தேர்தல் சில்லறை - 3: போட்டா போட்டி!
நமது மாட்சிமை தங்கிய பிரதமர் மே 17 அன்று மக்களுக்கு ஒலி பரப்புவார். அன்று அவருடைய கடைசி அமைச்சரவை கூடும். பிரிவுபசாரம் அளிப்பார்; அன்னை அளிக்கும் விருந்தில் கலந்து கொள்வார்.
இது பொருட்டு ஒரு போட்டா போட்டி?
- அவர் மக்களிடம் எதை சொல்லமாட்டார்?
- அமைச்சரவையின் பயன் என்ன?
- பிரிவுபசாரங்களில் கலந்து கொள்ளும், அன்னையார், கேலி செய்த ராகுலர், சம்பத், ப.சி.
ஆகியோரிடம் என்ன அளவளாவுதல் நடக்கும்?
- வீடு மாறும் அய்யா அவர்கள் 18ம்தேதி காலத்தை எப்படி கழிப்பார்.
கண்டிஷன்ஸ்:
ஹேஷ்யம் தான் தரவேண்டும். ஆதாரம் தேவையில்லை. ஹாஸ்யமாக இருக்கலாம். ஆனால், யார் மனதையும் ( ஆ.ராசா, கல்மாடி, அம்பானி, பல்வா போன்றோர் உள்பட) புண் படுத்தக்கூடாது. நோ நோட்டா. ஆமாம்.
கெடு: மாலை 3 மணி: இந்திய நேரம்: 16 05 2014
இன்னம்பூரான்
13 05 2014
சித்திரத்த்துக்கு நன்றி: https://lh3.googleusercontent.com/-KOflYIlRoHI/Tjy_Zb8ZJ3I/AAAAAAAAEQU/QXHStOoqdoA/s800/Potta-Potti.jpg
No comments:
Post a Comment