மதாபிமானமும், சுயமரியாதையும், வாழ்வியலும்: 4
இன்னம்பூரான்
14 03 2018
பிரசுரம்: http://www.vallamai.com/?p=84054
உலகம் புகழும் விஞ்ஞானிகளில் மிகவும் சிறந்த மனிதப்பிறவியாக
|
கருதப்படும் ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் அவர்களின் பிறந்த தினம் இன்று. “ சற்றும் சிந்திக்காமல் அதிகாரத்துக்கு பணிவது தான் வாய்மைக்கு விரோதி.” என்பது அவருடைய பொன்வாக்கு. இன்று மறைந்த விஞ்ஞானி ஸ்டீஃபன் ஹாக்கிங் அவர்கள் “ இறைவன் பகடை உருட்டுவதுடன் நிற்காமல், அவற்றை கண்காணாத இடத்தில் வீசிவிடுகிறார்.” என்கிறார்.
ஐன்ஸ்டீனின் பொன்வாக்கு தொன்மத்துக்கும் பொருந்தும்; மதமாச்சர்யங்களுக்கும் பொருந்தும்; நாத்திகம் தான் சுயமரியாதைக்கு இடம் தரும் என்ற மாயத்துக்கும் பொருந்தும்; வாழ்வியலை அலக்கழிக்கும் தீவினைகள் யாவற்றிக்கும் பொருந்தும். ஸ்டீஃபன் ஹாக்கிங் பிரபஞ்சத்தின் மாயாஜாலங்களை சுருக்கமாக புடம் போட்டுப் பகர்ந்து விட்டார்.
அவரே அது பற்றி மையமாக குறிப்பு வரைந்திருக்கும் போது, அதை ஓரளவாவது தெளிவு படுத்த பதிவுகள் தேடினேன். என்னுடைய அம்மா என்றோ எழுதி வைத்திருந்த ஒரு பதிவு ஞாபகத்துக்கு வந்தது. அவர் பள்ளியில் சென்று படித்தது சொற்பம். அனுபவம் அபாரம். அணுகுமுறை தெய்வீகம் என்று சொன்னால் மிகையாகாது என்று வாசகர்களே கூறினார்கள்.
மதாபிமானம் பாராட்டாத, சுயமரியாதை என்பதை விலக்கிய அவரின் வாழ்வியல் நன்கு தான் அமைந்திருந்தது. ஆனால் என்ன? செல்வம், பின்னர் வறுமை, பின்னர் வறுமையின்மையும் செல்வமின்மையும். அவர் சொல்லில் அவருடைய தாத்பர்யத்தைக் கேட்போம்:
உ
ஸ்ரீ:
எல்லாம் அவன் செயல்
கதைச்சுருக்கம்
எனக்குத் தெரிந்த வரையில் இந்த உலகம் ஒரு மாயை. சினிமா இப்படியிருக்கையில் கலியுகம் முடியும் போது க்ருன் (கிருஷ்ண) பகவான் ஆலிலையில் துயில் கொள்கிறான். கடல் பொங்கி அமர்ந்த பிறகு ஸ்ரீராப்தி (க்ஷீராப்தி) நாராயணனாக அவதரிக்கிறார் என்று கேள்வி. அப்போது நாரயணன் ப்ரம்மாவை வரவழைக்கிறார். உடனே இருவரும் யோஜனையில் ஆழ்ந்து எப்படி உல(க)த்தை உண்டாக்குவது என்று நினைக்கிறார்கள். உடனே நாராயணன்
(சொல்கிறார் ப்ரம்மாவை உலகத்தை ப் படைக்கும்படி சொல்கிறார் நீ அதை செய்து முடி. நான் உலகத்தை ப் படைத்து முடிக்கிறேன். நீ உலகத்தில் புல், பூண்டு, விலங்கினங்கள் மனிதன் ஆண், பெண் என்று பாகுபாடில்லாமல் படைத்து விடு என்று நாராயணன் ப்ரம்மாவிற்கு சொல்லி விடுகிறார். அதே போல் நாராயணன் படைத்து விடுகிறான். ப்ரம்மா ச்ருஷ்டி செய்துவிடுகிறார். பிறகு அவர்களுடைய செயல் கொண்டு, உலகப் ப்ரபஞ்சம் ஆகி மனிதர்கள் உற்பத்தியாகி உலகப் ப்ரபஞ்சமாகி விடுகிறது. இப்படியிருக்கும் போது மனிதர்கள் எல்லாம் நன்றாக வாழ்ந்து வருகிறார்கள். விலங்குகளும் எல்லாம் நன்றாக இருக்கிறது. இதர்க்கிடையில் வருணபகவான் வந்து மழை பெய்து உலகம் செழிப்பாகவும் வைக்கிறான். நன்றாக ஜனங்கள் வாழ்கிறார்கள். அப்படி வாழ்ந்து குடும்பம் நடத்துகிறார்கள் அவர்களுக்குக் கதம்பமாக குழந்தை பிறந்து சந்தோஷமாக இருக்கிறார்கள். அந்த சந்தோஷத்தை யார் கொடுக்கிறான். எல்லாம் அவன் தான் கொடுக்கிறான் என்று அவர்கள் நினைப்பதில்லை. அது வந்து அவன் தான் கொடுக்கிறான் என்று அவர்கள் நினைப்பதில்லை அது வந்து அவன் கொடுக்கிறான் என்று அவர்களுக்குத் தெரியாது ஏதோ நமக்கு குழந்தை பிறக்கிறது. (பிறக்கிறது - நல்லது என்று சந்தோஷப் படுவார்கள். அதனால் அவர்கள் பகவானை மறந்து விடுவார்கள். அதையும் பகவான் அவர்கள் என்னை நினைக்கிறார்களா என்று பார்த்து க் கொண்டு, சிரித்துக்கொள்வார். ஆனால் அவர்கள்மேல் கோபப்படமாட்டார். அவர்களுக்கு மாயை ஆகப்பட்டது அவர்களை மறக்க வைத் துவிடும். ஆனால் பகவானை வந்து நி நைக்கும் அளவுக்கு உலகத்தில் எல்லா இடத்திலும் கோயில் கொண்டிருக்கிறான். அதனால் ஜனங்கள் எப்போது அவன் நினைவு வருகிறதோ அப்போது அவர்கள் கோவிலுக்கு வந்து வழிபடுகிறார்கள். அதுவும் அவன் அவர்கள் மனதில் புகுந்து ஒரு தரமாவது என்னை வந்து பார் என்று நினைவு படும்படி செய்கிறார். அது போல் அவர்கள் மனதில் தோன்றினதும் உடனே அவர்கள் கோவிலுக்குப் போகிறார்கள். எப்பவும் நான் நினைத்த காரியம் நன்றாக நடக்கவேண்டும் என்றால் அவனை ஒரு நிமிஷமாவது நினைக்க வேண்டும். அது மாதுரி எவ்வளவோ / காரியம் என் கண் முன்பே நடந்திருக்கிறது. அதனால் தான் அவன் செயல் என்று சொல்வது உண்டு. அது போல் எனக்கு ஆத்வார்களுக்கு பகவான் தெரிசனம் தருகிறான். அது மாதுரி எனக்கும் கனவில் பகவான் சேர்வை தருகிறான் அப்போது நான் தூங்குகிறேனா, விழித்திருக்கிறேனா என்று தெரியவில்லை. அப்படி பகவானை ப் பார்த்துக்கொண்டு இருப்பது மனதிற்கு ஆனந்தமாக இருக்கிறது. நான் மெய் மறந்து போய் திடீரென்று விழித்து க் கொள்வேன் என்னடா விடிந்தது தெரியாமல் இருப்பேன் பிறகு நினைப்பேன் மறுபடியும் பகவான் கனவில் வரமாட்டாரா என்று ஏங்கிக்கொண்டு இருப்பேன். ஆனால் ஆழ்வார் மூன்று பேருக்கு பகவான் தெரிசனம் கொடுத்தான் அதை நினைத்து நாம் என்ன வெரும் ஒன்றும் தெரியாத எனக்கு க் கனவில் பகவான் வந்தால் எனக்கே ஆச்சரியமாக இருக்கும். நமக்கு என்ன கவலையிருந்தாலும் நாம் அவனை நினைக்க வேண்டும். அது என்னுடைய கொள்கை. அதே போல் ஏழுமலையானும் எனக்குக் கனவில் வருவார். இதை நான் யாரிடமும் சொல்லமாட்டேன் ஏன் என்றால், நான் சொல்லலாம்; கேட்பவர்கள் நம்பவேண்டுமே. அதனால் தான் யாரிடமும் சொல்வதில்லை. ஆனால் எனக்கு நிச்சியமாக கனவில் வந்து நீ கவலைப்படாதே. நான் உன் குழந்தைகள் குடும்பம் எல்லாவற்றையும் காப்பாத்துகிறேன் என்கிறமாதுரி கையை காண்பிப்பார். நான் அவனை நினைத்தால் எனக்கு பலன் கிடைக்கிறது. நானும் மாயையில் சிக்கி எழுந்து, இப்போது பகவானை ப் பார்க்கிறேன். அதனால் எனக்கு அவனுடைய செயல் பட்டு ப் பலன் இருகிறது நான் கோவிலுக்குப் போகவேண்டும் என்று நினைப்பேன் யார் அழைத்துப்போவார்கள் எனக்கோ வயதாகி விட்டது கவலைப்பட்டுக்கொண்டு பகவானை நினைப்பேன். அவர் உடனே கனவில் வந்து கோவிலுக்கு அழைத்துப் போகிற மாதுரி வருவார். எனக்கு அதனால் கோவிலுக்குப் போகவேண்டும் என்று நினைக்க மாட்டேன். /// இருந்தாலும் பகவான் என்ன சொல்கிறார் என்றால், நான் உன்னுடைய ஹ்ருதயத்தில் கோவில் கொண்டுள்ளேன். அதனால், நீ என்னை ஹ்ருதயத்திலேயே பார்த்துக்கொள் என்று சொல்கிறார். அதனால் மனதுக்குள் நினைத்துக்கொள்வேன். இப்போது அவன் செயல் என்று நினைத்து எந்தக்காரியத்தை யும் நடத்தவேண்டும்.
இன்னும் ஒரு அதிசயம் என்ன என்றால், நான் சனிக்கிழமை
தோறும் வெங்கடாசலபதி ப் பெருமாளுக்கு துளிமாலை சாத்தி வந்தேன்...என்று திருவேங்கடமுடையானை வேண்டிக்கொள்வேன். என்னது போல், அவனும் எனக்கு பலன் கொடுக்கிறான் இருந்தாலும் அவன் செயல் தான் என்று நினைத்துக்கொள்வேன். எனக்கு கனவில் கிழவர் போல் என் கண்ணில் படுவார். அந்த மாதுரி கனவில் வருவதும், போவதுமாக இருப்பதால், எனக்கு உடம்பு என்று வந்தால் கூட சரியாகி விடுகிறது. மறந்து போய் துளசி மாலை போடவில்லை என்றால், கனவில் ஏன் போடவில்லை என்று கேட்பார். அவர் சொல்வது போல் என் ஹ்ருதயத்திலே இருக்கிறார் அதனால் தான் நான் என் ஆத்மாவை சுத்தமாக வைத்துக்கொள்ளவேண்டும் என்று இருக்கிறேன்ஆனால், இன்னும் ஒரு ஆச்சரியம் என்னவென்றால்....
-#-
இன்னம்பூரான்
No comments:
Post a Comment