்திரம்,‘புன்சிரிப்பு, நட்புரிமை, வாதமிடுவதையும், குற்றம் காண்பதையும் தவிர்த்தல், மேலும் யாரிடமும் ‘நீ சொல்வது தவறு’ என்று அறை கூவாமல் இருத்தல்’. இது கொஞ்சம் cynical என்றாலும், "simple sound, practical common sense.".
இன்னம்பூரான் ~ சீதாலக்ஷ்மி தனி மடல்: “... என்னமோ நீங்கள் கொடுத்த ஊக்கத்தில் எழுதிவிட்டேன். தொடர்ந்து எழுதினால் ஒரு மின்னூலே ரெடி. உசாத்தூண்கள் பல நின்றாலும், உப்பரிகை எமதே. போகப்போக பார்க்கலாம்...”
இன்னம்பூரான்
24 11 2011
iStock_000011806154XSmall.jpg

உசாத்துணை:

Geetha Sambasivam 24 November 2011 18:11


அருமை,   ஆன்டோவிற்கு கெளரவம் அளித்தமைக்கும், சீதாம்மாவின் ஆசையை நிறைவேற்றியதற்கும். நல்ல முடிச்சு!  கெட்டியாகப் போட்டிருக்கீங்க. 
2011/11/24 Innamburan Innamburan <innamburan@gmail.com>

அன்றொரு நாள்: நவம்பர் 24
‘வர வர கழுதை மாமியார் போல ஆன கதை!



coral shree 27 November 2011 07:50

//‘ டேல் கார்னீகி வாகை சூட தரும் சூத்திரம்,‘புன்சிரிப்பு, நட்புரிமை, வாதமிடுவதையும், குற்றம் காண்பதையும் தவிர்த்தல், மேலும் யாரிடமும் ‘நீ சொல்வது தவறு’ என்று அறை கூவாமல் இருத்தல்’. இது கொஞ்சம் cynical என்றாலும், "simple sound, practical common sense.".//

அருமை ஐயா. எனக்கு மிக விருப்பமான புத்தகம் தொட்டுக் காட்டியுள்ளீர்கள்....... திருக்குறள் போல அடிக்கடி படிக்க வேண்டிய ஒரு புத்தகம் என்று நான் நினைப்பதுண்டு.. ஒவ்வொருவருக்கும் ஒரு நாள் பெருமை சேர்ப்பதுஎன்று கங்கணம் கட்டிக் கொண்டு தாங்கள் செய்வது பெரும் சேவை. மனித மனத்தை மதிக்கத் தெரிந்த தங்கள் வள்ளல்தன்மை போற்றுதலுக்குரியது. வாழ்த்துகள் ஐயா.







Sunday, March 3, 2013

அன்றொரு நாள்: டிசம்பர் 28: ‘வர வர கழுதை மாமியாராகி, மறுபடியும் கழுதையாகி’வரும் காதை: சுருக்கம்.




அன்றொரு நாள்: டிசம்பர் 28: ‘வர வர கழுதை மாமியாராகி, மறுபடியும் கழுதையாகி’வரும் காதை: சுருக்கம்.
5 messages

Innamburan Innamburan Wed, Dec 28, 2011 at 1:41 PM
To: mintamil , thamizhvaasal
Cc: Innamburan Innamburan
Bcc: innamburan88 , anantha narayanan nagarajan , Soumya Srinivasan
அன்றொரு நாள்: டிசம்பர் 28:
‘வர வர கழுதை மாமியாராகி, மறுபடியும் கழுதையாகி’வரும் காதை: சுருக்கம்.
ஆலமரம் ‘ஓஹோ’ என்று வளர்ந்து விட்டது, உயரத்திலும் சரி, பருமனிலும் சரி. ஏகப்பட்ட கிளைகள், விழுதுகள். சில துளிர் விடுகின்றன. சில பட்டுப்போயின. முதுமையின் வாட்டம் தெரிகிறது. அடேயப்பா! எத்தனை ஊடுருவிகள்! மெய்யும் பொய்யும் கலந்த அசட்டு தித்திப்பு அதன் குட்டிப்பழங்களில். வஸந்த ருதுவில் இலை உதிர்கிறது! 1996லிருந்து அசையா அக்ராசனம் அன்னை ஸோனியாவுக்கு. அந்த அளவுக்கு உள்கை ஜனநாயகம் கொடி கட்டி பறக்கிறது. தாதாபாய் நெளரோஜி கூட, யூ,என். தேபர் கூட இப்படி டபிள் மாமாங்க ராஜாங்கம் செய்யவில்லை. மோதிலால் நேரு ஒரு வருடம். அடுத்தும், பிறகும், ஜவஹர்லால் நேரு எட்டு வருடங்கள், இந்திரா காந்தி ஏழு வருடங்கள், ராஜீவ் ஒரு வருடம்: ஒரு ஒப்புமைக்கு! மஹா கனம் பொருந்திய இந்திய நேஷனல் காங்கிரசின் இணைய தளத்துக்கு போனால், ஒரேடியாக தற்கால தற்புகழ்ச்சி. அச்சான்யமாக,நேற்றைய ஹிந்து இதழில் ஒரு சொற்றொடர்; அதுவும் நமது தேசீய கீதமான ;ஜன கண மன...‘வின் நூற்றாண்டு விழாவை பற்றிய கட்டுரையில்: “இந்திய நேஷனல் காங்கிரஸ் என்று இந்த அமைப்பு (‘outfit’!: ஏளனமான சொல்) விடுதலை இயக்கத்தில் ஈடுபட்டிருந்த காலகட்டத்தில்...!” (அசல் காங்கிரஸ் கடந்த காலமாயிடுத்தே; அர்த்தஜாமம் ஆயிடுத்தே என்ற தொனி!?ஹே ராம்!).இது நிற்க.
‘அதிகார பூர்வமாக’ என்றொரு சொல் உண்டு. ஆம், இன்று தான் இந்திய நேஷனல் காங்கிஸ்ஸின் ‘அதிகார பூர்வமாக’ ஜன்ம தினம். மும்பையில் 28 12 1885 அன்று, வைஸ்ராய் ரிப்பன் பிரபுவின் நண்பரான ஏ.ஓ.ஹ்யூம் என்ற ஆங்கிலேயர் தலைமையில், அவருடன் தாதாபாய் நெளரோஜி, தின்ஷா மேத்தா, உமேஷ் சந்திர பானர்ஜி, (‘இடி முழக்கம்’)ஸுரேந்திரநாத் பானர்ஜி, மன்மோஹன் கோஷ், மஹாதேவ் கோவிந்த ரானடே, வில்லியம் வெட்டர்பர்ன் ஆகியோர் அடங்கிய சான்றோர் அவை கூடி இந்திய நேஷனல் காங்கிரஸ் என்ற அமைப்பை துவக்கியது. உமேஷ் சந்திர பானர்ஜி முதல் அக்ராசனர். இந்த அமைப்பு பிரிட்டீஷ் துரைத்தனத்தாரை எதிர்க்கவில்லை. வார்த்தைக்கு வார்த்தை ராஜவிஸ்வாசம். பணிந்து, தணிந்த  சொற்பொழிவுகள். எனினும், விடுதலை வேட்கையின் சுவாசம் இருந்தது. 1885ம் வருட காங்கிரஸ், சற்றே அடக்கத்துடன் கற்றுணர்ந்த இந்தியர்களுக்கு அரசாங்கத்தில் பங்கு இருக்கவேண்டும் என்று  தான் பிரதான கோரிக்கை வைத்தது.
கட்சியில் இரு தரப்பு உருவாகியது, 1907 சூரத் காங்கிரஸ்ஸில். தலைமை: ராஷ்பிஹாரி கோஷ். ~சூடான தரப்பு (திலகர் கட்சி) & மிருதுபாஷிணிகள்(கோகலே கட்சி).‘செருப்புகள் பறந்தன’ என பொருட்பட மஹாகவி பாரதியாரின் கட்டுரை படித்து 70 வருடங்களானாலும், மறக்கவில்லை. அந்த கட்டுரையை எல்லாரும் படிக்கவேண்டும். விக்கிப்பீடீயா மிருதுபாஷிணிகளை மட்டும் படித்தவர்கள் என்று சொல்வதின் மர்மம் எனக்கு புரியவில்லை. பகவத்கீதைக்கு உரை எழுதியவரும், வீரகேசரி இதழாசிரியரும், ‘சுதந்திரம் என் பிறப்புரிமை’ என்று கோஷமிட்ட லோகமான்ய திலகர் நிரக்ஷரகுக்ஷியா என்ன ஓய்? 
காந்தி வந்தார், ஐயா, 1915ல். தென்னாஃப்பிரிக்கா வந்திருந்த கோகலே அவர்களின் சட்டைக்கு பொட்டி போட்ட தொண்டன் காந்தியை, இந்தியாவுக்கு இழுத்து வந்து, நாட்டை சுற்றிப்பார்க்க வைத்த உபயம், கோகலே அவர்களது. அதன் பிறகு அக்ராசனம் யார் வகித்தாலும், காந்திஜி வைத்தது சட்டம் ஆயிற்று. 1924ல் அக்ராசனமும் வகித்தார். ஆனால், அவர் கிலாஃபத் இயக்கத்துடன் இணைந்து திசை மாறியதை கண்டு வெகுண்டு, சித்தரஞ்சன் தாஸ், மோதிலால் நேரு, அன்னி பெஸண்ட் ஆகியோர் காங்கிரஸ்ஸிலிருந்து ராஜிநாமா செய்து, ஸ்வராஜ் கட்சி ஆரம்பித்தனர். இந்த கிலாஃப்த் உறவும் நொடித்துப்போனது. இதையெல்லாம் லாகவமாக காந்திஜி கையாண்டதையும், அவர் நேதாஜியை அரியணையிலிருந்து இறக்கியதையும், மற்றும் பல சுவையான தகவல்களையும் பிறகு தான் சொல்லவேண்டும். இப்போதைக்கு தமிழ்நாட்டில் காங்கிரஸ் பெருமை/சிறுமை பற்றி ஒரு வரி. ராஜாஜி, திரு.வி.க., வரதராஜுலு நாயுடு, ஈ.வே.ரா. போன்றவர்கள், ‘ஆளை விடு சாமி’ என்று ராஜிநாமா செய்து விலகிய மாபெரும் கட்சி, இது. அது போகட்டும். விஷயத்துக்கு வருகிறேன்.
‘அதிகார பூர்வத்தை’ விட ‘ஆதிமூலம்’ முக்கியமானது. இந்திய நேஷனல் காங்கிரஸ் உருவாகுவதற்கு முன்பே, பிரம்மோ சமாஜ், ஆர்ய சமாஜ், பிரம்மஞான சபை (தியசாஃபிகல் சொஸைடி, அடையார்) ஆகியவை தேசாபிமானத்தை வளர்த்து வந்தன. இந்திய நேஷனல் காங்கிரஸ்ஸின் ஆதிமூலம் பிரம்மஞான சபை என்றும், அதன் அங்கத்தினர்கள் 17 பேர்கள் டிசம்பர் 1884 வருடம் இந்திய நேஷனல் காங்கிரஸ்ஸுக்கு வித்திட்டனர் என்ற கருத்து உலவுதை, திரு.வி.க. அவர்களை பற்றிய ‘அன்றொரு நாள்’ கட்டுரையில் குறிப்பிட்டிருந்தேன். அத்தருணம், திருமயிலை முனிபுங்கவர் ‘ஸர்’ உதறிய சுப்ரமண்ய ஐயரை பற்றியும், அவர் அமெரிக்க ஜனாதிபதிக்கு மடலெழுதி, மாண்பு மிகு இந்திய சர்க்காரை மடலேற்றியதை பற்றி எழுதியிருந்தேன். இந்த ‘ஆதிமூலக்குழுவின்’ தலைவர் அவர் எனலாம். கணேஷ் வாசுதேவ் ஜோஷி அவர்களையும் மறக்கலாகாது. படித்தறிந்த இந்தியர்கள் பலர் இங்கிலாந்தின் சுதந்திரப்போக்கையும், நியாய நியதிகளையும் போற்றினர்.துரைத்தனத்தாரின் மெத்தனமற்ற போக்கை வரவேற்றனர். ஆனால், ‘இங்கிலாந்தில் சொல்வது ஒன்று, இந்தியாவில் செய்வது அதற்கு முரண்’ என்ற போக்கைக் கண்டித்தனர். ஹிந்து மதத்தின் மறுமலர்ச்சியும், மேற்கூறிய ‘முரண்’ நெருடலும், ஆங்கிலேயர்களில் சிலரின் முற்போக்கு அணுகுமுறையும் தான், இந்திய நேஷனல் காங்கிரஸ் உருவாக ஹேதுவாயின என்றால், அது மிகையல்ல. பிரம்மஞானசபையின் ஈடுபாடு புரியவருகிறது. இத்தனைக்கும் அச்சபை ஆவிகளுடன் உறவாடுதல், ‘மஹாத்மா’ என்ற சொல்லை முதலில் உருவாக்கி, இரு’மஹாத்மாக்களிடம்’ அன்றாட ஆலோசனைகளும், அறிவுரைகளும் பெற்றது, நெருடலான விஷயம் தான். அது பற்றி பேச இது இடமில்லை. 
1875லிருந்தே விடுதலை விழிப்புணர்ச்சி தலையெடுத்தது. 1876ம் வருட தர்பாரிலேயே, துல்லிய கதராடை அணிந்திருந்த கணேஷ் வாசுதேவ் ஜோஷி அவர்கள், ‘மஹாராணியிடம் நாங்கள் கேட்பது எல்லாம், உங்களுடைய பிரிட்டீஷ் மக்களுக்கு இருக்கும் அரசியல்/சமூக அந்தஸ்து இந்தியர்களுக்கும் அளிக்க வேண்டும் என்பதே...’.என்று கேட்டது பற்றி ஏற்கனவே சொல்லியிருக்கிறேன். ‘இடிமுழக்கம்’ ஸுரேந்திரநாத் பானர்ஜி ‘கல்கத்தாவின் இந்திய சங்கம்’ 1876ல் அமைத்தார். அதை சார்ந்த இதழாளர் நரேந்திரநாத் ஸென், பிரம்மஞான சபையிலும் அங்கத்தினர். அவர் தான் ஒரு அகில இந்திய அமைப்பு அமைக்க விழைந்தார். அதன் பின்னணி 1884ம் வருடம் சென்னையில் நடந்த பிரும்மஞான சபையின் வருடாந்திர கூட்டம். மற்றொரு அங்கத்தினரான ரகுநாத் ராவ் பிரும்மஞான சபை அரசியல் களத்தில் இறங்கவேண்டும்; சமயம் பற்றிய கவனம் மட்டும் போறாது என்று பிரஸ்தாபித்தார். அந்த கருத்தை அவர் மேலும் எடுத்து செல்ல இயலவில்லை. அவரது இல்லத்தில் மறுபடியும் கூடி, திருவாளர்கள்.  எஸ்.சுப்ரமண்ய ஐயர், அனந்தாசார்லு, வீரராகவாச்சாரியர், ரகுநாத் ராவ், ஹ்யூம் துரை, நரேந்திர்நாத் ஸென் ஆகியோர் எடுத்த முடிவு தான் இந்திய நேஷனல் காங்கிரஸ்ஸின் வித்து என்றும் சொல்லப்படுகிறது. மதராஸ் மஹாஜனசபையும் அங்கு தான் உருவானது. தலைமை வகித்தது திரு. எஸ்.சுப்ரமண்ய ஐயர் என்று எங்கோ படித்த ஞாபகம் இருக்கிறது. அதற்கான உசாத்துணை கிடைக்கவில்லை. சுருங்கச்சொல்லின், இந்திய நேஷனல் காங்கிரஸ்ஸின் மூலஸ்தானம் என்று அடையார் ஆலமரத்திற்கடியில் போர்டு வைத்து விடலாம்!
இன்னம்பூரான்
28 12 2011
ELT200712110633449897435.JPG

உசாத்துணை:
Bevir,M.(2003) Theosophy and the Origins of the Indian National Congress in International Journal of Hindu Studies: Volume 7, Number 1-3, 99-115, DOI: 10.1007/s11407-003-0005-4

Geetha Sambasivam Wed, Dec 28, 2011 at 1:55 PM
To: thamizhvaasal@googlegroups.com
Cc: mintamil , Innamburan Innamburan

விபரமான வரலாறு:  இத்தகைய வரலாற்றுப் பெருமை கொண்ட கட்சி போன இடம் தெரியாமல் போய்விட்டது. வெளிநாட்டு மோகத்தில் இருந்தும், அடிமைத்தனத்திலிருந்தும் இந்திய மக்களை மீட்க ஏற்படுத்திய கட்சியின் பெயரால் இன்று ஒரு வெளிநாட்டவருக்கே அடிமைத்தனமாய்ச் சேவகம் செய்யும் நபர்களைக் கொண்ட கட்சியாக மாறியது காலத்தின் கோலமா? இல்லை இந்த நாட்டின் தலை எழுத்தா?  இதிலிருந்து மீளமுடியுமா? 

//இதையெல்லாம் லாகவமாக காந்திஜி கையாண்டதையும், அவர் நேதாஜியை அரியணையிலிருந்து இறக்கியதையும், மற்றும் பல சுவையான தகவல்களையும் பிறகு தான் சொல்லவேண்டும் //

காந்திஜி லாகவமாய்க் கையாண்டாரா என என்னால் சொல்லமுடியவில்லை;  ஆயிரம் இருந்தாலும் போஸைக் கீழே இறக்கியதை நினைத்தால்!!!!  ஒருவேளை போஸ் காந்தியை விடப் பெரிய தலைவராக வந்திருப்பாரோ?  அப்போது நாட்டின் அரசியல் நிலைமையும் மாறுபட்டிருக்கலாமோ? 

 ஹூம், நேரு மட்டும் பிடிவாதம் பிடிக்காமல் இருந்திருந்தால் படேல் பிரதமராகி இருக்கலாம்;  அப்போவும் நாட்டின் தலைவிதி ஓரளவுக்கானும் மாறி இருக்கலாம். எல்லாம் கனவுகள்; கற்பனைகள்.  இந்த நேரு குடும்பக் கலாசாரம் வந்திருக்கவே வந்திருக்காது. :((((((( நாட்டின் மிகப்பெரிய சாபக்கேடோ?

Innamburan Innamburan Wed, Dec 28, 2011 at 2:01 PM
To: mintamil , thamizhvaasal
நன்றி! பாயிண்ட்ஸ் மேட். ஆனால், நான் நேதாஜியை அரியணையிலிருந்து இறக்கியதை 'லாகவமாக கையாளப்பட்டதாக' சொல்லவில்லையே!
இன்னம்பூரான்
2011/12/28 Geetha Sambasivam <geethasmbsvm6@gmail.com>



Nagarajan Vadivel Wed, Dec 28, 2011 at 2:52 PM
Reply-To: mintamil@googlegroups.com
To: mintamil@googlegroups.com
Further information on Sir.S.Subramnia Iyer

I understand that he was the founder of Dharma Rakshana Shaba  and not Madras mahajana Shaba

http://www.ts-adyar.org/content/sir-s-subramania-iyer-1842-1924

In 1870, as a young man of twenty-eight, blossoming into a leader of the Bar, he was appointed the Municipal Commissioner of Madura, in which capacity he did much for that city.  He was also a member of the Madura District Board.  In 1873 he won a suit against a temple committee for discrepancies in their accounts, after which he strove hard throughout his life to introduce rectitude into the management of temples.  He founded the Dharma Rakshana Sabha for carrying out reforms and for the redress of grievances in the management of Hindu temples.  He was also the pioneer of a movement which culminated in the passing of the Hindu Religious Endowments Act and the establishment of the Hindu Religious Endowments Board.
Nagarajan


Innamburan Innamburan Wed, Dec 28, 2011 at 3:45 PM
To: mintamil@googlegroups.com
நன்றி.

1. சென்னை உயர் நீதி மன்றத்தில்:
2. இதுவும் அவரே.
இன்னம்பூரான்
220px-S._Subramania_Iyer_statue.jpg
200px-SSubramaniIyer_laterlife.jpg

2011/12/28 Nagarajan Vadivel <radius.consultancy@gmail.com>
Further information on Sir.S.Subramnia Iyer

I understand that he was the founder of Dharma Rakshana Shaba  and not Madras mahajana Shaba

http://www.ts-adyar.org/content/sir-s-subramania-iyer-1842-1924