நான் வளைய வரும் மற்றொரு குழுவாகிய 'மின் தமிழில்'தன்னுடைய முகநூல் [தெய்வ சுந்தரம் நயினார்.] மூலம் தமிழறிஞர்களை அறிமுகம் செய்து வைக்கும் பேராசிரியர் தெய்வசுந்தரம்
அவர்கள் அவற்றை மீள்பதிவு செய்வதுடன், மற்றவர்கள் அவற்றை தாராளமாக அவரரது தொடர்புகளில் மீள்பதிவு செய்யலாம் என்று சொல்லியதுடன், எனக்கும் தனிப்பட்ட முறையில் சம்மதம் தெரிவித்துள்ளார். அவருக்கு நகல் அனுப்பியுள்ளேன்.
அவருக்கு நன்றியும் வணக்கமும் தெரிவித்து இங்கு பதிவு செய்யும் நான்காவது இழை, இது. [அவருடைய பட்டியலில் 11] தனிநாயகம் அடிகளார் பற்றி என்னுடைய இழையை இணைப்பதில் தாமதம் ஏற்பட்டதால், இந்த இடைவெளி. நிவாரணம் செய்யப்படும்.
அன்புடன்,
இன்னம்பூரான்
ஜூன் 6, 2015
*****
பேரா. கி. நாச்சிமுத்து … தமிழ் இலக்கியம், இலக்கணம், மொழியியல் மூன்றிலும் திறன் படைத்தவர். கேரளப் பல்கலைக்கழகத்தில் பேரா. ச.வே.சுப்பிரமணியம் அவர்களின் வழிகாட்டுதலில் இடப்பெயராய்வுபற்றி ஆய்வு மேற்கொண்டு முனைவர் பட்டம் பெற்றார். 1983 முதல் 2007 வரை அங்கேயே தமிழ்ப்பேராசிரியராகப் பணியாற்றினார். 2007 முதல் 2013 வரை டெல்லி ஜவஹர்லால் பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறைத் தலைவராகவும் இந்தியமொழிகள் பள்ளியின் தலைவராகவும் பணியாற்றினார். 2008 முதல் இன்றுவரை தமிழகத்தில் அமைந்துள்ள திருவாரூர் மையப் பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறைத் தலைவராகப் பணியாற்றிவருகிறார். மரபிலக்கணத்தில் வல்லவர். தற்கால மொழியியல் நோக்கில் மரபிலக்கணத்தை விளக்கும் திறன் படைத்தவர். இடப்பெயர் ஆய்வில் முன்னோடி. இளம் மாணவர்களுக்கும் ஆய்வாளர்களுக்கும் உதவுவதில் முன்நிற்பவர். 1979-81 –இல் ஜெர்மனி கொலோன் பல்கலைக்கழகத்தில் தமிழ் வினைச்சொல் அகராதித் திட்டத்தில் பணியாற்றினார். 95-98 இல் போலந்தில் வார்சா பல்கலைக்கழகத்தில் தமிழுக்கு வருகைதரு பேராசிரியராகப் பணியாற்றினார். இலங்கை, ஜெர்மனி, பெல்ஜியம். நெதர்லாந்து, பிரான்ஸ், சுவீடன், சிங்கப்பூர் ஆகிய நாடுகளுக்குக் கல்விப் பயணங்கள் மேற்கொண்டுள்ளார். பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ளார். அயல்மொழிகளில் ஆங்கிலம், மலையாளம், இந்தி, போலிஷ், சமஸ்கிருதம் , ஜெர்மன் ஆகிய மொழிகளில் புலமை பெற்றவர். மிக அமைதியான, இனிய பேராசிரியர் .
சித்திரத்துக்கு நன்றி:http://media.dinamani.com/2014/06/22/NATCHI.jpg/article2294161.ece/alternates/w460/NATCHI.jpg
சித்திரத்துக்கு நன்றி:http://media.dinamani.com/2014/06/22/NATCHI.jpg/article2294161.ece/alternates/w460/NATCHI.jpg
No comments:
Post a Comment