பேஷ்! பேஷ்! சீரீஸ் [2]
- Wednesday, August 22, 2018, 20:07
இன்னம்பூரான்
‘கலியிலே எலியும் புலியாகும்.’ என்ற கிலி நிஜமாயிடுத்தாம். காந்திமண்டபத்திற்கு எதிரில் இருக்கும் அண்ணாவின் பெயரை கெடுக்கவதற்கே இயங்கிவரும் பல்கலையில் ஒரு பரிக்ஷை நடந்தது. பெரிய வீட்டுப்பிள்ளையோ, ரவுடி வீட்டுத்தத்தாரியோ, ஒரு பையன் வாங்கிய மார்க் 24. அவனை கீர்த்தியுடன் கெலித்ததாகக்காட்டுகிறேன் என்று கை நீட்டி கையூட்டு வாங்கிய பரீக்ஷாதிகாரி அவர்களுக்கு தன் மதீப்பீடு கறார் என்ற அகந்தை உண்டு. மேலும்,அந்த விடைதாள் மறு பரீசீலனைக்கு உட்பட்டால், குட்டு வெளிப்படலாம் என்ற அச்சமும் உண்டு. பார்த்தார். பேனாக்கூட்டீல் தேடித்தேடி, அதே நிறத்தில் எழுதும் எழுதுகோலை எடுத்தார். கட கட என்று நீலகிரி எக்ஸ்பெரஸ் போல சரியான விடைகளை, மாடல் ஆன்ஸர்புக்கிலிருந்து எடுத்து எழுதினார். 14ஐ மனசாட்சியின் உதவியுடன் 94 ஆக்கினார். நல்ல வேளை. இவன் மெக்கானிகல் எஞ்சினியரிங் மாணவன். அதிகப்படியாகப்போனால், அவனால் மாவு மிஷினை ரிப்பேர் செய்யமுடியாது. அவனே மருத்துவ மாணவனாக இருந்திருந்தால் எத்தனை கொலை செய்வானோ! ‘அறிவியலார்’ நம்பாத நரியை பரியாக்கின கதையை விட அதிசயமாக இல்லை, இந்த மாதிரியான வாத்தித் தொழில்
*
பின் குறிப்பு: விசாரணை நடந்ததாம். மேலா உத்தரவின் பேரில் மனசாட்சியை அடகு வைத்தாராம். மேலா பெயரை பகர்ந்தாராம். ஏன் அதை ஊடகங்கள் மறைக்கின்றன. அவர் சத்திய பிரமாணம் செய்து தன்னைலை விளக்கம் தாக்கல் செய்யவேண்டும். அது நிரூபிக்கப்பட்டால், மேலா ஜெயிலுக்கு போகவேண்டும். இல்லையெனில், இவர் ஜெயிலுக்குப் போக வேண்டும். இதை எல்லாம் சொல்ல ஊடகங்கள் ஏன் லஜ்ஜை படுகின்றன? அடுத்து வருவது நல்ல மகிழ்ச்சி தரும் சமாச்சாரம்http://innamburan.blogspot.co.uk
http://innamburan.blogspot.de/view/magazine
www.olitamizh.com
வல்லமை பிரசுரம்
No comments:
Post a Comment