Saturday, July 18, 2015

நாளொரு பக்கம் 67

நாளொரு பக்கம் 67



Saturday, 9th May 2015
காபந்து
இந்தியா எளிதில் விடுதலை பெறவில்லை. அந்த காலத்துத் தியாகசுடர்களின் வெம்மையில் நாம் குளிர் காய்கிறோம். இலவசத்துக்கும், காசு, பணம், பிரியாணி, சாராயம் போன்ற இழிவுகளையும், கழிவுகளையும் வெட்கம் இல்லாமல் உண்டு பருகி, காந்தி மஹானுக்குக் கொடுத்த வாக்கை மறந்து, தரம் கெட்ட வகையில் வாக்கு அளித்து, மக்களை சுரண்டுபவர்களை நம் பிரிதிநிதிகளாக நியமனம் செய்து, அதன் தீநிமித்ததை அனுபவிக்கிறோம். இது கடந்த சில நாடளாவிய தேர்தல்கள் பற்றிய பொது மக்களின் கணிப்பு. இருந்தும், சில தேர்தல்களில் பாமரமக்கள் மிகவும் போற்றத்தக்க பொறுப்புடன் வாக்களித்ததை மறப்பதற்கில்லை.
இந்த பின்னணியில் மற்ற நாடுகளிடமிருந்தும் கற்றுக்கொள்வதிலும் தவறு யாதும் இல்லை. ‘திருமங்கலம்’ என்ற அமங்கலச் சொல்லை தேர்தல் அகராதிக்கு கொணர்ந்த தமிழகம், இன்று இங்கிலாந்தில் நடக்கும் தேர்தலில் இருந்து சில நுட்பங்கள் கற்போமாக. இன்று காலை 7 மணிக்கு  50 ஆயிரம் மையங்களில் தொடங்கும் வாக்களிப்பு இரவு 10 மணி வரை நடக்கும். அப்போது வரிசையில் நிற்பவர்கள் எல்லாரும் வாக்களித்த பின் தான் சாவடிகளை மூடுவார்கள்.  ஏற்கனவே அஞ்சல் மூலம் 15% வாக்குக்கள் பதிவாகிவிட்டன. இணையம் மூலமாகவும் வாக்களிக்க வசதி உண்டு. பள்ளிகளிலும், சமூக மையங்களிலும், கோயில் மடங்களிலும், மதுசாலாக்காளிலும், வண்ணாந்துறைகளிலும், ஏன் ஒரு பஸ்ஸில் கூட சாவடிகள் நிறுவப்பட்டுள்ளன. இரவு நடுநிசிக்குள் சில முடிவுகள் அறிவிக்கப்படும்; எல்லாம் நாளை மதியம் முன்னால் அறிவிக்கப்படும். சொல்லப்போனால், இரண்டு தேர்தல்கள் ஒரே சமயத்தில் -பார்லிமெண்டுக்கும், முனிசிபாலிட்டிகளுக்கும். 650 பார்லிமெண்ட் அங்கத்தினர்கள், 9000 கெளன்சிலர்கள் தேர்ந்தெடுக்கப்பட, எல்லாம் 36 மணி நேரத்துக்குள் ஓவர். இங்கிலாந்துக்காரர்கள் சிக்கனத்துக்கு பேர் பெற்றவர்கள். அதனால், இத்தகைய ஏற்பாடு.
-#-

No comments:

Post a Comment