இன்னம்பூரான் பக்கம்: III:6
இந்திய தணிக்கைத்துறையும், நானும்[6]
பிரசுரம்: http://www.vallamai.com/?p= 68618: April 6, 2016
மானம் பறக்குது !
இன்னம்பூரான்
ஏப்ரல் 4, 2016
ஒரு பென்சில் தயாரிக்கும் கம்பெனி. போர்டு தீர்மானம் போட்டு, அதன்படி ஒரு யானை வாங்கினார்கள். கம்பெனி ஆடிட்டர் போர்டு தீர்மானம் இருப்பதால் டிக் அடித்து விட்டார். அது கவர்மெண்ட் கம்பெனி. ஆடிட்டர் ஜெனரல்காரன் விடாப்பிடியாக பென்சில் கம்பெனிக்கு யானை எதற்கு என்று துளைத்து எடுத்து விட்டான்.
அந்த மாதிரி இந்த அகஸ்டா வெஸ்ட்லாண்ட் ஹெலிகாப்டர் விவகாரம் இந்தியாவின் மானத்தை பறக்க வைத்து விட்டது. ஹிந்து இதழில் தெரிவித்த ஆசிரியர் கருத்தின் சாராம்சம்: நாடாளும் மன்றத்தில் இந்த ஊழலை பற்றி பேசியது எல்லாம் பொருளற்றவை. இத்தாலிய்ன் கோர்ட்டில் இந்திய ராணுவத்தில் லஞ்ச லாவண்யம் அலசப்பட்டது. சோனியா போன்ற பிரமுகர்களை பற்றி குறை காணப்பட்டது என்றாலும், அவை ருசுவாகாத குற்றங்கள். ஆனால் நாம் அவற்றை தீவிரமாக விசாரிக்கவேண்டும். அந்த கட்டுரையின் மீது நான் எழுப்பிய வினாக்கள்: (1) ஸோனியா போன்றோர் ஒரு பிரமாணபத்திரம் தாக்கல் செய்யலாமே, பார்லிமெண்ட்டில் குய்யோ முறையோ என்று கூவாமல்.
(2)இந்த விமானங்கள் ராணுவ உபயோகத்தை முன்னிட்டு ஆர்டர் செய்யப்படவில்லை. அரசியல் தலைவர்கள் உயர பறக்க ஒரு எல்லை வகுத்து, அதற்கு, இந்த கம்பேனி மட்டும் லாயக்கு என்றல்லவா செயல்பட்டார்கள். இந்த குட்டை ஏன் ஒரு ஊடகமும் எழுப்பவில்லை? நோ ரிப்ளை !
இப்போது, நாக்கைப் பிடுங்கிகிறாப்போல ஆடிட்டர் ஜெனெரல் இரண்டு வருடங்கள் முன்னால் கேட்ட பத்து கேள்விகளையாவது பார்ப்போம்.
- ஆரம்பித்திலிருந்து ராணுவ இலாக்கா விதிகளை ஏன் மீறின?
- இந்த ஹெலிகாப்டர்கள் எத்தனை உயர பறக்க வேண்டும் என்ற நிர்ணயத்தை , இந்த ஒரு கம்பெனி மட்டுமே தரக்கூடும் என்ற செயற்கை நிர்ணயம் ஏன் வகுத்தீர்கள்?
- ராணுவத்தின் தேவைகளுக்கு ஏற்ப இல்லாமல், விஐபி தேவைக்கு உகந்த டெண்டர் பொருளற்றதாக இருக்க செய்ததின் பின்னணி என்ன?
- விலை நிர்ணயம் தீர விசாரணைக்கு உட்படுத்தப்படவில்லையே, ஏன்?
- சோதனை ஓட்டங்கள் இந்தியாவில் தான் செய்யப்படவேண்டும் என்ற விதி ஏன் மீறப்பட்டது?
- விதி மீறி வெளி நாட்டில் செய்த பரிசோதனை ஓட்டங்கள் இந்த விமானங்களில் செய்யப்படவில்லை. வேறு வகை விமானங்களில் செய்யப்பட்டன. ஏன்?
- விவகாரம் முற்றுவதற்குள் மூன்று விமானங்கள் வந்து சேர்ந்தன. ஏன்?
- ஊழல் விவகாரம் வெளிச்சத்தற்கு வந்த பின்னும், அந்த கம்பெனியுடம் பண விவகாரம் நீடித்தது.
- சிபிஐ ஆய்வு 2012லியே தொடங்கினாலும், ஏன் சூடு பிடிக்கவில்லை.
சொல்லிக்றாப்லெ இல்லை! எங்கே எங்கே எல்லாம் ஏமாந்தோமோ? இது முதல் தடவை இல்லை. போஃபோர்ஸ் ஆடிட் ரிப்போர்ட்டில் ஜவானின் உயிருக்கு ஆபத்து ஏற்படக்கூடிய விவகாரம் ஆடிட்டால் கேட்கப்பட்டது. பீரங்கியை தயார் செய்து குண்டு வைக்கும் பெட்டியை திறந்தால், அது காலி. அதற்குள் எதிரி நம் ஜவானை சுட்டுத்தள்ளி விடுவான். இந்த கேள்வியை ஆடிட் எப்படி எழுப்பலாம்? காசா? பணமா? என்றார்கள், வசூல் ராஜாக்கள்.
-#-
படித்தது: ஆடிட் ரிப்போர்ட் + Printable version | May 4, 2016 7:50:29 PM | http://www.thehindu.com/ opinion/editorial/editorial- on-debate-in-parliament-on- agustawestland-helicopter- deal-more-noise-than-light/ article8533351.ece
© The Hindu
சித்திரத்துக்கு நன்றி:
பின்குறிப்பு: ஒரு பனிமலையின் உச்சியில் தெரியும் சிறு தோற்றம் இது. நான் எழுதிய 48 மணி நேரத்துக்குள் மேலும் பல தெரிய வந்துள்ளன. ஆடிட் ரிப்போர்ட் நாடாளுமன்றத்தின் முன் சமர்ப்பிவித்த மறு நிமிடமே, பொது மன்றத்தில் வைக்கப்படுகிறது. வாசகர்களே அதை தமிழிலும், ஆங்கிலத்திலும், ஹிந்தியிலும் பல வருடங்களாக, இலவசமாக படிக்கலாம். கடந்த முப்பது வருடங்களில் பயிரை மேய்ப்பதற்கு என்றே வடிவு அமைக்கப்பட்ட ‘வேலிகள்’ எண்ணில் அடங்கா. பாரதமாதா மனது வைத்தால் தான் இந்தியமக்களுக்கு உண்மையான விடுதலை. அம்மா! தாயே! கிருபை செய்ய, தாள் பணிந்து வேண்டுகிறேன். உன்னுடைய புதல்வர்களும், புதல்வர்களும் நாங்கள் அல்லவோ, அன்னையே!
இன்னம்பூரான்
ஏப்ரல் 6, 2016
இன்னம்பூரான்
http://innamburan.blogspot.co.
http://innamburan.blogspot.de/
www.olitamizh.com
No comments:
Post a Comment