Monday, September 10, 2018

பேஷ்! பேஷ்!! [9]

பேஷ்! பேஷ்!! [9]                    
இன்னம்பூரான்
10 09 2014
எத்தனை நாட்கள் இது ஓடுமோ தெரியவில்லை. நாட்தோறும், ‘பேஷ்! பேஷ்!!’, ‘சபாஷ்! சபாஷ்’, ‘பலே! பலே!!’, ‘அடடா!’, ‘பின்னிட்டாள் (ர்)டா!’ தகவல்கள் ஆயிரம் தடா வந்துக்கொட்டிக்கொண்டிருக்கின்றன. எதை விட்டால் நிந்தனை குறையும் என்ற கவலை வாட்டி எடுக்கிறது. இன்றைய தகவல்:
கல்லிடைக்குறிச்சியின் குலசேகரமுடையார் அறம் வளர்த்த நாயகி அம்மன் கோயிலிலிருந்து 600 வருடம் வயதான ஒரு நடராஜர் சிலை 1982ல் அபேஸ். அந்த கோயிலினால் என்ன பயன், அந்த சிலையினால் என்ன பயன் என்று எல்லாம் வல்ல சுயமரியாதை அன்பர்கள் கேட்டால், எனக்கு பதில் தெரியாது. ஆகமொத்தம், அது 30 கோடி ரூபாய்க்கு ஆஸ்ட்ரேலியாவுக்கு விற்கப்பட்ட கற்சிற்பம். ஒரு சமயம் அந்த நாட்டில் ஏன் இதற்கு மவுசு  என்ற வினா எழும். கூட போக்கடிக்கப்பட்டது, சிவகாமி அம்மன். திரும்பி வந்தது சிவகாமியின் சிலையா அல்லது ஃபேக்கா? என்ற  ஐயம் தீரவில்லை. மேலும், மாணிக்கவாசகர் சிலை ஒன்றும், ஶ்ரீ பலி நாயகர் சிலை ஒன்றும் கவரப்பட்டாலும், இரண்டே வருடங்களில், போலீஸ் கேஸை கச்சிதமாக முடித்துக்கொண்டது. தற்காலத்து சிற்பமீட்டாளர் திரு.பொன். மாணிக்கவேல் அவர்களின் குழு, இந்த பாண்டியர் காலத்து சிற்பத்தை மீட்டு விட்டது. அவர்களுக்கு, இந்த சிலைகளை கடப் செய்தவர்கள் யார் என்று தெரியுமாம். அவர்களை பிடிச்சு பிச்சு உதறவேண்டும்.
                                பேஷ்! பேஷ்!! [9]      
-#-


No comments:

Post a Comment