பேஷ்! பேஷ்!! [11]
தம் தமா தம்!
ஷிகாகோ மாநகரில் உலக ஹிந்து காங்கிரஸ் மாநாடு சுபமாக நடந்தேறியது, சண்டை சச்சரவுகளுக்கு நடுவில். அதை பற்றி ஒரு அருமையான கேலிச்சித்திரம்:
1893: ‘எனது அமெரிக்க சோதரர்களே, சோதரிகளே! சிங்கங்களாகிய நீங்கள் ஆட்டுமந்தையாயினேரே! ... [ஸ்வாமி விவேகாநந்தா]
2018: ‘காட்டுநாய்கள் சிங்கத்தை தாக்குகின்றன...[மோஹன் பகவத்]
காப்புரிமை பொருட்டு அந்த கேலிச்சித்திரத்தை இங்கு பதிவு செய்ய அனுமதி கிடைக்கவில்லை.
தகவல்:
ஹிந்து ஒற்றுமையையும், எழுச்சியையும் ஓங்கி வளருவதை ஆதரித்த இந்த மாநாட்டில் விநோதமான அறிவுரைகளும் வழங்கப்பட்டன.
1. பதினாறும் பெற்று ஹிந்து ஜனத்தொகையை பெருக்கவேண்டும் என்ற அறைகூவல்!!!! - சாது மது பண்டித தாசா.
2. ஹிந்துக்கள் அடிக்கடி தாக்கப்படுவதால், அவர்கள் வன்மையை கடைபிடிக்கவேண்டும். - எஃப் காத்திய(ர்).
3. தற்காலம் இதை எதிர்கொள்ள ஈ.வே.ரா. அவர்கள் இல்லையே என்ற தாபமும் இருந்திருக்கலாம் என கேள்வி.
4. திலீப் அமீன் என்ற தர்ம தூதர்பிரான் ‘கலப்பு மணம் ஒழிக!’ என்ற வாசகங்களுடன் தொங்கவிடப்பட்ட படங்கள் அகற்றப்பட்டன.
5. மாநாட்டில் கலந்து கொண்ட உபஜனாதிபதி திரு. வெங்கையா நாயுடு அவர்கள், நல்ல வேளை, இந்த அறிவுரைகளை அரசு ஆதரிக்க வில்லை என்றார். நானும் மூச்சை இழுத்து விட்டேன்.
6. அமெரிக்கா வாழ் சட்ட நிபுணர் திரு. ராஜா கிருஷ்ணமூர்த்தி அவர்கள் அருமையாக உரை ஆற்றினார். யாவரும் ஸ்வாமி விவேகானந்தரின் போதனைகளை மட்டும் பின்பற்றவேண்டும் என்றார். கவனிக்கவும். காழ்ப்புணர்ச்சியை அறவே ஒழிக்கவேண்டும் என்றார். அவருடைய நண்பர்கள் அவரை தடுத்தாட்கொண்டபோதும், நற்செய்திகளையும், பொன்வாக்குகளையும் அளிக்கத்தவறக்கூடாது என்ற நெறியுடன் அவர் பேசியது, இன்று உலகெங்கும் பேசப்படுகிறது.
7.ஷிகாகோ ட் ரிப்யூன் இதழில் எதிர்வாதங்கள் முழங்கும் விளம்பரம் வெளிவந்தது.
8. கைகலப்பு நடந்ததாக சொல்கிறார்கள்.
யாமொன்றும் அறியேன், பராபரமே!
பேஷ்! பேஷ்!!
-#-
இன்னம்பூரான்
http://innamburan.blogspot.co.uk
http://innamburan.blogspot.de/view/magazine
www.olitamizh.com
இன்னம்பூரான்
http://innamburan.blogspot.co.uk
http://innamburan.blogspot.de/view/magazine
www.olitamizh.com
No comments:
Post a Comment