Showing posts with label எம்.என்.ராய். Show all posts
Showing posts with label எம்.என்.ராய். Show all posts

Friday, March 1, 2013

அன்றொரு நாள்: ஜனவரி:25: III யாரோ? இவர் யாரோ?




அன்றொரு நாள்: ஜனவரி:25: III யாரோ? இவர் யாரோ?
2 messages

Innamburan Innamburan Thu, Jan 26, 2012 at 6:09 PM
To: mintamil , thamizhvaasal

அன்றொரு நாள்: ஜனவரி:25: III
யாரோ? இவர் யாரோ?
பழி சுமந்தவரும், பழி சாற்றியவருமான இவர் தான் மிஸ்டர் பானர்ஜியா, டாக்டர் மஹ்மூதா, ஹரி சிங்கா, மிஸ்டர் டி.ஒயிட்டா, சி.மார்ட்டின்னா, டி.கார்ஷியாவா, நரேந்திர நாத் பட்டாச்சார்ஜீயா அல்லது மனபேந்திர நாத் ராய் அவர்களா?  மேற்கு வங்காளத்தில் ’24 பர்காணாக்கள்’ என்ற வரலாற்றில் பதிவு பெற்ற மாவட்டத்தின் குக்கிராமம் ஆன அரபேலியாவில் சம்ஸ்க்ருத ஆசிரியரான தீனபந்து பட்டாச்சார்ஜீ அவர்களின் மைந்தன் நரேந்திர நாத், மார்ச் 21, 1887 அன்று பிறந்தவர். ‘விளையும் பயிர் முளையிலே’ என்பதற்கேற்ப, பாலபருவத்திலேயே, பங்கிம் சந்திரர், ஸ்வாமி விவேகாநந்தர் அவர்களது கருத்துக்கிணங்க, தொண்டு செய்வதில் கவனம் செலுத்தினார். ஸுரேந்திரநாத் பானர்ஜீயின் உரை கேட்க சென்றதற்காக, 1905ல் பள்ளியிலிருந்து தள்ளப்பட்டார். ஶ்ரீ அரவிந்தர் பக்கம் சாய்ந்தார். அவர் தானாகவே எல்லாம் (வெடிகுண்டு தயாரிப்பு, துப்பாக்கி பிரயோகம் உட்பட) கற்றுக்கொண்டவர்.புரட்சிக்காகக் கொள்ளையடிக்கவும் தயங்கவில்லை. புரட்சிக்கும், சூழ்ச்சிக்கும் உள்ள வேறுபாடுகளை இவர் அழுத்தமாக உரைத்து வந்தாலும், 1910ல் அரசு, இவரை ஹெளரா-சிப் பூர் சூழ்ச்சி வழக்கில் உள்ளே தள்ளியது. உள்ளிருந்தபடியே, இவரும், ஜதீனும் புரட்சிக்குத் திட்டம் வகுத்தார்கள். 1914 வரை சன்யாசி வேடத்தில் சுற்றி வந்த நரேன், கிழக்காசியா, மேற்கு அமெரிக்கா, ஜெர்மனி ஆகிய நாடுகளில் ஜமா சேர்த்தார். இவருடைய வாழ்க்கை அதிசயமான திடீர் அதிர்ச்சி சம்பவங்களின் தொகுப்பு. வேறு வழியில்லாமல், மிகவும் சுருக்கி விட்டேன்.

முதல் உலகயுத்தம் தொடங்கியவுடனேயே, இவரை பார்க்க ஜெர்மனியிலிருந்து கல்கத்தாவுக்குத் தூதர் வந்தார். அதன் விளைவாக, இவரும் மார்ட்டின் என்ற புனைப்பெயரில் படேவியா (தற்கால இந்தோனேஷ்யா) சென்றார், ஆயுதம் கொணர. ஜெர்மானியர்கள் பின் வாங்கினர். இவரும், வெவ்வேறு பெயர்களில் மலேயா, இந்தோ-சைனா, கொரியா, ஜப்பான் சென்று ஆதரவு தேடினார். டோக்யோவில் ராஷ்பிஹார் போஸ் அவர்களின் உதவியுடன், நாடு கடத்தப்பட்டு இருந்த சீன அதிபர் சன் யாட் சென் அவர்களை ( இவர்கள் இருவரை பற்றியும் ஒரு நாள் எழுதவேண்டும்.) சந்தித்து, ரகசியமாக சைனா சென்றார். ஜெர்மன் தூதரை சந்தித்து, அமெரிக்கா வழியாக, ஃபிரான்ஸ் நாடு சென்று கிருத்துவ போதனை படிக்க ஃபாதர். சார்லஸ் மார்ட்டின் என்ற பெயரில் பொய் தஸ்தாவேஜுகளை பெற்றுக்கொண்டார். எல்லாம், ஆயுதங்கள், கப்பல், கப்பலாக, வாங்க. ஆனா பாருங்கோ. சான் ஃபிரான்ஸிஸ்கோ வந்தவுடன், நாளிதழ்களில் ‘அபாயகரமான ஒரு ஹிந்து புரட்சிக்காரன் வந்திருக்கிறான்’ என்ற செய்தி முழங்கியது. ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தலைவர் டாக்டர் ஜார்டனிடம், இவரை இழுத்துச்சென்றார், நண்பர் தனகோபால் முக்கர்ஜீ. புதிய நாம கரணம்: மனபேந்திரநாத் ராய். அதுவே எம்.என்.ராய் என்று நிலைத்து விட்டது. வாழ்க்கையிலும் திருப்புமுனைகள்.
அங்கு அறிமுகமான எவெல்வின் ட் ரெண்ட்டை மணந்தார். (பிற்காலம், அவர் விலக, வேறு திருமணம் நடந்தது.) ந்யூ யார்க் சென்று, லாலா லஜ்பத் ராயிடம் (அந்த பாஞ்சால சிங்கம் பற்றி சீக்கிரமே எழுதுகிறேன்.) அடைக்கலம் புகுந்தார். ந்யூ யார்க் நூலகத்தில், மை டியர் செல்வன், அவர் கம்யூனிசம் பயின்றார். ( அக்காலத்து அமெரிக்கா பரவாயில்லை!)
அமெரிக்கா ஜெர்மனி மேல் ஏப்ரல் 1917ல் போர் அறிவித்து, புரட்சிக்காரர்களை கைது செய்தது. இவரோ மெக்சிகோவுக்குத் தப்பி சென்று, டாக்டர்.ஜார்டனின் அறிமுகத்தால், மெக்சிகோ அதிபருடன் கை கோர்த்தார். அங்கே மிகவும் பாப்புலர். மெக்சிகோ கம்யூனிஸ்ட் கட்சியை ஸ்தாபனம் செய்தார். ஏழ்கடல் கடந்து, லெனினுடன் நெருக்கம் அதிகரித்தது. 1920 வருட உலகளாவிய கம்யூனிஸ்ட் காங்கிரஸ்ஸில், லெனினுடன் அபிப்ராய மோதல். ஆனால், லெனின் இவருடைய கூற்றுக்கு மிகவும் மதிப்பு கொடுத்தார். இவர் கம்யூனிசத்தின் உலகளாவிய தளத்தில் முக்கிய புள்ளி. அக்டோபர் 17, 1920 அன்று டாஷ்க்கெண்டில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை தொடங்கினார். இந்த தேதி முக்யம். பிற்காலம், தமிழ்நாட்டை இணைத்துப் பேசுகிறேன். 1923ல் ஜெர்மனி சென்று, இந்திய விடுதலை போராட்டத்தை ஊக்குவிக்க, எழுதத் தொடங்கினார். இந்திய அரசாங்கமும், திரும்பத்  திரும்பத் தடை விதித்த வண்ணம். இவருக்கு கம்யூனிஸ்ட் உலகில் இருந்த மதிப்பு வியக்கத்தக்க வகையில் இருந்தது. சைனாவில் உள்நாட்டு சச்சரவுகளை தீர்க்க, இவர் தான் அனுப்பபட்டார். இருந்த போதிலும் கம்யூனிசத்தை எதிர்த்த இதழ் ஒன்றில் எழுதிய குற்றத்திற்காக, கம்யூனிசத்தின் உலக ஸ்தாபனத்திலிருந்து விலக்கப்பட்டார்.
டாக்டர் மஹ்மூத் என்ற புனைப்பெயரில் 1930ல் இந்தியா வந்தடைந்த எம்.என்.ராய் கைது செய்யப்பட்டதைப் பற்றி நேற்றே படித்தோம். சிறையில் கட்டுக்கட்டாக நூல்கள் எழுதினார். அப்பீலின் மீது சிறைவாசம் ஆறு வருடங்களாகக் குறைக்கப்பட்டு, நவம்பர் 1936ல் வெளி வந்தபின் இந்திய தேசீய காங்கிரஸ்ஸில் சேர்ந்தார். நேதாஜி சுபாஷ் போஸை ஆதரித்துப்பேசினார். ஆனால், பல திருப்புமுனைகள்; பல உலகளாவிய சிந்தனைகள். அவற்றில் ஒன்று: ‘இறங்குமுகத்தில் உள்ள கலோனிய அரசியல் பாசிஸத்தை விட எவ்வளவோ மேல்.’ எனவே, இரண்டாவது உலக யுத்தத்தின் போது, இவர் ஹிட்லர்-முசோலினியை எதிர்த்தார். 1940-46 காலகட்டத்தில் இந்தியாவை பற்றியும், சமூக முன்னேற்றத்தை பற்றியும், இவர் எழுதியவை தீர்க்கதரிசனமாகத் திகழ்கின்றன. ஒரு விஷயத்தில், அவர் திண்ணமாக இருந்தார். ‘...பிரதிநித்துவ குடியாட்சி என்று ஒன்றுமில்லை. கட்சியென்று ஒன்று வேண்டாம். நாடாளும் மன்றம் வேலைக்கு ஆவாது.. ஒரு அரசியல் சாஸன சபை வேண்டும். சிறுபான்மையினரின் உரிமையை பாதுகாக்க வேண்டும். லஞ்சம் ஒழியவேண்டும்...’.
இதய நோயினால் பீடிக்கப்பட்ட எம்.என்.ராய் மறைந்த தினம், ஜனவரி 25, 1954. அவருடைய நினைவாஞ்சலியாக, இந்த தொடர் அமைந்தது.
இன்னம்பூரான்
27 01 2012
MNRoy.jpg

உசாத்துணை:


coral shree Tue, Jan 31, 2012 at 5:01 AM
To: Innamburan Innamburan
அன்பின் ஐயா,

அரிய தகவல்களைத் தேடிப்பிடித்து , அதுவும் அனைவருக்கும் பயன்படும் வகையில், குறிப்பாக ஆய்வுப் பணியில் இருக்கும் மாணவர்களுக்குப் பயன்படும் வகையில் அள்ளி வ்ழ்ங்கிக் கொண்டிருக்கிறீர்கள். நம் மரபு விக்கியின் சிறந்த பொக்கிஷங்களில் இதுவும் ஒன்றாக என்றென்றும் நிலைத்து நிற்கும் தங்கள் பெயர் சொல்லிக் கொண்டு! தங்கள் பணி இவ்வண்ணமே மேலும் தொடர பிரார்த்தனைகள். பணிவான வணக்கங்கள்.

அன்புடன்

பவளா.
.

அன்றொரு நாள்: ஜனவரி:28 ‘...மாசற்ற ஜோதி வதனமினிக் காண்பேனோ?...’

Innamburan Innamburan

அன்றொரு நாள்: ஜனவரி:28 ‘...மாசற்ற ஜோதி வதனமினிக் காண்பேனோ?...’
7 messages

Innamburan Innamburan Sat, Jan 28, 2012 at 11:10 AM
To: mintamil , thamizhvaasal

அன்றொரு நாள்: ஜனவரி:28
‘...மாசற்ற ஜோதி வதனமினிக் காண்பேனோ?...’
பரதகண்டத்திலே, பாகிஸ்தானிலும், இந்தியாவிலும் நற்பெயருடன் அறியப்படும் பாஞ்சால சிங்கம் அமைதியின் மறு உரு; புரட்சித்தூண்; ஆன்மீகச்செம்மல்; லெளகீக மார்க்கபந்து; கடலோடி விடுதலை தேடியவர்; மனோபலசாலி; தியாகத்தின் சிகரம்; மாசற்ற ஜோதி. அந்தக்காலத்தில் லால்-பால்-பால் என்றால் மும்முகம் தோன்றும் ~லாலா லஜபத் ராய், பால கங்காதர திலகர். பிபின் சந்திர பால். ஜனவரி 28, 1865 முதல்வரின் அவதார தினம். நடுவரை பற்றி ஜூலை 23, ஆகஸ்ட் 1 ம் எழுதப்பட்ட கட்டுரைகள் இங்கேயும் http://www.heritagewiki.org/index.php?title=அன்றொரு_நாள்:_ஜூலை_23:I & http://www.heritagewiki.org/index.php?title=அன்றொரு_நாள்:_ஜூலை_23:I_%26_ஆகஸ்ட்_1. பிபின் சந்திர பால் அவர்கள் சென்னையை மகுடி ஊதி மயக்கியதை பற்றி முன்பே எழுதியிருக்கிறேன். விவரமாக எழுதவேண்டும்.
இந்தியாவுக்கு ஹோம் ரூல் என்று அன்னிபெசண்ட் முழங்கியது 1916ல். லாலாஜி அமெரிக்காவில் வசித்த காலம் 1914 -1919. அங்கு இந்தியாவின் ஹோம் ரூல் மையத்தை 1918லியே அவர் துவக்கினார். இளமை இந்தியா (எங் இந்தியா) என்ற இதழை துவக்கி அதனுடைய முதல் இதழில் (ஜனவரி 1918) டாக்டர் சுப்ரமண்ய ஐயர் அவர்கள் அமெரிக்க அதிபருக்கு எழுதி, கலோனிய அரசை பாடாய் படுத்திய கடிதத்தை, அதில் பிரசுரித்தார். எனக்கு தெரிந்து அதை பிரசுரித்த மற்றொரு இதழ், திரு.வி.க. அவர்களின் ‘தேசபக்தன்’.
லாலாஜியின் ஆன்மீக பின்னணி அதிசயமானது. கட்டுப்பெட்டி மதாபிமானம் நிறைந்த அக்காலத்தில், ஹிந்துவாக பிறந்த இவரது தந்தை இஸ்லாமியபற்று மிகுந்தவர். அம்மையோ சீக்கியம் சார்ந்தவர். ஹிந்து மத சீர்திருத்தங்களை சுவாமி தயானந்த சரஸ்வதி  ஆர்ய சமாஜம் மூலம் பரப்பதொடங்கிய காலம், அது. தந்தையை கவர்ந்த அந்த இயக்கம் லாலாஜிக்கு மார்க்க பந்துவாக அமைந்தது வியப்புக்குரியது அல்ல.
இந்த பின்னணியிலிருந்து என்றுமே விலகாமல், அவர் அரசியலில் 1885ல் பிரவேசித்தார். கோகலேயுடன் 1905ல் இங்கிலாந்து சென்று இந்தியாவின் விடுதலைக்கு கணிசமான ஆதரவு திரட்டினார். 1907ல் பஞ்சாப்பில் ஒரு வேளாண்மை புரட்சி செய்ததற்காக, பர்மாவுக்கு நாடு கடத்தப்பட்டார். சிறைவாசத்தில் சேகரித்த புள்ளி விவரங்களுடன் 1908ம் ஆண்டு மறுபடியும் இங்கிலாந்து சென்று, அத்துடம் ஒரு உலக திக்விஜயம் செய்து இந்திய விடுதலை வேட்கையை உலகுக்கு அறிவித்தார், 1920 வரை. அது ஒரு பெரிய பணி. நமது வரலாற்று ஆசிரியர்கள் அவ்வளவாகக் கண்டு கொள்ளாதது. நமது சகஸ்ரநாமி எம்.என்.ராய் அவர்களை பராமரித்த புண்யம் இவரை சாரும். இவருடைய நோக்குதலும் உலகளாவியது. பிரிட்டீஷ் தொழிற்கட்சி, ஐரிஷ் அரசியல் வாதிகள், போல்ஷிவிஸம் ஆகியவற்றுடன் தொடர்பு வைத்திருந்தார். 1910 ~20 களில் இருந்த இந்திய உறவுகளை பாருங்கள். இவருடன் அரசியல் ஆய்வு செய்தது ஹார்திகர் ~மஹராஷ்ட்டிரர்; குருநாதர் ~எஸ்.சுப்ரமண்ய ஐயர். இவருடைய அமெரிக்க இதழில் கவிதை வடித்தவர் ~குருதேவ் ரபீந்த்ரநாத் டாகுர். முன்னுரை: பிரிட்டீஷார் ஜோசையா வெட்ஜ்வுட்.
உங்களுக்கு கேதரின் மேயோ எழுதிய ‘மதர் இந்தியா’ என்ற நூலை பற்றி தெரியுமோ? ஒரே ஒரு பிரதி இங்கு இருக்கிறது. அதை ‘சாக்கடை இன்ஸ்பெக்டர் ரிப்போர்ட் என்றார், காந்திஜி. அதற்கு, ‘இந்தியாவின் மனவருத்தம்’ என்ற மறுப்பு எழுதியவர் லாலாஜி. பயிற்சியின் முக்கியத்துத்தை உணர்ந்ததால், ஒரு இந்திய தொண்டர் படையை உருவாக்க, லோக் சேவக் மண்டல் என்ற அமைப்பைத் துவக்கினார்.
மூடி மறைக்கும் வித்தைகள் லாலாஜிக்குத் தெரியாது. மாணவர்கள் அரசியலில் முனைந்து ஈடுபடவேண்டும் என்று திட்டவட்டமாக அவர் சொன்னது, பெருந்தலைகளுக்கு பிடிக்கவில்லை. காந்தி வழியை ஆதரிக்காத லாலாஜி, கல்கத்தா காங்கிரசில் அதை எதிர்த்தாலும் அடுத்த வருடமே, நாக்பூரில் அதன் வசம் வந்துவிட்டார். ஆனால், காலபோக்கில், சி.ஆர். தாஸ் (அவரை பற்றி எழுதாமல் இருக்கலாமோ?), மோதிலால் நேரு துவக்கிய ஸ்வராஜ்யா கட்சியில் ஐக்யம் ஆனார். அக்டோபர் 30, 1928 ஒரு கரி நாள். அன்று சைமன் கமிஷனை எதிர்த்துச் சென்ற ஊர்வலத்தில், லாலாஜி தலைமை வகித்தார். ஒரு போலீஸ் முரடன் தடியால் தலையில் அடித்து, படுகாயப்படுத்தினான். அதை பொருட்படுத்தாமல் அன்று மாலை பொதுக்கூட்டத்தில், ‘என் மேல் படும் அடி ஒவ்வொன்றும், பிரிட்டீஷ் சவப்பெட்டியில் ஆணிகளாகும்’ என்று முழங்கினார். இவரது உடல் நிலை கெட்டுப்போய், நவம்பர் 17, 1928 அன்று விண்ணுலகம் ஏகினார்.
விண்ணகத்தே இரவிதனை வைத்தாலும் 
      அதன்கதிர்கள் விரைந்து வந்து 
கண்ணகத்தே ஒளிதருதல் காண்கிலமோ? 
      நின்னையவர் கனன்றுஇந் நாட்டு 
மண்ணகத்தே வாழாது புறஞ்செய்தும் 
      யாங்களெலாம் மறக்கொ ணாதுஎம் 
எண்ணகத்தே, லாஜபதி! இடையின்றி 
      நீ வளர்தல் கென்செய் வாரே?

என்று பாரதியாரின் கவிதையை படித்துணர்ந்து, அவருக்கு நினைவாஞ்சலி செலுத்தும் போது, பாகிஸ்தானில், இன்றளவும் அவருக்கு இருக்கும் புகழை பாராட்டவேண்டும். லாஹூரில், தன் அன்னை குலாப் தேவியின் பெயரால் இவரது நன்கொடையில் எழுப்பப்பட்டு, காந்திஜியினால் ஜூலை 17, 1934ல் திறக்கப்பட்ட ஆஸ்பத்திரிக்கு, அன்றும், இன்றும், அரசு சலுகைகள் உண்டு. அதனுடைய பொறுப்பான நிர்வாகமே, அங்கு அளிக்கப்படும் இலவச சிகிச்சையே, லாலாஜிக்கு நினைவாஞ்சலி. 
இன்னம்பூரான்
28 01 2012.
june2005.jpg?w=495
shrimatigulabdevi.jpg

உசாத்துணை:



Geetha Sambasivam Sun, Jan 29, 2012 at 4:43 PM
To: thamizhvaasal@googlegroups.com
Cc: mintamil , Innamburan Innamburan
:((((((((

2012/1/28 Innamburan Innamburan <innamburan@gmail.com>
அன்றொரு நாள்: ஜனவரி:28
‘...மாசற்ற ஜோதி வதனமினிக் காண்பேனோ?...’

என்று பாரதியாரின் கவிதையை படித்துணர்ந்து, அவருக்கு நினைவாஞ்சலி செலுத்தும் போது, பாகிஸ்தானில், இன்றளவும் அவருக்கு இருக்கும் புகழை பாராட்டவேண்டும். லாஹூரில், தன் அன்னை குலாப் தேவியின் பெயரால் இவரது நன்கொடையில் எழுப்பப்பட்டு, காந்திஜியினால் ஜூலை 17, 1934ல் திறக்கப்பட்ட ஆஸ்பத்திரிக்கு, அன்றும், இன்றும், அரசு சலுகைகள் உண்டு. அதனுடைய பொறுப்பான நிர்வாகமே, அங்கு அளிக்கப்படும் இலவச சிகிச்சையே, லாலாஜிக்கு நினைவாஞ்சலி. 
இன்னம்பூரான்
28 01 2012.
june2005.jpg?w=495
shrimatigulabdevi.jpg

உசாத்துணை:


--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் வாசல்" group.
To post to this group, send email to thamizhvaasal@googlegroups.com.
To unsubscribe from this group, send email to thamizhvaasal+unsubscribe@googlegroups.com.
For more options, visit this group at http://groups.google.com/group/thamizhvaasal?hl=en.

Innamburan Innamburan Sun, Jan 29, 2012 at 5:09 PM
To: 
:(((((((
ஆமாம். மூணு நாளா 'யாரோ. இவர் யாரோ' வளைய வந்திருக்கார். அவரை 'அம்போ' என்று விடலாமோ?
இ
[Quoted text hidden]

Subashini Tremmel Mon, Jan 30, 2012 at 7:46 PM
Reply-To: mintamil@googlegroups.com
To: mintamil@googlegroups.com

இந்தியர் இல்லாத என்னைப் போன்றோர் பலருக்கு இவர் பற்றிய செய்திகள் தெரியாது என்றே நினைக்கின்றேன். இவரது பெயரை கேள்விப்பட்டிருக்கின்றேன். உங்கள் பதிவு இவரைப் பற்றி மேலும் தெரிந்து கொள்ள உதவியிருக்கின்றது. 
நன்றி திரு.இன்னம்பூரான்.

சுபா

2012/1/28 Innamburan Innamburan <innamburan@gmail.com>

Innamburan Innamburan Mon, Jan 30, 2012 at 7:59 PM
To: mintamil@googlegroups.com
நன்றி, ஸுபாஷிணி, இவரை போல் எத்தனை சான்றோர்கள். அடுத்து பிபின் சந்திர பால் அவர்களை பற்றி எழுதவேண்டும். அவர் வந்து திரு.வி.க, வ.உ.சி, வலங்கைமான் ஶ்ரீனிவாச சாஸ்திரி, டி.எம்.கிருஷ்ணமாச்சாரி எல்லாரையும் மகுடிக்கு மயங்கிய அரவமாகக் கட்டிப்போட்டார். விடுதலைத்தணல் தகித்தது. எனக்கு ஒரு குறை. த.ம.அ.வுடன் சிலவருடங்கள் முன்னாலேயே இணைந்து கொண்டிருக்க வேண்டும். 
‘...மாசற்ற ஜோதி வதனமினிக் காண்பேனோ?...’ இது பாரதியாரின் புகழுரை.
இன்னம்பூரான்
[Quoted text hidden]

கி.காளைராசன் Tue, Jan 31, 2012 at 6:01 PM
To: mintamil@googlegroups.com
Cc: thamizhvaasal , Innamburan Innamburan
ஐயா ‘இ‘னா அவர்களுக்கு வணக்கம்.



Tthamizth Tthenee Fri, Feb 3, 2012 at 12:20 PM
Reply-To: thamizhvaasal@googlegroups.com
To: thamizhvaasal@googlegroups.com
இவை போன்ற  சரித்திரங்கள் உங்களைப் போன்றோர் சொன்னால்தான் தெரியும்
 
அன்புடன்
தமிழ்த்தேனீ