பந்து மித்திர சோதரர்காள் !!! தொடர் [1]
இன்னம்பூரான்
18 07 2015
சோதரிகளும் உள்ளடக்கம், சொற்றொடர் பொருட்டு.
தங்குத் தடையில்லாமல், மருத்துவரை நாடாமல், கருச்சிதைவு நிகழ்ந்தால், அதை விட வேறு வினை வேண்டாம். தயக்கமின்றி, அதை சிசுஹத்தி என்றே சொல்லலாம். ஒரு செய்தி. மும்பையில் 15-19 வயதிற்குட்பட்ட யுவதிகள் போன வருடம் 1,785 கருச்சிதைவு செய்து கொண்டார்கள் என்றும், மேலும் 15 வயதுக்குட்பட்ட 185 சிறுமிகளும் அவ்வாறு செய்தனர் என்றும், மொத்தத்தில் ஒரே வருடத்தில் 30,000 கருச்சிதைவுகள் நிறைவேறியதாகவும் சட்டசபையில் நேற்று (வெள்ளி: 17/7/15) அறிவித்த அமைச்சர் ஏக்நாத் கட்ஸே, வெளிநாடுகளிலிருந்து இணையம் மூலமாக, ரகசியமாக, இந்த சமத்கார யுவதிகளும், சிறுமிகளும் வாங்கியதாகவும் , மருத்துவ அறிவுரை இல்லாமல் அவற்றை அளவுக்கு மீறி எடுத்துக்கொண்டால் உயிருக்கே ஆபத்து என்றார். இது நகரவாசிகளின் நரகம் என்று அவர் சொன்னாலும் ஒரு தமிழகக் குக்கிராமத்தில் இப்படி நடந்து, மூடி வைத்த விவகாரம் எனக்கு கிடைத்தது. இது ஒரு புறமிருக்க, அமெரிக்காவில் சிறுமிகளும், யுவதிகளும் Plan B One-Step என்ற மாத்திரைகளை சட்டபூர்வமாக வாங்கமுடியும். அவர்களுக்கு நன்கு புரிந்த சமாச்சாரமே என்கிறார்கள், அதிகாரிகள். இங்கிலாந்தில் 24 வாரங்களுக்குள் எந்த பெண்ணும் கருச்சிதைவுக்கு மருத்துவரை, பெற்றோருக்குத் தெரியாமல் அணுகலாம். 16 வயதுக்குட்ப்பட்ட பெண்களுடன் உடலுறவு வைத்துக்கொள்வது சட்ட விரோதம் என்றாலும், நடந்து போன விவகாரத்துக்கு தீர்வு காண்பார்களே தவிர தீவிரம் காட்டமாட்டார்கள். (எனக்கு நீதிபதி தேவதாஸ் அவர்களின் மனிதநேயம் நினைவுக்கு வருகிறது. - - -’..It is illegal in England, Scotland and Wales to have heterosexual sex under 16 - and in Northern Ireland under 17.However, in practice prosecutions are rare as long as both people consented and there is no evidence of exploitation or a large age difference.pregnancy, it is important that young people seek advice as soon as possible while there are still some choices left, they say.... BBC.)
சித்திரத்துக்கு நன்றி: http://s3.amazonaws. com/media.wbur.org/wordpress/ 11/files/2013/04/0405_planb2. jpg
உசாத்துணை: பிபிஸி.http://news.bbc.co.uk/ 2/hi/uk_news/england/ nottinghamshire/3942353.stm, Indian Express today.
-#=
http://innamburan.blogspot.co.
http://innamburan.blogspot.de/
www.olitamizh.com
No comments:
Post a Comment